ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது. மரண தண்டனை கூடாது என்பவர்களும் கூட இப்படிப்பட்ட கொடூரக் குற்றவாளி தப்பித்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார்கள்.
சென்னை, மௌலிவாக்கத்தைச் சேர்ந்த பாபுவின் மகளான சிறுமி ஹாசினியை, கடந்த வருடம் பிப்ரவரி 5-ல் பாலியல் சித்ரவதை செய்து கொன்றதுடன், புறநகர்ப் பகுதிக்கு அவளது உடலை எடுத்துச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் கைத
ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது. மரண தண்டனை கூடாது என்பவர்களும் கூட இப்படிப்பட்ட கொடூரக் குற்றவாளி தப்பித்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார்கள்.
சென்னை, மௌலிவாக்கத்தைச் சேர்ந்த பாபுவின் மகளான சிறுமி ஹாசினியை, கடந்த வருடம் பிப்ரவரி 5-ல் பாலியல் சித்ரவதை செய்து கொன்றதுடன், புறநகர்ப் பகுதிக்கு அவளது உடலை எடுத்துச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் கைதானான் சாஃப்ட்வேர் இன்ஜினியர் தஷ்வந்த்.
பின்னர் ஜாமீனில் வெளியேவந்த அவன், சிறிதுகால இடைவெளியில் தனது தாய் சரளாவையும் கொலை செய்துவிட்டு மும்பை தப்பிச்செல்ல... மீண்டும் போலீசாரால் கைதுசெய்யப்பட்டான்.
இந்த வழக்கில் விரைவான விசாரணையும், அதிகபட்ச தண்டனையும் வழங்கவேண்டுமென பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்ப்புக்கேற்ப விசாரணை விரைந்து நடத்தப்பட்டது.
பிப்ரவரி 19-ந் தேதி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களும் பொதுமக்களும் திரண்டிருந்த நிலையில் 11 மணியளவில் தஷ்வந்த் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டான். நீதிபதி வேல்முருகன், "தஷ்வந்த் குற்றவாளி' என அறிவித்துவிட்டு, தண்டனை விவரத்தை அறிவிப்பதற்கு சற்று இடைவெளிவிட்டார்.
சிறிது நேரம் கழித்து நீதிபதி தண்டனை விவரத்தை வாசித்து முடித்ததும் நீதிபதியிடம் தஷ்வந்த் பேச முயற்சி செய்ய... அவர் அதை நிராகரித்துச் சென்றுவிட்டார்.
விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்த தஷ்வந்த், குறைந்தபட்ச தண்டனை வழங்கக் கோரியிருந்தான். தீர்ப்புக்குப் பின் அருகிலிருந்த அதிகாரிகளிடம், ""இந்தத் தண்டனை எதிர்பார்த்ததுதான்'' எனச் சொல்லியிருக்கிறான். இந்நிலையில் உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞரொருவர் அவனுக்காக அப்பீலில் வழக்காடுவதாகச் சொல்லியிருக்கிறார்.
ஹாசினியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம்... “""அரிதிலும் அரிதான வழக்கு இது. 7 வயதுக் குழந்தையைக் கொன்றது மட்டுமில்லாமல், எரிக்கவும் முயன்றிருக்கிறான். காவல்துறையும் சிரத்தையெடுத்து குற்றத்தை நிரூபித்திருக்கிறது. அதனால்தான் தூக்குத் தண்டனையுடன் 46 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் நீதிபதி அறிவித்திருக்கிறார். கிராமங்களில் இதுபோன்ற வழக்குகளில், விஷயம் வெளியில் தெரிந்தால் அசிங்கம் எனக் கருதி சும்மாயிருந்துவிடுவார்கள். காவல்துறையினரும் சரியான பிரிவுகளில் வழக்குப் பதியாமல் கோட்டைவிட்டு விடுவார்கள். இந்த மனோபாவம் அகலவேண்டும். அதற்கு இந்த வழக்கு ஒரு முன்னுதாரணம்''’என்றார்.
ஹாசினி வழக்கோடு நில்லாமல், குழந்தைகள்மீதான வன்முறை தொடர்பான அத்தனை வழக்குகளிலும், விசாரணை விரைந்து நடத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுத்தரவேண்டும். அப்போதுதான் தளிர்கள் முளையிலேயே கருகுவது தடுத்து நிறுத்தப்படும்.