Skip to main content

க்ளிக் பண்ணுங்க! ஃபிகர் கிடைக்கும்!-ஆன்லைன் விபச்சார விபரீதம்!

Published on 18/02/2018 | Edited on 19/02/2018
இணையதள வருகைக்குப் பின் உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. இருந்த இடத்திலிருந்தே மின் கட்டணம் முதல் சகல கட்டணத்தையும் செலுத்திவிடலாம். வங்கியில் பணம்போடுவதும் எடுப்பதும்கூட மொபைலிலேயே சாத்தியமாகிவிட்டன. ஒருசில க்ளிக்குகளில் உங்கள் கணினி, மொபைல் திரைகளில் படத்தைப் பார்த்துவிடலாம். தொழில்நு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆன்லைனில் பாதாம், பிஸ்தா; கோடியில் மோசடி; சைபர் கிரைமில் குவியும் புகார்கள்

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Almonds, pistachios online; Fraud in Cody; Cumulative complaints of cyber crime

 

ஆன்லைனில் 50 முதல் 70% வரை தள்ளுபடி விலையில் பொருட்களை வழங்குவதாக பிரபல ஷாப்பிங் நிறுவனங்களைப் போல் போலி ஆப் உருவாக்கி, லிங்கை அனுப்பி மோசடி செய்கின்றனர். கடந்த ஒரு வாரமாக ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் பெயரில், சமூக வலைத்தளங்களில் வந்தது. அதில் முந்திரி, பாதாம், உலர் திராட்சை, பிஸ்தா ஆகிய நான்கும் சேர்த்து 4 கிலோ 399 ரூபாய்க்கு மலிவு விலையில் வழங்குவதாக  விளம்பரம் இருந்தது. இதை நம்பி ஏராளமானோர் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்தனர்.

 

உடனடியாக அவர்களின் மொபைல் எண் ஹேக் செய்யப்பட்டு வங்கியில் உள்ள அவர்களது மொத்த பணமும் கும்பல் சுருட்டியுள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பலர் பாதித்துள்ளனர். அவர்கள் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் 25 புகார்கள் வந்துள்ளது. இதில் 1.50 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, 'தற்போது ஆன்லைனில் மோசடி செய்வது அதிகரித்துள்ளது. வங்கி ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை எந்த ஒரு லிங்க்கிலும் பகிர வேண்டாம். தங்கள் வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டால் சைபர் கிரைம் இலவச தொடர்பு எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம்' இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

 

 

 

Next Story

''வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்...''-புதுக்கோட்டையில் 2.80 லட்சம் சுருட்டல்!

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

 '' You can earn from home ... '' - 2.80 lakh rolls in Pudukkottai!

 

புதுக்கோட்டையில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என கூறி இரண்டு லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீப காலங்களில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என்பது போன்ற பல்வேறு விளம்பரங்கள் இணையதளங்களில் மூலம் உலாவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் நம்பி பணம் கொடுத்து பலர் ஏமார்ந்த வண்ணமே உள்ளனர். இப்படி இருக்கையில் புதுக்கோட்டையில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் எனக்கூறி முதுநிலை பட்டதாரி பெண்ணிடம் 2.80 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை ஆன்லைனில் விற்றால் பணம் தருவதாக கூறி வடமாநில கும்பல் மூலம் இந்த மோசடி நிகழ்த்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மணல்மேல்குடி சேர்ந்த அந்த முதுநிலை பட்டதாரி பெண்ணான சிவரஞ்சனியிடம் ஆன்லைன் மோசடி செய்த வடமாநில கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற ஆன்லைன் மோசடி பற்றி தெரிய வந்தால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.