Advertisment

காவிக்கு எதிராக சிவப்பு! -சிக்கிய நக்ஸல்கள்

red

ல்லையோரங்களில் நக்ஸலைட்டுகள் -மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் என தமிழக போலீஸார் சொல்லிவருவது புதிதல்ல. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிராமத்தில் வெற்றிவீரபாண்டியன் என்பவரது வீட்டில் மாவோயிஸ்டுகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தவிருப்பதாக மாவட்ட எஸ்.பி. சிபிச்சக்கரவர்த்திக்கு தகவல்வந்தது. தனிப்படையமைத்து, பூண்டி பகுதியில் முகாமிட்டார் சக்கரவர்த்தி. பிப்ரவரி 10-ஆம் தேதி அதிகாலை வெற்றியின் வீட்டைச் சுற்றிவளைத்து உள்நுழைந்தது போலீஸ்.

Advertisment

red

வீட்டுக்குள் வீரபாண்டியன் மட்டுமே இருந்தார். அவரை கைதுசெய்து விசாரித்ததில் சற்றுமுன்புதான் அவரது தம்பியான தசரதனும் அவரது மனைவி செண்பகவல்லியும் கிளம்பியிருப்பது தெரியவந்தது. அவர்களைத் தப்பிக்கவிடாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டது.

Advertisment

புல்லரம்பாக்கம் காவல்நிலையமருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, ஷேர் ஆட்டோவிலிருந்து ஒரு ஜோடி, இறங்கித் தப்பியோட முயன்றது. அவர்களை துப்பாக்கிமுனையில் போலீஸ் சுற்றிவளைக்க அது தசரதன்- செண்பகவ

ல்லையோரங்களில் நக்ஸலைட்டுகள் -மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் என தமிழக போலீஸார் சொல்லிவருவது புதிதல்ல. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிராமத்தில் வெற்றிவீரபாண்டியன் என்பவரது வீட்டில் மாவோயிஸ்டுகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தவிருப்பதாக மாவட்ட எஸ்.பி. சிபிச்சக்கரவர்த்திக்கு தகவல்வந்தது. தனிப்படையமைத்து, பூண்டி பகுதியில் முகாமிட்டார் சக்கரவர்த்தி. பிப்ரவரி 10-ஆம் தேதி அதிகாலை வெற்றியின் வீட்டைச் சுற்றிவளைத்து உள்நுழைந்தது போலீஸ்.

Advertisment

red

வீட்டுக்குள் வீரபாண்டியன் மட்டுமே இருந்தார். அவரை கைதுசெய்து விசாரித்ததில் சற்றுமுன்புதான் அவரது தம்பியான தசரதனும் அவரது மனைவி செண்பகவல்லியும் கிளம்பியிருப்பது தெரியவந்தது. அவர்களைத் தப்பிக்கவிடாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டது.

Advertisment

புல்லரம்பாக்கம் காவல்நிலையமருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, ஷேர் ஆட்டோவிலிருந்து ஒரு ஜோடி, இறங்கித் தப்பியோட முயன்றது. அவர்களை துப்பாக்கிமுனையில் போலீஸ் சுற்றிவளைக்க அது தசரதன்- செண்பகவள்ளிதான் என உறுதியானது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலன். இவர் தீவிர சோசலிசம் பேசிவந்தவர். ஒரு காலகட்டத்தில் நக்சலைட்களுடன் தொடர்புகிடைக்க, மாவோயிஸ்ட்டாக மாறினார். மாவோயிஸ்ட் அமைப்பில் பாலனுக்கு அடுத்தபடியாக தசரதன் கொரில்ல படையின் சீனியர் கமாண்டராக திகழ்ந்தார். ஊத்தங்கரை வனப்பகுதியில் 2002-ல் 32 பேருக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கசிந்ததில், சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி கைதுசெய்ய முயன்றது. இதில் சிவா என்ற பார்த்திபன் இறந்துபோக... 29 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையில் பாலன் மகன் பகவத்சிங்கும் கைதுசெய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டான். அப்போது தசரதனும் பாலன் மகள் செண்பகவல்லியும் தப்பிச்சென்றனர். இருவரும் பிற்காலத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

பாலன் இல்லாத நிலையில், தசரதன் அடுத்தகட்டமாக இயக்கத்துக்காக ஆட்களை சேர்த்து பணியைத் தொடர்ந்துவந்தார். இந்த நிலையில்தான் 2008-ம் ஆண்டு மே மாதம் கொடைக்கானல் மலைப்பகுதியில் குண்டுவைத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தசரதன் சேர்க்கப்பட்டார். அப்போது நடந்த சண்டையில் நவீன் பிரசாத் என்ற நக்சலைட் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் நவீனுடனிருந்த தசரதன், காளிதாஸ், சேகர், பெண் டாக்டர் சந்திரா உள்ளிட்ட 8 பேர் தப்பிவிட்டனர். திருப்பதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது நடந்த தாக்குதலிலும் தசரதன் பிரதான குற்றவாளியானார்.

தேடப்பட்டுவந்த தசரதனுக்கு திருவள்ளூர் சொந்த ஊர் என்பதாலும் இந்தப் பகுதியனைத்தும் அத்துப்படி என்பதாலும் பூண்டியைத் தேர்வுசெய்துள்ளார். பூண்டி முதல் ஆந்திரா வரையிலான வனப்பகுதி, ஆயுதம் வாங்குவதற்கும், பயிற்சியளிப்பதற்கும், தலைமறைவாக நடமாடுவதற்கும் ஏதுவாக இருந்துள்ளது என்கிறது போலீஸ் தரப்பு.

மாவோயிஸ்ட் அமைப்பு முக்கியமான தாக்குதல் திட்டத்திற்கு திட்டமிட்டு, அதற்கான பணவசதிகள் கைகூடிய நிலையில், தமிழகத்தின் பிரதான காவி அமைப்பொன்றின் மூத்த தலைவருக்கு ஸ்கெட்சும் போடப்பட்டு வந்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

naxel

ஆலோசனைக் கூட்டம் நடக்கும்போது மொத்த நக்ஸலைட்டுகளையும் சுற்றிவளைக்கத் தமிழக போலீஸ் திட்டமிட்டிருந்த நிலையில், தசரதன் உள்ளிட்ட மூவர் மட்டுமே சிக்கியிருப்பது போலீஸை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

திட்டமிட்டபடி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லையா- போலீஸாரின் திட்டமறிந்து ரத்துசெய்துவிட்டார்களா என்பதுகுறித்த விசாரணையில் போலீஸார் தீவிரம்காட்டிவருகின்றனர். பிடிபடாத நக்ஸலைட்டுகள் எங்கு தப்பித்துச் செல்வார்கள், அவர்களது திட்டம் என்ன என பிடிபட்ட மூவரிடமும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது காவல்துறை.

"எங்கள் போராட்டம் மக்களுக்கானது' என உறுதி குறையாமல் சொல்கிறார்கள் நக்சல் தோழர்கள்.

-அ.அருண்பாண்டியன்

ரவுடிகள் பிடியில் மாணவர்கள்!

அரிவாளால் பர்த்டே கேக் வெட்டி, போலீஸை அதிரவைத்த பினுவைத் தேடும் பணி ஞாயிறு இரவிலும் தொடர்ந்தது. போலீஸின் கொத்தான கேட்சிங்கில் சிக்கிய 70-க்கும் மேற்பட்டவர்களில் பெரும்பாலான ரவுடிகள் பெட்டிகேஸ் ஆட்கள்தான். ஒருசில வெயிட் பார்ட்டிகளுக்கு அரசியல் தொடர்பு அதிகமாக இருப்பதால் பெயில் மூவ்மெண்ட்டும் வேகமாக இருக்கிறது.

பார்ட்டிக்கு அழைத்து கதையை முடிக்க வேண்டும் என ரவுடி பினு திட்டமிட்டிருந்த சக ரவுடிகள் சி.டி.மணி, ராதாகிருஷ்ணன் தரப்பு ஆட்களான ஸ்கெட்ச் அலாவுதீன், குட்டியப்பன், அப்பன்ராஜ் ஆகியோர் போலீஸ்வசம் சிக்கியுள்ளனர். தப்பியோடிய பினுவைத் தேடி தமிழகம் முழுவதும் போலீஸ் அலைந்த நிலையில், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் கூட்டாளி ரவுடி முகேஷை தஞ்சை ரவுடி கண்காணிப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான டீம் மடக்கிப் பிடித்தது. ரவுடிக்கு அடைக்கலம் கொடுத்ததாக விஜய் என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டுக்கோட்டை போன்ற ஊர்களில் ரவுடிகள் அடிக்கடி முகாமிடுவது வழக்கமாக உள்ளது. "பிடிபட்ட முகேஷின் அப்பா மீது பல வழக்குகள் உள்ளன' என்கிற போலீசார், முகேஷ் மீது இதுவரை வழக்கு இல்லை என்றும், படிக்கிற பசங்களை ரவுடியாக்குவதுதான் முகேஷுக்குத் தரப்பட்டுள்ள அசைன்மெண்ட் என்றும், ரவுடிகளின் பிடியில் உள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் உள்ளோம் என்றும் தெரிவிக்கின்றனர்.

-இரா.பகத்சிங், அரவிந்த்

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe