காதல் அல்லது காமத்தின் பெயரால், பெண்கள் கொடூரமாக கொல்லப்படும் போக்கு அதிகரித்தபடி வருகிறது. தில்லியில், ஓடும் பேருந்தில் ஆறு நபர்களால் சீரழிக்கப்பட்ட நிர்பயா, தொடர்வண்டி நிலையத்தில் வைத்து வெட்டிக்கொல்லப்பட்ட சுவாதி வரிசையில், காதலுக்கு இணங்காததால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருக்கிறார் பள்ளி மாணவி சித்திராதேவி.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த நடுவகோட்டை மணிபாண்டி- பேச்சியம்மாள் தம்பதி மகள் சித்திராதேவி. அச்சம்பட்டியில் 9-ஆம் வகுப்பு படித்துவந்த சித்திராவை, நடுவகோட்டையைச்
காதல் அல்லது காமத்தின் பெயரால், பெண்கள் கொடூரமாக கொல்லப்படும் போக்கு அதிகரித்தபடி வருகிறது. தில்லியில், ஓடும் பேருந்தில் ஆறு நபர்களால் சீரழிக்கப்பட்ட நிர்பயா, தொடர்வண்டி நிலையத்தில் வைத்து வெட்டிக்கொல்லப்பட்ட சுவாதி வரிசையில், காதலுக்கு இணங்காததால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருக்கிறார் பள்ளி மாணவி சித்திராதேவி.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த நடுவகோட்டை மணிபாண்டி- பேச்சியம்மாள் தம்பதி மகள் சித்திராதேவி. அச்சம்பட்டியில் 9-ஆம் வகுப்பு படித்துவந்த சித்திராவை, நடுவகோட்டையைச் சேர்ந்த, மில்லில் வேலைபார்த்துவரும் பாலமுருகன் ஒருதலையாக காதலித்துவந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று, பள்ளிவிட்டு வீடுதிரும்பிய சித்திராவை வழிமறித்த பாலமுருகன், தன்னைக் காதலிக்கும்படி வற்புறுத்த, அதற்கு வழக்கம்போல் மறுப்புத்தெரிவித்தார் சித்திரா. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் தன் கையோடு கேனில் கொண்டுவந்திருந்த பெட்ரோலை அவர்மீது ஊற்றி பற்றவைத்துவிட்டார்.
பட்டணத்தில், தான் விளைவித்த பருத்தியை விற்றுவிட்டு, ஷேர் ஆட்டோவில் ஊர்திரும்பிக்கொண்டிருந்த பேச்சியம்மாள், வழியில் தன் மகளை ஒருவன் கொளுத்திவிட்டு ஓடுவதையும், மகள் கதறுவதையும் பார்த்து ஆட்டோவிலிருந்து குதித்தோடி வந்து, பருத்திச் சாக்கால் சித்திராவைப் போர்த்தி ரோட்டில் உருட்டி அணைக்க முயன்றார்.
இதற்குள் அங்கு கூடிய கூட்டம், தீயை அணைத்து அரசு மருத்துவமனைக்கு சித்திராவைக் கொண்டுசென்றது. அங்கே மருத்துவர்கள் அவளை மதுரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்படி கூறிவிட்டனர்.
தாய் பேச்சியம்மாள் பேசும்நிலையில் இல்லாததால், தந்தை மணிபாண்டியிடம் பேசினோம். “""ஒரு வருஷமா என் மகளுக்குப் பின்னால அலைஞ்சிருக்கான். முதல்ல விளையாட்டுத்தனமா சுத்தறான்னு நினைச்ச நாங்க, ஆறுமாசம் முன்னால போலீஸ்ல புகார் செஞ்சோம். அப்பவே நடவடிக்கை எடுத்திருந்தா…என் மகளுக்கு இந்த நிலை வந்திருக்குமா''’என்றபடி அழத்தொடங்கினார்.
மாவட்ட நீதிமன்ற நீதிபதியிடம் "தன்னை எரித்தது பாலமுருகன்தான்' என வாக்குமூலம் தந்திருக்கிறார் சித்திரா.
பெண்கள் மீதான வன்முறை கொடுமை குறித்து நம்மிடம் பேசிய சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர், “""கடுமையான தண்டனை இல்லாததே இத்தகைய கொடுமைகள் அதிகரிக்க காரணம். இத்தகைய வழக்குகளில் 100-க்கு 60 பேர் விடுவிக்கப்படுகின்றனர். நிர்பயா நிகழ்வுக்குப்பின் புதிய சட்டப் பிரிவுகள் கொண்டுவந்தும், குற்ற எண்ணிக்கையைக் குறைத்துக்காட்ட, குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்து வழக்கை மூடிவிடுகிறார்கள் போலீசார்''’’ என சுட்டிக்காட்டினார்.
2016-ல் மட்டும் 4,463 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளதாம். அதில் 40% வழக்குகள் தள்ளுபடியாகிவிட்டன.
"கொடியோர் செயல் அறவே… கொலைவாளினை எடடா' என்றார் பாரதிதாசன். தமிழகத்திலோ முறையான சட்ட நடவடிக்கைகளே எடுக்கமாட்டேன் என்கிறார்கள்.
-அண்ணல்