Advertisment

இன்னொரு மோ(ச)டி எஸ்கேப்! -ரூ.11,500 கோடி லபக்!

bank-corruption

modi

மோசடி மன்னர்களை வெளிநாடுகளுக்கு எப்படி தப்பிக்க வைப்பது என்று மத்திய அரசிடம்தான் பாடம் கற்க வேண்டும். ஆரம்பத்தில் லலித்மோடி... அப்புறம் தொழிலதிபர் விஜய்மல்லையா... இப்போது வைர வியாபாரி நீரவ்மோடி.

Advertisment

2010-ஆம் ஆண்டு மும்பையை தலைமையிடமாகக் கொண்டு வைர வியாபாரத்தை தொடங்கினார் நீரவ்மோடி. உலகளாவிய அளவில் வைரநகைக் கடைகளை நடத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு, "ஃபோர்ப்ஸ்' பத்திரிகையின் பணக்காரர்கள் பட்டியலில் 2013-ஆம் ஆண்டிலிருந்து முதலிடம் பெற்றுவருகிறார்.

Advertisment

இந்நிலையில்தான்... பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் குடும்பத்தார் ரூபாய் 280 கோடி மோசடி செய்ததாகவும் வங்கி அதிகாரிகளும் துணை இருந்ததாகவும் வங்கி நிர்வாகம் கடந்த மாதம் புகார் அளித்து இருக்கிறது. நீரவ், அவரின் மனைவி, பங்குதாரர்கள், முன்னாள் வங்கிஅதிகாரி கோகுல்நாத் செட்டி, மனோஜ்காரட் ஆகியோர் மீது கடந்த 31-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்குமுன்னரே குற்றம்சாட்டப்பட்டவர்கள் வ

modi

மோசடி மன்னர்களை வெளிநாடுகளுக்கு எப்படி தப்பிக்க வைப்பது என்று மத்திய அரசிடம்தான் பாடம் கற்க வேண்டும். ஆரம்பத்தில் லலித்மோடி... அப்புறம் தொழிலதிபர் விஜய்மல்லையா... இப்போது வைர வியாபாரி நீரவ்மோடி.

Advertisment

2010-ஆம் ஆண்டு மும்பையை தலைமையிடமாகக் கொண்டு வைர வியாபாரத்தை தொடங்கினார் நீரவ்மோடி. உலகளாவிய அளவில் வைரநகைக் கடைகளை நடத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு, "ஃபோர்ப்ஸ்' பத்திரிகையின் பணக்காரர்கள் பட்டியலில் 2013-ஆம் ஆண்டிலிருந்து முதலிடம் பெற்றுவருகிறார்.

Advertisment

இந்நிலையில்தான்... பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் குடும்பத்தார் ரூபாய் 280 கோடி மோசடி செய்ததாகவும் வங்கி அதிகாரிகளும் துணை இருந்ததாகவும் வங்கி நிர்வாகம் கடந்த மாதம் புகார் அளித்து இருக்கிறது. நீரவ், அவரின் மனைவி, பங்குதாரர்கள், முன்னாள் வங்கிஅதிகாரி கோகுல்நாத் செட்டி, மனோஜ்காரட் ஆகியோர் மீது கடந்த 31-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்குமுன்னரே குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள்.

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் நீரவ் குடும்பத்தினர் வங்கி அதிகாரிகள் துணையுடன் "எல்.ஓ.யூ.' எனப்படும் உத்தரவாதக் கடிதத்தை போலியாகப் பெற்றிருக்கின்றனர். இந்த போலிச்சான்றை வைத்து வெளிநாடுகளில் செயல்பட்டுவரும் ஆக்ஸிஸ் வங்கி, யூனியன் வங்கி ஆகியவற்றின் வெளிநாட்டு கிளையில் கடன் பெற்றிருக்கிறார்கள். பலஆண்டுகளாக இது நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் உத்தரவாதக் கடிதம் பெறவேண்டியிருந்தபோது, பழைய அதிகாரி ஓய்வு பெற்றுவிட்டதால் புதிதாக இருந்தவர், "100% பணத்தைக் கட்டுங்கள்' என்றபோது, பழைய நிலைமையை நீரவ்மோடி தரப்பு சொல்ல, அதன்பிறகு தோண்டித் துருவியதில்தான் அதிர்ச்சிகரமான மோசடிகள் வெளிப்பட்டன, புகார் பதிவானது.

வங்கியில் கடன் பெற்றது 280 கோடி என்றாலும், சட்டவிரோதமாக நீரவ்மோடி செய்துள்ள பணப்பரிவர்த்தனை 11,400 கோடி. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இந்த மோசடி நடந்து வந்துள்ளது. நீரவ்மோடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்ததில் 5100 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், ரொக்கம் என அனைத்தையும் பறிமுதல் செய்து பல சொத்துகளை முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.

பங்குச்சந்தையிலும் பொருளாதார நிலையிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக பொருளாதார நிபுணர் நரேன் ராஜகோபாலனிடம் கேட்டோம். ""நீரவ் நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டிலிருந்து வைரம் சம்பந்தப்பட்ட பொருட்கள் (வைரத்தையும் சேர்த்து) இறக்குமதி செய்யப்பட்டு, உலகளாவிய அவர்களுடைய ஸ்டோர்களில் சாதா நகைகளாக, டிசைனர் ஜுவல்லரிகளாக விற்பனை செய்யப்படுகிறது. இதில் இறக்குமதி bசெய்யும்போது விற்பவருக்குப் பணம் கொடுக்காவிட்டால் அவர் அதை அவருடைய இடத்திலிருந்து ஏற்றுமதி செய்யமாட்டார். எனவே 100% அட்வான்ஸ் தருவதை வழக்கமாய் "எல்.சி.' என்றழைக்கப்படும் Letter of Credit செய்வார்கள். 110% வங்கியில் பணம் வைத்தால் மட்டுமே 100%க்கான எல்.சி.யை வங்கி தரும். (நீரவ், அட்வான்ஸ் தொகையே செலுத்தவில்லை. அதனால் அவருக்கு எல்.சி. வராது.) இதனை இருநாட்டு வங்கிகளும் "செக்' செய்யாமல் பொருள் நகராது. இதில் அரசோ, ரிசர்வ் வங்கியோ உள்ளே நுழையமுடியாது. வங்கியில் இருக்கக்கூடிய நபர்களுடன் சேர்ந்து நடைமுறையில் இருக்கக்கூடிய ஓட்டையை பயன்படுத்தி பணத்தை வெளியில் கொண்டுவந்திருக்கிறார்கள். இதில் சிலர் மோடியையும், சிலர் காங்கிரஸையும் குற்றம்சாட்டுகிறார்கள். இதில் இரண்டுமே தவறு. யாரையும் குற்றம் சொல்ல முடியாது. வராக்கடனில் இருக்கக்கூடிய சிக்கல்கள்தான் இதிலும் இருக்கிறது''’என்றார்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தாமஸ் ஃபிராங்கோ, “""இது ஒரே ஒரு வங்கியில் நடந்த தவறு, மற்ற வங்கிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. சிஸ்டத்தில் இருக்கக்கூடிய கோளாறுகளை ரிசர்வ் வங்கி சரி செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது. அதன் காரணமாகத்தான் இதேபோல பிரச்சினை வந்திருக்கிறது. ரிசர்வ் பேங்க் கவர்னராக இருந்த ரகுராம்ராஜன், முன்பே "ஒரே நிறுவனத்திற்கு குறிப்பிட்ட தொகையைவிட அதிக கடன் கொடுத்தால் பெரிய இழப்புகள் வரும்' என்று எச்சரித்தும் காதில் வாங்காததால் இப்படி நடக்கிறது. ஒரே நிறுவனத்திற்கு கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவந்தால் மட்டுமே இனி இத்தகைய பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். இதில் மத்திய அரசும், ஆர்.பி.ஐ.-யும் தலையிட்டு தவறுகள் மீண்டும் வராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வராக்கடன்களை தள்ளுபடி செய்யாமல் வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்''’என்கிறார்.

நீரவ்மோடிக்கு, மல்லையாவைப் போலவே பலகோடி சொத்துகள் இந்தியாவில் இருக்கின்றன. வெளிநாடுகளில் இருக்கக்கூடிய வங்கிகள், நீரவ் மோசடி செய்த பணத்தை தரக்கோரும் பட்சத்தில்... நீதிமன்றம் சென்று சொத்துகளை ஏலம்விட்டு பணத்தைக் கொடுக்கலாம். சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வசம் வழக்கு சென்றிருப்பதால் விசாரணையில் இன்னும் பல விவகாரங்கள் வெளியில் வரலாம். பெரிய வணிக நிறுவனங்களுக்குச் சாதகமான ஆட்சியாக நரேந்திரமோடி அரசு இருப்பதால், மோசடிப் பேர்வழி நீரவ்மோடிகூட அவருடன் விழாவில் பங்கேற்று படம் எடுத்துக்கொள்ள முடிகிறது... எளிதாக வெளிநாட்டுக்குத் தப்பிவிட முடிகிறது.

-சி.ஜீவாபாரதி

PNB modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe