Advertisment

கொலைவெறியில் கணவர்! நடு வீதிக்கு வந்த பெண் எம்.பி. குடும்ப வில்லங்கம்!

satyabama-mp

.தி.மு.க. பெண் எம்.பி.யான சசிகலா புஷ்பாவின் திருமண சர்ச்சை ஓயாத நிலையில், இன்னொரு அ.தி.மு.க. பெண் எம்.பி.யான திருப்பூர் சத்தியபாமாவின் குடும்பச் சண்டை வீதிக்கு வந்து சர்ச்சையாகியிருக்கிறது.

Advertisment

satyabama-mp-husband

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த சத்தியபாமா, 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரிலேயே பியூட்டி பார்லர் நடத்திவந்தார். கோபி அருகே உள்ள சிறுவலூரைச் சேர்ந்த அ.தி.மு.க. அபிமானியான வாசுவுக்கு சத்தியபாமாவை ரொம்பவே பிடித்துப்போக... இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான ஓராண்டிலேயே ஆண் குழந்தை பிறந்து, அக்குழந்தைக்கு சத்தியவசந்த் என பெயரிட்டு அன்பையும் பாசத்தையும் ஊட்டி வளர்த்தனர்.

satyabama-mp

Advertisment

1996-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, கோபி யூனியனுக்குட்பட்ட சிறுவலூர் ஊராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், தனது மனைவியான சத்தியபாமாவை அ.தி.மு.க. சார்பில் வார்டு கவுன்சிலராக்கினார் வாசு. அமைச்சர் செங்கோட்டையனின் ஆசி

.தி.மு.க. பெண் எம்.பி.யான சசிகலா புஷ்பாவின் திருமண சர்ச்சை ஓயாத நிலையில், இன்னொரு அ.தி.மு.க. பெண் எம்.பி.யான திருப்பூர் சத்தியபாமாவின் குடும்பச் சண்டை வீதிக்கு வந்து சர்ச்சையாகியிருக்கிறது.

Advertisment

satyabama-mp-husband

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த சத்தியபாமா, 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரிலேயே பியூட்டி பார்லர் நடத்திவந்தார். கோபி அருகே உள்ள சிறுவலூரைச் சேர்ந்த அ.தி.மு.க. அபிமானியான வாசுவுக்கு சத்தியபாமாவை ரொம்பவே பிடித்துப்போக... இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான ஓராண்டிலேயே ஆண் குழந்தை பிறந்து, அக்குழந்தைக்கு சத்தியவசந்த் என பெயரிட்டு அன்பையும் பாசத்தையும் ஊட்டி வளர்த்தனர்.

satyabama-mp

Advertisment

1996-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, கோபி யூனியனுக்குட்பட்ட சிறுவலூர் ஊராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், தனது மனைவியான சத்தியபாமாவை அ.தி.மு.க. சார்பில் வார்டு கவுன்சிலராக்கினார் வாசு. அமைச்சர் செங்கோட்டையனின் ஆசியுடன் கோபி யூனியன் சேர்மனாகிறார் சத்தியபாமா. அன்றிலிருந்து செங்கோட்டையனின் அதிதீவிர விசுவாசிகளில் சத்தியபாமா முதல் இடத்தில் இருக்கிறார். இவரின் கட்சிப்பணி செங்கோட்டையனுக்கு பிடித்துப் போக, மாவட்ட மகளிரணி துணைச் செயலாளராகி, பின்பு செயலாளராக புரமோஷன் ஆனார் சத்தியபாமா.

அரசியலில் செங்கோட்டையனுக்கு இறங்குமுக காலம் வந்து, தோப்பு வெங்கடாசலத்துக்கு ஏறுமுக காலம் ஆரம்பமானது. தோப்பு அமைச்சரான பின்பு, அவரின் விசுவாசியானார் சத்தியபாமா. அதன் பின்பு சத்தியபாமாவின் பொருளாதார வளர்ச்சி மெல்ல மெல்ல உயர ஆரம்பித்து, நடவடிக்கைகளும் மாற ஆரம்பித்தன. அந்த நேரத்தில்தான் கோபி நகர அ.தி.மு.க. செயலாளர் சையத் புடான்ஷா, சத்தியபாமாவின் நட்பு வளையத்துக்குள் வந்தார்.

சையத் புடான்ஷா-சத்தியபாமாவின் ஜாயிண்ட் ஆபரேஷனால் ஆத்திரமடைந்த வாசு, தனது மனைவி என்ற உரிமையில், சத்தியபாமாவைக் கண்டிக்க ஆரம்பித்தார். ஆனால் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் ஆட்கள் மூலம் சைலண்ட் ஆக்கப்பட்டார் வாசு. இதனால் குடும்பத்துக்குள் குழப்பம் தலை தூக்கியது. தோப்புவின் பலத்த சிபாரிசால் 2014-ல் சத்தியபாமாவை திருப்பூர் எம்.பி. தொகுதியின் வேட்பாளராக்கினார் ஜெ. சத்தியபாமா வெற்றி பெற்று எம்.பி.யான நேரத்தில், தோப்புவுக்கு சரிவு ஆரம்பமானது.

டெல்லி தொடர்புகள் அதிகரிக்க ஆரம்பித்ததும் சத்தியபாமாவின் லைஃப் ஸ்டைலும் மாற ஆரம்பித்தன. அவரிடம் மாதச்செலவுக்கு பணம் வாங்கிக் கொண்டு, கார் டீலர் ஆனார் கணவர் வாசு. சினிமா எடுக்கப் போவதாகச் சொல்லி... சில லட்சங்களை இழந்த வாசு, ஒரு கட்டத்தில் விரக்தியின் எல்லைக்கே போனார். சத்தியபாமா எம்.பி. ஆனதும் சையத் புடான்ஷாவின் நிதிநிலைமையும் கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. இந்த நிலையில்தான் வாசுவுக்கு மனநலம் பாதித்துவிட்டதாகக் கூறி, கேரளாவில் இயற்கை வைத்தியம் பார்க்க அழைத்துச் சென்றனர் சத்தியபாமாவும் சையத் புடான்ஷாவும்.

""நல்ல நிலையில் இருக்கும் எனக்கு எதுக்கு மனநல சிகிச்சை'' எனக் கேட்ட வாசுவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை சத்தியபாமா. மூன்று வருடங்களுக்கு முன்பு சிறுவலூரில் இருக்கும் தனது தோட்ட வீட்டிலேயே முடங்கிவிட்டார் வாசு. சத்தியபாமாவோ, கோபி அருகே இருக்கும் குள்ளம்பாளையத்தில் தனது பெற்றோருடன் வசிக்க ஆரம்பித்தார். சில மாதங்களில் கோபி ஸ்ரீநகரில் சொந்தமாக வீடு கட்டி மகன் சத்யவசந்துடன் வசிக்க ஆரம்பித்தார். இந்த ஸ்ரீநகர் வீட்டுக்கு வாசு அடிக்கடி வந்து தகராறு செய்ய ஆரம்பித்தார். ஆனால் சத்தியபாமாவோ எதையும் சட்டை செய்யவில்லை.

இந்த நிலையில்தான் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வரும் தனது மகன் சத்தியவசந்திற்கு, கோவை கருமத்தம்பட்டியில் பெண் பார்த்து, திருமண உறுதி நிகழ்ச்சியை தனது ஸ்ரீநகர் வீட்டில், கடந்த 29-ஆம் தேதி ஏற்பாடு செய்தார் சத்தியபாமா. இது தெரிந்து ஆத்திரமான வாசு, ஸ்ரீநகர் வீட்டின் முன்பாக நின்றுகொண்டு, ""பெத்த அப்பனுக்கே தெரியாம, வேற எவனை வச்சு உறுதிபண்ணப் போற?''’’ என ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, சத்தியபாமாவின் தம்பி பிரபு வெளியே வர... ""உன்னால தான்டா என் குடும்பமே நாசமாப் போச்சு'' என ஆத்திரத்துடன் அரிவாளை எடுத்துக்கொண்டு பாய... பயந்துபோன பிரபு கேட்டைப் பூட்டிவிட்டு சத்தம்போட ஆரம்பித்ததும் அக்கம்பக்கத்தினர் வந்து வாசுவைப் பிடித்துக்கொண்டனர்.

satyabama-mp-family

சத்தியபாமாவின் தம்பி பிரபு கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி வழக்கில் வாசுவை கைது செய்து கோவை சிறைக்கு அனுப்பிவிட்டனர் கோபி போலீசார். இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் தனது மகனின் திருமண உறுதி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டார், இப்போது ஓ.பி.எஸ். விசுவாசியாக இருக்கும் எம்.பி. சத்தியபாமா. நடந்தவைகள் குறித்து விளக்கம் கேட்க சத்தியபாமாவின் 98430 25880 என்ற செல் நம்பருக்கு பலமுறை தொடர்புகொண்டும், எந்த ரெஸ்பான்சும் இல்லை.

கவுன்சிலர், யூனியன் சேர்மன், எம்.பி. என கிடுகிடு வளர்ச்சி கண்ட சத்தியபாமாவின் வாழ்க்கையில் வீசிய அரசியல் புயல் குடும்ப உறவுகளிடையே கடுமையான சேதாரத்தை ஏற்படுத்திவிட்டது.

satyabama-mp satyabama-mp-husband
இதையும் படியுங்கள்
Subscribe