Advertisment

""எங்க வழியில குறுக்கிடாதீங்க''எஸ்.பி.யையே மிரட்டும் டி.எஸ்.பி.க்கள்

dsps

"மாநிலத்தில் மட்டுமா சட்டம்-ஒழுங்கு நிலவரம் கெட்டிருக்கிறது. காவல்துறைக்குள்ளேயேகூட சட்டம்-ஒழுங்கு தாறுமாறாகத்தான் இருக்கிறது' என கேலிப்புன்னகை செய்கிறார்கள் காக்கிகள். "எப்படிச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டபோது ஒரு ஃப்ளாஷ்பேக் சொன்னார்கள் தேனி மாவட்ட காக்கிகள். அவர்கள் சொன்னதின் சாராம்சம் இதுதான்...

Advertisment

தேனி மாவட்ட எஸ்.பி. அலுவலக அறையில், பிப்ரவரி மாத கடைசி வாரம் ஒரு காரசாரமான வாக்குவாதம். வாதம் செய்தவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து டி.எஸ்.பி.க்கள். "எங்க பகுதிகள்ல உள்ள ஆய்வாளர்களை வைத்து உங்களால் எதுவும் செய்யமுடியாது. எங்களுக்கென்றே இங்க தனி சாம்ராஜ்யம் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் அனைத்து பதவி உயர்வுகளையும் தீர்மானிப்பதில்கூட எங்க செல்வாக்கு உண்டு. அதனால எங்களை டிஸ்டர்ப் பண்ணாம, நீங்க ஐ.பி.எஸ். ஆகும் வேலையை பாருங்க. நீங்க ஒண்ணும் டைரக்ட் ஐ.பி.எஸ். இல்லை. தேவையில்லாம எங்க பாதையில தலையிடாதீங்க'’’என எஸ்.பி.யையே மிரட்டியிருக்கிறார்கள்.

dsps

ஏன் அப்படிப் பேசினார்களாம்?

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி, போடி, உத்தமபாளையம் என ஐந்து சப் டிவிஷன்கள் உள்ளன. இங்கே வினோஜி, சேது, குலாம், பிரபாகரன், சீமைச்சாமி ஆகியோர் டி.எஸ்.பி.யாக பொறுப்புவகித்து வருகிறார்கள். இந்த ஐந்து பேரும் பல வருடங்களாக இந்த மாவட்டத்திலே பணியாற்றுபவர்கள். இவர்கள் மேல் பல புகார்கள் உள்ளன. பணியைச் சரிவரச் செய்வதில்லை; பல வழிகளிலும் வருமானம் பார்ப்பதாக கம்ப்ளெய்ண்ட். பார்த்தார் எஸ்.பி. பாஸ்கரன். அந்தந்த டிவிஷன் ஆய்வாளர்களைத் தொடர்புகொண்டு, டி.எஸ்.பி.களை நோட்டமிட உத்தரவிட்டார். தவிரவும் தனது நம்பகத்துக்குரிய காவல்துறை காக்

"மாநிலத்தில் மட்டுமா சட்டம்-ஒழுங்கு நிலவரம் கெட்டிருக்கிறது. காவல்துறைக்குள்ளேயேகூட சட்டம்-ஒழுங்கு தாறுமாறாகத்தான் இருக்கிறது' என கேலிப்புன்னகை செய்கிறார்கள் காக்கிகள். "எப்படிச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டபோது ஒரு ஃப்ளாஷ்பேக் சொன்னார்கள் தேனி மாவட்ட காக்கிகள். அவர்கள் சொன்னதின் சாராம்சம் இதுதான்...

Advertisment

தேனி மாவட்ட எஸ்.பி. அலுவலக அறையில், பிப்ரவரி மாத கடைசி வாரம் ஒரு காரசாரமான வாக்குவாதம். வாதம் செய்தவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து டி.எஸ்.பி.க்கள். "எங்க பகுதிகள்ல உள்ள ஆய்வாளர்களை வைத்து உங்களால் எதுவும் செய்யமுடியாது. எங்களுக்கென்றே இங்க தனி சாம்ராஜ்யம் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் அனைத்து பதவி உயர்வுகளையும் தீர்மானிப்பதில்கூட எங்க செல்வாக்கு உண்டு. அதனால எங்களை டிஸ்டர்ப் பண்ணாம, நீங்க ஐ.பி.எஸ். ஆகும் வேலையை பாருங்க. நீங்க ஒண்ணும் டைரக்ட் ஐ.பி.எஸ். இல்லை. தேவையில்லாம எங்க பாதையில தலையிடாதீங்க'’’என எஸ்.பி.யையே மிரட்டியிருக்கிறார்கள்.

dsps

ஏன் அப்படிப் பேசினார்களாம்?

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி, போடி, உத்தமபாளையம் என ஐந்து சப் டிவிஷன்கள் உள்ளன. இங்கே வினோஜி, சேது, குலாம், பிரபாகரன், சீமைச்சாமி ஆகியோர் டி.எஸ்.பி.யாக பொறுப்புவகித்து வருகிறார்கள். இந்த ஐந்து பேரும் பல வருடங்களாக இந்த மாவட்டத்திலே பணியாற்றுபவர்கள். இவர்கள் மேல் பல புகார்கள் உள்ளன. பணியைச் சரிவரச் செய்வதில்லை; பல வழிகளிலும் வருமானம் பார்ப்பதாக கம்ப்ளெய்ண்ட். பார்த்தார் எஸ்.பி. பாஸ்கரன். அந்தந்த டிவிஷன் ஆய்வாளர்களைத் தொடர்புகொண்டு, டி.எஸ்.பி.களை நோட்டமிட உத்தரவிட்டார். தவிரவும் தனது நம்பகத்துக்குரிய காவல்துறை காக்கிகளையும் இந்தப் பணிக்குப் பயன்படுத்தியிருக்கிறார்.

Advertisment

ஆனாலும் விஷயம் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.களின் காதுகளுக்குப் போய்விட்டது. கொதித்தெழுந்த ஐந்து பேரும் ஒன்றாகவே எஸ்.பி. ஆபீஸிற்கு விசிட்டடித்திருக்கிறார்கள். வந்த இடத்தில் நடந்த வாக்குவாதம்தான் மேலே பார்த்தது. எஸ்.பி.யையே டி.எஸ்.பி.க்கள் மிரட்டுகிறார்கள் என்றால், சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.க்களின் பின்னணி பலமாக இருக்கவேண்டுமல்லவா… அவற்றை விசாரித்தோம்.

தேனி டி.எஸ்.பி. சேது

சாதுவான சப் இன்ஸ்பெக்டராகத்தான் சேது தேனிக்குள் நுழைந்தார். இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். ஓ.பி.எஸ்.ஸின் ஆசியும், கூடவே பெரியகுளம் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வும் சேதுவுக்கு சீக்கிரமே கிடைத்தது. பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் நம்பர் 1 குற்றவாளியாக இருக்கும் ஓ.பி.எஸ். தம்பி ராஜாவுக்கு எதிரான சாட்சிகளை எல்லாம் மிரட்டிக் கலைத்து தன் நன்றி விசுவாசத்தைக் காண்பித்தார். இன்னும் ஒரு வருட காலம் மட்டுமே இவருக்கு பதவிக்காலம். ஓய்வில் போகும்போது வெறும்கையுடன் போகமுடியுமா?

ஐம்பதுக்கும் மேற்பட்ட சில்லிங் மதுபான வியாபாரிகளை நகருக்குள் இறக்கி கடைவீதி முதல் வீடுகள் வரை டோர் டெலிவரி செய்யச் சொல்லிவருகிறார். ஒவ்வொருவரும் மாதம் 1 லட்சம் கப்பம் கட்டியாகவேண்டுமென கறார் உத்தரவு. தொழிலை மறந்த பழைய கஞ்சா வியாபாரிகளைத் தேடிப்பிடித்து, "கஞ்சா விற்கிறாயா வழக்குப் போடவா' என தலையா பூவா பாணியில் தொழிலுக்குள் தள்ளிவருகிறார். பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் பார் நடத்திவந்த இளங்கோ, தொழில் சோபிக்காததால் ஒதுங்கியிருந்தார். "பார் நடத்தி மாமூல் கொடு. இல்லை பொய்வழக்குப் போடுவேன்' என மிரட்ட,. இதுகுறித்து எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தார் இளங்கோ. ஆனாலும், பொய்வழக்குப் போட்டு இளங்கோவை உள்ளே தள்ளிவிட்டார் சேது என அவரது வளம்பெருக்கும் படலத்தை விவரிக்கின்றனர் ஏரியாக்காரர்கள்.

பெரியகுளம் டி.எஸ்.பி. வினோஜி

opsவத்தலக்குண்டு இன்ஸ்பெக்டரான வினோஜி, பதவி உயர்வுபெற்று ஓ.பி.எஸ்.ஸின் சொந்த ஊரான பெரியகுளத்துக்கு வந்தபோது, பன்னீரின் கடைக்கண் பார்வையும் கிடைத்தது. வந்ததுமுதலே வருமானமே இவரது முதற்கடமையென பாராட்டுகிறார்கள். வைகை நதி, வாகா டேம் மேற்குப் பகுதியில் ஓ.பி.எஸ். தம்பி ராஜா, அவரின் பினாமிகளான சசி, அசுரானந்தம் ஆகியோர் மண்ணள்ளுவதற்கு சாதகமாக நடந்துகொண்டு, கணிசமான தொகையை மாமூலாக வாங்கிக்கொள்கிறாராம். மொத்தமாய் மணல் திருடுபவர்கள் மட்டுமல்லாமல் சில்லறையாய்த் திருடுபவர்களுக்கும் அனுசரணையாக நடந்துகொண்டு சில்லறை பார்த்துவருகிறாராம். தேனி பிசிபட்டியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சின்னதாய் ஒரு குடில் கட்டியிருக்கிறார். தனக்குக் கீழுள்ள எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களை மரியாதையில்லாமல் ஒருமையில் விளிப்பதோடு, ஸ்டேசன்கள் மூலமும் கணிசமாக வசூலித்துவிடுவதில் கெட்டிக்காரர் என டி.எஸ்.பி. மகாத்மியம் பாடுகிறார்கள் பெரியகுளம் வட்டார காக்கிகள்.

ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி. குலாம்

இவரும் ஓ.பி.எஸ்.ஸுக்கு சலாம் போடுபவர்தான். இருபது வருடங்களுக்கு முன்பு போடிக்கு சப் இன்ஸ்பெக்டராக வந்த இவர் படிப்படியாக டி.எஸ்.பி.யாக பதவி உயர்வுபெற்றிருக்கிறார். இவருக்கு முக்கிய அசைன்மெண்ட்டே, ஓ.பி.எஸ்.ஸின் பிரதான போட்டியாளரான தங்க. தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்களுக்கு கடிவாளம்போடுவதும், முடிந்தால் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களாக அணிமாற்றுவதும்தானாம். அதற்குக் கைமாறாக வருசநாடு பகுதியில் கஞ்சா வியாபாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு வெளிமாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தி கணிசமாக தொகையைப் பார்த்துவருகிறாராம். அதுபோல ஏரியா சப் இன்ஸ்பெக்டர்கள் சிலரைக் கைக்குள் போட்டுக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து மூலமும் வருமானம் பார்க்கிறாராம். இடையில் தேர்தல் ஏதும் வந்தால் ஆண்டிப்பட்டியில் தனது மகன் ரவீந்திரநாத்தை நிற்கவைக்க முடிவுசெய்திருக்கிறார் ஓ.பி.எஸ். அதற்காக தொகுதியின் சாதகபாதகங்களை ஆய்வுசெய்யும் பொறுப்பு குலாமிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம்.

போடி டி.எஸ்.பி. பிரபாகரன்

கடமையைச் சரிவரச் செய்கிறாரோ… இல்லையோ… மாமூல் வசூலிப்பதில் கில்லாடி என பிரபாகரனுக்கு சான்றளிக்கிறார்கள் போடி வட்டார இன்ஸ்பெக்டர்கள். பொட்டிபுரம், பரமசிவன்கோவில் பின்புறம், பி.டி.ஆர். கால்வாய், எரசக்கநாயனூர், காமாட்சிபுரம் பகுதிகளில் தூசிமணல், கரம்பை, கிராவல், செம்மணி என பலதரப்பட்ட மணல்கள் கிடைக்கின்றன. இவற்றை வெளிமாவட்டத்திற்கும் கேரளாவுக்கும் கடத்துகிறார்கள். இதனால் விவசாயம் பாதிக்கிறது என விவசாயிகள் புகார் கொடுத்து இன்ஸ்பெக்டர்கள் நடவடிக்கை எடுக்கப்போனால், “"ஸ்டேசன் வேலையை மட்டும் பாருங்கய்யா… கடத்தல் விவகாரத்த நான் பார்த்துக்கிறேன்'’ என தடுத்துவிட்டு, மாமூல் வாங்கிவிட்டு அவற்றை கண்டுகொள்வதில்லை. போடிமெட்டு மூலம் கேரளாவிற்கு அரிசி கடத்துவதிலும் டி.எஸ்.பி.க்கு கமிஷன் போய்க்கொண்டுதான் இருக்கிறது. இரண்டு வருடத்துக்கு முன்பு ஓ.பி.எஸ்.தான் இவரை தனக்கு ஆதரவாக இப்பகுதிக்குக் கொண்டுவந்தார். அதற்கு விசுவாசமாக தேர்தலில் பக்கபலமாகச் செயல்பட்டார். துணைமுதல்வர் ஆதரவாளர் என்பதால் எஸ்.பி.யும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த லிமிட்டிலிருக்கும் ஏழு ஸ்டேசன்களிலும் கட்டபொம்மன்போல் வசனம்பேசிக்கொண்டிராமல் கமுக்கமாக கப்பம் கட்டிவிடுகிறார்களாம்.

உத்தமபாளையம் டி.எஸ்.பி. சீமைச்சாமி

ஓ.பி.எஸ்.ஸின் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த மாவட்டத்திலேயே பதவி உயர்வுகளைப் பெற்று டி.எஸ்.பி.யானவர். துணைமுதல்வரின் தீவிர ஆதரவாளர் என ஏகப்பட்ட பெருமைகளுக்கு சொந்தக்காரர் உத்தமபாளையம் டி.எஸ்.பி. சீமைச்சாமி. சமீபத்தில் ஓ.பி.எஸ்.ஸின் நண்பரொருவர் தன் கணவரைக் கொலைசெய்துவிட்டார் என பெண்ணொருவர் புகார் கொடுத்திருக்கிறார். விஷயம் டி.எஸ்.பி. காதுக்குவர, "பெரிய இடத்தில் மோதாதே… ஒழுங்கா ஓடிப்போய்டு'னு மிரட்டியிருக்கிறார். ஆனால் அந்தப் பெண் வீட்டுக்கு ஓடாமல், மதுரை உயர்நீதிமன்றத்திற்கு ஓடிச்சென்று வழக்குத் தொடுக்க, சீமைச்சாமி தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டார். ஓ.பி.எஸ். துணைமுதல்வரானதும், அவரது கருணைப் பார்வையில் மீண்டும் தேனி மாவட்டத்துக்கே மாறுதல்பெற்று வந்துவிட்டார்.

கம்பம் பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஆந்திராவுக்கு கஞ்சா கடத்த துணைபோகிறார், லோயர் கேம்ப் வழியாக அரிசி கடத்த அனுமதிக்கிறார் என கிசுகிசுப்பாக புகார்ப்பட்டியல் வாசிக்கிறார்கள். சில்லறை தேற்றும் அனைத்து வழிகளும் அறிந்தவர் என்கிறார்கள் ஏரியா சப் இன்ஸ்பெக்டர்கள் சிலர். எஸ்.பி.யை டி.எஸ்.பி.க்கள் மிரட்டியது நிஜமா என அறிய, எஸ்.பி. அலுவலகத்துக்குச் சென்றோம். வெளியே போயிருக்கிறார் என்றார்கள். அவரது அலுவலக எண்ணைப் பெற்று தொடர்புகொண்டோம். "பிறிதொரு சமயம் நேரில் வாருங்கள், இப்ப பிஸி' என நம்மைத் தவிர்த்தார்.

இந்த பஞ்ச பாண்டவர்களிடமிருந்து தேனி எப்போது தப்பிக்கப் போகிறது என பெருமூச்சு விடுகிறார்கள் மாவட்டத்தின் நலன்நாடுபவர்கள்.

-சக்தி

இதையும் படியுங்கள்
Subscribe