Advertisment

கடன் மோசடி! அப்பாவி சிறுமி அநியாய பலி!

aruthra

ங்கிகளில் ஆயிரம் கோடி, நூறுகோடி கடன் வாங்கியவர்கள் சாவகாசமாக சுற்றுலா போவதுபோல விமானம் ஏறி வெளிநாட்டுக்குத் தப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசியல் நிர்பந்தத்தாலும், அதிகாரிகள் வலியுறுத்தலாலும் கடன்கொடுத்தவர்கள் மோசடிப்புகாரில் சிக்கி அவதிப்பட்டுவருகிறார்கள். அப்படியொரு மோசடி விவகாரத்தால் திருச்சியில் வங்கி மேலாளரே, தன் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

aruthraramasubramanian

திருச்சி கோட்டை சங்கரன்பிள்ளை சாலையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவர் ராமசுப்பிரமணியன். இவரது மன

ங்கிகளில் ஆயிரம் கோடி, நூறுகோடி கடன் வாங்கியவர்கள் சாவகாசமாக சுற்றுலா போவதுபோல விமானம் ஏறி வெளிநாட்டுக்குத் தப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசியல் நிர்பந்தத்தாலும், அதிகாரிகள் வலியுறுத்தலாலும் கடன்கொடுத்தவர்கள் மோசடிப்புகாரில் சிக்கி அவதிப்பட்டுவருகிறார்கள். அப்படியொரு மோசடி விவகாரத்தால் திருச்சியில் வங்கி மேலாளரே, தன் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

aruthraramasubramanian

திருச்சி கோட்டை சங்கரன்பிள்ளை சாலையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவர் ராமசுப்பிரமணியன். இவரது மனைவி கோமதி. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு ஐந்து வயதில் ஆருத்ரா என்ற மகளும் உண்டு.

Advertisment

கடந்த மார்ச் 23-ஆம் தேதி வேலைநிமித்தமாக வெளியே சென்றிருந்த கோமதி, வீடுதிரும்பி கதவைத் தட்டியிருக்கிறார். நீண்டநேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர், அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துக்கொண்டு, கதவை உடைத்துத் திறந்தார். அவர்கள் உள்ளே சென்றபோது, அங்கு ராமசுப்பிரமணியனும் ஆருத்ராவும் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தனர். இருவரையும் ப்ரெண்ட்லைன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு இறந்ததாக அறிவித்துவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கோட்டை போலீசார் தற்கொலை பற்றி கோமதியிடம் விசாரிக்க, ராமசுப்பிரமணியன் வீட்டுக்குச் சென்றனர். அங்கு அவர் விஷம்குடித்த நிலையில் மயங்கிக்கிடந்தார். கோமதியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

மருத்துவ சிகிச்சை முடித்துவந்த கோமதியிடம் பேசியபோது, ""எனது கணவர் பணியாற்றிய அதே வங்கியில் மலையப்பன் என்பவர் துணைமேலாளராகப் பணிபுரிகிறார். இவரது வற்புறுத்தலின்பேரில் பொன்சிவா ஏஜென்சி உரிமையாளர்களும் தம்பதிகளுமான சிவம்-பொன்மலர் இருவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக விதிமுறைகளை மீறி 7 லட்சத்துக்கும் அதிகமாக கடன்வழங்கியுள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடமாகியும் பணம்வராததால், அவர்கள் வீட்டுக்கே சென்று கேட்டபோது, இங்கெல்லாம் வந்து கேட்கக்கூடாதென அவரை அசிங்கப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். இந்த நிலையில் பொன்மலர் வாங்கிய பணத்தை அவர்களது சப் ஏஜென்சி ஆவணங்களையும் சேர்த்து கணக்குக் காட்டிவிடலாம் என்று மலையப்பன் சொல்ல அதுபோல செய்துள்ளனர்.

ஏற்கெனவே மன உளைச்சலில் இருந்த என் கணவர், இன்னும் சில நாட்களில் ஆய்வுப் பணி நடைபெற உள்ளதால் தனது பெயர் கெட்டுவிடுமோ என பயந்து தற்கொலை செய்துள்ளார். என் கணவரது இறப்புக்குக் காரணமான மலையப்பன், சிவா, பொன்மலர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும்''’என்கிறார்.

"தனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை' என கடிதம் எழுதிவைத்துவிட்டு ராமசுப்பிரமணியன் இறந்திருப்பதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பே கோமதியையும் தற்கொலை செய்துகொள்ளலாமென அழைத்திருக்கிறார் ராமசுப்பிரமணியன். அவர் மறுத்ததால், மகள் சகிதமாக இந்த விபரீத முடிவில் இறங்கியிருக்கிறார் என்கிறது போலீஸ் தரப்பு.

-ஜெ.டி.ஆர்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe