Advertisment

தலைவிரித்தாடும் தாதாயிஸம்! போட்டுத் தள்ளும் போலீஸ்! -அலறும் மதுரை!

gun

""சட்டத்தின் ஆட்சி நடப்பதற்கு உதாரணம்தான் மதுரையில் நடந்த என்கவுன்ட்டர்'' என்றார் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால் சட்டத்திற்கு புறம்பாகவும் சமூகத்திற்கு புறம்பாகவும் ஆட்சி நடத்தி மதுரை மக்களை பீதியடைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளும் அரசியல் தாதாக்களும். மதுரை மாநகரில் கூலிப்படைக் கொலைகளைவிட, அரசியல் கொலைகளும் தொழில் போட்டிக் கொலைகளும் சர்வசாதாரணம்.

Advertisment

g

p

1980-களில் செல்லூர், சுப்பிரமணியபுரம், கரிமேடு, ஜெய்ஹிந்த்புரம், நெல்பேட்டை, வாழைத்தோப்பு, கீரைத்துறை, அனுப்பானடி, சிம்மக்கல், திடீர்நகர் போன்ற ஏரியாக்கள் ரவுடியிசத்துக்குப் பேர்போனவை. முதலில் சின்னச்சின்ன அளவில் கட்டப்பஞ்சாயத்தை ஆரம்பித்து தங்களது பராக்கிரமம் வெளியில் தெரிய ஆரம்பித்ததும் வியாபாரிகளை மிரட்டி பண வசூலில் இறங்குவார்கள். பின்பு ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்

""சட்டத்தின் ஆட்சி நடப்பதற்கு உதாரணம்தான் மதுரையில் நடந்த என்கவுன்ட்டர்'' என்றார் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால் சட்டத்திற்கு புறம்பாகவும் சமூகத்திற்கு புறம்பாகவும் ஆட்சி நடத்தி மதுரை மக்களை பீதியடைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளும் அரசியல் தாதாக்களும். மதுரை மாநகரில் கூலிப்படைக் கொலைகளைவிட, அரசியல் கொலைகளும் தொழில் போட்டிக் கொலைகளும் சர்வசாதாரணம்.

Advertisment

g

p

1980-களில் செல்லூர், சுப்பிரமணியபுரம், கரிமேடு, ஜெய்ஹிந்த்புரம், நெல்பேட்டை, வாழைத்தோப்பு, கீரைத்துறை, அனுப்பானடி, சிம்மக்கல், திடீர்நகர் போன்ற ஏரியாக்கள் ரவுடியிசத்துக்குப் பேர்போனவை. முதலில் சின்னச்சின்ன அளவில் கட்டப்பஞ்சாயத்தை ஆரம்பித்து தங்களது பராக்கிரமம் வெளியில் தெரிய ஆரம்பித்ததும் வியாபாரிகளை மிரட்டி பண வசூலில் இறங்குவார்கள். பின்பு ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து கரைவேட்டி கட்டத் தொடங்கியதும், ரவுடி ராஜ்ஜியத்தை ஓப்பனாக அரங்கேற்றுவார்கள்.

Advertisment

நெல்பேட்டை சீனி, பருத்திவீரன், தென்றல் மோகன், அணுகுண்டு அய்யாவு, பாம் பாஸ்கர், டாக் ரவி, ஒத்தக்கடை கணேசன், வரிச்சூர் செல்வம், காக்காத் தோப்பு கண்ணன் என பெரும் ரவுடிப்படையே மதுரையை ரவுண்டு கட்டி அடித்தது. மேற்படி கும்பலில் பல ரவுடிகள் போலீசால் பொலிபோடப்பட்டும், கௌரவப் பிரச்சனையில் ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக் கொண்டும் செத்தார்கள். இதில் வரிச்சூர் செல்வம் மட்டும் உயிர் பயத்தால் அவ்வப்போது நான் திருந்திட்டேன்னு அவனே அடிக்கடி சொல்லிக் கொள்வான். ஆனால் வெளியே தெரியாதபடி வேட்டை ஆடிக் கொண்டிருப்பான்.

mayakannanகடந்த ஜனவரி மாதம் "ஆளப்பிறந்தவனே', "அரசனே', "மன்னனே', "மண்ணின் மைந்தனே'’என எட்டு பிட்டு போஸ்டர்களில் மதுரை மாநகரெங்கும் பளிச்சிட்டான் வரிச்சூரான். அன்றைய தினம் அவனது பிறந்தநாளை முன்னிட்டு, புறநகர்ப் பகுதியில் இருக்கும் பண்ணைவீட்டில் தடபுடல் விருந்து நடந்தது. இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்., எம்.பி.க்கள் அமர்க்களமாக கலந்துகொண்டனர்.

தொழில்முறை ரவுடிகளின் இம்சை ஒருபக்கம் என்றால், அரசியல் தாதாக்களின் அட்டகாசம் இன்னொரு பக்கம். மாநகராட்சியின் மண்டலத் தலைவர்களாக இருந்த தி.மு.க.வின் வீ.கே.குருசாமியும் அ.தி.மு.க.வின் ராஜபாண்டியும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அரசியல் பகையால் இருதரப்பிலும் இதுவரை 17 பேர் படுகொலையாகியிருக்கிறார்கள். ராஜபாண்டி குரூப்பைச் சேர்ந்த மயில்முருகனை ஓடஓட வெட்டிக் கொன்றதற்கு பழிக்குப்பழி வாங்க, ராஜபாண்டியின் மகன் முனியசாமியைக் கடத்தி எரித்துக் கொல்கிறார்கள். இதற்குப் பழி தீர்க்க குருசாமியின் கோஷ்டியைச் சேர்ந்த சடையாண்டியை போட்டுத் தள்ளிவிட்டார்கள்.

கடந்த ஆண்டு நடந்த இந்தக் கொலையின் முக்கியக் குற்றவாளிகள்தான், மதுரையில் நடந்த என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ளப்பட்ட சகுனி கார்த்திக்கும் இருளாண்டியும். ஒரு வருடமாக போலீசுக்குத் தண்ணி காட்டி வந்த இவர்கள், கடந்த 01-ஆம் தேதி, வீ.கே.குருசாமியின் கூட்டாளியான மாயக்கண்ணனின் சிக்கந்தர்சாவடி வீட்டில், யாரையோ போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடும் தகவலை ஸ்மெல் பண்ணியது போலீஸ். உடனே உஷாரான எஸ்.பி.மணிவண்ணன், செல்லூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் ஸ்பெஷல் டீமை ஃபார்ம் பண்ணினார்.

selviஏற்கெனவே பக்காவாக திட்டமிட்டபடி, வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றதும் சடசடவென துப்பாக்கியை ஆபரேட் பண்ண, ஸ்பாட்டிலேயே சகுனி கார்த்திக்கும் இருளாண்டியும் மாண்டார்கள். சுவர் ஏறிக்குதித்து தப்பிவிட்டான் மாயக்கண்ணன். வாடிப்பட்டி சார்புநிலை நீதிபதி விக்னேஷ் மதுவின் முன்னிலையில் போஸ்ட்மார்ட்டம் நடந்து, இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

""ரவுடிகள் போலீசாரைத் தாக்க முற்பட்டதால், தங்களைத் தற்காத்துக்கொள்ள துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டது. இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது''’என்பதோடு முடித்துக்கொண்டார் எஸ்.பி. மணிவண்ணன்.

இருளாண்டியின் அக்கா செல்வியோ, ""சரணடைந்தால் விட்ருவோம்னு சொல்லிக் கூட்டிப் போய் சுட்டுவிட்டார்கள்''’என்கிறார். சமூக செயற்பாட்டாளர் ராஜன் நம்மிடம் பேசும்போது, “""போலீசாரே கொலை செய்வது சட்டத்திற்குப் புறம்பானது. கொலையானவர்களின் உறவினர்களிடம் நீதிபதி விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, போலீசாரும் உடன் இருந்து, மிரள வைத்தார்கள்''’’ என்கிறார்.

இப்போதைய இந்த என்கவுன்ட்டர் மதுரை மக்களுக்குத் தற்காலிகத் தீர்வுதான் நிரந்தர நிம்மதிக்கு வழி கிடைக்க வேண்டுமானால் ரவுடிகளின் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை கட்டாயம்.

-அண்ணல்

police
இதையும் படியுங்கள்
Subscribe