சங்கிலிப் பறிப்பைவிட இப்போது பெருகிவரும், மொபைல் போன் பறிப்புகள், பொது மக்களை கதிகலங்க வைக்கின்றன.
கடந்த 15-ஆம் தேதி, டெல்லியில் இருந்து சென்னை -சென்ட்ரல் ரயில்நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரசில், படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தார் ஓவியர் கோகுல்ராமன். சென்னை அண்ணாநகர்காரரான அவர் செல்போனில் பேசியபடியே வந்துகொண்டிருக்க, திருவொற்றியூர் சடையான்குப்பம் அருகே ரயில்வே டிராக்கில் இருந்த ஒருவன், திடீரென கம்பால் அடித்து, செல்போனை பறித்துக்கொண்டு ஓடினான். திகைத்துப்போன கோகுல்ராமன், ரயிலில் இருந்து குதித்து, அவனைத் துரத்தினார்.
ஆட்டோ டிரைவர் ஆசீப்பாஷா என்பவருடன் சேர்ந்து, செல்போன் கொள்ளையர்கள் மூவரை மடக்கி, திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பரத்திடம் ஒப்படைத்தார். விசாரண
சங்கிலிப் பறிப்பைவிட இப்போது பெருகிவரும், மொபைல் போன் பறிப்புகள், பொது மக்களை கதிகலங்க வைக்கின்றன.
கடந்த 15-ஆம் தேதி, டெல்லியில் இருந்து சென்னை -சென்ட்ரல் ரயில்நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரசில், படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தார் ஓவியர் கோகுல்ராமன். சென்னை அண்ணாநகர்காரரான அவர் செல்போனில் பேசியபடியே வந்துகொண்டிருக்க, திருவொற்றியூர் சடையான்குப்பம் அருகே ரயில்வே டிராக்கில் இருந்த ஒருவன், திடீரென கம்பால் அடித்து, செல்போனை பறித்துக்கொண்டு ஓடினான். திகைத்துப்போன கோகுல்ராமன், ரயிலில் இருந்து குதித்து, அவனைத் துரத்தினார்.
ஆட்டோ டிரைவர் ஆசீப்பாஷா என்பவருடன் சேர்ந்து, செல்போன் கொள்ளையர்கள் மூவரை மடக்கி, திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பரத்திடம் ஒப்படைத்தார். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த முகமது யாசீப், பாலா மற்றும் சிறுவன் இம்ரான் என்பது தெரியவந்தது. விசாரணை தொடர்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை அடையாறு, திருவான்மியூர் தொடங்கி, பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், நாவலூர், சிறுசேரி போன்ற ஐ.டி. நிறுவன பகுதிகளில்தான் அதிகமாக செல்போன் பறிப்புகள் நடக்கின்றன.
அதிலும் பெண்களைக் குறிவைத்தே அதிகம் நடக்கிறது. சமீபத்தில் ஐ.டி. ஊழியர் லாவண்யா என்பவரை கொடூரமாகத் தாக்கி, தங்க நகை மற்றும் ஐபோனை கொள்ளயடித்தது ஒரு கும்பல். செம்மஞ்சேரி குடிசைமாற்று வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த லோகேஷ், வினாயகமூர்த்தி, நாராயணமூர்த்தி ஆகியோர்தான் அந்தக் கிரிமினல்கள் என்பதைக் கண்டுபிடித்தது போலீஸ். குடி போதைக்காக இப்படிச் செய்வதாகவும், 2016-ல் தாழம்பூர் அருகே செல்போன் பறிப்பில் ஈடுபட்டபோது, வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைக் கொலைசெய்து, சிறைக்குச் சென்றுவந்ததும் தெரியவந்திருக்கிறது. இதேபோல் கொருக்குப்பேட்டையில் ஒரு கும்பல், செல்போன் பறிப்பில் ஈடுபட்டபோது, செல்போன் வைத்திருந்த இளைஞனை இரு கார்களுக்கு இடையில் தள்ளி, நெஞ்சில் மிதித்துக் கொலைசெய்துவிட்டு, அவரிடமிருந்த செல்போனையும் தங்கச் செயினையும் பறித்துக்கொண்டு போய்விட்டது. அதேபோல், சென்னை -நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவன் ரஞ்சித்தை, கடந்த 19-ந் தேதி ஒரு கும்பல் வழிமறித்து, அவர் கழுத்தை அறுத்துக்கொன்று, செல்போனை எடுத்துச் சென்றிருக்கிறது. இப்படி செல்போன் கொலைகள் பகீரூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. இப்படிப் பறிக்கப்படும் செல்போன்கள் என்ன ஆகின்றன?
""சாதாரண செல்போன்களை 500 ரூபாய் முதல், 1500 ரூபாய்வரை விற்கிறார்கள். ஸ்மார்ட் போன்களை, மாடலுக்கு ஏற்றாற்போல 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய்வரை விற்கிறார்கள். சாம்சன், சோனி போன்களுக்கு நல்ல விலை கிடைக்கும், ஐ. போன் புதுமாடலை 5000 ரூபாய்க்கு விற்கிறார்கள். இப்படி காஸ்ட்லி போன்களை எல்லாம் வழிப்பறிசெய்து, அடிமாட்டு விலைக்கு விற்றுவிடுகிறார்கள் செல்போன் திருடர்கள். சிலநேரம் விற்கமுடியாவிட்டால் அவற்றை அடமானம் வைத்தாவது காசு பார்த்துவிடுவார்கள். சமீபத்தில் நீலாங்கரை மார்வாடிக் கடை ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட திருட்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தார்கள்''’என்கிறார் பெருங்குடி ஆட்டோ டிரைவர் ஒருவர்.
செல்போனைப் பறிகொடுத்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், அவ்வளவு எளிதில் புகாரைப் பதிவதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக இருக்கிறது. இது தொடர்பாக சென்னை மாநகர சைபர் க்ரைம் போலீஸ் ஏ.டி.சி. ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது ‘""திருட்டுப்போன செல் போன்களை கண்டுபிடிப்பதில் பல சிக்கல் இருக்கு. திருடப்பட்ட போனை, ஐ.எம்.இ. நம்பரை வைத்து டிரேஸ் செய்தாலும், அதைத் தேடி அடுத்த மாநிலம்வரை போகவேண்டிய நிலை ஏற்படும். அங்கே இரண்டு மூன்றுநாள் தங்கி விசாரிக்க வேண்டியிருக்கும். இதற்கான செலவு, போன் மதிப்பைவிட பலமடங்காகும். இதில் அங்கே இருக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் தலைமையிடம் அனுமதி வாங்கி, நம்பரை டிரேஸ் செய்ய நாட்கணக்கில்கூட ஆகலாம். அதிலும் இப்போதைய தொழில் நுட்பத்தில் ஐ.எம்.இ. நம்பரையும் மாற்றிவிடலாம். இதில் இவ்வளவு சிரமங்கள் போலீசுக்கு இருக்கு''’ என்றார் நிதானமாக.
செல்போன் திருடர்களின் தாக்குதல்களில் இருந்து, உயிரையும் செல்போனையும் காப்பாற்றிக்கொள்வது எப்படி?
எவரிடமும் பதில் இல்லை.
-அரவிந்த்
படங்கள்: அசோக்