சபாநாயகர் சப்போர்ட்! டி.எஸ்.பி. ராஜ்ஜியம்!

dsp

dsp

பார்த்தால் பயப்படச் செய்வது போலீசின் இயல்பு. ஆனால் பயப்படுகிறவர்கள் கிரிமினல்களா, பொதுமக்களா என்பது முக்கியம். கோவை மாவட்ட அவினாசி டி.எஸ்.பி.யாக இருந்த பரமசாமி, சேலத்துக்கு மாறிய போது, பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அவினாசி மக்கள், மூன்றே வாரத்தில் அதே பரமசாமி மீண்டும் அதே ஊரில் அடியெடுத்து வைத்ததைப் பார்த்து மிரண்டுபோய்க் கிடக்கிறார்கள்.

ஏரியாவாசியான ரவி, தன் அனுபவத்தைச் சொல்கிறார்...

""எனக்கும் பக்கத்துவீட்டு சதானந்தத்துக்கும் சாக்கடைப் பிரச்சனை இருந்தது. அதனால் அவர் தன் நாயை ஏவி என்னைக் கடிக்கச் செஞ்சாரு. இது சம்மந்தமா புகார் கொடுத்தப்ப, டி.எஸ்.பி. பரமசாமி என்னை விரட்டினார். என் சார்பா போனவங்களயும் அதட்டி துரத்திவிட்டார். அதனா

dsp

பார்த்தால் பயப்படச் செய்வது போலீசின் இயல்பு. ஆனால் பயப்படுகிறவர்கள் கிரிமினல்களா, பொதுமக்களா என்பது முக்கியம். கோவை மாவட்ட அவினாசி டி.எஸ்.பி.யாக இருந்த பரமசாமி, சேலத்துக்கு மாறிய போது, பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அவினாசி மக்கள், மூன்றே வாரத்தில் அதே பரமசாமி மீண்டும் அதே ஊரில் அடியெடுத்து வைத்ததைப் பார்த்து மிரண்டுபோய்க் கிடக்கிறார்கள்.

ஏரியாவாசியான ரவி, தன் அனுபவத்தைச் சொல்கிறார்...

""எனக்கும் பக்கத்துவீட்டு சதானந்தத்துக்கும் சாக்கடைப் பிரச்சனை இருந்தது. அதனால் அவர் தன் நாயை ஏவி என்னைக் கடிக்கச் செஞ்சாரு. இது சம்மந்தமா புகார் கொடுத்தப்ப, டி.எஸ்.பி. பரமசாமி என்னை விரட்டினார். என் சார்பா போனவங்களயும் அதட்டி துரத்திவிட்டார். அதனால் ஹைகோர்ட்டில் நான் வழக்கு போட்டேன். அதன்பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதன் விபரங்களை எனக்கு தெரிவிக்கணும்னு ஹைகோர்ட் உத்தரவிட்டுச்சு. ஆனால் போலீஸோ, "டி.எஸ்.பி. சொன்னபடி, உங்கள் புகாரில் உண்மை இல்லை என தெரியவருது. எனவே விசாரணை முடித்து வைக்கப்பட்டது'ன்னு என் வீட்டு சுவத்துல நோட்டீசை ஒட்டிடுச்சு. இப்படி போலீஸ் துறையே தன் கையில் இருக்குங்கிற தைரியத்தில் அராஜகம் செய்த பரமசாமிக்கு, மாற்றல்ன்னதும் எல்லோரும் சந்தோஷப்பட்டாங்க. ஆனா... இப்ப மறுபடியும் அவர் வந்துட்டாருங்களே''’ என்றார் வருத்தமாய்.

raviமாறன் என்ற முதியவரோ, ""நான் தலித்துங்க . எனக்கு 80 வயசு ஆச்சுங்கய்யா. மின்சார விபத்தில் பாதிக்கப்பட்ட என் விதவை மகளோடும் பேரக்குழந்தைகளோடும் போராடிக்கிட்டிருக்கேன். இந்த நிலையில், என் வீட்டுக்கு குடிவந்த குப்புசாமிங்கிறவர், அந்த வீடு தனக்குதான் சொந்தம்னு என்னை மிரட்டினார்.

அவினாசி போலீஸ் ஸ்டேசன்ல போய்... ""விதவையா நிக்கற என் பொண்ணுக்கும், வாழப்போற என் ரெண்டு பேரக்குழந்தைகளுக்கும் இந்த ஒரு வூடுதான் சாமீ இருக்கு. எப்படியாவது அந்த வூட்ட காலிபண்ணிக் குடுங்கன்னு சொன்னேன். ஆனா அந்த குப்புசாமி, சபாநாயகர் தனபாலுக்கு ரொம்ப வேண்டப்பட்டவராம்.. அதுனால என்னைய "வேற வீடு பார்த்து போய்க்கோ'ன்னு இந்த டி.எஸ்.பி. பரமசாமி மெரட்டினார். அதனால், சபாநாயகர்கிட்டயே நாயம் கேட்போம்னு, அவர் வீட்டுக்கு முன்னால நானும் என் பொஞ்சாதியும், என் மவளும், வாயில கருப்புத்துணி கட்டிக்கிட்டு உக்காந்தோம். ஆனா டி.எஸ்.பி.யோ, நாங்க கலகம் பண்ணினோம்னு எங்கமேல கேஸ் போட்டு உள்ள அனுப்பிட்டாருங்கய்யா. இப்ப மீளும் வழி தெரியாம நிக்கிறோம்''’என அழுகிறார்.

""சபாநாயகர் இருக்கும்வரை, இந்த டி.எஸ்.பி.யின் கொட்டத்தை யாராலும் அடக்க முடியாது. அவர் கொடுக்குற தைரியத்தில்தான் ஆடறார்'' என்கிறார் சமூகஆர்வலரான வழக்கறிஞர் சத்தியமூர்த்தி.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெற டி.எஸ்.பி. பரமசாமியைத் தொடர்புகொண்டோம் அவரோ, ""என் மீதான புகார்கள் பொய்யானவை. நான் மாறுதலாகிப் போயிட்டு இங்க மறுபடியும் வர்றதுக்குக் காரணம் சபாநாயகர்தான். நான் நேர்மையானவன்''’ என புகார்களை மறுத்தார்.

மக்கள் முன் ஹீரோவாக இருக்கவேண்டிய காவல்துறை அதிகாரியே, வில்லனாக இருக்கலாமா?

-அருள்

சட்டவிரோதச் செயல்கள்!

"அவினாசி பகுதி முழுக்க சட்டவிரோதச் செயல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு அருகில் மாத்துப்பாளையம் ரோட்டிலேயே ஒரு நம்பர் லாட்டரி விற்கப்படுகிறது. அதேபோல் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் சட்டவிரோத மதுபான விற்பனையும் நடக்கிறது. அவினாசி லிமிட்டில் 22 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இவற்றிலிருந்து மாமூல் குவிகிறது. சில ரெஸ்டாரண்டுகளிலும் மதுபான விற்பனை நடக்கிறது. கஞ்சா விற்பனை, வெட்டாட்டம் போன்றவையும் அமோகமாக நடக்கிறது. அவினாசி, தெக்கலூர், சேவூர், குன்னத்தூர் பகுதிகளில் சட்டவிரோதமாக கள் இறக்கப்படுகிறது. இவை எல்லாவற்றிலும் டி.எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு லாபம் என்றார்கள் லோக்கல் காக்கிகளே.

இதையும் படியுங்கள்
Subscribe