தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையாவை எங்கோ ரகசிய இடத்தில் வைத்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எதற்காக? காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உற்சவமூர்த்தியான சோமாஸ்கந்தர் சிலைகளை மாற்றி போலி சிலைகளை வைத்ததற்காகத்தான்.
ஏற்கெனவே பள்ளியறை, சிவன்-பார்வதி, பாலமுருகன் ஆகிய ஐம்பொன் விக்கிரகங்கள் காணாமல் போயிருக்கின்றன. அவற்றிற்காக யாரும் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஆனால், பழைய உற்சவரான சோமாஸ்கந்தர் சிலை 87 கிலோ ஐம்பொன் சிலை. அதிகக் கலவை தங்கம்.
இந்தச் சிலையில் ஏதோ ஊனம் ஏற்பட்டது. புதிய உற்சவ சிலை செய்யவேண்டும் என்று அப்போதைய நிர்வாகம் சொன்னபோது இதே முத்தையா ஸ்தபதிதான், ""புதிய சிலை செய்யவேண்டாம், இதே சிலை இருக்கட்டும
தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையாவை எங்கோ ரகசிய இடத்தில் வைத்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எதற்காக? காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உற்சவமூர்த்தியான சோமாஸ்கந்தர் சிலைகளை மாற்றி போலி சிலைகளை வைத்ததற்காகத்தான்.
ஏற்கெனவே பள்ளியறை, சிவன்-பார்வதி, பாலமுருகன் ஆகிய ஐம்பொன் விக்கிரகங்கள் காணாமல் போயிருக்கின்றன. அவற்றிற்காக யாரும் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஆனால், பழைய உற்சவரான சோமாஸ்கந்தர் சிலை 87 கிலோ ஐம்பொன் சிலை. அதிகக் கலவை தங்கம்.
இந்தச் சிலையில் ஏதோ ஊனம் ஏற்பட்டது. புதிய உற்சவ சிலை செய்யவேண்டும் என்று அப்போதைய நிர்வாகம் சொன்னபோது இதே முத்தையா ஸ்தபதிதான், ""புதிய சிலை செய்யவேண்டாம், இதே சிலை இருக்கட்டும்'' என்று கூறிவிட்டார்.
அந்த நேரத்தில்தான் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரரும் விஜயேந்திரரும் இதில் மூக்கை நுழைத்தார்கள்.
"புதிய சிலை செய்ய தங்கம், நன்கொடை வசூலித்துத் தருகிறோம்' என்று சோமாஸ்கந்தர் சிலைக்காக தங்கம் வசூலித்துக் கொடுத்தார்கள்.
உற்சவர் சிலை 87 கிலோவுக்கு அதிக எடை இருக்கக்கூடாது என்ற மரபை -ஆகம விதிகளை மீறி 111 கிலோ எடையில், முத்தையா ஸ்தபதி முன்னிலையில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது.
அதன் பிறகுதான் ஒரு அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. இப்போது இருக்கும் புதிய, பழைய சோமாஸ்கந்தர் சிலைகளில் ஒருகிராம் தங்கம்கூட சேர்க்கப்படவில்லை. இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களால் உருவாக்கப்பட்டவையே இவை என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல்.
அதாவது உண்மையான, தங்கத்தாலான பழைய சிலையைக் கடத்திவிட்டு, பழைய சிலைபோல ஒன்றை செய்திருக்கிறார்கள் என்பதும், நூறு கிலோ தங்கம் நன்கொடை பெற்று செய்த புதிய சிலையிலும் ஒருகிராம் தங்கம்கூட இல்லையென்பதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
இதற்காகத்தான் அரசுத் தலைமை ஸ்தபதி முத்தையா, அறநிலையத்துறை அதிகாரி முருகேசன், ஸ்தனிகர் ராஜப்பா, செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சங்கரன், பரத்குமார், வினோத்குமார், ஸ்தபதி மாசிலாமணி ஆகியோர் மீது சிலை கடத்தல் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் ""ஏகாம்பர ஈஸ்வரர் கோயில் தொண்டை மண்டல ஆதீனத்திற்கு உரியது. என்னைக் கேட்காமல், என்னை அழைக்காமல் புதிய தரமற்ற உற்சவர் சிலையை பிரதிஷ்டை செய்யவேண்டிய அவசியமென்ன?'' என்றார்.
ஏகாம்பரர் கோயில் முன்னாள் அறங்காவலர் ரகு வெங்கடேசன் நம்மிடம், ""பழைய உற்சவர் சிலை சேதமடைந்தால் அதைச் சரிசெய்ய வேண்டும், பெரிய அளவு சேதமென்றால் பழையதை உருக்கி புதிய சிலை செய்யவேண்டும். ஆகமவிதிகளை மீறி புதிய சிலை செய்ததன் மர்மம் புரியவில்லை'' என்று கொதித்தார்.
ஏகாம்பரர் கோயில் சிலை பிரச்சினைகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்ற தினேஷ், ""நானும் என் தம்பி பாபுவும்தான் பலப்பல எதிர்ப்புகளையும் மீறி இந்த சிலைகடத்தலில் உள்ள உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்காக பல வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறோம். புதிய சிலைகளில் தங்கமே இல்லை. அப்படியானால் நன்கொடை தங்கம் என்னாயிற்று? சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுதான் இதையும் கண்டுபிடிக்க வேண்டும்'' என்றார்.
இந்தக் கோயிலுக்கும் காஞ்சி சங்கர மடத்துக்கும் உறவு ஏற்படுத்தும் வகையில் ஜெயேந்திரர் மிகுந்த அக்கறை காட்டியதைக் குறிப்பிடும் காஞ்சிபுர பக்தர்கள், ""ஜெயேந்திரரின் பார்வைக்கு அந்தப் புதிய சிலை கொண்டுபோகப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, கோயில் கும்பாபிஷேகத்துக்கு திட்டமிட்டே 2016 டிசம்பர் 4-ந் தேதி தேதி குறித்து நிறைவேற்றினார். அதே நாளில்தான் ஜெ.வுக்கும் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. இப்படி எத்தனையோ மர்மங்கள்...'' என்கிறார்கள் வேதனையுடன்.
-அரவிந்த்