Advertisment

பா.ஜ.க. முதலாளிக்காக வஞ்சிக்கப்படும் வணிகர்கள் -மெட்ரோ திட்ட குளறுபடி!

metro

ந்த ஊரிலும் வாய்க்கால்கள் நேராகப் பயணிப்பதில்லை. வலியவர்களின் வயல்கள் குறுக்கிட்டால் வாய்க்கால்களின் பாதை திசைமாறிவிடும். இதைத்தான், அந்தக் காலத்தில் "வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்றார்கள்.

Advertisment

metro

அதைப்போலவே ""கார்ப்பரேட் முதலாளி வகுப்பதே சென்னை மெட்ரோ வழித்தடம்'' என்ற புதுமொழியை உருவாக்கியிருக்கிறார், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் செல்வாக்கு பெற்ற ஹிதேஷ் காவாரி என்பவர்.

"சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம்கட்ட வழித்தடம் பெரம்பூர், அயனாவரம் செங்கல்சூளைச் சாலை, ஓட்டேரி, கெல்லீஸ் வழியாக அமைக்கப்படும்' என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இப்போது அந்த வழித்தடத்தை மாற்றி "அயனாவரத்தில் இருந

ந்த ஊரிலும் வாய்க்கால்கள் நேராகப் பயணிப்பதில்லை. வலியவர்களின் வயல்கள் குறுக்கிட்டால் வாய்க்கால்களின் பாதை திசைமாறிவிடும். இதைத்தான், அந்தக் காலத்தில் "வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்றார்கள்.

Advertisment

metro

அதைப்போலவே ""கார்ப்பரேட் முதலாளி வகுப்பதே சென்னை மெட்ரோ வழித்தடம்'' என்ற புதுமொழியை உருவாக்கியிருக்கிறார், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் செல்வாக்கு பெற்ற ஹிதேஷ் காவாரி என்பவர்.

"சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம்கட்ட வழித்தடம் பெரம்பூர், அயனாவரம் செங்கல்சூளைச் சாலை, ஓட்டேரி, கெல்லீஸ் வழியாக அமைக்கப்படும்' என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இப்போது அந்த வழித்தடத்தை மாற்றி "அயனாவரத்தில் இருந்து பட்டாளம், பெரம்பூர் -பேரக்ஸ் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக கெல்லீஸ் வரை அமைக்கப்படும்' என்று முடிவு செய்து விட்டார்கள்.

இந்தப் புதிய வழித்தடத்தில் பெரம்பூர் -பேரக்ஸ் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஆகியவற்றில் உள்ள வெல்கம் ஹோட்டல், வசந்த் அன் கோ, ஜிம்ஷா, சரவணா ஸ்டோர், ஜவஹர் பில்டர், மதர்ஷா உட்பட சுமார் 10 ஆயிரம் பெரிய கடைகளும், 500 சிறிய கடைகளும் அப்புறப்படுத்தப்பட உள்ளன.

இவற்றோடு, புதிதாக, மெட்ரோவுக்காக மூன்று ஸ்டேஷன்களும் கட்டப்படவுள்ளன. இவற்றால் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள்.

இதனால்தான் புதிய வழித்தடத்தைக் கைவிடக் கோரியும், பழைய திட்டப்படி வழித்தடம், அமைக்கப்பட வேண்டும் என்றும் வேப்பேரி வியாபாரிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது.

பழைய வழித்தடத்தை மாற்றி புதிதாக வழித்தடம் அமைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

metro

""பழைய வழித்தடத்தில், பெரம்பூர் பின்னிமில் அருகில் பா.ஜ.க.காரரான சுனில் கேட்பாலயா என்பவருக்குச் சொந்தமான எஸ்.பி.ஆர். கட்டுமான நிறுவனம் கட்டிய, சுமார் ஐயாயிரம் வணிக நிறுவனங்கள் உள்ள மிகப்பெரிய "மால்' உள்ளது. இரண்டாவது மெட்ரோ வழித்தடத்தில் இடிபடும் நிறுவன கடைக்காரர்கள் அனைவரும் தங்கள் மாலில் உள்ள கட்டடங்களில் கடை போடவேண்டும் என்று வியாபார நோக்கத்தில் திட்டமிட்டது சுனில் கேட்பாலயாவின் நிறுவனம். அதன் விளைவுதான் இரண்டாவது வழித்தடம் என்கிறார்கள் வியாபாரிகள். இந்த எஸ்.பி.ஆர். கட்டுமான நிறுவனத்தை தொடங்கி வைத்ததே பா.ஜ.க. தலைவர் அமித்ஷாதான்.

metroஇதுதொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க புரசைத் தலைவர் நாகபுஷ்பம், ""புதிய வழித்தடம் அமைக்கப்படுமானால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். இதைப் பற்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடியாருக்கு மனு கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் நாங்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம். முந்தைய திட்டப்படி மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை'' பரிதாபமாகச் சொன்னார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவோ, ""இது ஒட்டுமொத்த வியாபாரிகள் வயிற்றில் அடிக்கும் செயல். எஸ்.பி.ஆர். நிறுவனத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்காக புதியதாக திட்டம் போட்டு அரசு செயல்படுவதாக வலுவாக சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. பழமை வாய்ந்த புரசைவாக்கம் பஜாரை அழித்துதான் மெட்ரோ ரயிலை நீட்டிக்க வேண்டுமா? ஏற்கனவே திட்டமிட்ட பாதையை ஏன் மாற்ற வேண்டும்? என்ற கேள்விக்கு இன்றுவரை சி.எம்.ஆர். பதில் தரவில்லை. இந்த இரண்டாவது வழித்தடப் பாதையை மாற்றாவிட்டால் ஒட்டுமொத்த வியாபாரிகளையும் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்'' என்று எச்சரித்தார்.

தனக்கு வேண்டிய முதலாளி ஒருவருக்கு லாபமீட்டித் தர வேண்டும் என்பதற்காக ஆயிரமாயிரம் வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுதான் மோடி அரசின் திட்டமாக இருக்கிறது.

metro train project
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe