"ஒரு நபருக்கு மூன்று வீடுகளா?'

"அட விடுங்கப்பா... ஆளுங்கட்சி ஒ.செ. என்றால் ஒதுக்கக்கூடாதா?'

ஆண்டிமடம் ஒன்றிய ஜெ. பேரவைச் செயலாளர், செந்தில்ராஜாவுக்கு சொந்த ஊரான மருதத்தூரில் அரசின் மூன்று பசுமை வீடுகள் ஒதுக்கப்பட்டன.

Advertisment

admk

மூன்று வீடுகளையும் முடிப்பதற்கு ஒ.செ. செந்தில்ராஜாவுக்கு கொஞ்சம் பணப் பற்றாக்குறை.

செந்தில்ராஜா, ஒ.செ. மட்டுமல்ல. திட்டப் பணிகளை எடுத்துச் செய்யும் சப்-காண்ட்ராக்டரும்கூட.

அரியலூர் மாவட்ட திட்ட அலுவலகத்தில், திட்ட அலுவலக கிளார்க் பழனியாண்டி யாரிடமோ ""ஏம்ப்பா... நம்ம காண்ட்ராக்டர் விஸ்வநாதன் (த.மா.கா.காரர், சேர்மனாக இருந்தவர்). சாரோட மூன்று லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செக் ரெடியா இருக்கு. அவரை வந்து வாங்கிட்டு போகச் சொல்லு'' என்று சொன்னார். அந்த வார்த்தை ஜெ. பேரவை ஒ.செ. செந்தில்ராஜா காதில் தேன் போல பாய்ந்தது. அவர் கிளார்க் பழனியாண்டியை நெருங்கினார். ""சார்... நான் விஸ்வநாதனைத்தான் பார்க்கப் போறேன். அந்தச் செக்கைத் தாங்க. நான் கொடுத்து விடுகிறேன்'' கேட்டு வாங்கிச் சென்றார்.

"இந்த மூணே முக்கால் லட்சத்தை மாற்ற வேண்டும். எப்படி மாற்றுவது? யோசித்தார் செந்தில்ராஜா. கும்பகோணத்திற்குச் சென்றார். உறவினர்கள் சாமிநாதன் மற்றும் கோகுலின் உதவியை நாடினார். ""கே.விஸ்வநாதன்னு யாராவது இருக்காங்களா?''

vishanathan""என் நண்பர் ஒருவர் இருக்கிறார். வெளிநாட்டில் இருக்கிறார். நாச்சியார் கோயில் ஸ்டேட் பேங்க்கில் அக்கவுண்ட் இருக்கு'' என்றார் நாகையூர் கோகுல். ஜெ. பேரவை ஒ.செ. செந்தில்ராஜாவுக்கு வேலை எளிதாகிவிட்டது.

திட்ட அலுவலகம் கணக்கு வைத்துள்ள அரியலூர் ஸ்டேட் வங்கியில் இருந்து நாச்சியார் கோயில் வங்கிக்கு பணப் பரிமாற்றம் நடந்தது. சாமர்த்தியமாக பணத்தை எடுத்துவிட்டார் செந்தில்ராஜா. இரண்டு மாதத்திற்குப் பிறகு திட்ட அலுவலகத்திற்கு வந்த காண்ட்ராக்டர் விஸ்வநாதனுக்கு, தனது காசோலை மோசடி செய்யப்பட்ட விவரம் தெரிந்தது.

""அப்புறம்தான் மாவட்ட கிரைம் பிராஞ்ச்ல புகார் கொடுத்தேன். இன்ஸ்பெக்டர் சுமதியும், எஸ்.ஐ. ரங்கநாதனும் திறமையாக விசாரணை நடத்தி அரெஸ்ட் செய்து விட்டனர்'' என்றார் த.மா.கா. பிரமுகரான கே.விஸ்வநாதன்.

இன்ஸ்பெக்டர் சுமதியையும், எஸ்.ஐ. ரங்கநாதனையும் சந்தித்தோம்.

""குற்றவாளி ஆளுங்கட்சிக்காரர். ஆனாலும், ஒ.செ.செந்தில்ராஜா, சாமிநாதன், கோகுல் மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தினோம். இப்போது சிறையில் இருக்கிறார்கள். உரிய தண்டனை நிச்சயம் கிடைக்கும்'' என்றார்கள் இருவரும்.

பேங்க்கை ஏமாற்றும் நீரவ் மோடிகள் தமிழகத்திலும் இருக்கிறார்கள்.

-எஸ்.பி.சேகர்