"எப்படியிருக்கு என்னுடைய படம்..? நீயும் டிரெஸ்ஸில்லாமல் உன்னுடைய படத்தை அனுப்பி வை.!' என வாட்ஸ்-அப்பிலும், முகநூலிலும் பெண்காவலர்களுக்கு காவல்துறை எஸ்.பி. ஒருவர் அனுப்பி வைக்க, அவரை மட்டுமல்லாது... மாநிலத்திலுள்ள மன்மத அதிகாரிகளை இனம்கண்டு காவல்துறையின் டி.ஜி.பி. அலுவலகத்திற்கும், காவலர்களுக்கென உள்ள விசாகா கமிட்டியிலும் புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளனர் பெண் காவலர்கள்.
தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட எஸ்.பி. கட்டுப்பாட்டின்கீழ் தலைநகர் சென்னை, கோவை, நெல்லை, மதுரை, வேலூர், பழநி, திருச்சி, ராஜபாளையம், மணிமுத்தாறு, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் பட்டாலியன் எனப்படும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை செயல்பட்டு வருகிறது. இங்கு கமாண்டன்ட் (எஸ்.பி. ரேங்க்) தலைமை அதிகாரியாக இருப்பார். இதன் தலைமை அதிகாரிகளில் சிலர் தனக்குக் கீழுள்ள பெண் காவலர்களைப் படுத்தும்பாடு சொல்லி மாளாது. அதில் செக்ஸ் டார்ச்சர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். அதில் ஒன்றுதான் முந்தைய பத்தி.
""தற்பொழுது வாட்ஸ்-அப் குழுக்களில் பரப்பப்பட்டுவரும் அரைநிர்வாண போட்டோவுக்குச் சொந்தக்காரர், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறிலுள்ள தமிழ்நாடு சிறப்பு
"எப்படியிருக்கு என்னுடைய படம்..? நீயும் டிரெஸ்ஸில்லாமல் உன்னுடைய படத்தை அனுப்பி வை.!' என வாட்ஸ்-அப்பிலும், முகநூலிலும் பெண்காவலர்களுக்கு காவல்துறை எஸ்.பி. ஒருவர் அனுப்பி வைக்க, அவரை மட்டுமல்லாது... மாநிலத்திலுள்ள மன்மத அதிகாரிகளை இனம்கண்டு காவல்துறையின் டி.ஜி.பி. அலுவலகத்திற்கும், காவலர்களுக்கென உள்ள விசாகா கமிட்டியிலும் புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளனர் பெண் காவலர்கள்.
தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட எஸ்.பி. கட்டுப்பாட்டின்கீழ் தலைநகர் சென்னை, கோவை, நெல்லை, மதுரை, வேலூர், பழநி, திருச்சி, ராஜபாளையம், மணிமுத்தாறு, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் பட்டாலியன் எனப்படும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை செயல்பட்டு வருகிறது. இங்கு கமாண்டன்ட் (எஸ்.பி. ரேங்க்) தலைமை அதிகாரியாக இருப்பார். இதன் தலைமை அதிகாரிகளில் சிலர் தனக்குக் கீழுள்ள பெண் காவலர்களைப் படுத்தும்பாடு சொல்லி மாளாது. அதில் செக்ஸ் டார்ச்சர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். அதில் ஒன்றுதான் முந்தைய பத்தி.
""தற்பொழுது வாட்ஸ்-அப் குழுக்களில் பரப்பப்பட்டுவரும் அரைநிர்வாண போட்டோவுக்குச் சொந்தக்காரர், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறிலுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் 9-ஆம் மற்றும் 12-ஆம் அணிகளின் எஸ்.பி.யாக இருக்கும் அய்யம்பெருமாள். ஏற்கனவே பணம் -பெண் என புகார்களுக்குள்ளாகியும், தன்னைக் காப்பாற்றிக் கொண்டவர் இவர். டெல்லிவரை போஸ்டிங் வாங்குமளவுக்கு செல்வாக்கைக் கொண்டிருப்பவர். ஆண், பெண் காவலர்கள் தவறு செய்தால், இவர் ஆண் காவலரை மட்டும் கண்டித்துவிட்டு, பெண்காவலரை கண்டிக்காமல் அனுப்பி விடுவார். பிறகு அதையே சாக்காக வைத்து, அந்த பெண்ணின் எண்ணிற்கு " டிரெஸ்ஸில்லாமல் என்னுடைய படம் அனுப்புகிறேன். நீயும் டிரெஸ்ஸில்லாமல் உன் படம் அனுப்பு' என படங்களைப் பரிமாறிக்கொண்டு அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்துவந்திருக்கின்றார். இதுபோல் பல பெண் காவலர்களை இவர் நாசப்படுத்தியுள்ளார். பெண் காவலர் தனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதாக தெரிவித்து, "இனிமேல் வேண்டாம் சார்' எனக் கெஞ்சியும் அவர் செவி சாய்த்ததாக தெரியவில்லை. இந்நிலையில்தான் படங்களை ரிலீஸ் செய்துள்ளார் அந்தப் பெண் காவலர். இங்கு மட்டுமல்ல அநேக சிறப்புக் காவல்படையிலும் இதுமாதிரி செக்ஸ் டார்ச்சர்கள் நடக்கின்றன'' என்றார் அதே பட்டாலியனை சேர்ந்த காவலர் ஒருவர்.
மரணத்தின் வாசல்வரை சென்றுவிட்டு திரும்பியிருக்கும் ஒரு பெண் போலீஸோ, ""நான் கிராமத்துச் சூழலில் பிறந்து வளர்ந்தவள். போலீஸ் தேர்வில் வெற்றிபெற்றபோது, நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அந்த அளவு உற்சாகத்தில் துள்ளிக் குதிச்சேன். பட்டாலியனில் 10 மாதம் பயிற்சி கொடுத்தாங்க. அங்கே தினமும் காலையில் பரேடுக்குப் போகும்போது ரொம்ப உற்சாகமாக இருக்கும். போலீஸாக இருந்து ஏதாவது சாதிக்கணும்னு தோணும். ஆர்வத்தோட பரேடுக்குப் போவேன். ஒரு வருஷம் பயிற்சி முடிஞ்சது. நேரடியாக சென்னை ஆயுதப்படைக்கு வந்தேன். சென்னை புதிது என்பதால் தனியார் தங்கும் விடுதியில் தங்கி, தினமும் பணிக்கு போய் வந்தேன். ரொம்ப சந்தோஷமாகத்தான் இருந்துச்சு. ஆனால், போகப்போக புது இடத்தோட சுயரூபம் எனக்குத் தெரிய ஆரம்பிச்சது. அங்கிருந்த மேலதிகாரியும் அடுத்து கீழ்நிலையிலுள்ள அதிகாரியும் செய்த கொடுமையால் தற்கொலைக்குக்கூட முடிவெடுத்தேன்'' என்றார் அவர்.
இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் காக்கி ஒருவர் எழுதிய கடிதமோ, ""எங்களுக்கு, நல்லது கெட்டதுக்கு விடுமுறை கிடைப்பது எல்லாம் குதிரைக்கொம்பு மாதிரி. அதைத்தான், பெண் சபலம் கொண்ட போலீஸ் அதிகாரிகள், தங்களுடைய ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். அட்ஜஸ்ட் செய்து சிரித்து பேசினால், விடுப்பு தருவார்கள். குறிப்பாக மாதத்தில் 3 நாள் (மாதவிடாய்) பிரச்சனையின்போது நாங்களே சோர்ந்துபோய் இருப்போம். அப்போதுதான் கடுமையாக டியூட்டி வாங்குவார்கள். இவங்க டார்ச்சர் தாங்காமல் சுந்தரியான ஒரு பெண் போலீஸ் ஆரம்பத்தில் அந்த டி.எஸ்.பி.யிடம் அட்ஜஸ்ட் செய்து போனது. ஒருகட்டத்தில் அந்தப்பெண்ணிற்கு திருமணமாக... அப்போது கூப்பிட்ட டி.எஸ்.பி., "இப்ப அவனுக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு வரலைன்னா, உன்னுடைய எசகுபிசகான வீடியோவை அனுப்பிவிடுவேன்' என மிரட்ட, அந்தப் பெண்போலீஸ், 'இந்த வேலையே வேண்டாம்' என போய்விட்டார்'' என்கிறது அந்தக் கடிதம்.
அலுவலகத்தில்தான் இந்தக் கொடுமையென்றால், பணி ஒதுக்கப்படும் இடத்திலும் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக மகளிர் போலீஸார் குமுறுகிறார்கள். ""தினமும் காலையில் நாங்கள் ஆயுதப்படை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். எங்களுக்கான பணி ஒதுக்கப்படும். அதாவது சிலர் சிறைக்கு கைதிகளை எஸ்கார்டு எடுத்து நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். மதியம் 3 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வரும். ஆனால், காலை 9 மணிக்கே கைதிகளை சிறையிலிருந்து கூட்டிட்டு வந்து மாவட்ட நீதிமன்றத்திற்கோ, ஹைகோர்ட்டிற்கோ கூட்டிட்டு போவோம். கைதிபோல நாங்களும் காத்துக் கிடந்து (இயற்கை உபாதைகளோடு அவதிப்படுவோம்) கோர்ட்ல ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் சிறையில ஒப்படைச்சிட்டு வீடு திரும்புறதுக்குள் இரவு 10 மணிக்கு மேலாகிடும். மேலதிகாரிகளை அட்ஜஸ்ட் செஞ்சா இந்த வேலை இருக்காது''’என்கின்றனர் அவர்கள்.
இது குறித்துக் கருத்தறிய மணிமுத்தாறு கமாண்டன்ட் அய்யம்பெருமாளைத் தொடர்பு கொண்டோம். பதிலில்லை.
விடியலை நோக்கி காத்திருக்கின்றனர் பெண் காவலர்கள்.!
அய்யம்(?)பெருமாள் பயோடேட்டா! நெல்லை மாவட்டம் இலஞ்சி கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள், மணிமுத்தாறு சிறப்புக் காவல்படை 9-ஆவது, 12-ஆவது அணிகளின் எஸ்.பி.யாக இருக்கிறார். இதே மணிமுத்தாறில் 1987-ல் எஸ்.ஐ.ஆக பணியாற்றியவர். அப்போது பணம் கையாடல் செய்ததாக மெமோ வாங்கினார். பிறகு கோவை சிறப்புப் படைக்கு மாறி ஏ.சி.யானார். அங்கே இருட்டில் பெண் காவலர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது விவகாரமாகி, சிரிப்பாய் சிரிக்க வைத்தார். பிறகு பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து டி.சி.யாக டில்லிக்குச் சென்றார். அங்கிருந்து மீண்டும் மணிமுத்தாறு வந்தார். கடந்த தீபாவளிக்கு அத்தனை காவலர்களும் தனக்கு தலா 1400 ரூபாய்க்கு வெடி பண்டல் தரவேண்டுமென கட்டாய வசூல் வேட்டை நடத்தியதாக புகார். இப்போது நிர்வாணப் படம்! |