கமுக்கமாகச் செய்யும் வேலைகள் எதுவும் பத்திரிகையில் வெளியாகக்கூடாது என்றுதான் அமைச்சர்கள் கவனமாக இருப்பார்கள். ஆனால், தமிழக அமைச்சர் ஒருவர் தனக்கு கமுக்கமாகச் செயல்படுபவரை பத்திரிகையின் பதிப்பாளர் ஆக்கியுள்ளார்.
அ.தி.மு.க.வின் புதிய அதிகாரப்பூர்வ நாளேடான "நமது புரட்சித்தலைவி அம்மா'தான் அந்தப் பத்திரிகை. அந்த கமுக்கமான நபரும், அமைச்சரும் யார்?
உள்ளாட்சித்துறை அமைச்சர் என்கிற அதிகாரமிக்க பதவிக்கு, கோவையை ஆட்டிப்படைத்த சசிகலாவின் உறவினர் ராவணனின் சிபாரிசில் வந்தவர் வேலுமணி. கோவை மாநகராட்சியில் சில்லறை காண்ட்ராக்டுகளை எடுத்து சில்லறை பார்த்துக்கொண்டிருக்கும் வேலுமணியின் குருநாதர் ராஜன். அவருக்கு சந்திரசேகர், ராஜன் செந்தில்பிரபு என்கிற மகன்கள் இருந்தனர். ராஜனுக்கு அமெரிக்காவில் வேலை பார்க்கும் செல்வகுமார் என்கிற மாப்பிள்ளை ஒருவர் இருந்தார். இதுதவிர தாமோதரன் சித்தார்த், தாமோதரன் சீனிவாசன் ஆகிய நண்பர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் கோவையில் காண்ட்ராக்டர்களாக இருந்தனர்.
குருநாதர் ராஜன், கே.சி.பி. இன்ஜினியர்ஸ் என்கிற கம்பெனியை உருவாக்கியிருந்தார். அதில் சந்திரசேகர் இயக்குநராக இருந்தார். அந்தக் கம்பெனியின் தொடர் கம்பெனிகளாக 2015-ல் உள்ளாட்சித்துற
கமுக்கமாகச் செய்யும் வேலைகள் எதுவும் பத்திரிகையில் வெளியாகக்கூடாது என்றுதான் அமைச்சர்கள் கவனமாக இருப்பார்கள். ஆனால், தமிழக அமைச்சர் ஒருவர் தனக்கு கமுக்கமாகச் செயல்படுபவரை பத்திரிகையின் பதிப்பாளர் ஆக்கியுள்ளார்.
அ.தி.மு.க.வின் புதிய அதிகாரப்பூர்வ நாளேடான "நமது புரட்சித்தலைவி அம்மா'தான் அந்தப் பத்திரிகை. அந்த கமுக்கமான நபரும், அமைச்சரும் யார்?
உள்ளாட்சித்துறை அமைச்சர் என்கிற அதிகாரமிக்க பதவிக்கு, கோவையை ஆட்டிப்படைத்த சசிகலாவின் உறவினர் ராவணனின் சிபாரிசில் வந்தவர் வேலுமணி. கோவை மாநகராட்சியில் சில்லறை காண்ட்ராக்டுகளை எடுத்து சில்லறை பார்த்துக்கொண்டிருக்கும் வேலுமணியின் குருநாதர் ராஜன். அவருக்கு சந்திரசேகர், ராஜன் செந்தில்பிரபு என்கிற மகன்கள் இருந்தனர். ராஜனுக்கு அமெரிக்காவில் வேலை பார்க்கும் செல்வகுமார் என்கிற மாப்பிள்ளை ஒருவர் இருந்தார். இதுதவிர தாமோதரன் சித்தார்த், தாமோதரன் சீனிவாசன் ஆகிய நண்பர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் கோவையில் காண்ட்ராக்டர்களாக இருந்தனர்.
குருநாதர் ராஜன், கே.சி.பி. இன்ஜினியர்ஸ் என்கிற கம்பெனியை உருவாக்கியிருந்தார். அதில் சந்திரசேகர் இயக்குநராக இருந்தார். அந்தக் கம்பெனியின் தொடர் கம்பெனிகளாக 2015-ல் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணியின் அறிவுரையால் ஷைன் அவுட்டோர் அட்வர்டைசிங்ஸ் பிரைவேட் லிமிடெட், பைன் ஆர்ட்ஸ் கம்யூனிகேட்டர்ஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட், ஸ்கைராம்ஸ் அவுட்டோர் அட்வர்டைசிங்ஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட் ஆகிய கம்பெனிகள் தொடங்கப்பட்டன. இதில் ஸ்கைராம்ஸ் அவுட்டோர் அட்வர்டைசிங்ஸ் மற்றும் பைன் ஆர்ட்ஸ் கம்யூனிகேட்டர்ஸ் ஆகிய இரு கம்பெனிகளும் முறையே 20, பிப்ரவரி 2015, 03, மார்ச் 2015 என அடுத்தடுத்த மாதங்களில் கலைமகள் நகர், ஈக்காட்டுதாங்கல், சென்னை-32 என்கிற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டன. மூன்றாவது கம்பெனியான ஷைன் அவுட்டோர் அட்வர்டைசிங்ஸ் என்கிற கம்பெனி, அதே 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி பாலமேடு -பூந்தமல்லி என்கிற முகவரியில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டது முதல் சென்னை நகரில் புதிய பேருந்து நிறுத்தங்களை கட்டுவது, அதில் விளம்பரம் செய்வது போன்ற வேலைகளைச் செய்துவந்தது.
2016-ஆம் ஆண்டு மறுபடியும் சசிகலாவின் சிபாரிசால் மறுபடியும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் வேலுமணி. இந்த மூன்று கம்பெனிகளையும் பெரிதாக வளர்க்க ப்ளான் பண்ணினார். குருநாதர் ராஜனின் கே.சி.பி. இன்ஜினியர்ஸ் என்கிற கம்பெனியின் டைரக்டராக இருந்த சந்திரசேகரை ராஜினாமா செய்ய வைத்தார். சந்திரசேகருக்கு கோவை புறநகர் ஜெ.பேரவை செயலாளராக பதவியும் கொடுத்தார். ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருந்த ஸ்கைராம்ஸ் அவுட்டோர் அட்வர்டைசிங்ஸ் கம்பெனியில் சந்திரசேகரின் சகோதரரான ராஜன் செந்தில்பிரபுவை இயக்குநராக நியமித்தார். அதேபோல் பைன் ஆர்ட்ஸ் கம்யூனிகேட்டர்ஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் இயக்குநராக ராஜன், மாப்பிள்ளை நாகராஜன் செல்வகுமாரை நியமித்தார். ஷைன் அவுட்டோர் அட்வர்டைசிங்ஸ் கம்பெனியின் இயக்குநர்களாக சீனிவாசன், வேணுகோபால் ஆகிய சந்திரசேகருக்கு நெருக்கமானவர்கள் நியமிக்கப்பட்டனர்.
அமைச்சரின் தம்பியான செந்தில் மற்றும் சந்திரசேகர் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில் இந்த மூன்று நிறுவனங்களும் சென்னையில் பேருந்து நிறுத்த வடிவமைப்பு மற்றும் விளம்பரத்தில் இறங்கின. எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைந்ததும் வேலுமணியின் ப்ளான் வேகம் பெற்றது.
2016-ஆம் ஆண்டு பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கான டெண்டர் விடாமல் இந்த கம்பெனிகளுக்கு ஒதுக்கீடு செய்ய முயன்றார் வேலுமணி. அதை எதிர்த்து தி.மு.க. ஆட்சியில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமாக இருந்து... 500-க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்களில் விளம்பர வேலைகளை செய்துவந்த எஸ்.எஸ்.இண்டர்நேஷனல் நிறுவனம், சுப்ரீம்கோர்ட் வரை சென்று வழக்குத் தொடர்ந்தது. "ஒதுக்கீடு செய்யக்கூடாது; டெண்டர் விடவேண்டும்' என சுப்ரீம்கோர்ட் தீர்ப்பளித்தது.
ஜெ.வின் மறைவுக்குப் பிறகு 2017-ல் டெண்டர் அறிவிக்கப்பட்டது. அதில் பல புதிய கண்டிஷன்கள் போட்டு, டெண்டர் வெளியானது. "இரும்புக் கட்டுமானத் துறையில் அனுபவம், கோடிக்கணக்கான வருடாந்திர வருவாய் உள்ள கம்பெனிகள்தான் பங்கெடுக்க முடியும்' என டெண்டர் கூறியது.
வேலுமணியின் குருநாதரும், சந்திரசேகர் மற்றும் செந்தில்பிரபுவின் அப்பாவுமான ராஜன், ஏசிடெக் என்கிற பெரிய கம்பெனியை வருடத்திற்கு 37 கோடி ரூபாயுடன் உருவாக்கியிருந்தார். ஏசிடெக் கம்பெனியின் பெயரில் ஸ்கைராம்ஸ், ஷைன் அவுட்டோர், பைன் ஆர்ட்ஸ் ஆகிய ராஜனின் மகன்கள் மற்றும் நண்பர்கள் கம்பெனிகளுக்கு டெண்டர் அளிக்கப்பட்டது.
இப்பொழுது பஸ்நிலையம் அமைப்பதைத் தாண்டி, சென்னை நகரில் விளம்பர போர்டுகள் அமைக்கும் வேலையையும் செய்துவருகிறது. அத்துடன் தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள் அமைத்து விளம்பரம் செய்வது, விளம்பர போர்டுகள் அமைப்பதில் வேலுமணியின் பினாமி கம்பெனிகள் ஈடுபடப்போகின்றன. இதன் மொத்த வியாபார மதிப்பு வருடத்திற்கு 5,000 கோடி என்கிறார்கள் விளம்பரத்துறை தொழிலதிபர்கள். இப்படி ப்ளான்பண்ணி செயல்படும் வேலுமணி, ப்ளான்பண்ணி மாட்டிக்கொண்ட கதையும் இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
"இது எனது தொழில். இதில் பலர் குடைச்சல் தருகிறார்கள்' என தனிப்பட்ட முறையில் தன்னை சந்திப்பவர்களிடம் வருத்தப்படும் வேலுமணி, சந்திரசேகரை "நமது புரட்சித் தலைவி அம்மா' நாளிதழின் பதிப்பாளராக வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்.
யார் இந்த சந்திரசேகர் என ஆராய்ந்த ஊடகங்கள், வேலுமணிக்கும் சந்திரசேகருக்கும் என்ன தொடர்பு என வெளிப்படையாகவே எழுதின. அதேபோல், பேருந்துநிலைய விளம்பரத்தில் நடக்கும் முறைகேடுகளை எதிர்த்து பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார்.
இது தொடர்பாக கருத்துகளை அறிய சந்திரசேகரை அவர் பதிப்பாளராக உள்ள "நமது புரட்சித்தலைவி அம்மா' நாளிதழில் தொடர்புகொண்டு பேசினோம். அவர் பதிலளிக்கவில்லை. அமைச்சர் வேலுமணியை தொடர்புகொண்டோம், அவரும் பதிலளிக்கவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி சிறைத்தண்டனை பெற்ற ஏ1 குற்றவாளியின்கீழ் இயங்கிய அமைச்சரான வேலுமணி இப்படியா வெளிப்படையாக சொத்து சேர்ப்பார்?
"அம்மாவே தப்பிக்க முடியாதபோது இவர் இப்படி ஓப்பனாக செயல்படுவாரா' என முணுமுணுக்கிறார்கள் சக அமைச்சர்களே!
-தாமோதரன் பிரகாஷ்