ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங் களை ஈழ மக்களோடும், புலிகளோடும் நேரடித் தொடர்பிலிருந்த அருட்தந்தை ஜெகத் கஸ்பர், நமது நக்கீரனிலேயே தொடர்ச்சியாக எழுதிவந்திருக் கிறார். ஈழப் பிரச்சினைகளின் உண்மை நிலவரங்களை அறிந்தவரான தமிழ் மையம் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பரிடம், பெரியாருக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவரும் சீமானைப் பற்றி சில கேள்விகளை முன்வைத்தோம்...
முள்ளிவாய்க்கால் அழிவைத் தடுத்து நிறுத்த தமிழ்நாட்டில் ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சி எடுத்தவர் நீங்கள். அந்த நேரத்தில் சீமான் மேடையேற காரணமானவர் களில் நீங்களும் ஒருவர். இதுதொடர்பான சீமானின் பேச்சு, நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள்?
ஈழத் தமிழ் போராட்டம் பல இடர்களை யும் நெருக்கடிகளையும் சந்தித்திருக்கிறது. அதில் முக்கியமானது 1995ல் நடந்த யாழ்ப் பாண இடப்பெயர்வு. உலக வரலாற்றில் எந்த ஒரு இனமும் சந்திக்காத மிகப்பெரிய இடப்பெயர்வு. ராணுவம் யாழ்ப்பாணத்தை முற்றுகையிடுகிறது. குறைந்த பட்சம் ஏழு லட்சம் மக்கள் அகதிகளாக மனதில் வலிகளை சுமந்து, மழையினோடும், இருட்டினோடும், மரணங்களினோடும் இடம் பெயர்கின்றனர். அப்போது ஒரு தாயை ஆற்றுப்படுத்துகின்ற செயலைச் செய்கின்றேன். கடும் இருளில் மழை பொழிய எங்கு செல்கிறோம் என்று தெரியாமல், தன் கைக்குழந்தையை தனது கையில் ஏந்திக்கொண்டு, லட்சக்கணக்கான மக்களோடு நடக்கிறார். மனம் கனத்துப் போய், கை மரத்துப்போன தருணம் அந்த தாய்க்கு தெரியவில்லை. அவர்களையும் அறியாமல் அந்த குழந்தை நழுவி கீழே விழுந்திருக்கிறது. திடீரென்று பார்த்தால்... குழந்தையை காணவில்லை எனக் கதறு கிறார். நான் அந்த தாயை ஆற்றுப்படுத்து கிறபோது அவருக்கு நினைவு எப்படியென் றால், "என் பிள்ளை இறந்ததை நினைத்து ஒரு வாரமோ, ஒரு மாதமோ, ஒரு வரு டமோ நினைத்து ஆறுதல் அடைந்திருப் பேன். ஆனால் லட்சக்கணக்கான கால்கள் என் பிள்ளையின் மீது ஏறி மிதித்து நடந்திருக்குமே... அந்த ஒரு நினைவு மட்டும் என்னால தாங்க முடியல' என்றார். இப்படி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கொடுமை களைச் சந்தித்த பயணம்தான் அந்த பயணம்.
அப்படி வந்தவர்கள்தான் வன்னியில் உள்நாட்டு அகதிகளாக நிலைபெறுகிறார்கள். அந்த நிலைபெறுதலில் மீண்டும் போர்... போர் என தாக்குப்பிடித்து, கடைசிவரை தாக்குப்பிடித்த மக்கள்தான் முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக் கப்படுகிறார்கள். இதுதான் அந்த நீட்சி. அந்த இடப்பெயர் வுக்கு பிறகு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கம் அஞ் சாமல், நிலைகுலைந்து போகாமல், சீர்குலைந்து போகாமல், மீண்டும் தங்களை வன்னிப் பரப்புகளில் தகவமைத்துக் கொண்டு, முல்லைத் தீவை நிர்மூலமாக்குகிறார் கள், கிளிநொச்சியை நிர் மூலமாக்குகிறார்கள். ஓயாத அலைகள் ஒன்று, இரண்டு என தொடர்ந்து ஆணையிறவு வரைக்கும் வந்து நிற்கிறார்கள்.
ஆனையிறவுக்கு வந்துநின்ற தருணத்தில் சமாதான முயற்சி என்கிற சதிவலை நடக்கிறது. அந்த சமாதானத்தின் ஊடாக ஊடுருவ முடியாமல் இருந்த தமிழ் ஈழ நிலப்பரப் பையும், தமிழ் ஈழ போராட்ட இயக் கத்தையும் ஊடுருவி கருணாவை பிரித்து உள்ளுக்குள் பல சிதைவுகளை ஏற்படுத்தி, அந்த போராட்டம் 2004, 2005ல் இடர் பாடுகளை சந்திக்கத் தொடங்குகிறது. ஆனையிறவு வெற்றிவரைக்கும் அந்த மக்களோடு நெருக்கமாக துணை நின்று பயணம் செய்தே
ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங் களை ஈழ மக்களோடும், புலிகளோடும் நேரடித் தொடர்பிலிருந்த அருட்தந்தை ஜெகத் கஸ்பர், நமது நக்கீரனிலேயே தொடர்ச்சியாக எழுதிவந்திருக் கிறார். ஈழப் பிரச்சினைகளின் உண்மை நிலவரங்களை அறிந்தவரான தமிழ் மையம் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பரிடம், பெரியாருக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவரும் சீமானைப் பற்றி சில கேள்விகளை முன்வைத்தோம்...
முள்ளிவாய்க்கால் அழிவைத் தடுத்து நிறுத்த தமிழ்நாட்டில் ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சி எடுத்தவர் நீங்கள். அந்த நேரத்தில் சீமான் மேடையேற காரணமானவர் களில் நீங்களும் ஒருவர். இதுதொடர்பான சீமானின் பேச்சு, நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள்?
ஈழத் தமிழ் போராட்டம் பல இடர்களை யும் நெருக்கடிகளையும் சந்தித்திருக்கிறது. அதில் முக்கியமானது 1995ல் நடந்த யாழ்ப் பாண இடப்பெயர்வு. உலக வரலாற்றில் எந்த ஒரு இனமும் சந்திக்காத மிகப்பெரிய இடப்பெயர்வு. ராணுவம் யாழ்ப்பாணத்தை முற்றுகையிடுகிறது. குறைந்த பட்சம் ஏழு லட்சம் மக்கள் அகதிகளாக மனதில் வலிகளை சுமந்து, மழையினோடும், இருட்டினோடும், மரணங்களினோடும் இடம் பெயர்கின்றனர். அப்போது ஒரு தாயை ஆற்றுப்படுத்துகின்ற செயலைச் செய்கின்றேன். கடும் இருளில் மழை பொழிய எங்கு செல்கிறோம் என்று தெரியாமல், தன் கைக்குழந்தையை தனது கையில் ஏந்திக்கொண்டு, லட்சக்கணக்கான மக்களோடு நடக்கிறார். மனம் கனத்துப் போய், கை மரத்துப்போன தருணம் அந்த தாய்க்கு தெரியவில்லை. அவர்களையும் அறியாமல் அந்த குழந்தை நழுவி கீழே விழுந்திருக்கிறது. திடீரென்று பார்த்தால்... குழந்தையை காணவில்லை எனக் கதறு கிறார். நான் அந்த தாயை ஆற்றுப்படுத்து கிறபோது அவருக்கு நினைவு எப்படியென் றால், "என் பிள்ளை இறந்ததை நினைத்து ஒரு வாரமோ, ஒரு மாதமோ, ஒரு வரு டமோ நினைத்து ஆறுதல் அடைந்திருப் பேன். ஆனால் லட்சக்கணக்கான கால்கள் என் பிள்ளையின் மீது ஏறி மிதித்து நடந்திருக்குமே... அந்த ஒரு நினைவு மட்டும் என்னால தாங்க முடியல' என்றார். இப்படி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கொடுமை களைச் சந்தித்த பயணம்தான் அந்த பயணம்.
அப்படி வந்தவர்கள்தான் வன்னியில் உள்நாட்டு அகதிகளாக நிலைபெறுகிறார்கள். அந்த நிலைபெறுதலில் மீண்டும் போர்... போர் என தாக்குப்பிடித்து, கடைசிவரை தாக்குப்பிடித்த மக்கள்தான் முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக் கப்படுகிறார்கள். இதுதான் அந்த நீட்சி. அந்த இடப்பெயர் வுக்கு பிறகு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கம் அஞ் சாமல், நிலைகுலைந்து போகாமல், சீர்குலைந்து போகாமல், மீண்டும் தங்களை வன்னிப் பரப்புகளில் தகவமைத்துக் கொண்டு, முல்லைத் தீவை நிர்மூலமாக்குகிறார் கள், கிளிநொச்சியை நிர் மூலமாக்குகிறார்கள். ஓயாத அலைகள் ஒன்று, இரண்டு என தொடர்ந்து ஆணையிறவு வரைக்கும் வந்து நிற்கிறார்கள்.
ஆனையிறவுக்கு வந்துநின்ற தருணத்தில் சமாதான முயற்சி என்கிற சதிவலை நடக்கிறது. அந்த சமாதானத்தின் ஊடாக ஊடுருவ முடியாமல் இருந்த தமிழ் ஈழ நிலப்பரப் பையும், தமிழ் ஈழ போராட்ட இயக் கத்தையும் ஊடுருவி கருணாவை பிரித்து உள்ளுக்குள் பல சிதைவுகளை ஏற்படுத்தி, அந்த போராட்டம் 2004, 2005ல் இடர் பாடுகளை சந்திக்கத் தொடங்குகிறது. ஆனையிறவு வெற்றிவரைக்கும் அந்த மக்களோடு நெருக்கமாக துணை நின்று பயணம் செய்தேன். ஆனையிறவு வெற்றிக்குப் பிறகு சமாதானம் என்று முயற்சி எடுக்கிறபோது எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அந்த அமைதி முயற்சிகள் முடிந்து மீண்டும் போர் தொடங்கி, பூநகர் என்கிற அந்த வழிப்பாதையை எளிதாக ராணுவம் திறந்துவிடுகிறது. அப்போது, ஏதோ ஒன்று தவறாகச் செல்கிறது என எனக்கு தோன்றுகிறது. அமைப்பு மிகவும் பலவீனப்பட்டிருக் கிறது என நான் உணரத் தொடங்கியதும், தமிழகம் தான் அந்த போராட்டத்தை காப்பாற்ற முடியும் என் கிற நிலைப்பாட்டை எடுத்து பலரை சந்திக்கிறோம்.
அங்கே போராட்டம் பல நெருக்கடிகளை சந்தித்து முள்ளிவாய்க்காலை நெருங்கி வருகிற போது, ஒரு சமாதான முயற்சி எடுக்கப்பட்டது. ஒருவேளை அந்த சமாதான முயற்சி வென்றிருக்கும். அதைக் குழப்பியது தமிழகத்தில் ஈழத்து பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டவர்கள்தான். அப்போ தெல்லாம் சீமான் எங்கு இருந்தார் என்று தெரியாது. ஈழத்துக்காகவோ தமிழுக்காகவோ குரல் கொடுக்க பெரியாரின் மேடைகள்தான் அவருக்கு களம் அமைத்து தந்தன. தனக்கென்று தானாக ஒரு இயக்க மோ, கட்சியோ, ஏதோ ஒரு சிறிய அமைப்பு ஏற் படுத்த 100 பேரை திரட்டுகிற ஆற்றலில் அவர் இருக்கவில்லை.
ஏன் இதனை அறத்துணிவோடு சொல்கிறே னென்றால், யாழ்ப்பாணம் இடப் பெயர்வின்போது அந்த மக்களோடு நடந்தோம். அந்த மக்கள் சிதறுண்டு போகாமல் இருக்க வழிநடத்தினோம். சுகாதாரத்திற்கு என்ன செய்யணும், உணவுக்கு என்ன செய்யணும் ஆகிய ஒழுங்குகளையெல்லாம் எங்க ளைப் போன்றவர்கள் உலகம் முழுவதும் சென்று செய்தோம். ஈராண்டு காலம் இருபத்தைந்தாயிரம் பிள்ளைகளுக்கு உலகம் முழுவதும் மடிப்பிச்சை எடுத்து உணவளித்தோம். பசிப் பிணியால் இறந்து போகாதபடி அந்த மக்களை பாதுகாத்தோம். சிதறுண்டுபோன 4600க்கும் மேற்பட்ட குடும்பங் களை இணைத்து வைத்தோம். வெளிநாட்டில் தொடர்பில்லாமல் இருந்த மக்களை இணைத் தோம். உலகத்தின் எத்தனையோ அரசுகளுக் கும் அமைப்புகளுக்கும், அந்த மக்களின் துயரங்களை எந்த ஒரு சுவரொட்டிகளும் ஒட்டவில்லை. அறிவிப்புகளும் செய்ய வில்லை. இப்படித்தான் இந்த பயணத்தை மேற் கொண்டோம். அதனால்தான் என்னால் கேள்வி கேட்க முடிகிறது. எங்கதான் இருந்தீங்க சீமான்? ஒரு துரும்பாவது எடுத்து போட்டீங்களா? பெரியா ரின் பிள்ளைகள் ஏற்படுத்திய மேடைகளில்தானே பேசுனீர்கள்? அந்த குரலின் அடிப்படையில்தான் உளவு அமைப்புகள் உங்களை புரிந்துகொண்டிருக்க வேண்டும். உங்களது பின்புலத்தை அறிந்து கொண்டிருக்க வேண்டும்.
போராளிகளின் மறு வாழ்வுக்கு கடுகளவாவது உதவி செய்தீர்களா? பொதுமக்களின் மீள்கட்டுமான முயற்சிக்கு ஏதே னும் செய்தீர்களா? நீங்கள் செய் தது என்னவென்றால், தான் மட் டும்தான் புலிகளுக்கும் அவர் களின் தியாகங்களுக்கும் ஏக பிரதி நிதி என்று சொல்லி அத்தனை பேரையும் அந்நியப்படுத்தினீர்கள். இலங்கை அதிபர் சமீபத்தில் இந்தியா வந்தபோது, 13வது திருத்தச் சட்டம் குறித்து இந்தியா சொல்லவில்லை. அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? ஈழ மக்களை இன்னும் இன்னும் அநாதை களாக்கி நிறுத்தியிருக்கிறீர்கள் என்று குற்றச்சாட்டு வைக்கிறேன்.
தமிழ்நாட்டில் போய் இறங்கு. என்ன செய்யணும் என்று தெரியும் என்று தேசிய தலைவர் சொன்னார் என்கிறாரே...?
இது மாதிரியான மோசடி இருக்க முடியாது. யாரிடமும் தேசியத் தலைவர் போராட்டத் தை ஒப்படைக்கவில்லை. ஈழத் தமிழ் மக்களிடமும் உலகத் தமிழ் மக்களிடமும் ஒப்படைத்தார். நான் ஒரு இடத்திற்கு கொண்டுவந்து தமிழ் தேசியமாக உங்களுக்கு தந்துவிட்டு செல்கிறேன். இனிமேல் புலம்பெயர் தமிழர்களும், உலகத் தமிழர்களும் இணைந்து இந்த போராட்டத்தை அடுத்தகட்டத் திற்கு வெவ்வேறு வடிவங்களில் எடுத்துச் செல்லுங்கள் என்பதுதான் அவரது செய்தியாக இருந்தது.
குறிப்பிட்ட ஒரு நபரை மையப்படுத்தி சொல்லவில்லையா?
அந்த அமைப்பில் யாரும் இல்லையா? எத்தனை தளபதிகள் இருந்தார்கள். அவர்களை யெல்லாம் விட்டுவிட்டு இவருக்கு கொடுத்தாரா? ஷூட்டிங் பார்க்கப் போனவரிடம் ஒப்படைப் பாரா... என்னங்க சொல்றீங்க.
பிறகு எப்படி அவர் உள்ளே வருகிறார். ஒருங்கிணைத்தவர்களில் நீங்கள் முக்கியமானவர்...
இந்தப் போர் இப்படித்தான் முடியப்போகிறது என்று உளவு அமைப்புகளுக்கு தெரிந்திருக்கிறது. போருக்குப் பின் உள்ள எழுச்சியை சிதைப்பதற்கு, மட்டுப்படுத்துவதற்கு ஒரு ஆளுமை வேண்டும். அதற்கு இவர் அடையாளப்படுத்தப்பட்டி ருக்கிறார் என்பதுதான் என்னுடைய முடிவு.
அப்போது இவர் அந்த அளவுக்கு ஆளுமையாக இருந்தாரா?
ஆளுமையாக இல்லை. ஆவேசமாகப் பேசணும், செயலில் ஒன்றும் இருக்கக்கூடாது... அப்படி ஒருவர் வேண்டும். மூலோபாயம் விஞ்ஞானம் படித்தவன் நான். அதில் தியரியாகவே வரும், இப் படிப்பட்ட சூழ்நிலை வரும்போது எந்த ஒரு மொழியாகவோ, இன மாகவோ, மதமாகவோ, நிலப்பரப் பாக இருந்தாலும் ஒரு கோட் பாட்டுக்காக உயிரை கொடுப்பவர் கள் ஒரு சதவீதம் பேர் இருப்பார் கள். அவர்கள்தான் அரசியலுடைய ஆதார எரிபொருள். அந்த ஒரு சத வீதத்தினரை உங்களை சுற்றிக் கொண்டு வந்தீர்களென்றால் போஸ்டர் ஒட்டுவான், சண்டைக்கு போவான், உயிரை விடவும் தயாராக இருப்பான். அந்த ஒரு சதவீதம்தான் சிங்கம், புலி என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த சிங்கம், புலிகளை எல்லாம் ஒன்று சேர்த்து, இவர்களுக்கு தலைவராக கழுதையை வைத்துவிட்டீர்களென் றால், காலஓட்டத்தில் சிங்கம், புலிகளும் கழுதைகளாக மாறிவிடும் என்கிற கோட் பாடு உண்டு. அந்த கோட்பாடு அடிப்படையில் தான் இவரும், அந்த அமைப்பும் உருவாக்கப்பட்டி ருக்கிறது என்பதை எங்கு புரிந்துகொண்டோம் என்றால், அரசியல் கட்சிகள் இல்லாத ஒரு பொதுவான இயக்கம் கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்தோம். அதன் ஆலோசனைக் கூட்டங்கள் சென்னையில் நடந்தது. மணிவண்ணன் வீட்டிலும் நடந்தது. அப்போது சென்னையில் ஒரு லட்சம் பேர் திரளக் கூடிய வகையில் ஒரு எழுச்சி யை உருவாக்குவோம். அப்போதுதான் மத்திய -மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கமுடியும் என்று சொன்னோம். சுப.வீரபாண்டியன் அவர் களுடைய நண்பர் செந்தில், தற்போது தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருக்கக்கூடிய மருத்துவர் எழிலன் போன்று பலர் இருந்தார்கள். அதுவரைக்கும் சீமான் மற்றும் அவரது கூட்டாளிகள் யாரும் வரவில்லை. சென்னையில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கவேண்டும் என்று நாங்கள் களப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அடுத்த ஆலோ சனைக் கூட்டம் மணிவண்ணன் வீட்டில் நடக் கிறது. அப்போது போன்போட்டு, "நாங்கள் களப் பணியில் இருக்கிறோம், கூட்டத்தை நீங்கள் நடத் துங்கள்' என்று சொல்கிறோம். அந்தக் கூட்டத்திற் குத்தான் சீமான் ஆட்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் சென்னையில் நடக்கவேண்டிய எழுச்சிக் கூட்டத்தை மதுரைக்கு கொண்டுசெல்கிறார்கள். நான் மணிவண்ணனிடம், "சென்னையில் நடத்தினால்தான் தேசிய அளவில் கவனம் பெறும். மதுரையில் நடத்தினால் கவனத்தை ஈர்க்க முடியுமா?' என்று கேட்டதற்கு, "நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்தேன், கேட்கவில்லை என்கிறார்.
மணிவண்ணனுக்கு இதில் உடன்பாடு இல்லையா?
அவருக்கு மதுரையில் நடத்துவதில் உடன் பாடு இல்லை. ஆனால் சீமான் பேசினால் கவனம் பெறுகிறது என்று நானும் அவர் பேசட்டும், மதுரையிலேயே நடக்கட்டும் என்று சலிப்போடும், தயக்கத்தோடும் அந்த மதுரை மாநாட்டுக்கு என் னால் முடிந்த அளவு பணம் திரட்டிக் கொடுத் தேன். மதுரைக்கு போன பிறகுதான் தெரிகிறது, ஒரு சினிமா செட் போட்டு, ஒருவரை அரசியலுக்கு கொண்டுவந்தால் என்ன செய்வார்களோ, அதுதான் செய்யப்பட்டதே தவிர, முள்ளிவாய்க்கால் அழிவை தடுத்து நிறுத்தவேண்டும் என்று எந்தவொரு முயற்சியும் நடக்கவில்லை.
நீங்கள் சொல்லுவதற்கும் அவரது பேச்சுக்கும் வித்தியாசமாக இருக்கிறதே?
பேச்சு எல்லோரும் பேசலாம். செயலுக்கு வரணும். செயலுக்கு என்ன வந்தது. அந்த மக்க ளுக்கு என்ன செய்தீர்கள். இந்தப் போரினால் ஒரு லட்சத்து 25 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் கணவனை இழந்தார்கள். 15 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 70 ஆயிரம் ஆகியிருக்கிறது. அப்படி என்றால் 55 ஆயிரம் பேர் இறந்து போயிருக்கிறார்கள். அந்த 70 ஆயிரம் பேரில் ஒரு 100 பேருக்காவது உதவி செய்ய எந்த முயற்சியாவது எடுத்தீர்களா? உலகம் முழுவதும் உங்கள் கட்சி அரசியலுக்கு பேசுனீர்கள். கட்சி அரசியலே வேண்டாம், ஒருமித்த கருத்து ஒற்றுமையை உருவாக்குவோம் என்றுதானே சொன்னோம். மிகப்பெரிய அழிவில் இருந்து அந்த மக்களை கட்டி எழுப்புவதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறது என்று சிந்திப்பதுதான் போருக்கு பின்னால் அடிப்படை இலக்காக இருக்க வேண் டும். அப்படி ஒன்று நடக்கவில்லையே. நடந்ததா? நீங்களாவது செய்தீர்களா? போருக்கு பின்னால் எஞ்சியிருந்தவர்கள் பல தேசங்களை கட்டி எழுப்பி னார்கள். போருக்கு பிறகு அங்கு உள்ளவர்களைக் காத்து, எஞ்சியவர்களை ஒன்றுதிரட்டி சரியான ஒரு வழித்தடத்தை கொடுத்து, முதலில் அவர்கள் மீண்டும் எழுந்து நிற்பதற்கான தெம்பைத் தந்து அவர்களை கல்வியிலும், பொருளாதாரத்திலும், கலை பண்பாட்டிலும் வளர்த்து எடுத்தால் அந்த மக்கள் அறவழியிலோ ஏதோ ஒரு வழியில் தங்கள் தேசிய ஒற்றுமைக்கு தயாராகியிருப்பார்கள். நான்தான் பேசுபொருள், நான்தான் உரிமை என்று எந்த அடிப்படையில் வந்து நிற்கிறீர்கள்?
மதுரை மாநாடு குறித்து சொன்னீர்கள். அதனை மணிவண்ணனிடம் பகிர்ந்து கொண்டீர் களா?
அதனை பகிர்ந்துகொண்ட பிறகு அவர்கள் முதலில் செய்தது என்னவென்றால், என்னை அதில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று அதற்கான நகர்வுகளை செய்தார்கள். அரசியல் கட்சி தொடங்கினார்கள். உடனடியாக அரசியல் கட்சி தொடங்க என்ன தியாகம் செய்தீர்கள்? உங்களை சிறைக்கு அழைத்துச் சென்றது கூட, பின் னாளில் விசாரித்துப் பார்க்கும்போது, ஒரு ஆளுமையாக உருவாக்குவதற் காகத்தான் சிறைக்கே கொண்டு செல்லப்பட்டார். சிறையில் அவருக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த் துக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஈரோடு இடைத்தேர்தலில் பெரியாரா, பிரபாகரனா என்ற வாதத்தை முன்வைத்தார்... அதனை எப்படி பார்க்கிறீர்கள்?
முள்ளிவாய்க்காலுக்கு பிறகு இங்கு எழுந் திருக்கக்கூடிய மிகப்பெரிய எழுச்சியை நீர்த்துப் போக செய்தவற்காக கண்டெடுக்கப்பட்ட கட்சி அது. அதனால்தான் சொல்கிறேன், கருவிலேயே குற்றமாக பிறந்த ஒரு இயக்கம், கட்சி. தாய்ப்பாலில் நஞ்சாக பிறந்த ஒரு இயக்கம். இதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. ஏன் என்றால் நான் அந்த நேரத்தில் இருந்தவன். அருகில் இருந்து பார்த்தவன். அதனால் உறுதியாகச் சொல்கிறேன் கருவில் குற்றமாக, தாய்ப்பாலில் நஞ்சாக பிறந்த ஒரு இயக்கம். நான், நாம் தமிழர் கட்சியின் தம்பிகளை குறை சொல்லவில்லை. அவர்கள் கட்சித் தலைமை பற்றி தெரியாமல் தமிழ்ப் பற்றோடு, ஒரு உணர்வோடு போய் நிற்கிறார்கள்.
யார் முதல் எதிரி நமக்கு, டெல்லிதானே! அந்த அதிகார அமைப்பு என்பது சனாதன அமைப்பு. எச்.ராஜாவையே அறிஞர் என்கிறாரே. போராட்டக் காலத்திலேயே குருமூர்த்தி உள்ளிட்டோரை சந்தித் தாரா இல்லையா? அண்மையில் ஒரு பேட்டியில் குருமூர்த்தி எப்படி இருப்பார் என்பதே தெரியாது என்கிறாரே?
கடந்த தேர்தலின்போது சந்தித்தார். ஐ.பி. பொறுப்பாளர், ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளரையும் சந்தித்தார். பெரியாரியத்துக்கும் தமிழ் தேசியத் திற்குமா பிரச்சனை? ஈழத் தமிழ் போராட்டத்தை வளர்த்தது, இங்கு அடைகாத்தது, அத்தனை இடர்களையும் இன்னல்களையும் தாங்கிக்கொண் டது பெரியாரிய தோழர்களும், தமிழ் தேசிய தொண்டர்களும்தான். இன்று இரண்டுபேரையும் சண்டை போட வைத்துவிட்டீர்கள். உண்மையில் இந்த அழிவுக்கு காரணமான புதுடெல்லி அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஒரு வார்த்தை உங்களால் சொல்ல முடியவில்லையே. இதில் தெரிய வில்லையா, நீங்கள் யார் என்று. ஆனால் அவர்களுடைய அஜெண்டா நமக்குள் சண்டை வருவது. அதனை சரியாகச் செய்கிறீர்கள்.
என்னை பா.ஜ.க. இயக்குகிறது என்று சொல் வது பைத்தியக்காரத்தனமான வாதம் என்கிறாரே?
உங்களுடைய முதலீடு எது? போராளிகளின் தியாகங்களை முதலீடாக வைத்துதானே வந்தீர்கள்? உங்களிடம்தான் கேள்வி கேட்கமுடியும். ஒரு போராட்டத்தின் தியாகங்களை கேவலமான வாக்கு அரசியலாக மாற்றுவது, அந்த வாக்கு அரசியலி லும் எவ்வளவு பண பேரங்கள். முள்ளிவாய்க் காலுக்குப் பிறகு ஒவ்வொரு மேடையிலும் பேசுவதற்கு அ.தி.மு.க. காசு கொடுத்ததா இல்லையா?
கட்சி நடத்த பிச்சையெடுக்கிறேன் என்கிறார். நீங்க இப்படிச் சொல்றீங்க?
எனக்கு ஏன் இவ்வளவு ஆவேசம் வருகிறது என்றால், குறைந்தபட்சம் உலக தமிழர்களிடை யேயும் ஒற்றுமை வரவில்லை. இயக்கமும் தன்னை ஒரு மறுவடிவு செய்து கொண்டு ஒரு அறவழியில் உலகத்தோடு செயல்படுவதுபோல் தெரியவில்லை. குறைந்தபட்சம் 13வது சட்டத் திருத்தத்தையும் இந்தியா சொல்லவில்லை. சனாதனம் நினைத்ததை செய்து முடித்துவிட்டது. இன்று நமக்குள் நாம் பகைவர்களாக நிற்கிறோம். அவர்கள் ஈழத்தையும் அழித்தார்கள். ஈழத்திற்கு பிறகான அரசியலையும் அழித்தார்கள். நம்பிக்கைகளையும் அழித்திருக் கிறார்கள். இவருக்கு தேர்தல் அரசியல் நடக்கிறது. எப்பவுமே 5ல் இருந்து 7 சதவீதம் ஓட்டு இருக்கிறது என்றால் தேர்தல் நேரத்தில் ஒரு 200, 300 கோடி வரும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட ஒரு கட்சிக்கு அ.தி.மு.க.வுடன் சேராமல் இருப்பதற்கு 500 கோடி கொடுத்தார்கள். யார் என்று நான் சொல்ல விரும்பவில்லை. பா.ஜ.க.வுடன் சேருவதற்கு 300 கோடி. 800 கோடி ரூபாய் ஒரு தேர்தலில் சம்பாதிக்கிறார்கள். 5, 6, 7 சதவீத ஓட்டு வைத்திருந்தால் அதுதான் உங்களுடைய ச்ண்ய்ஹய்ஸ்ரீண்ஹப் ஸ்ஹப்ன்ங். அப்படித்தான் இன்று அரசியல் நடக்கிறது.
சந்திப்பு: -வே.ராஜவேல்