Advertisment

தொட்டில் டூ சுடுகாடு ஊழல் பட்டியல்! -போட்டுத் தாக்கிய கமல்

kkk

தேர்தல் நெருங்க... நெருங்க எல்லாக் கட்சிகளும் பிரச்சாரக் களத்துக்கு வேகமாகத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும் டிசம்பர் 27-ஆம் தேதி திருச்சியிலிருந்து தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார்.

Advertisment

kk

திருச்சி விமான நிலையத்தில் ஓடுதளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் விமானம் இறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே அந்த திட்டத்தை நிராகரித்து, வழக்கமாக மதியம் 1 மணிக்கு மதுரை சென்றடையும் பயணிகள் விமானத்தில் பயணித்து மதுரை விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு வரத் திட்டமிட்டார். அதற்கும் திருச்சி விமான நிலையம் அனுமதியளிக்காததால் விமான நிலையத்திற்கு பக்கத்தில் உள்ள மொராய் சிட்டி நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் இறங்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் அனுமதி உடனடியா

தேர்தல் நெருங்க... நெருங்க எல்லாக் கட்சிகளும் பிரச்சாரக் களத்துக்கு வேகமாகத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும் டிசம்பர் 27-ஆம் தேதி திருச்சியிலிருந்து தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார்.

Advertisment

kk

திருச்சி விமான நிலையத்தில் ஓடுதளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் விமானம் இறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே அந்த திட்டத்தை நிராகரித்து, வழக்கமாக மதியம் 1 மணிக்கு மதுரை சென்றடையும் பயணிகள் விமானத்தில் பயணித்து மதுரை விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு வரத் திட்டமிட்டார். அதற்கும் திருச்சி விமான நிலையம் அனுமதியளிக்காததால் விமான நிலையத்திற்கு பக்கத்தில் உள்ள மொராய் சிட்டி நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் இறங்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் அனுமதி உடனடியாக வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டதால் 12:30 மணிக்கு திருச்சி வந்து சேரவேண்டிய கமல்ஹாசன், மதியம் 2:30 மணியளவில் வந்து சேர்ந்தார்.

கடைசிவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றால் சாலை வழியாக மதுரையில் இருந்து திருச்சிக்கு வரத் திட்டமிட்டிருந்தார். அவருக்காக மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் முருகானந்தம் வாங்கி வைத்திருக்கும் டொயோட்டா வெல்பயர் என்ற 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் அவருக்கு எங்கு வரவேற்பு வழங்கச் செல்வது என்பது தெரியாமல் குழம்பி பலர் திரும்பிச் சென்ற னர். திருச்சி வந்த அவர், எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்குச் செல்லும் வழியில் வயர்லஸ் சாலை, கே.கே.நகர் சாலை, மன்னார்புரம் ரவுண்டானா, சுப்பிர மணியபுரம் பகுதி வழியாக மக்களைச் சந்தித்துவிட்டு சரியாக 3:30 மணி யளவில் ஓட்டலுக்குள் நுழைந்தார். அங்கே அவரைப் பார்ப்பதற்காக அதிகளவில் பெண்கள் கூடியிருந்தனர். திரண்டிருந்த தொண்டர்கள், ரசிகர்களுக்கும் கமலின் பாதுகாவலர்களுக்குமிடையே சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஓட்டலின் நுழைவாயிலில் 7 அடி கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

Advertisment

kk

சிறு குறு தொழில் முனைவோர்களின் கூட்டத்தை 5:30 மணிக்குச் சந்தித்த கமல், ""மக்கள் நீதி மய்யத்தின் ஆட்சியில் சிறு, குறு தொழில்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்., 30 சதவித கமிஷன் அடியோடு நிறுத்தப்பட்டு அது தொழில் முனை வோர்களுக்கு முழுமையாக கிடைக்கச் செய்வோம், தமி ழகத்தில் டிரில்லியன் பொருளாதார உயர்வை கொண்டு வருவோம்'' என பல வாக்குறுதிகளைக் கொடுத்தார்.

சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் பிரச்சாரம் செய்த அவர், ஸ்ரீரங்கம், சமயபுரம் டோல்கேட், உள்ளிட்ட பகுதிகளில் பேசுகையில், ""அமைச்சர்களே இன்று கையில் ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு கூடியிருக்கும் நேர்மையாளர்களின் கூட்டத்தில் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் வந்திருக்கிறார்கள். அதிலும் கைக்குழந்தையுடன். இது மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் மட்டுமே நடக்கும். நான் பல வருடங்களாக அரசியலைக் கவனித்து வருகிறேன். பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது. பெண்கள் நினைத்தால் ஆட்சி மாறும்''’என்றார்.

kk

மறுநாள் காலை எஸ்.ஆர்.எம். ஓட்டலில் மகளிர்களுடனான ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், ""விவசாயி என்ற வார்த்தை ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. ஏனென்றால் நாற்று நடுவதிலிருந்து அறுவடை வரை பெண்களின் பங்களிப்பு இருப்பதால் அவர்களையும் விவசாயி என்றுதான் அழைக்கவேண்டும், பெண்கள்தான் மிகச்சிறந்த கருத்து பரிமாற்றம் செய்பவர்கள். அவர்கள்தான் மக்கள் நீதி மய்யத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும்''’என்று கேட்டுக்கொண்டார்.

kk

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “"தொட்டில் முதல் சுடுகாடு வரை ஒவ்வொரு பணிக்கான லஞ்சத்தொகை எவ்வளவு' என்ற பட்டியலை வெளியிட்டதோடு, ""விரைவில் ஆட்சியாளர்களின் கொள்ளைப் பட்டியலும் வெளியிடப்படும்'' என்று கூறிவிட்டு, மறுநாள் தஞ்சை, டெல்டா மாவட்டப் பகுதிகளுக்கு பிரச்சாரம் கிளம்ப ஆயத்தமானார்.

-துரை மகேஷ்

_____________

கமல் வெளியிட்ட லிஸ்ட்!

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு...

• ஆண் என்றால் ரூ.500, பெண் என்றால் ரூ.300

• பிறப்புச் சான்றிதழ் ரூ.200 முதல் ரூ.500

• ஓட்டுனர் உரிமம் ரூ.1000 முதல் 5000

• சாதிச் சான்றிதழ் ரூ.500 முதல் 3000

• பாஸ்போர்ட் சரி பார்ப்பதற்கு ரூ.500

• பட்டா பரிவர்த்தனை ரூ 5 ஆயிரம் முதல் ரூ.30000 வரை

• விதவைகளுக்கான ஓய்வூதியம் ரூ 500

• மின்னிணைப்பு 3 பேஸ் ரூ 15000

nkn020121
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe