"ஹலோ தலைவரே, ஈரோடு இடைத் தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்துவிட்டதே.''”
"ஆமாம்ப்பா அதப்பத்தி விவரமா சொல்லுப்பா...''
"தலைவரே... தேர்தலைப் புறக்கணித்துள்ள அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் வாக்குகள், நாம் தமிழர் கட்சிக்கு மடை மாறுகிறதா? என்பதை அறிய உளவுத்துறை மூலம் அவசரமான தொகுதியின் தட்பவெப்பத்தை விசாரித்திருக்கிறது ஆட்சித் தலைமை. அதற்கு 50-க்கு 50 சதவீத சான்ஸ் இருக்கிறது என்றும். சீமானின் பிரச்சாரத்திற்குப் பிறகே அதை உறுதி செய்ய முடியும் என்றும் ரிப்போர்ட் போயிருக் கிறது. நாம் தமிழர் கட்சியை டெபாசிட் இழக்கச் செய்வதுடன் முந்தைய இடைத்தேர்தலில் அவர்கள் அங்கே அனைத்துப் பகுதிகளிலும் வாங்கிய வாக்குகளை விட, இந்தமுறை மிகக்குறைவான வாக்குகளை வாங்க வைத்து, தோற்கடிக்க வேண்டும் என்பதே தி.மு.க.வின் திட்டம்.''”
"தி.மு.க.வுக்கும் சி.பி.எம்.முக் கும் உரசல் போக்கு தொடர்வது போலவே இருக்கிறதே?''”
"தி.மு.க. கூட்டணியில் உள்ள சி.பி.எம். கட்சியின் போக்கு தி.மு.க. வை தொடர்ந்து எரிச்சலடைய வைக்கிறதாம். குறிப்பாக சாம் சங் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு எதிரான குரலை எழுப்பிய சி.பி.எம்., தொடர்ந்து தி.மு.க. அரசு மீது விமர்சனங்களை வைத்துவருகிறது. மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயி களின் போராட்டத் தைக் கையில் எடுத்துவந்த பெ.சண்முகத்தை, மாநில செயலாளராக சி.பி.எம். நியமித்த பிறகு, இறுக்கம் மேலும் அதிகமானதாக தி.மு.க. உணருகிறதாம். அதனால், மெல்ல மெல்ல அதிமுக கூட்டணியின் பக்கம் செல்வதற்கான முனைப்பில் சி.பி.எம் இருப்பதாக தி.மு.க. தரப்பில் சந்தேகம் எழத் தொடங்கியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். அதே சமயம் சி.பி.எம்.மின் தேசியத் தலைமையோ, தி.மு.க. கூட்டணியில்தான் தொடரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம். ஆனாலும் அக்கட்சியின் மாநில நிர்வாகம் அதிரடியாகவே செயல்படுகிறது என்கிறார்கள்.''”
"போலி புகைப்படத்தால் சீமானுக்கு எதிர்ப்பு அதிகமாகியிருக்கே...?''
"ஆமாங்க தலைவரே.. இவர், அவரை சந்திக்கவேயில்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத் தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்' என தனது முகநூல் பக்கத் தில், "பயாஸ்கோப்' படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்த கருத்து, தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து "நான் தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக வேலை செய்து வந்தேன். அப் போது, நிகழ்ச்சி தயாரிப்பாள ராக இருந்த செங்கோட்டை யன் ஒருமுறை, சீமான், பிரபாகரன் இருவரும் அருகருகே இருப்பதுபோல படம் வேண்டு மென்று கேட்டார். நான் எதற் கென்று கேட்டதற்கு, "நாங்கள் அவருக்கு சர்ப்ரைஸாக பரிசு கொடுப்பதற்கு வேண்டும்' என்றார். என்னால் முடிந்த அளவுக்கு அந்த படத்தை எடிட் செய்து இருவரையும் அரு கருகே இருப்பதுபோல சேர்த்துக் கொடுத் தேன். இதுவரை நான் யாரிடமும் இதுபற்றிச் சொன்னதில்லை' என்று சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இவரது கருத்து தான், தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. போலியான புகைப்படத்தை வைத்து இவ்வளவு நாள் ஈழ ஆதரவாளர்களை சீமான் ஏமாற்றியுள்ள தாக சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். தலைவர் பிரபாகரனுடன் சீமான் புகைப்படம் எடுக்க வாய்ப்பேயில்லையென்று வைகோ முன்பொருமுறை கூறியிருந்த வீடியோ வையும் பரப்பிவருகிறார்கள்.''
"தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந் தகை மீது தி.மு.க. கோபத்தில் இருக்கிறதாமே?''
"ஆமாங்க தலைவரே, இந்தியா கூட்டணிக்கு நடிகர் விஜய் வரவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்தார். இதை தி.மு.க. ரசிக்கவில்லை. இந்தியா கூட்டணிக்கு தமிழகத்தில் தலைவராக இருப்பது தி.மு.க. அக்கட்சியை கடுமையாக விமர்சிக்கும் நடிகர் விஜய்யை எப்படி செல்வப்பெருந்தகை அழைக்கலாம்? கூட்டணிக்குத் தலைமை தி.மு.க.வா? காங்கிரஸா? என்று அவர் மீது கோபத்தில் இருக்கிறது அறிவாலயம். அதேசமயம், இந்தியா கூட்டணிக்கு எந்த விதத்திலும் நடிகர் விஜய் உள்ளே வர தி.மு.க. விரும்பாதபோது, செல்வப்பெருந்தகையின் அழைப்பில் ஏதேனும் பின்னணித் திட்டம் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து வருகிறதாம் தி.மு.க.''”
"அந்த செல்வப்பெருந்தகையையே ஒருவர் நொந்துபோக வைத்திருக்கிறார் என்கிறார்களே?''”
"காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக அணிக் கென்று சத்தியமூர்த்தி பவனில் தனியாக ஒரு அலுவலகம் தொடங்கப்பட்டது. இதனை கவனிக்கும் பொறுப்பை, கன்னியாகுமரியைச் சேர்ந்த தயாசிங் என்பவரிடம் ஒப்படைத்தார் செல்வப்பெருந்தகை. இந்த தயாசிங் ஐ.டி. துறையில் தனக்கு நல்ல அனுபவம் இருக்கிறது என்றும் மற்ற கட்சி களின் ஐ.டி. விங்குகளை என்னால் மிரளவைக்க முடியும் என்றும், டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் தனக்கு ஏகப்பட்ட செல்வாக்கு இருக்கிறது என்றும் பில்டப் கொடுத்ததால், அதை நம்பி இந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தாராம் செல்வப்பெருந்தகை. கட்சிக்கே தொடர்பில்லாத ஒருவரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பதா? என பவனில் அப்போதே விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், ஐ.டி. விங்கை தொடங்கிய ஒரே மாதத்தில் தயாசிங் கம்பி நீட்டிவிட்டாராம். ஏனெனில் அவருக்கு ஐ.டி. பற்றிய எந்த விபரமும் தெரியவில்லையாம். இதனால் நொந்துபோய்விட் டாராம் செல்வப்பெருந்தகை. இதோடு, அந்த தயாசிங், கட்சிப் பதவி வாங்கித்தருகிறேன் என்று பலரிடமும் இஷ்டத்துக்கும் கறந்திருக்கிறாராம். இதுவும் காங்கிரஸ் தலைமைக்கு சிக்கலாக உருவாகிவருகிறது என்கிறார்கள்.''”
"அ.தி.மு.க.விலும் ஐ.டி.விங் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறதே?''”
"அ.தி.மு.க. ஐ.டி. விங் தலைவராக இருந்த கோவை சத்யன் அந்தப் பொறுப்பிலிருந்து திடீரென்று விலகிவிட்டார். அவரை எடப்பாடி திட்டியதால் அவர் ராஜினாமா பண்ணிவிட்டுப் போய்விட்டாராம். இந்த சத்யன், எடப்பாடி மகன் மிதுனின் நெருங்கிய நண்பர். அவரது சிபாரிசில் தான், ஏற்கனவே அ.தி.மு.க. ஐ.டி. விங் பொறுப்பில் இருந்த சிங்கை ரவிச்சந்திரனை தூக்கிவிட்டு, சத்யனுக்கு வாய்ப்பு கொடுத்தார் எடப்பாடி. அந்த சிங்கை ரவிச்சந்திரன் எஸ்.பி.வேலுமணியின் ஆதர வாளர். அவரிடம் இருந்து கட்சியின் ஐ.டி.விங் பொறுப்பைப் பிடுங்கி சத்யனுக்கு கொடுத்ததில் வேலுமணிக்கும், எடப் பாடிக்கும் இடையில் உரசல் ஏற்பட்டதாம். இந்த நிலையில், கடந்த வாரம் மிதுனுக்கு எதிராக வும், சத்யனுக்கு எதிராக வும் வேலுமணி காட்ட மாக எடப்பாடியிடம் புகார் வாசித்திருக்கிறார். இதனையடுத்தே சத்யனை கூப்பிட்டுத் திட்டியிருக் கிறார் எடப்பாடி என்று அதன் பின்னணிகளை விவரிக்கிறார்கள் கொங்கு அ.தி.மு.க.வினர்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமி ழகத்தின் அடுத்த டி.ஜி.பி. யாக அபய்குமார்சிங் வரு வார் என்பது ஏறத்தாழ உறுதி யாகியிருக்கிறது. நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர் இவர். இந்தப் பதவியின் மீது கண் வைத்தி ருந்த ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வாலை எல்லைப் பாது காப்புப் படைக்கு மாற்றியிருக் கிறார்கள். இவர்தான் கள்ளக்குறிச்சி சாராயச் சாவு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர். இவர் சகோதரர் பா.ஜ.க.வில் இருப் பதால், அவர்மூலம் காய் நகர்த்தி, மகேஷ்குமார் அகர் வால் தன்னைப் பாதுகாத் துக் கொண்டாராம். டி.ஜி.பி. பரிசீலனையின் ஆரம்ப கட் டத்தில் சீமா அகர்வாலின் பெயரும் இருந்ததாம். இவர் எடப்பாடியின் ஆதரவாளர் என்று கருதப்படுவதால், இவ ரை பரிசீலனையில் இருந்து விலக்கிவிட்டார்களாம்.''”
________________
பனையூர் டூ பரந்தூர் களம் இறங்கிய விஜய்!
சென்னைக்கு அருகே இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் உருவாக்கும் திட்டத்தை கையிலெடுத்து, அதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது அரசு. இந்தத் திட்டத்தை அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்கள் எதிர்த்து வருகின்றனர். அவர்களின் போராட்டம் ஏறத்தாழ 900 நாட்களை கடந்துள்ள நிலையில்... அவர்களை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க 20-ந் தேதி திங்களன்று பரந்தூருக்குச் சென்றார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். இதற்காக, "பரந்தூர் மக்கள் மட்டுமே சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் போலீஸுக்கு ஒத்துழைக்க வேண்டும், திட்டமிட்டபடி, நிகழ்ச்சி யை 1 மணி நேரத்தில் முடித்துக்கொள்ள வேண்டும், பொதுச் சொத்துக்களுக் கும் பொதுமக்களுக்கும் இடையூறில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என 4 நிபந்தனைகளை நடிகர் விஜய்க்கு காவல்துறை விதித்தது. இதை ஏற்றுக்கொண்டு பரந்தூருக்குச் சென்றார் விஜய். மக்களை சந்திக்க காலை 11.30 முதல் 12.30 வரை மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்த நிலையில்... 12 மணி அளவில்தான் பரந்தூரை அடைந்தார் விஜய்.
இந்த நிகழ்ச்சியில் த.வெ.க.வினர் கலந்துகொள்ள யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. பிரச்சார வாகனத்தில் நின்று மக்களைப் பார்த்து கையசைக்க, மக்கள் வரவேற்று, கட்சித் துண்டினை அவர் மீது வீசியெறிந்தனர். ஒரு கட் டத்தில் எரிச்சலானார் விஜய். மக்கள் மத்தியில் மைக் பிடித்தவர், "விவசாயி களின் காலைத் தொட்டு வணங்கி எனது அரசியல் பயணத்தை தொடங்கு கிறேன். போராட்டத்தில் உங்களுடன் உறுதியாக நிற்பேன். வளர்ச்சியை நான் எதிர்ப்பவன் அல்ல. ஏர்போர்ட் வரக்கூடாது என்றும் சொல்லவில்லை. இந்தத் இடத்தில், வரக் கூடாதுன்னுதான் சொல்கிறேன். விவசாய நிலங்களை அழித்து ஏர்போர்ட் வரக்கூடாது. இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒன்று இருக்கிறது. எதிர்க்கட்சி யாக இருக்கும்போது விவசாயி களுக்கு ஆதரவு; ஆளும்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பா? உங்கள் நாடகம் மக்களிடம் எடுபடாது. கான்ஃபிடண்டாக இருங்கள்... நல் லது நடக்கும், வெற்றி நிச்சயம். விரை வில் உங்களை சந்திக்க ஊருக்குள் வருவேன்'' என்றார் ஆவேசமாக.
-இளையர்