மாட்டு ஜோதிட பலன்! ஓட்டல் அதிபரின் கதி என்ன?

ggg

துரையில் மிகப் பிரபலமான ஹோட்டல் ரமணா மெஸ். அதன் நிறுவனர் செந்தில் மிகுந்த ஆன்மிகவாதி, ஜோதிட நம்பிக்கையுடையவர். அமைச்சர் வேலுமணியின் கோவை இடையார்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில். மதுரையை சுற்றிலும் நான்கு கிளைகள் தொடங்கி மிகப்பிரபலமாக வலம் வந்தவர் திடீரென குடும்பத்தோடு காணாமல்போக, அவரது சொந்தங்களும் மதுரைவாசிகளும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். "என்னாச்சு? இவ்வளவு பிரபலமான ஒருவர் எப்படி காணாமல் போவார்' என்ற கேள்வி எழ... நாம் களத்தில் இறங்கினோம்.

hh

தன் கடின உழைப்பால் ஹோட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டவர். "இன்னும் உச்சத்தை தொடவேண்டுமென்றால் உலகின் எல்லா திசைகளிலிருந்தும் மிக விலை உயர்ந்த காளை மாடுகளை வாங்கினால் செல்வமும் புகழும் தொழிலும் உலகம் முழுவதும் பரவத் தொடங்கும்' என்று ஜோசியர் ஒருவர் சொன்னதன் விளைவு... ஒவ்வொரு திசைக்கும் சென்று மாடுகளை வாங்கத் தொடங்கினார்.

jjj

தன் ஹோட்டலை சுற்றிலும

தன் ஹோட்டலை சுற்றிலும் மாடுகளை பெரிய பெரிய படங்களாக பிரேம் போட்டு மாட்டத் தொடங்கினார். ஒவ்வொரு ஜல்லிக்கட்டுக்கும் இவரது விலைஉயர்ந்த மாடுகள் பார்வையாளர்களை மிகவும் கவரும் வகையில் வலம் வரும், ஆனால் போட்டியில் பங்கு பெறாது. ஏன் என்றால் மாட்டிற்கு எந்தவித ஒச்சமும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். இப்படி 450 மாடுகள் வாங்கி பெரிய அளவில் பண்ணை வைத்து பாதுகாத்து வருகிறார்.

இப்போது இவர் காணாமல் போனதிலிருந்து, யாரும் இதுவரை போலீஸில் புகார் கொடுக்க முன்வரவில்லை. ஏனென்றால் சமூக வலைத்தள வாட்ஸ்-ஆப்பில் செந்திலின் நண்பர் ஒருவர் ""ரமணா மெஸ் உரிமையாளர் கந்துவட்டி கும்பலிடம் சிக்கியிருக்கிறார், அவரை மிரட்டி சொத்தை வாங்க குடும்பத்தோடு கடத்தியிருக்கிறார்களா? இல்லை அவரது குடும்பத்தையே கொன்று விட்டார்களா? என்று தெரிய வில்லை. ஹோட்டல் தொழிலில் உச்சத்தில் இருக்கும் செந்தில் குமாரை தொடர்புகொண்ட கிரானைட் கோபாலகிருஷ்ணன் என்பவர் மேலும் தொழிலை தமிழகம் எங்கும் விரிவுபடுத்த சிறிது சிறிதாக பணம் கொடுத்து உதவுவதுபோல் ஐந்து கோடிவரை கொடுத்தபின்பு ஆட்களை வைத்து மிரட்டி அவரின் 250 மாடுகளை பிடித்துக் கொண்டு ஹோட்டலையும் எழுதிவாங்க அவரை கடத்தி வைத் துள்ளார்'' என்று செய்திகளை உலவவிட்டார்.

இதைப்பார்த்து கோபால கிருஷ்ணனை தொடர்புகொள்ள அவரது வழக்கறிஞர் அகஸ்டி னிடம் பேசினோம். ""நாங்க ஏன் சார் கடத்தணும். அவர்தான் எங்களிடம் வந்தார். "நான் வெளியில் அதிகமாக வட்டிக்கு பணம் வாங்கியிருக்கிறேன். என் கடனை அடைக்க நீங்கள் உதவவேண்டும்' என்றார். எங்க ளிடம் 5 கோடி வாங்கிக் கொண்டு ஒரு பாட்னர்ஷிப் டீல் 1-8-2019-ல் மதுரை சார்பதி வாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார். ஆனால் பணத்தையும் வாங்கிக்கொண்டு மொத்தமாக எஸ்கேப் ஆகிவிட்டார். எனவே மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பண மோசடி புகார் கொடுத்திருக் கோம்'' என்றார்

மேலும் ஹோட் டலில் வேலை பார்க் கும் நபர் நம்மிடம், ""சார் என்னோட பெய ரில் வங்கிக் கணக்கு ஓப்பன் பண்ணி 2 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். மேலும் இதுபோல் 180 பேர்கள் பெயரில் வங்கியில் தலா 2 லட்சம் வீதம் கடன் வாங்கி மோசடி செய்திருக்கிறார்'' என்றபடி வங்கிக் கணக்கு புத்தகத்தைக் காண்பித்தார்.

இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ""அவரின் பங்குதாரரான கோபலகிருஷ்ணன் மட்டுமே செந்தில் மேல் புகார் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து செந்திலின் உறவுகளிடம் விசாரித்து வருகிறோம். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பட்டியல் எடுத்து வருகிறோம். விசாரணை போய்க்கொண்டிருக்கிறது'' என்கின்றனர்.

ggg

செந்தில்குமாரின் உறவினர் ஒருவர் நம்மிடம், ""மதுரையில் ரமணா மெஸ்ஸை மிஞ்சமுடியாத அளவுக்கு பேமஸ் ஆகி தொழிலில் உச்சத்தை தொட்டவர். எப்படி இவரால் இந்தளவுக்கு வரமுடி யும், எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த வருடம் நான்கு கிளைகளைத் தொடங்கினார், எல்லாம் சூப்பராகத்தான் போனது. ஆனால் மதுரையில் உள்ள பெரிய பெரிய அரசியல்வாதிகள், கந்துவட்டி மாபியா கும்பலிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கியதால் அவரால் அதை அடைக்கவே முடியவில்லை..

அந்த பணத்தையெல் லாம் இந்தியா முழுவதும் சுற்றிச் சுற்றி விலை உயர்ந்த 450 மாடுகளாக வாங்கிக் குவித்தார். ஒவ்வொரு மாடும் மூன்று லட்சம், நான்கு லட்சம் இருக் கும் சார். அதிலும் 250 மாடு களை கடன் கொடுத்தவர்கள் ஓட்டிக்கொண்டு போய்விட் டார்கள். எல்லாம் கிருஷ்ண லீலை என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். தன் ஜாதகத்தில், கடன் வாங்கி தான் தொழில் செய்யமுடியும். ஆனால் மாடுகள் வாங்க... வாங்க... "அனைத்துக் கடனை யும் அடைத்து நாட்டுக்கே கடன் கொடுப்பேன்' என்று சொல்வார். இப்ப என்னடானா எல்லாம் தலைகீழா நடக்குது'' என்கிறார்கள்.

ஜோசியமும் மூடநம்பிக் கையும் பெரிய பெரிய மனிதர் களை பெரும்பாடுபடுத்தத்தான் செய்கிறது.

-அண்ணல்

nkn270919
இதையும் படியுங்கள்
Subscribe