மாநாடு தொடங்கியதும் மைக் பிடித்த சீமான், “"நாம் தமிழர் தம்பிகள் யாரும் மேடையருகே வராதீர்கள். இங்க மாடுகளுக்குத்தான் இடமிருக்கு. யாரும் வெடி போடாதீங்க. நான் பேசுகிறப்ப கை தட்டவேண்டாம். மாநாடே மாடுகளுக் காகத்தான் புரிஞ்சுதா? என்னைக் கத்தவிடா தீங்க''’என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே மழை வர... மாநாடு நடக்கும் விராதனூர் ஊரைச் சேர்ந்த இராஜேந்திரன் ஓடோடி வந்தார். “"வாப்பா உன்னை நம்பித்தான் மாநாடே நடக்குது''’என்றவர், யார், யார் பேசவேண்டும் என்ற லிஸ்ட்டோடு வந்த நிர்வாகிகளிடம், “"யாரும் பேசவேண்டாம், சீக்கிரம் தீர்மானம் வாசியுங்கள். அடுத்து நான் பேசுறேன்... சீக்கிரம் முடித்துவிட்டுக் கிளம்பு வோம்''’என்றார்.
வன மேய்ச்சல் உரிமைகளை வழங்குதல், தரிசு, புறம்போக்கு நிலங்களை மீட்டெடுத்தல், கிடை விலங்குகளின் வலசைப்பாதைகளை அங்கீகரித்தல், தமிழ்நாடு மேய்ச்சல் பொருளாதார மேம்பாட்டு வாரியம் அமைத்தல், சிப்காட் போன்ற திட்டங்களுக்கு மேய்ச்சல் நிலங்களை
மாநாடு தொடங்கியதும் மைக் பிடித்த சீமான், “"நாம் தமிழர் தம்பிகள் யாரும் மேடையருகே வராதீர்கள். இங்க மாடுகளுக்குத்தான் இடமிருக்கு. யாரும் வெடி போடாதீங்க. நான் பேசுகிறப்ப கை தட்டவேண்டாம். மாநாடே மாடுகளுக் காகத்தான் புரிஞ்சுதா? என்னைக் கத்தவிடா தீங்க''’என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே மழை வர... மாநாடு நடக்கும் விராதனூர் ஊரைச் சேர்ந்த இராஜேந்திரன் ஓடோடி வந்தார். “"வாப்பா உன்னை நம்பித்தான் மாநாடே நடக்குது''’என்றவர், யார், யார் பேசவேண்டும் என்ற லிஸ்ட்டோடு வந்த நிர்வாகிகளிடம், “"யாரும் பேசவேண்டாம், சீக்கிரம் தீர்மானம் வாசியுங்கள். அடுத்து நான் பேசுறேன்... சீக்கிரம் முடித்துவிட்டுக் கிளம்பு வோம்''’என்றார்.
வன மேய்ச்சல் உரிமைகளை வழங்குதல், தரிசு, புறம்போக்கு நிலங்களை மீட்டெடுத்தல், கிடை விலங்குகளின் வலசைப்பாதைகளை அங்கீகரித்தல், தமிழ்நாடு மேய்ச்சல் பொருளாதார மேம்பாட்டு வாரியம் அமைத்தல், சிப்காட் போன்ற திட்டங்களுக்கு மேய்ச்சல் நிலங்களைக் கையகப்படுத்தலை தடைசெய்தல், வன நிலங்களில் தைலமரம் உள்ளிட்ட வணிக மரங்கள் நடுவதை விடுத்து இயற்கைக் காடுகளை உருவாக்குதல், மஞ்சுவிரட்டு, கிடாமுட்டு, சேவல் சண்டை விளையாட்டுக்களை தடையின்றி நடத்துதல், வலசைப் பாதைகளிலுள்ள தொடர்வண்டி, நெடுஞ்சாலைகளில் சுரங்கப் பாதைகள் அமைத்தல், மேய்ச்சல் சமூக மக்களுக்கு தனி அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து சீமான் மாடுகளைப் பார்த்து பேசத்தொடங்கினார். “"உங்களுக்காகதான்ப்பா பேசுறேன். ஆடுகளும் மாடுகளும் இல்லாத இயற்கை வேளாண்மை ஏது? பால் என்பது முழுமையான சத்துள்ள உணவு. பால் இருக்கும் நாடு பசியைச் சந்திக்காது. இதனைத் தெரியாமல் கல்வி கற்று என்ன பயன்? மனிதன் தனது தேவைக்கு தண்ணீரை பாட்டிலில் வாங்கி பருகிக்கொள்வான்.
ஆனால் ஆடு, மாடுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் எங்கே செல்லும்? ஆடு, மாடுகள் மேய்வதற்கான மேய்ச்சல் நிலங்களை அவற்றிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிடில் ஆடு, மாடுகளுக்கு தேர்தலில் வாக்களிக்கும் வண்ணம் ஓட்டுரிமை வழங்கவேண்டும். மனிதர்களான உங்களால் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. எங்களுக்கு ஓட்டுரிமை கொடுங்கள். நாங்களாவது நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். இவற்றை மாடுகளின் சார்பில் கோரிக்கையாக கேட்கிறேன்.
இனி யாரையேனும் திட்டவேண்டுமென்றால் எருமை மாடு என்று திட்டாதீர்கள். ஆட்சியாளர்களின் பெயர்களைச் சொல்லித் திட்டுங்கள். ஆடு, மாடுகளை வளர்ப்பது அவமானமென்று கருதுகின்ற நீங்கள் ஏன், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் உண்ணுகிறீர்கள்?
இதனை எதிர்த்து வருகின்ற ஆகஸ்ட் 3-ஆம் தேதி தேனி மலைப்பகுதியில் ஆடு -மாடுகள் மேய்க்கும் போராட்டத்தை நடத்துவேன். பால்வளத்துறை, கால்நடைத்துறை என்று வைத்துள்ள அரசு, மாடுகளே இல்லாமல் பால் கறந்துவிடமுடியுமா? செருப்பு, தோள் பை ஆகியவற்றிற்கு மாடுகளின் தோல் தேவைப்படுகிறது. ஆனால், அவை உண்பதற்கான வைக்கோல் உள்ளதா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காடுகளுக்குள் மேய்ச்சலுக்குச் சென்றவர்களால் அழியாத காட்டு வளம், தற்போது மட்டும் அழிவதாக எப்படிச் சொல்கிறீர்கள்?
காடுகளின் ஆன்மாவைக் காக்கின்ற சமூகம் ஆயர்களும், மலைவாழ் மக்களும்தான். ஆடு, மாடுகளை அவமானப்படுத்துவது என்பது கிருஷ்ணன், இயேசு, நபிகளை அவமானப்படுத்துவதற்கு சமம்''’என்று முடித்துக்கொண்டு அவசர, அவசரமாகக் கிளம்பி னார்.
மாநாட்டில் 3000 மாடுகளும், 100 ஆடுகளும் 400 தொண்டர்களும் கலந்துகொண்டதாக நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர். நாம் தமிழர் தொண்டர் ஒருவரிடம் பேசினோம், “"சீமான் அண்ணன் என்றால் எனக்கு உயிர். மாநாட்டிற்கு கொஞ்சம் லேட்டாத்தான் வந்தேன். கொஞ்சம் சரக்கு அடிச் சிருக்கேன். ஆனாலும் நிதானமா சொல்றேன் கேட்டுக்கோங்க. மனிதர்கள் மட்டுமல்ல மாடுகளும் நல்லா இருக்கவேண்டும் என்று மாநாடு நடத்துறாப்பல. இயேசு, நபி, கிருஷ்ணனுக்கு அடுத்து மாடுகளை நேசிப்பவர் எங்க அண்ணன் சீமான்தான். இதை மட்டும் நல்லா பெரிய எழுத்தில் போடுங்க''’என்று நகர்ந்தார்
அடுத்து மாநாடு நடக்கும் விராதனூர் காரர் சக்திவேல் நம்மிடம், “"அந்த இடத்தில் ஒரு மாதமாக கிடை போட்டிருப்பது எங்க ஊரைச் சேர்ந்த இராஜேந்திரன்தான். சீமான் 100 வருடத்திற்கு முன் பேசவேண்டியதை இப்ப பேசுகிறார். மாடுகளை நன்றாகப் பராமரித்து பண்ணையாக வைத்திருக்கிறார் கள். வேண்டுமென்றால் அரசு மாட்டுப் பண்ணைகளுக்கு மானியம் கொடுத்து ஊக்கப்படுத்தலாம். அதை இப்போது செய்துகொண்டுதான் இருக்கு. நான் மாடு வளர்க்கிறேன். என் மகன் சென்னையில் தகவல்தொழில்நுட்பத் துறையில் வேலைபார்க்கிறான். என் பேரன்கள் மாடுகளை வீட்டைவிட்டு தனியே தோட்டத்தில் வளர்க்கச் சொல்கிறார்கள். இன்னும் பழைய மாதிரியே இருக்க முடியாது''’என்றார்.
மாநாட்டு மேடைக்கு அருகே அடைக்கப்பட்டிருந்த மாடுகள், "மனிதர்களைத்தான் கட்சிக்காரர்கள் மாநாட்டிற்கு காசு, பிரியாணிப் பொட்டலம் கொடுத்து அடைத்து வைப்பார்கள். மாடுகளான எங்களையும் விட்டுவைக்க வில்லையா?' என்று கேட்பதுபோலத் தோன்றியது நமக்கு.