Advertisment

ஜெயிலில் சசி மீது புது வழக்கு! அதிகரிக்கும் தண்டனை?

sasikala

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை கைதியாக உள்ள சசிகலா பரப்பன அக்ரஹார சிறைக்குப் போய் ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. தண்டனை கைதிகள் அணியும் வெள்ளை நிறத்தில் நீலநிற பார்டர் போட்ட சேலையை இதுவரை சசிகலா அணியவில்லை. சிறை அறையில் நைட்டியும் சிறைக்கு வெளியே வரும் போது சுடிதாரும் அணிந்து, சுற்றி வருகிறார்.

Advertisment

sasikala

சசிகலாவை போலவே இளவரசியும் பல வண்ண கலர் சேலைகளில் உலா வருகிறார். சுதாகரனும் அவர் அணிய வேண்டிய அரைக்கால் வெள்ளை டவுசரும் வெள்ளைச் சட்டையும் அணியாமல் தனது வழக்கமான ஸ்டைலிலான குர்தா பைஜாமாவுடன் காட்சி தருகிறார். இந்த மூவரையும் பார்க்க வருபவர்கள் பற்றிய வருகை பதிவேடுகள் பதிவு எதுவும் முறையாக சிறையில் பராமரிக்கப்படுவதில்லை. இவர்களுக்கான உணவு வெளியிலிருந்து கொண்டு வரப்படுகிறது. தேவைப்படும் போது சிறையின் சமையல் கூடத்திலும் சமைத்து தரப்படுகிறது. இவர்களது அறைகளில் டி.வி., பிரிட்ஜ் போன்ற பொ

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை கைதியாக உள்ள சசிகலா பரப்பன அக்ரஹார சிறைக்குப் போய் ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. தண்டனை கைதிகள் அணியும் வெள்ளை நிறத்தில் நீலநிற பார்டர் போட்ட சேலையை இதுவரை சசிகலா அணியவில்லை. சிறை அறையில் நைட்டியும் சிறைக்கு வெளியே வரும் போது சுடிதாரும் அணிந்து, சுற்றி வருகிறார்.

Advertisment

sasikala

சசிகலாவை போலவே இளவரசியும் பல வண்ண கலர் சேலைகளில் உலா வருகிறார். சுதாகரனும் அவர் அணிய வேண்டிய அரைக்கால் வெள்ளை டவுசரும் வெள்ளைச் சட்டையும் அணியாமல் தனது வழக்கமான ஸ்டைலிலான குர்தா பைஜாமாவுடன் காட்சி தருகிறார். இந்த மூவரையும் பார்க்க வருபவர்கள் பற்றிய வருகை பதிவேடுகள் பதிவு எதுவும் முறையாக சிறையில் பராமரிக்கப்படுவதில்லை. இவர்களுக்கான உணவு வெளியிலிருந்து கொண்டு வரப்படுகிறது. தேவைப்படும் போது சிறையின் சமையல் கூடத்திலும் சமைத்து தரப்படுகிறது. இவர்களது அறைகளில் டி.வி., பிரிட்ஜ் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. இவர்கள் சிறைக்கு வெளியே போய்விட்டு சாவகாசமாக உள்ளே வருகிறார்கள். தினமும் இவர்களிடமிருந்து கட்டளைகள் பெற்று செயல்பட வேலைக்காரர்கள் சிறைவாசலிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இவையெல்லாம் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா, சசிகலாவின் சிறை வாழ்க்கை பற்றி எழுப்பிய குற்றச்சாட்டுகள்.

Advertisment

chitraramayaமேலும் சிறை முழுவதும் போதைப் பொருள் நிரம்பிக் கிடக்கிறது, கஞ்சா விற்பனை நடக்கிறது. வி.ஐ.பி. கைதிகளான சசிகலா, முத்திரைத்தாள் மோசடி தெல்கி போன்றோருக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இந்த சலுகைகளை பெறுவதற்காக சசிகலா சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்யநாராயணராவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார். டி.டி.வி. தினகரனுடன் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலியா பிரகாஷ் என்கிற பெங்களூரைச் சேர்ந்த நபர் மூலம் கொடுத்தார். அந்த லஞ்சப் பணத்தில் சத்யநாராயணராவ் சொகுசு வீடு ஒன்றை ஹைதராபாத்தில் வாங்கினார் என ரூபா எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டார். அதில் சசிகலா இருக்கும் அறை, அவர் சுடிதாருடன் சிறைக்கு வெளியே இருந்து உள்ளே வரும் காட்சிகள் எல்லாம் இடம்பெற்றன.

கர்நாடக மாநிலத்தை ஆளும் சித்தராமையா அரசு ரூபாவை சிறைத் துறையிலிருந்து தூக்கி அடித்தது. இதையும் வீடியோவாக அம்பலப்படுத்தினார் ரூபா. இதனால் வினய்குமார் என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரியை ரூபாவின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரியாக நியமித்தார் சித்தராமையா.

விசாரணை அறிக்கையை வினய்குமார் சமர்ப்பித்தும் சசிக்கு சிறையில் எல்லா வசதிகளும் செய்து கொடுத்த ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமான உள்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி மூலம் அந்த அறிக்கையை தூசு தட்டாமல் பார்த்துக் கொண்டார் சசிகலா.

dgpruba

கர்நாடகத்தில் தேர்தலுக்குத் தயாராகிவிட்ட பா.ஜ.க., சசிகலா விவகாரத்தை கையிலெடுத்து பிரச்சாரம் செய்தது. அதனால் டென்ஷனான சித்தராமையா, வினய்குமார் அறிக்கையை கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் வைத்து விவாதித்தார். சசிகலா உட்பட வி.ஐ.பி. கைதிகளுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டதையும், சிறைக்குள் சட்டவிரோத செயல்கள் நடந்ததையும் அதை எதிர்த்த கைதிகள் தாக்குதலுக்குள்ளானார்கள் எனவும் ரூபா சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என சொல்லியிருந்தார் வினய்குமார்.

இதற்கான லஞ்சத் தொகையை மட்டும் கர்நாடக ஊழல் தடுப்பு துறைதான் விசாரிக்க வேண்டும். ரூபா எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என குறிப்பிட்டிருந்தார் வினய்குமார்.

இதையடுத்து சசிகலா கொடுத்த லஞ்சம் பற்றி விசாரிக்க கர்நாடக ஊழல் தடுப்பு துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில் முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி.யான சத்யநாராயணராவ், சிறைத்துறை சூப்பிரண்டெண்ட், ஜெயிலராக இருந்த பெண் அதிகாரி மற்றும் சசிகலா ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது என விவரித்தது சிறை வட்டாரம்.

vinaykumarசிறையில் சமீபத்தில் சசிகலாவை சந்தித்த டாக்டர் வெங்கடேஷிடம், ""இன்னும் பத்துக்கு மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி அணியை விட்டு வெளியே வரத் தயாராக உள்ளார்கள். இன்னும் சில தினங்களில் நமக்கு நல்ல நாள் ஆரம்பம்'' என சசிகலா தெரிவித்திருந்தார். அதை தனது குடும்பத்தாரிடம் சந்தோஷமாக டாக்டர் வெங்கடேஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சசிகலா மீது வழக்கு என வந்த செய்தியால் ஒட்டுமொத்த மன்னார்குடி குடும்பமே ஆடிப் போய்விட்டது என்கிறது மன்னார்குடி வகையறாக்கள்.

ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த பத்து கோடி ரூபாய் அபராதத்தை கட்டாமல் இருப்பதால், ஆறு மாதம் தண்டனை அதிகமாகும் அபாயத்தில் சசிகலா இருக்கிறார். சிறைக்குள்ளே லஞ்சம் கொடுத்த வழக்கும் சேர்ந்தால் நான்கு வருடம் கழித்தும் வெளியே வருவாரா? என மன்னார்குடி வகையறாக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

-தாமோதரன் பிரகாஷ்

Chitharamya DGP Rupa sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe