எம்.என்.! உயிர்ப் போராட்ட நேரம்!

Mnatarajan

""உயிர்வலியில் அவர் துடிப்பதை பார்க்க முடிய வில்லை. இந்தளவுக்கு சிரமப்படுகிறாரே... ஏதாவது செய்யுங்க'' என டாக்டர்களிடம் தமிழகத்தின் வி.ஐ.பி. நோயாளிக்காக அவரது உறவினர்கள் கெஞ்சிக் கொண்டிருந்தனர். அந்த வி.ஐ.பி. எம்.என். என்கிற ம.நடராஜன் என்கிறது மன்னார்குடி வட்டாரம்.

M Natarajan

2017 அக்டோபர் மாத தொடக்கத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்தி என்கிற இளைஞன் ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவன் மூளைச்சாவு அடைந்ததை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறிவிக்காமல், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் அழைத்து வந்து நடராஜன் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டிருந்த குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு வந்த பிறகே மூளைச்சாவு என அறிவிக்கிறார்கள். கார்த்திக்கின் கல்லீரலும் கிட்னியும் நடராஜனுக்கு பொருத்தப்படுகிறது.

அடுத்த ஐந்து மாதங்கள் கார்த்திக் உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட கிட்னி, கல்லீரலால் நடராஜன் நடமாடுகிறார். உற்சாகமாக நடந்தார், நீச்சல்குளத்தில் நீந்தினார் என செய்திகள் பறந்துகொண்டிருந்தன. இன்னொருபக்கம் ""நடராஜனுக்கு பொருத்தப்பட்ட உறுப்புகள் சரியாக செயல்படவில்லை. இன்னொரு உடலில் இருந்து உறுப்புகளை பெற்று பொருத்திக்கொண்டவர் எவ்விதமான நோய்க்கிருமி களும் அவரது உடலை தாக்காதவகையில் பாது காப்பான வாழ்க்கை வாழவேண்டும். சென்னையில் அவரது நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்த நடராஜ னுக்கு உரிய கவனிப்பு இல்லை. அதனால் முதலில் அவரது கிட்னியின் செயல்பாடு பாதிக்கப்பட்டது. அதற்காக அவர் டயாலிஸில் செய்து கிட்னியை காப்பாற்றிவந்தார். தொடர்ந்து அவருக்கு சிறுநீர் போகும் வழியில் நோய்த்தொற்று ஏற்பட்டது. சிறுநீரக மண்டலத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்று அவரை வெகு

""உயிர்வலியில் அவர் துடிப்பதை பார்க்க முடிய வில்லை. இந்தளவுக்கு சிரமப்படுகிறாரே... ஏதாவது செய்யுங்க'' என டாக்டர்களிடம் தமிழகத்தின் வி.ஐ.பி. நோயாளிக்காக அவரது உறவினர்கள் கெஞ்சிக் கொண்டிருந்தனர். அந்த வி.ஐ.பி. எம்.என். என்கிற ம.நடராஜன் என்கிறது மன்னார்குடி வட்டாரம்.

M Natarajan

2017 அக்டோபர் மாத தொடக்கத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்தி என்கிற இளைஞன் ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவன் மூளைச்சாவு அடைந்ததை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறிவிக்காமல், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் அழைத்து வந்து நடராஜன் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டிருந்த குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு வந்த பிறகே மூளைச்சாவு என அறிவிக்கிறார்கள். கார்த்திக்கின் கல்லீரலும் கிட்னியும் நடராஜனுக்கு பொருத்தப்படுகிறது.

அடுத்த ஐந்து மாதங்கள் கார்த்திக் உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட கிட்னி, கல்லீரலால் நடராஜன் நடமாடுகிறார். உற்சாகமாக நடந்தார், நீச்சல்குளத்தில் நீந்தினார் என செய்திகள் பறந்துகொண்டிருந்தன. இன்னொருபக்கம் ""நடராஜனுக்கு பொருத்தப்பட்ட உறுப்புகள் சரியாக செயல்படவில்லை. இன்னொரு உடலில் இருந்து உறுப்புகளை பெற்று பொருத்திக்கொண்டவர் எவ்விதமான நோய்க்கிருமி களும் அவரது உடலை தாக்காதவகையில் பாது காப்பான வாழ்க்கை வாழவேண்டும். சென்னையில் அவரது நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்த நடராஜ னுக்கு உரிய கவனிப்பு இல்லை. அதனால் முதலில் அவரது கிட்னியின் செயல்பாடு பாதிக்கப்பட்டது. அதற்காக அவர் டயாலிஸில் செய்து கிட்னியை காப்பாற்றிவந்தார். தொடர்ந்து அவருக்கு சிறுநீர் போகும் வழியில் நோய்த்தொற்று ஏற்பட்டது. சிறுநீரக மண்டலத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்று அவரை வெகுவாக பாதித்தது'' என்கிறார்கள்.

MN

இந்த நோய்த் தொற்று காரணமாக மார்ச் மாதம் 5-ம் தேதியே குளோபல் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார் நடராஜன் என்கிறது மருத்துவமனை வட்டாரம். தோய்த் தொற்றுகள் அனைத்தும் பூஞ்சைக்காளான் உயிர்த்தொற்றுகள் என கண்டுபிடித்த டாக்டர்கள் இன்னொருவரின் உடலிலிருந்து உறுப்புகளை பெற்றால் அதை உடல் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ளாது. அந்த புதிய உறுப்புகளை ஒருவிதமான வெளிஆக்கிரமிப்பு என கணக்கில் எடுத்துக்கொணடு அந்த புதிய உறுப்புகளை எதிர்த்து போரிடக்கூடிய பொருட்களை ரத்தத்தில் உருவாக்கும். ஆனால் நடராஜன் விஷயத்தில் முதலில் மூளைச்சாவடைந்த கார்த்திக்கிடமிருந்து பெற்ற கிட்னி, கல்லீரல் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டது. ஆனால் ஐந்து மாதங்கள் கழித்து புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருக்கிறது என நடராஜனின் நிலை குறித்து விளக்கினார்கள்.

டாக்டர்கள் அளித்த இந்த விளக்கத்தை பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவை நேரில் சந்தித்து விளக்கினார்கள் நடராஜனின் உறவினர்கள். நடராஜன் சிகிச்சையை தொடர்ந்தார். மார்ச் மாதம் 15-ந் தேதி நடராஜனின் நோய்த்தொற்று அதிகமானது. கிட்னியைத் தொடர்ந்து நுரையீரலும் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே தானமாகப் பெற்ற கிட்னி மற்றும் கல்லீரலின் பாதிப்பு... அதைத் தொடர்ந்து நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பால் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டார் நடராஜன்.

sasiஅவரது நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ந்தார்கள். நெஞ்சுப் பகுதியில் உள்ள நுரையீரலின் இரண்டு பைகளிலும் ஜெ.வுக்கு வந்ததைப் போலவே Pulminary Odema எனப்படும் திரவம் நிறைந்திருந்தது. நுரையீரலில் தங்கியிருந்த திரவத்தை சோதனை செய்த மருத்துவர்கள் மேலும் அதிர்ந்தார்கள். நுரையீரல் முழுவதும் தங்கியிருந்த திரவத்தில் நிமோனியா தாக்கியிருந்தது. மரணத்தை விரைவுபடுத்தும் நிமோனியா தாக்கியிருந்த நடராஜனின் உயிரைக் காப்பாற்ற Non Invasive Ventilator எனப்படும் செயற்கை சுவாசக் கருவிகளை இணைத்தனர்.

தொண்டையில் டிரக்கியோஸ்டமி எனப்படும் ஓட்டை போடாமல் சுவாசிக்க சிரமப்பட்ட நடராஜனின் நுரையீரலை ஆக்சிஜன் சிலிண்ட ரோடு இணைத்து சுவாசிக்க வைத்தாலும் மார்ச் 18-ந் தேதி ரொம்பவும் போராடினார் நடராஜன். மறுபடியும் ஸ்கேனிங் செய்து பார்த்த போது Braddy Cardia என்கிற இதயத்துடிப்பு மிக வும் ஸ்லோவாகும் நோயால் நடராஜன் பாதிக்கப் பட்டிருந்தார் என கண்டுபிடித்தார்கள். அத்துடன் நடராஜனுக்கு லேசான மாரடைப்பும் ஏற்பட்டிருந் ததை அவரது ஈஸிஜி மருத்துவ பரிசோதனைகள் காட்டின. ஜெ.வுக்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டாவது நாள் பொருத்தப்பட்ட இதயத்துடிப்பை வேகப்படுத்தும் பேஸ்மேக்கர் என்கிற கருவியை நடராஜனுக்குப் பொருத்தினார்கள். மாரடைப்பை குணப்படுத்தும் மருந்துகள் அளிக்கப்பட்டன.

மறுபடியும் 19-ந் தேதி மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டார் நடராஜன். அதற்கு என்ன காரணம் என ஆராய்ந்த டாக்டர்கள் நடராஜனின் நுரையீரலுக்கு வெளியிலிருந்து கொடுக்கும் சர்ய் Non Invasive Oxygen போதவில்லை. அதனால் அவர் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பதால் Invasive Oxygen எனப்படும் தொண்டைக் குழாய் மூலம் ஓட்டை போட்டு நுரையீரலை நிரந்தரமாக ஆக்சிஜன் சிலிண்டருடன் இணைக்கும் Tracheotomy என்கிற ஆபரேஷனை செய்தார்கள்.

vaiko74 வயதாகும் நடராஜனின் உடலில் Tracheotomy எனப்படும் தொண்டையில் ஓட்டை போடும் சிறிய அறுவைச் சிகிச்சைக்காக கொடுக்கப்படும் மயக்கமருந்தையே தாங்கவில்லை. அவருக்கு ரத்த அழுத்தம் உயர்ந்த நிலையிலேயே இருக்கிறது. ஜெ.வைப் போலவே சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஜெ. பாதிப்புக்குள்ளான Multiple Organ Disorder எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் உறுப்புகள் செயலிழக்கும் நோயால் நடராஜன் பாதிக்கப்பட்டார். ஜெ.வுக்கு சிகிச்சையளித்த மருத்துவரான முகம்மது யூரேல் என்கிற கல்லீரல் சிகிச்சை நிபுணர்தான் குளோபல் மருத்துவமனை யில் நடராஜனுக்கு சிகிச்சையளித்து வந்தார்.

ஜெ.வுக்கு நுரையீரல், இதயம் இரண்டும்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. நடராஜனுக்கு மாற்றப்பட்ட கிட்னி, கல்லீரல் மற்றும் நுரையீரல், இதயம் என நான்கு உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந் தன. புதிதாக மாற்றப்பட்ட கிட்னி, கல்லீரல் ஆகிய உறுப்புகளில் ஏற்பட்ட பூஞ்சைக்காளானின் தாக்குதல் முழுவதுமாக ரத்தத்தில் பரவி ரத்தம் முழுமையும் நோய்த்தொற்றாக மாற்றி விட்டது. அந்த ரத்தம் பாயும் பகுதிகள் எல் லாம் புதிதாக நோய் தாக்குதலுக்குள்ளாகின. நடராஜனின் தோலின் நிறம்கூட பூஞ்சைக் காளான் தாக்குதலால் மாறிவிட்டதைக் கண்ட மருத்துவர்களிடம், அமெரிக்காவிற்கு கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரை கொண்டு சென்றதைப் போல சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கோ, டாக்டர் ரிச்சர்ட்பேல் சிகிச்சையளிக்கும் லண்டன் ப்ரூக்ளின் மருத்துவமனைக்கோ கொண்டு செல்லலாமா? என உறவினர்கள் கேட்டார்கள். சிகிச்சைபெறும் பெட்டை விட்டு நடராஜன் அசைந்தால் உயிருக்கே ஆபத்து என டாக்டர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோய்விட்டார்கள் உறவினர்கள்.

nedumaranஅப்பல்லோவில் ஜெ. சிகிச்சை பெற்றபோது செய்ததைப் போலவே நடராஜன் சிகிச்சை பெறும் அறை அமைந்துள்ள ஒட்டுமொத்த ப்ளாக்கையும் ஆக்கிர மித்துக்கொண்டார்கள் நடராஜனின் உறவினர்கள். ஜெ. சிகிச்சை பெற்றபோது செய்ததைப் போல மருத்துவமனையில் உள்ள மன்னார்குடி வகையறாக்கள் செல்போன்கள் சைலண்ட் மோடுக்கு போய்விட்டது.

தஞ்சாவூரில் உள்ள நடராஜனின் உறவினர்களில் ஒரு பிரிவு சென்னை குளோ பல் மருத்துவமனையில் தங்கியிருக்க... மற்றொரு கோஷ்டி பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை பார்க்க விரைந்தது. 19-ந் தேதி காலை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நடராஜ னைப் பார்க்க பரோலில் வர வழக்கறிஞர்கள் மூலம் விண்ணப்பித்தார் சசி. ""கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை ஆபரேஷன் நடந்தபோது "உங்கள் கணவர் நடராஜ னுக்கு உயிருக்கு ஆபத்து என பரோல் பெற்றுச் சென்றீர்கள். நீங்கள் பரோலில் சென்று வந்து ஆறு மாதங்கள் கூட முடிய வில்லை. மறுபடியும் கணவருக்கு உயிருக்கு ஆபத்து என பரோலில் செல்ல சட்டத்தில் இடமில்லை. மரண நிகழ்வுகளுக்குத்தான் நீங்கள் பரோலில் செல்லலலாம்' என கர்நாடக மாநில சிறைத்துறை, சசிகலாவிடம் பரோல் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது.

சுவரில் அடித்த பந்தாக திரும்பி வந்த பரோல் மனுவை உயிர்ப்பிக்க முடியுமா என கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சசிகலா தரப்பினர் அணுகினர். முதல்வரோ, "உங்களுக்கு சலுகை தரமுடியாது என கர்நாடக அமைச்சர் ராமலிங்கம் மூலம் சொல்லி அனுப்பிவிட்டார்' என்கிறது பெங்களூரு சிறை வட்டாரம்.

global-hospital

வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் கௌதமன், ஜான்பாண்டியன் போன்றவர்கள் குளோபல் மருத்துவ மனைக்குச் சென்று நிலவரம் கேட் டறிந்து, ""நடராஜனுக்கு உடல் நிலை யில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது'' என்று சொல்லிச் சென்றனர்.

குளோபல் மருத்துவமனை நிர்வாகம், "நடராஜன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது' என தொடர்ந்து மருத்துவ அறிக்கைகள் வெளியிட்டது. ஜெ.வுக்கு அப்பல்லோ. நடராஜனுக்கு குளோபல்.

உயிர்ப்போராட்டம் இயற்கையன்றோ!

-தாமோதரன் பிரகாஷ்

படங்கள் :அசோக், குமரேஷ்

Global Hospital Sasikala husband
இதையும் படியுங்கள்
Subscribe