மிழக அரசியல்வாதிகளை தந்திர பூமியான டெல்லி ஆட்சியாளர்கள் திஹார் ஜெயிலுக்கு அனுப்புவதால் உள்ளே செல்பவர்களின் அரசியல் அந்தஸ்து ’உயர்ந்துவிடுகிறது. ஆ.ராசா, கனிமொழி, டி.டி.வி.தினகரன் வரிசையில் தற்போது கார்த்தி சிதம்பரம்!

ஐ.என்.எக்ஸ். ஊடகத்தின் சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்திருக்கிறார்கள் சி.பி.ஐ.அதிகாரிகள். நீதிமன்ற அனுமதியுடன் லண்டன் சென்றிருந்த கார்த்தி சிதம்பரம் கடந்த 28-ந்தேதி காலையில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் சி.பி.ஐ.அதிகாரிகள் காத்திருப்பார்கள் என அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

karthichidambaram

கார்த்தியின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவைகளை குடியுரிமைத்துறை அதிகாரிகள் செக் பண்ணிக்கொண்டிருந்தபோது அங்கு திடீரென முளைத்த டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள், விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்திவிட்டு பின் கைது செய்வதாகத் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த கார்த்தி, ‘"இது நியாயமில்லை. இதற்காக பின்னாளில் வருத்தப்படுவீர்கள்' என கோபப்பட்டபோதும் அதிகாரிகள் அசரவில்லை.

Advertisment

லண்டனிலிருந்து அவர் எடுத்துவந்த லக்கேஜ்களை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனியார் விமானத்தில் அவசரம் அவசரமாக டெல்லிக்கு அழைத்துச் சென்றது சி.பி.ஐ. பாட்டியாலா வளாகத்திலுள்ள பெருநகர நீதிமன்ற நீதிபதி சுமீத் ஆனந்த் முன்பு ஆஜர்படுத்தினர். சி.பி.ஐ. வழக்கறிஞர்களின் வாதத்தைத் தொடர்ந்து அவர்களின் கஸ்டடிக்கு கார்த்தியை அனுப்பி வைத்தது நீதிமன்றம். ஒரு நாள் கஸ்டடி முடிந்ததும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகக்கூறி மேலும் 5 நாள் கஸ்டடி எடுத்துள்ளது சி.பி.ஐ.

chidambaram

கார்த்தியின் மீதான குற்றச்சாட்டு என்ன? மும்பையில் இயங்கிய ஐ.என்.எக்ஸ். ஊடகம், வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்காக கடந்த 2007-ல் மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தது. 4 கோடியே 62 லட்சம் ரூபாயை அந்நிய முதலீடாகப் பெறலாம் என அந்த நிறுவனத்துக்கு அனுமதி தந்தது வாரியம். ஆனால், ஐ.என்.எக்ஸ்.நிறுவனமோ அனுமதித்த தொகையைத்தாண்டி 305 கோடி ரூபாயை வெளிநாட்டிலிருந்து பெற்றது. இதற்கான தடையில்லா சான்றிதழையும் பெறவில்லை அந்த நிறுவனத்தின் உரிமையாளரான இந்திராணிமுகர்ஜி.

Advertisment

மத்திய வருமானவரித்துறையின் புலனாய்வுத்துறை இதனை கண்டறிந்து மேம்பாட்டு வாரியத்துக்கு புகார் கடிதம் அனுப்புகிறது. வாரியத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் தடுமாறிய ஐ.என்.எக்ஸ். நிறுவனம், கார்த்தியின் உதவியை நாடியது. அவர் கொடுத்த யோசனையின்படி சில விளக்கங்களை தந்ததுடன், கார்த்தியின் அழுத்தத்தால் வாரிய அதிகாரிகள் மௌனமானார்கள். மேலும், ஐ.என்.எக்ஸ்.க்கு சாதகமான சில முடிவுகளும் எடுக்கப்பட்டன. அதற்குப் பிரதிபலனாக கார்த்தியின் மறைமுக ஆதரவுடன் அவரது நண்பர்களின் நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கட்டணமாக வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஆதாரங்களை ஐ.என்.எக்ஸ். நிறுவனத்திடமிருந்தே கைப்பற்றியிருக்கிறது சி.பி.ஐ.

இதுகுறித்து வருமானவரித்துறையின் புலனாய்வு அதிகாரிகள், ‘""ஐ.என்.எக்ஸ். மீடியாவின் உரிமையாளர்களான இந்திராணிமுகர்ஜியும், அவரது கணவர் பீட்டரும் மகளை கொலைசெய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கார்த்திக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில்தான் வாசன் ஐகேர் உட்பட கார்த்தியின் நண்பர்களின் நிறுவனங்களிலும், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தியின் அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது. சிதம்பரம் வீட்டில் ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லையென்றாலும் கார்த்தி நண்பர்களின் நிறுவனங்களில் சில ஆவணங்கள் சிக்கின. இதனையடுத்து, அண்மையில் கார்த்தியின் ஆடிட்டர் பாஸ்கர்ராமனை கைது செய்தது சி.பி.ஐ.! அவரது வாக்குமூலம்தான் கார்த்தியை கைது செய்ய உதவியிருக்கிறது'' என்கின்றனர்.

modi-amitsha

"இந்திய அரசியலில் வலிமை வாய்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ‘’கார்த்தியின் கைது அரசியல் பழிவாங்குதலின் உச்சம். ப.சிதம்பரத்தையும் அகமதுபடேலையும் குறிவைத்தே கார்த்தியை கைது செய்திருக்கிறார்கள்'' என்கிறது வழக்கறிஞர்கள் தரப்பு.

இதன் பின்னணிகள் குறித்து விசாரித்தபோது, ""குஜராத்தின் முதல்வராக மோடி இருந்தபோது அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார் அமித்ஷா. மோடியை கொல்ல முஸ்லிம் தீவிரவாதிகள் சதி செய்ததாகக்கூறி குஜராத்தில் பல என்கவுன்ட்டர் படுகொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன என்பதை மோடி அரசாங்கத்தைச் சேர்ந்தோரே அம்பலப்படுத்தினர். என்கவுன்ட்டரில் தொடர்புடைய காவல்துறையினர் பலரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். என்கவுன்ட்டரை அம்பலப்படுத்தியவர்களும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள். இத்தகைய கொலைகளுக்கு சொராபுதின் என்கிற கூலிப்படை தலைவனை பயன்படுத்தினர். ஒரு கட்டத்தில், சொராபுதினுக்கும் அமித்ஷாவுக்குமுள்ள தொடர்புகளை மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு குஜராத் காங்கிரஸார் தெரியப்படுத்தினர். மத்திய காங்கிரஸ் அரசு இதைத் தோண்டித் துருவிய நிலையில், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் இணைந்து சொராபுதினையும் அவரது மனைவியையும் கடத்தி ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைத்து இருவரையும் என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ளினர்.

இந்தப் படுகொலைகள் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்த, இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2008-ல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுகிறது. சொராபுதின் என்கவுன்ட்டர் படுகொலையில் அமித்ஷா மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலரின் தொடர்புகளை அம்பலப்படுத்திய சி.பி.ஐ அதிகாரிகள், அமீத்ஷா மீது, anithmukherjiஆயுத சட்டம் மற்றும் தடயங்களை அழித்தல் உள்ளிட்ட கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் தள்ளுகிறார்கள். 3 மாத சிறைவாசத்திற்குப் பின்பே ஜாமீனில் விடுதலையானார்.

அமித்ஷா கைதானபோது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அந்த சமயத்தில், மோடியை வீழ்த்த அமித்ஷாவை தண்டிக்க வேண்டும் ; அதனால், அமித்ஷாவுக்கு எதிரான சொராபுதின் வழக்கு நீர்த்துப் போய்விடாமல் வலிமையாக வேண்டும் என்பதால் குஜராத்தில் நடந்து வந்த வழக்கை 2012-ல் மும்பைக்கு மாற்றுகிறது காங்கிரஸ் அரசு. இதனையடுத்து, சி.பி.ஐ. இயக்குநராக இருந்த அஸ்வினிகுமாருக்கு பல உத்தரவுகள் கொடுக்கப்பட, அமித்ஷாவுக்கு எதிரான இவ்வழக்கில் தீவிரம் காட்டுகிறது சி.பி.ஐ.! அதன் பின்னணியிலிருந்து ப.சிதம்பரமும் அகமதுபடேலும் இயங்குகின்றனர். இது மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அதிர்ச்சியைத் தருகிறது

இந்தச் சூழலில், 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்காக 2013-லேயே பிரதமர் வேட்பாளராக மோடியை ப்ரொமோட் பண்ணும் வேலைகளை துவக்குகின்றார் அமித்ஷா. உத்தரபிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுகிறார். இதனால், தேர்தலுக்கு முன்பாகவே சொராபுதின் வழக்கில் அமித்ஷாவை குற்றவாளியாக அறிவிக்கும் வகையில் வழக்கை நடத்துகிறது காங்கிரஸ் அரசு. ஆனால், வழக்கு இழுத்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், 2014-ல் பிரதமராகிறார் மோடி. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சதாசிவம் பொறுப்பேற்க, அவரது விசாரணையில், வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார் அமித்ஷா.

சி.பி.ஐ.யை வைத்துக்கொண்டு அமித்ஷாவை சிறையில் அடைத்ததும், நிரந்தரமாக சிறையில் தள்ள திட்டமிட்டதும் ப.சிதம்பரமும் சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமதுபடேலும்தான் என மோடியும் அமித்ஷாவும் நினைத்தனர். 3 மாத சிறைக் கொடுமைகளை அமித்ஷாவால் இன்னும் மறக்க முடியவில்லை. அதனால் ப.சிதம்பரத்தை ஒரு நாளாவது உள்ளே வைக்க வேண்டும் என்கிற தீராப் பகையை வரித்துக்கொண்ட பா.ஜ.க. தலைமை, அதே சி.பி.ஐ.அதிகாரிகளை வைத்தே காரியத்தை நடத்த திட்டமிடப்பட்டது. மோடியின் டார்கெட் ப.சிதம்பரம் என்ற நிலையில், அதற்கு முன்பாக பொறியில் சிக்கியிருக்கிறார் ப.சி.யின் மகன் கார்த்தி'' என பின்னணிகளை விவரிக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

""ப.சி. கைது செய்யப்பட்டாலும் வழக்கு வலிமையாக இல்லாததால், 2 ஜி வழக்கு பூதாகரமாகி கடைசியில் ஆ.ராசாவும் கனிமொழியும் விடுதலையானது போல கார்த்தியும் சிதம்பரமும் விடுதலையாவார்கள் என்றே வழக்கறிஞர்களின் கருத்தாக இருக்கிறது. 2ஜியில் நீரா ராடியாவின் வாக்குமூலம் எப்படி புஸ்வாணமானதோ அதே பாணியில் ஐ.என்.எக்ஸ். மீடியா இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலமும் பா.ஜ.க.வின் பழிவாங்கலுக்கு பயன்பட்டதைத் தவிர, வேறு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது'' என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

-இரா.இளையசெல்வன்