Advertisment

தினகரன் பூச்சாண்டி! இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். மிரட்சி!

admk0meet

டி.டி.வி. தினகரன் மதுரையில் நடத்திய கூட்டம் எடப்பாடி அணியில் ஏகப்பட்ட கிலியை உருவாக்கியுள்ளது. மதுரையில் காலையில் டி.டி.வி. புதுக்கட்சி ஆரம்பிக்க, எடப்பாடி பட்ஜெட் தாக்கல் செய்த அதே நாள் மாலையில், அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் "சட்டமன்றக் கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்' என ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அட்வைஸ் செய்ய ஒரு கூட்டத்தை கூட்டினார். அதில் முதல் அட்வைசே, ""டி.டி.வி. ஆட்களோடு யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது'' என்பதுதான். ""தினகரன் ஒரு திருடர், "அவர் ஏமாற்றுக்காரர். அவர் பக்கம் யாரும் போய் ஏமாந்து விடாதீர்கள். எம்.எல்.ஏ.க்களை "கவனித்துக்' கொள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்' பல எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் பேசும் போது அவர்கள் கொடுக்கும் சிபாரிசுகள் நிறைவேறவில்லை என கடுப்பில் இருக்கிறார்கள். அம

டி.டி.வி. தினகரன் மதுரையில் நடத்திய கூட்டம் எடப்பாடி அணியில் ஏகப்பட்ட கிலியை உருவாக்கியுள்ளது. மதுரையில் காலையில் டி.டி.வி. புதுக்கட்சி ஆரம்பிக்க, எடப்பாடி பட்ஜெட் தாக்கல் செய்த அதே நாள் மாலையில், அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் "சட்டமன்றக் கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்' என ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அட்வைஸ் செய்ய ஒரு கூட்டத்தை கூட்டினார். அதில் முதல் அட்வைசே, ""டி.டி.வி. ஆட்களோடு யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது'' என்பதுதான். ""தினகரன் ஒரு திருடர், "அவர் ஏமாற்றுக்காரர். அவர் பக்கம் யாரும் போய் ஏமாந்து விடாதீர்கள். எம்.எல்.ஏ.க்களை "கவனித்துக்' கொள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்' பல எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் பேசும் போது அவர்கள் கொடுக்கும் சிபாரிசுகள் நிறைவேறவில்லை என கடுப்பில் இருக்கிறார்கள். அமைச்சர்கள் எல்லோரும் எம்.எல்.ஏ.க்கள் சொல்லும் வேலைகளை செய்து கொடுங்கள். எம்.எல்.ஏ.க்களை திருப்திப்படுத்துவது மாதிரி அமைச்சர்கள் நடந்துகொள்ள வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கும், 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கும் எந்த நேரத்திலும் தீர்ப்பை நெருங்கும். தீர்ப்பு வெளிவந்தால் உடனே நமது எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு வந்து விட வேண்டும்.

Advertisment

admk0meet

அதே நேரத்தில் 3 நாட்கள் நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தி.மு.க.வை நோகடிக்கும்படி நடந்து கொள்ளக்கூடாது. நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் தி.மு.க. உதவியும் தேவைப்படும். கிடைக்கும். எனவே அவர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது. சட்டமன்றத்தில் பேசுபவர்கள் தொகுதி பிரச்சினை, பட்ஜெட் இவற்றைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்'' என சீரியஸான அட்வைசை எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். எடப்பாடி அத்துடன் நிற்காமல், டெல்லி உயர்நீதிமன்றம் டி.டி.வி. தினகரனுக்கு அவர் கேட்கும் கட்சி பெயரையும் சின்னத்தையும் அளிக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மனுதாக்கல் செய்தார். இதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சை எடப்பாடி கவனமாகத் தவிர்த்து விட்டார் என்கிறார்கள்.

Advertisment

""எடப்பாடிக்கும் டி.டி.வி.க்கும் நேரடி சண்டை நடக்கிறது. அதே நேரத்தில் சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்க எடப்பாடி தயார். ஆனால் டி.டி.வி. மட்டும் வேண்டாம் என்கிற தனது நிலையை உறுதிப்படுத்தத்தான் எடப்பாடி களமிறங்கினார். அதைத்தான் அமைச்சர் வேலுமணி எடப்பாடி சூப்பர் ஸ்டார் என வர்ணித்து ஆதரித்தார்'' என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

இதற்கிடையே மதுரையில் டி.டி.வி., அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என புதிய பெயருடன் அமைப்பை அறிவித்தது எடப்பாடிக்கு கடும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி. அணி கேட்ட மூன்று பெயர்கள், பா.ஜ.க. உதவியுடன் தேர்தல் கமிஷனில் வேறு நபர்கள் பெயரில் எடப்பாடி வாங்கிவிட்டார்.

sasikalaதேர்தல் கமிஷன் உதவியுடன் நடந்த பெயர் பறிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தினகரன் இதுவரை கோர்ட்டில் சொல்லாத, "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் அமைப்பை தொடங்கினார். கட்சிக் கொடியையும் கறுப்பு வெள்ளை சிவப்பில் ஜெ. படத்தை வைத்து வடிவமைத்தார்.

குக்கர் சின்னம் கிடைத்துவிடக்கூடாது என டி.டி.வி.க்கு எதிராக வரிந்து கட்டி வந்த எடப்பாடி தரப்பு, ஜெ. படம் போட்ட அ.ம.மு.க. கொடி, அ.தி.மு.க. கொடி போல இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

தினகரன் தனது புதிய கட்சியை அமைப்பு என்றுதான் சொல்கிறார். காரணம், தன் பக்கம் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டச் சிக்கல் வரக்கூடாது என்பதும், இந்த அமைப்பு மூலம் அ.தி.மு.க. என்கிற தாய்க்கட்சியை மீட்பேன் என தொண்டர்களுக்கு நம்பிக்கை தருவதுமேயாகும்.

அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால், அ.ம.மு.க.வினருக்கு பொது சின்னம் கிடைக்க வேண்டும் என்றால் அமைப்பாக இயங்க முடியாது. அரசியல் கட்சியாகப் பதிவு செய்தாக வேண்டும். இந்த சட்ட நெருக்கடியை உணர்ந்தே இருக்கும் தினகரன், சிறையில் உள்ள சசிகலாவின் ஆலோசனையுடன் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். தரப்புக்கு பூச்சாண்டி காட்டுகிறார்.

சசிகலா எப்படிப்பட்டவர், தினகரன் எப்படி செயல்படுவார் என்பதை ஏற்கனவே அவர்களால் பதவி பெற்ற இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.ஸும் அறிந்தவர்கள் என்பதால் அ.ம.மு.க. என்ற புதிய கட்சி இருவரையும் மிரள வைத்திருக்கிறது.

-தாமோதரன் பிரகாஷ்

Admk meet
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe