Advertisment

டீலிங் டாக்குமெண்ட்! கார்த்தியை துருவிய சி.பி.ஐ.! - பதறும் ப.சி.!

karthickchidambaram

ந்திய அறிவுஜீவிகளின் ஒட்டுமொத்த மூளையையும் தாங்கியிருப்பவராகச் சொல்லப்படும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது அவரது மகன் கார்த்தியின் கைது. ஐ.என்.எக்ஸ். ஊடகத்தின் சட்டவிரோத பண பரிவர்த்தனை விவகாரத்தில் கார்த்தியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்ததையறிந்து தனது வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ரத்துசெய்தார் ப.சிதம்பரம்.

Advertisment

karthikchidambaramமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் சிதம்பரமும் நண்பர்கள். கைது குறித்து ஜெட்லியிடம் ஆதங்கத்துடன் சிதம்பரம் பேச, "சி.பி.ஐ.யின் ஆபரேஷன்கள் எதுவுமே எனக்குத் தெரிவதில்லை; தெரியப்படுத்த வேண்டாம்ங்கிறது பிரதமரின் உத்தரவு. என்னோடு விவாதித்து எடுக்கப்பட்டு வந்த அமலாக்கத்துறையின் ஆபரேஷன்கள்கூட அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுவிட்டன. உங்கள் விஷயத்தில் எல்லாமே ரகசியமாகவே நடக்கின்றன'‘என சொல்லியிருக்கிறார் ஜெட்லி என்கின்றன டெல்லி தகவல்கள்.

"கார்த்தியின் கைது சிதம்பரத்தை மட்டுமல்ல ராகுல்காந்தியையும் பதற்றமடைய வைத்துள்ளது' என்கின்ற காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள், ‘’நாடாளுமன்றத்திலும் பொது மேடைக

ந்திய அறிவுஜீவிகளின் ஒட்டுமொத்த மூளையையும் தாங்கியிருப்பவராகச் சொல்லப்படும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது அவரது மகன் கார்த்தியின் கைது. ஐ.என்.எக்ஸ். ஊடகத்தின் சட்டவிரோத பண பரிவர்த்தனை விவகாரத்தில் கார்த்தியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்ததையறிந்து தனது வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ரத்துசெய்தார் ப.சிதம்பரம்.

Advertisment

karthikchidambaramமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் சிதம்பரமும் நண்பர்கள். கைது குறித்து ஜெட்லியிடம் ஆதங்கத்துடன் சிதம்பரம் பேச, "சி.பி.ஐ.யின் ஆபரேஷன்கள் எதுவுமே எனக்குத் தெரிவதில்லை; தெரியப்படுத்த வேண்டாம்ங்கிறது பிரதமரின் உத்தரவு. என்னோடு விவாதித்து எடுக்கப்பட்டு வந்த அமலாக்கத்துறையின் ஆபரேஷன்கள்கூட அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுவிட்டன. உங்கள் விஷயத்தில் எல்லாமே ரகசியமாகவே நடக்கின்றன'‘என சொல்லியிருக்கிறார் ஜெட்லி என்கின்றன டெல்லி தகவல்கள்.

"கார்த்தியின் கைது சிதம்பரத்தை மட்டுமல்ல ராகுல்காந்தியையும் பதற்றமடைய வைத்துள்ளது' என்கின்ற காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள், ‘’நாடாளுமன்றத்திலும் பொது மேடைகளிலும் காங்கிரஸின் முந்தைய ஆட்சியை தாக்கும் மோடிக்கு பதிலடி தருவதற்காக சிதம்பரத்தைத்தான் சோனியாவும் ராகுலும் பயன்படுத்தி வந்தனர். தற்போது, கார்த்தியைத் தொடர்ந்து சிதம்பரத்தை கைது செய்யவும் முகாந்திரம் இருக்கிறது என ராகுலுக்கு சொல்லப்பட்ட தகவல்கள் அவரை பதற்றமடைய வைத்துள்ளது'’என்கின்றனர்.

தங்களது கஸ்டடியில் சிக்கியிருக்கும் கார்த்தியிடம் பல்வேறு ஆவணங்களைக் காட்டி விளக்கம் கேட்டிருக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். இந்த விவகாரத்தை மத்திய உளவுத்துறையும் உற்றுக் கவனித்து வருவதால், அவர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது... "இதற்கு முன்பு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானபோது எந்தளவுக்கு அழுத்தமாக கார்த்தி இருந்தாரோ, அதைப்போலவே கஸ்டடியில் இருக்கவும் முயற்சித்தார். குறிப்பாக, எந்தக் கேள்வி கேட்டாலும் இதைத்தான் ஏற்கனவே சொல்லியிருக்கேனே, அதையே ஏன் மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள்? செலக்டிவ் அம்னீசியாவா உங்களுக்கு?' என நையாண்டி பண்ணியிருக்கிறார்.

Advertisment

indiramukherji

அவரது பதில் அதிகாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்த, "எங்களுடைய விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பது உங்களுக்குத்தான் சிக்கல். ஒத்துழைக்கிற வரைக்கும் கஸ்டடி கேட்டுக்கொண்டுதானிருப்போம்' என சி.பி.ஐ. எச்சரிக்க செய்ய... ஒருகட்டத்தில் வழிக்கு வந்திருக்கிறார் கார்த்தி. இதனையடுத்து, இந்திராணி முகர்ஜி கொடுத்த காசோலை விபரங்கள், அவைகள் தொடர்புடைய நிறுவனங்களின் பண பரிவர்த்தனை ஆவணங்கள் என பல்வேறு டாகுமெண்டுகளை அவரிடம் காட்டினார்கள்.

குறிப்பாக, சிறையிலுள்ள இந்திராணி முகர்ஜியிடம் ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை நடத்தியபோது, ""சட்டவிரோத பணபரிவர்த்தனை விவகாரத்திலிருந்து தப்பிக்க சிதம்பரத்தை சந்தித்தோம். உதவுவதாக சொன்ன அவர், தனது மகன் கார்த்தியை சந்திக்குமாறு தெரிவித்தார். அதன்படி கார்த்தியை சந்தித்துப் பேசினோம். நிதி அமைச்சக சட்ட சிக்கல்களிலிருந்து தப்பிக்க வைப்பதற்காக மட்டும் 10 லட்சம் மதிப்பிலான யு.எஸ். டாலர்களும், பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதற்காக கார்த்திக்கு மட்டும் 10 லட்சம் ரூபாய் கட்டணமாகவும் தர பேரம் பேசினர். அதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். அதன்படி உதவினர். பேர தொகைகளை வெவ்வேறு வங்கி கணக்குகளில் செலுத்தியிருக்கிறோம். பேரத்தில் முடிவான தொகையில் 70 சதவீதத்தை சிங்கப்பூரிலுள்ள ஏஸ்சிபிஎல், யூபிஏஸ், எஸ்.ஏ. நிதிநிறுவன கணக்குகளிலும், கிரீஸ் நாட்டிலுள்ள நார்த் ஸ்டார் சாஃப்ட்வேர் சொல்யூஷன் மற்றும் கெபென் ட்ரேடிங் லிமிடெட் நிறுவன கணக்குகளிலும் டெபாசிட் செய்திருக்கிறோம். 30 சதவீத தொகை ஹாட் கேஷாக கொடுக்கப்பட்டிருக்கிறது என வாக்குமூலம் தந்திருந்தார் இந்திராணி. அதற்கான செக் இன்வாய்ஸ்களையும் இந்திராணியின் பெர்சனல் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சி.பி.ஐ. கைப்பற்றியிருக்கிறது. இந்த ஆதாரங்களைத்தான் கார்த்தியின் முன்னால் தூக்கிப் போட்டுள்ளது சி.பி.ஐ.

chidambaramதவிர, கார்த்தியின் ஆடிட்டர் பாஸ்கர்ராமனின் வாக்குமூல வீடியோவும் போட்டுக் காட்டப்பட்டது. அதன்பிறகே கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார் கார்த்தி. இருப்பினும் சிதம்பரத்தை மையப்படுத்தி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு "தெரியாது' என அடம் பிடித்துள்ளார் என்கிறது உளவுத்துறை.

மேலும், அவரிடம் விசாரணை நடத்திய 6 அதிகாரிகளில் 4 பேர் ஹிந்தியிலேயே கேள்வி கேட்க, "ஹிந்தி தேசிய மொழியா? எதற்கு ஹிந்தியில் கேட்கிறீர்கள்? எனக்கு ஹிந்தி தெரியாது. ஆங்கிலத்தில் கேள்வி கேளுங்கள்' என ஹிந்திக்கு எதிராக அதிகாரிகளிடம் மல்லுக்கட்டியிருக்கிறார் கார்த்தி. சி.பி.ஐ.யின் கஸ்டடியைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் கஸ்டடி எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தச் சூழலில், கார்த்தியின் கைதும் சிதம்பரமும் சிக்குவார்ங்கிற தகவலும் தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் சிலரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. ஸ்வீட் கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள். அவர்களிடம் நாம் பேசியபோது, ""மோடி-அமித்ஷா இருவரின் நேரடி ஆக்ஷனில்தான் எல்லாம் ரகசியமாகவே நடக்கிறது. சொராபுதின் என்கவுன்ட்டரில் அமித்ஷாவுக்கு தொடர்பில்லை என காங்கிரஸ் ஆட்சியில் சி.பி.ஐ.யே ரிப்போர்ட் கொடுத்த பிறகும் அவரை 2 வருடம் குஜராத்துக்குள்ளே நுழைய முடியாதபடிக்கு ஆக்ஷன் எடுத்தது சிதம்பரமும் அகமது படேலும்தான். அந்த 2 வருஷமும் டெல்லியிலேயே தங்கியிருக்க வேண்டிய கட்டாயம். தனது குடும்பத்தினரை பார்க்கக்கூட அமித்ஷாவால் குஜராத்துக்கு செல்ல முடியவில்லை. இதெல்லாம்தான் இன்றைக்கு சிதம்பரத்துக்கு எதிராக இருக்கிறது''‘என்கின்றனர்.

சிவகங்கை சீமான்கள் பெரும் சட்ட நெருக்கடியில் உள்ளனர்.

-இளையர்

indira mukherji karthik chidambaram P chidambaram
இதையும் படியுங்கள்
Subscribe