சசிகலா அடைபட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்னொரு குண்டுவெடிக்க உள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறைக்குப் பக்கத்தில் இருக்கும் விளைநிலங்களில் சசிகலாவும் இளவரசியும் இணைந்து விவசாயம் பார்க்கிறார்கள். காளான், பூசணி போன்ற செடி கொடி வகைகளை வளர்க்கிறார்கள்.
மற்ற நேரங்களில் வளையல் செய்கிறார்கள். வளையலுக்காக வாரம் முப்பது ரூபாய் கூலி தரப்படுகிறது. கடந்த வாரம் தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா பரப்பன அக்ரஹாரா சிறையை பார்வையிடும்போது சசிகலா இருக்கும் அறைக்கும் வந்தார். அவருக்கு சசிகலா தான் சிறையில் செய்த வளையல்களை பரிசாக அளித்தார். அதற்கு ரேகா சர்மா காசு கொடுக்க முன்வந்தார். "காசு வேண்டாம்' என சசிகலா மறுத்தார் என தகவல்கள் வெளியாயின. இதில் சசிகலாவின் சிறை அறைக்கு ரேகா சர்மா வந்தார் என்பதைத் தவிர மற்ற அனைத்தும் கப்சா.
சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை. அறையில் படுத்திருக்கும் சசிகலாவுக்கு சிறை மருத்துவமனையில் இருந்து பெயரளவிற்கும், வெளியில் இருந்து பெரிய அளவிற்கும் மருந்து, மாத்திரைகள் சிறைவிதிகளை மீறி வந்து சேர்க
சசிகலா அடைபட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்னொரு குண்டுவெடிக்க உள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறைக்குப் பக்கத்தில் இருக்கும் விளைநிலங்களில் சசிகலாவும் இளவரசியும் இணைந்து விவசாயம் பார்க்கிறார்கள். காளான், பூசணி போன்ற செடி கொடி வகைகளை வளர்க்கிறார்கள்.
மற்ற நேரங்களில் வளையல் செய்கிறார்கள். வளையலுக்காக வாரம் முப்பது ரூபாய் கூலி தரப்படுகிறது. கடந்த வாரம் தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா பரப்பன அக்ரஹாரா சிறையை பார்வையிடும்போது சசிகலா இருக்கும் அறைக்கும் வந்தார். அவருக்கு சசிகலா தான் சிறையில் செய்த வளையல்களை பரிசாக அளித்தார். அதற்கு ரேகா சர்மா காசு கொடுக்க முன்வந்தார். "காசு வேண்டாம்' என சசிகலா மறுத்தார் என தகவல்கள் வெளியாயின. இதில் சசிகலாவின் சிறை அறைக்கு ரேகா சர்மா வந்தார் என்பதைத் தவிர மற்ற அனைத்தும் கப்சா.
சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை. அறையில் படுத்திருக்கும் சசிகலாவுக்கு சிறை மருத்துவமனையில் இருந்து பெயரளவிற்கும், வெளியில் இருந்து பெரிய அளவிற்கும் மருந்து, மாத்திரைகள் சிறைவிதிகளை மீறி வந்து சேர்கின்றன. அதை இளவரசி கொடுக்க, சசிகலா சாப்பிட்டு வருகிறார்.
சசிகலாவின் சிறை நடத்தை பற்றி ஐ.பி.எஸ். அதிகாரி தெரிவித்த புகார் ரிப்போர்ட் உண்மை என ரூபாவின் குற்றச்சாட்டுகளை ஆராய அமைக்கப்பட்ட வினய்குமாரின் அறிக்கை வெளிப்படுத்தியது. "நான் ஒன்றும் கொலைக் குற்றவாளி இல்லை' என சிறை அதிகாரிகளை முதல்வர் சித்தராமையா மூலம் மிரட்டி, சுடிதார் அணிந்து சிறைக்குள் சுற்றி வரும் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் மீது அவர்கள் நடத்தை பற்றிய வீடியோ பதிவுடன் கூடிய குற்றச்சாட்டுகளை ரூபாவுக்கு ஆதரவான சிறைக் கைதிகளும் சமூக ஆர்வலர்களும் தயாரித்துள்ளார்கள்'' என்கிறது பெங்களூரு வட்டாரங்கள்.
""சசிகலா சிறையில் விதிமுறைகளை மீறி ஏகப்பட்ட பார்வையாளர்களை சந்திக்கிறார் என்பதுதான் முதல் குற்றச்சாட்டு. இதற்கான புதிய ஆதாரங்களை நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டப்படி கொண்டு வந்துள்ளோம். அத்துடன் வீடியோ ஆதாரங்கள் மூலம் சிறையில் இருந்து சசிகலா வெளியே செல்வதையும் நிரூபிக்க உள்ளோம். ஏற்கனவே ரூபா மற்றும் வினய்குமார் கொடுத்த அறிக்கைகள் தொடர்பாக சசிகலா மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. "முதல்வர் சித்தராமையா சொல்லிதான் சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் அளித்தேன்' என முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி.யான சத்தியநாராயணா சாட்சியம் அளித்திருக்கிறார். இப்பொழுது வெளியாகப் போகும் புதிய ஆதாரங்களால் சசிகலா மீதான குற்றச்சாட்டுகளின் பிடி இறுகும். இந்த குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியாது'' என பயங்கரமாக பீடிகை போட்டு பேசுகிறார்கள் சிறைத்துறையை சேர்ந்தவர்கள். அதே நேரத்தில் சசிகலாவுக்கு தலைக்கு மேலே குடும்பப் பிரச்சினைகள் இருக்கின்றன. இளவரசியின் மகன் விவேக்கிற்கும் மகள் கிருஷ்ணப்ரியாவுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே மோதல் கொடிகட்டி பறக்கிறது. ""டி.டி.வி.தினகரனுக்கு தெரிந்ததை விட ஜெ.வை எங்களுக்கு நன்றாகத் தெரியும்'' என ஜெ.வுடன் எடுத்த புகைப்படங்களை கிருஷ்ணப்ரியாவும் விவேக்கும் வெளியிட்டு வருகிறார்கள்.
இதை சசிகலாவின் கவனத்திற்கு கொண்டு சென்றார் தினகரன். ""நாங்கள் ஏன் ஜெ.வுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடக் கூடாது?'' என இளவரசி மூலமாக சசிகலாவை கேட்டுள்ளார் விவேக். அவர் ""சி.இ.ஓ.வாக இருக்கும் ஜெயா டி.வி.யின் நிர்வாக பொறுப்பு அனைத்தும் தினகரன் மனைவி அனுராதா பெயருக்கு போய்விட்டது. இதற்குமேல் நான் என்ன தியாகம் செய்ய வேண்டும்? எனது வீட்டை சோதனை செய்த வருமானவரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட புகைப்படங்களைத்தான் மீடியாக்கள் வெளியிடுகின்றன. எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை'' என்பது விவேக்கின் விளக்கம். ""உன் விளக்கத்தை தினகரன் முன்னிலையில் என்னிடம் சொல்'' என சசி கட்டளையிட, டி.டி.வி.தினகரன், விவேக், அவரது மனைவி, அவரது தங்கை உட்பட புடைசூழ சசிகலாவை சந்தித்தனர். ஜெயா டி.வி. குறித்த பஞ்சாயத்தும் விவேக்கின் செயல்பாடுகள் குறித்த விமர்சனமும் பரப்பன அக்ரஹாரா சிறைகளின் சுவர்களில் எதிரொலித்தது'' என்கிறார்கள் சிறைத்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
அத்துடன் "புதிய கட்சி தொடர்பான விவகாரங்களும் விவாதிக்கப்பட்டன' என்கிறார் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல். எடப்பாடி பழனிச்சாமி மீது 4,000 கோடி ரூபாய்க்கான ஊழலை ஆதாரத்துடன் சமர்ப்பித்ததனால் தலைமைச் செயலக வளாகத்திலிருந்து போலீசாரால் துரத்தப்பட்டவர் வெற்றிவேல். 14 நாட்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு வந்த வெற்றிவேலிடம், ""அ.தி.மு.க.தான் எங்கள் கட்சி அதை கைப்பற்றுவதுதான் எங்கள் லட்சியம்'' என சூளுரைத்தவரிடம், ""தனிக்கட்சி தொடங்குவதற்கு சசிகலா சம்மதித்தாரா?'' என கேட்டோம். ""புதிய கட்சி தொடர்பாக பலமுறை சசிகலாவோடு விவாதித்தோம். அவருடைய ஒத்துழைப்பு, சம்மதத்துடன்தான் தினகரன் கட்சியை ஆரம்பிக்கிறார்.
அ.தி.மு.க.விலிருந்து சசிகலாவையும் தினகரனையும் நீக்கிவிட்டார்கள். எங்களுக்கு ஒரு மேடை வேண்டாமா? அதனால்தான் தினகரன் தனிக்கட்சி ஆரம்பிக்கிறார். தனிச் சின்னமாக குக்கரை பெறுகிறார். இந்தக் கட்சியை வைத்துக்கொண்டு தினகரன் சசிகலாவை மீறி எதுவும் தனி ஆவர்த்தனமாக செய்ய மாட்டார்'' என்றார்.
மன்னார்குடி வகையறாக்களில் தினகரன் செயல்பாடுகள் தொடர்பாக இருந்த விரிசல்களை சசிகலா அடைத்துவிட்டார். அதே நேரத்தில் எடப்பாடியிடமும் சசிகலா தொடர்பில் இருக்கிறார். அ.தி.மு.க.வுக்குப் பதில் தனிக்கட்சி என்பதால் அதிருப்தியடையும் ஆதரவாளர்களை சமாளிக்க அ.தி.மு.க. என்ற பெயரும் கருப்பு-வெள்ளை-சிவப்பு கொடியும் இருப்பது போல கட்சியை பதிவு செய்ய வேண்டும் என்பதே சசிகலா-தினகரன் திட்டம்.
கோர்ட் தீர்ப்புகள் தங்களுக்கு சாதகமாக வரும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள அனைத்து சிறகுகளையும் விரிக்க சசிகலா தயாராகி வருகிறார் என்கிறது மன்னார்குடி வட்டாரம்.
-தாமோதரன் பிரகாஷ்