Skip to main content

சசி கையில் ஆவணம்! மண்ணோடு புதையும் ஜெ. மரண மர்மம்!

Published on 12/02/2018 | Edited on 12/02/2018
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள் சாட்சியமளித்தவர்கள். மீண்டும் சாட்சியமளிப்பதில் எங்களுக்குத் தயக்கமாக இருக்கிறது என்கிற ஆதங்கக் குரலும் சாட்சிகளிடம் எதிரொலிக்கின்றன.  ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களில் தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது - நீதிமன்றம் கேள்வி!

Published on 02/07/2021 | Edited on 02/07/2021

 

Why shouldn't the inquiry report on Jayalalithaa's death be ordered to be filed within 3 months-Court question!

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களில் தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதிய அப்போதைய தமிழ்நாடு அரசு, அது தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை நியமித்தது. ஆனால், விசாரணை இன்னும் முடிவடையாததாலும், ஆஜராக வேண்டிய பலர் ஆஜராகாததால் ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுக்கொண்டேவருகிறது. இந்நிலையில், சுப்பிரமணி என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். விசாரணை ஆணையம் 2017ஆம் ஆண்டே அமைக்கப்பட்டாலும் இதுவரை அந்த ஆணையம் ஒரு இடைக்கால அறிக்கை கூட தாக்கல் செய்யவில்லை. எனவே விசாரணையை முடித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

 

அந்த வழக்கு இன்று (02.07.2021) தலைமை நீதிபதி அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களில் தாக்கல் செய்ய ஏன் ஆணையத்திற்கு உத்தரவிடக் கூடாது என தமிழ்நாடு அரசு பதில் அளிப்பதற்கு ஆறு வாரங்கள் கால அவகாசம் கொடுத்து வழக்கை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

 

 

Next Story

ஓபிஎஸ் ஆஜரானால் மர்ம முடிச்சுகள் அவிழும்-வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன் பேட்டி!!

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

lawyer Raja Senthurapandian interview!!

 

விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் விளக்கம் அளித்தால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூரண்டியன் கூறியுள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

 

அப்போலோ நீதிமன்றத்தை நாட உள்ளதால் ஆறுமுகசாமி ஆணையம் 11 ஆம் தேதி விசாரணையை தொடங்க உள்ளது. சிறப்பு மருத்துவர்கள் குழு அமைத்து விசாரணை நடத்தக்கோரி உயர்நீதிமன்றம் செல்ல உள்ளது அப்போலோ. அப்படி இருக்க 11-ஆம் தேதி விசாரணை தொடங்கினால் 12 ஆம் தேதி ஓபிஎஸ் ஆஜராவர் என நம்புகிறேன்.அப்படி ஓபிஎஸ் ஆஜரானால் ஜெயலலிதா மரணம் குறித்து மர்ம முடிச்சுகள் அவிழும் எனக்கூறினார்.