Advertisment

அ.தி.மு.க-தி.மு.க.வில் ரஜினியின் ஸ்லீப்பர் செல்!

rajini

ரசியல் கட்சி துவக்கி பரபரப்பாக கமல் களமிறங்கிய சூழலில் ரஜினியும் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் நேரில் சந்தித்து, "நமது கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்' என்றார். இதனைத்தொடர்ந்து, தனது நண்பர்களாக இருக்கும் அரசியல் பிரபலங்களை சந்தித்து அரசியல் கட்டமைப்பின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீவிரமாக ஆலோசித்துவருகிறார் ரஜினி.

Advertisment

rajiniநீண்டகால நண்பரான தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜனை கடந்த வாரத்தில் இருமுறை அழைத்து விவாதித்துள்ளார் ரஜினிகாந்த். அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் உள்கட்டமைப்பு எப்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது? குறிப்பாக, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்துக்கும் கீழ் கட்சிகளின் கட்டமைப்பு எப்படி பிரிக்கப்பட்டிருக்கிறது? எத்தனை உறுப்பினர்களுக்கு ஒரு கிளைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது? திராவிட கட்சிகளின் கட்டமைப்பிலிருந்து தேசிய கட்சிகளின் கட்டமைப்பு எ

ரசியல் கட்சி துவக்கி பரபரப்பாக கமல் களமிறங்கிய சூழலில் ரஜினியும் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் நேரில் சந்தித்து, "நமது கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்' என்றார். இதனைத்தொடர்ந்து, தனது நண்பர்களாக இருக்கும் அரசியல் பிரபலங்களை சந்தித்து அரசியல் கட்டமைப்பின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீவிரமாக ஆலோசித்துவருகிறார் ரஜினி.

Advertisment

rajiniநீண்டகால நண்பரான தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜனை கடந்த வாரத்தில் இருமுறை அழைத்து விவாதித்துள்ளார் ரஜினிகாந்த். அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் உள்கட்டமைப்பு எப்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது? குறிப்பாக, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்துக்கும் கீழ் கட்சிகளின் கட்டமைப்பு எப்படி பிரிக்கப்பட்டிருக்கிறது? எத்தனை உறுப்பினர்களுக்கு ஒரு கிளைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது? திராவிட கட்சிகளின் கட்டமைப்பிலிருந்து தேசிய கட்சிகளின் கட்டமைப்பு எந்தவகையில் மாறுபட்டிருக்கிறது என்பதையெல்லாம் தியாகராஜனிடம் ஆலோசித்துள்ளார் ரஜினி. மேலும், பூத் கமிட்டி அமைப்பதன் நோக்கமும், அதன் செயல்பாடுகள் தேர்தல் காலங்களில் எப்படி இருக்கவேண்டும் என்பதும் சந்திப்பில் முக்கியமானதாக இருந்துள்ளது.

அப்போது, ""தமிழகத்தில் 32 வருவாய் மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த மாவட்டங்களை இரண்டாக உடைத்து மா.செ.க்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி வைத்திருக்கின்றன தமிழக அரசியல்கட்சிகள். அந்த வகையில் ஒவ்வொரு கட்சியிலும் 65-க்கும் குறையாத மா.செ.க்கள் இருக்கிறார்கள். இதிலிருந்து மாறுபட்டு சில விசயங்களை நடைமுறைப்படுத்தலாம். அதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மா.செ.வை நியமிக்கலாம். அந்த வகையில் 100-க்கும் மேற்பட்ட மா.செ.க்கள் இருப்பார்கள். தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளை சிரமமின்றி கவனிக்க அவர்களால் முடியும். மாவட்ட எல்லைகள் சிறிதாக இருந்தால் கட்சி பணிகளையும் எளிதாக நிர்வகிக்க அவர்களால் முடியும். பதவிகளில் நிறைய பேரை அமர்த்துவதன் மூலம் அவரைச் சார்ந்து பலர் கட்சிக்கு வருவார்கள். மன்றத்து உறுப்பினர்கள் தவிர்த்து புதிய முகங்களின் வருகையும் கட்சியில் அதிகரிக்கும்.

அதேசமயம், தமிழகத்தை 10 மண்டலங்களாகப் பிரித்து 10 பொறுப்பாளர்களை நியமியுங்கள். இந்த 10 பேரும் உங்கள் மன்றத்து நபர்களாக இருக்கக்கூடாது. பிரதான கட்சிகளின் அரசியல் ஜாம்பவான்களை எதிர்கொள்கிற சக்தியும், அரசியல் வியூகங்களை வகுக்கத் தெரிந்தவர்களாகவும் இருப்பது அவசியம். இந்த பொறுப்பாளர்களின் கட்டுப்பாட்டில் மா.செ.க்கள் இருப்பதுபோல கட்டமைப்பை உருவாக்கினாலும், தினசரி கட்சி நடவடிக்கைகளில் அவர்கள் கவனம் செலுத்தக்கூடாது. மண்டல பொறுப்பாளர்களின் நோக்கங்கிறது தேர்தல் வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டிருக்க வேண்டும். அவர்களை அதில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும்'' என சொல்லியிருக்கிறார் கராத்தே தியாகராஜன்.

Advertisment

இதனையடுத்து நடப்பு அரசியல் குறித்து விவாதித்த ரஜினி, பா.ம.க.வுக்கு எதிராக 2004-ல் அவர் கொடுத்த வாய்ஸ் தோல்வியடைந்தது பற்றி சில சந்தேகங்களை கேட்டபோது, ""2004 எம்.பி. தேர்தலிலும், 2014 எம்.பி. தேர்தலிலும் பா.ம.க. இடம்பெற்றிருந்த கூட்டணிதான் முதல்முறை முழு வெற்றியையும், அடுத்தமுறை அன்புமணிக்கான வெற்றியையும் தந்தது என்ற அரசியல் கணக்குகளைக் குறிப்பிட்டு, சூழல்களை விளக்கியுள்ளார்.

ddஇந்தநிலையில், ரஜினியை முன்னிறுத்தி மீண்டும் ஒரு அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். இந்த மாநாடு மே 20-ந் தேதி கோவையில் நடக்கவிருக்கிறது. இதற்கான தீர்மானத்தை இயக்கத்தின் செயற்குழுவில் நிறைவேற்றிய கையோடு ரஜினியை சந்தித்துள்ளார் தமிழருவிமணியன். அந்த சந்திப்பில், கோவையில் மாநாடு நடத்துவதையும் அதில் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக ரஜினியை பிரகடனப்படுத்தும் திட்டத்தையும் விவரித்துள்ளார் மணியன். இதனையடுத்து அவரிடமும் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் யோசனைகளை கேட்டறிந்துள்ளார் ரஜினி.

தலித் சமூகம் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் முக்கியத் தலைவர்கள் சிலரை சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார் ரஜினி. இந்த சந்திப்பு விரைவில் நடக்கவிருக்கிறது. "பா.ஜ.க.வுடன் அரசியல் தொடர்பு இருக்காது என உறுதிப்படுத்தினால் உங்களை முதல்வராக்குவதற்கு உறுதுணையாக இருப்போம்' என சந்திப்பின்போது ரஜினியிடம் வலியுறுத்த சமூகத் தலைவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்கிடையே அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் என மாற்றுக் கட்சிகளில் தேர்தல் களத்தில் வலிமையாக வலம்வருபவர்களும், ஃபீல்ட்வொர்க்கில் கில்லாடிகள் என பெயரெடுத்தவர்களுமான இரண்டாம் நிலை ஜாம்பவான்கள் பலருக்கும் குறி வைத்துள்ளது ரஜினி தரப்பு. அவர்களும் ரஜினியின் நெருக்கத்தை விரும்புகின்றனர். தேர்தல் வரும்போது இந்த ஸ்லீப்பர்செல்களை பொறுப்பில் நியமித்து வெளிச்சப்படுத்துவார் ரஜினிகாந்த் என்கின்றனர் நம்பிக்கையாக.

admk rajini
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe