Advertisment

அழகைக் காப்பாற்றிய ஸ்ரீதேவி! உயிரைப் பறித்த மருந்து!

sridevi

ந்திய இதயங்கள் நொறுங்கித்தான் போய்விட்டன... "மயிலு ஸ்ரீதேவி மறைந்து விட்டார்' என்கிற அந்த செய்தியைக் கேட்டு. அதைவிட அதிகமாக நொறுங்கியது, அவரது போஸ்ட் மார்ட்ட ரிப்போர்ட் விவரங்களை அறிந்தபோது. ஜீரணிக்க சிரமம் என்றாலும் நிஜம் அதுதானே.

Advertisment

ஏற்றுக் கொண்ட பாத்திரமாகவே மாறிவிடும் அழகு மயில் ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என... இந்தியச் சினிமாவின் எல்லா மொழிகளிலும் நடிப்பாட்சி நடத்தி வந்த ராணியேதான்.

Advertisment

sridevi

துபாயில் நடந்த தனது கணவரின் உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி கடந்த 24.02.2018 அன்று தனது 54 வயதில் மரணமடைந்துவிட்டார்.

தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியலறைத் தொட்டியில் மூழ்கி இறந்திருக்கிறார்.

ந்தித் திரையுலகில்... ஸ்ரீதேவிக்கும், ஜெயப்பிரதாவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவி வந்தது. அப்போது, "இருவருக்கும் சண்டை' என தொடர்ந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்ட நிலையில்... ஜெயப்பிரதாவுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்ட ஸ்ரீதேவி ""இனிமே எங்க சண்டையில நீங்க (பத்திரிகையாளர்கள்) குளிர்காய முடியாது'' என சொல்லி... பிரச்சினையை சாதுர்யமாகக் கையாண்டார்.

நடிப்பில் மட்டுமல்லாமல்... அதற்கு வெளியேயும் பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக கையாண்ட அந்த அறிவுப் பெண் இறந்துவிட்டார்.

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு "ஹார்ட் அட்டாக்' காரணமில்லை. "கார்டியாக் அரெஸ்ட்' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஹார்ட் அட்டாக் ஏற்படும். அது மிகுந்த வலியைக் கொடுக்கும். அதனால் கூச்சலிட்டு... பிறரின் உதவியை நாடி... மருத்துவ சிகிச்சை பெற்று பிழைக்க வாய்ப்புள்ளது. "கார்டியாக் அரெஸ்ட்' என்பது... கரண்ட் ஷாக் போல் இதயத்

ந்திய இதயங்கள் நொறுங்கித்தான் போய்விட்டன... "மயிலு ஸ்ரீதேவி மறைந்து விட்டார்' என்கிற அந்த செய்தியைக் கேட்டு. அதைவிட அதிகமாக நொறுங்கியது, அவரது போஸ்ட் மார்ட்ட ரிப்போர்ட் விவரங்களை அறிந்தபோது. ஜீரணிக்க சிரமம் என்றாலும் நிஜம் அதுதானே.

Advertisment

ஏற்றுக் கொண்ட பாத்திரமாகவே மாறிவிடும் அழகு மயில் ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என... இந்தியச் சினிமாவின் எல்லா மொழிகளிலும் நடிப்பாட்சி நடத்தி வந்த ராணியேதான்.

Advertisment

sridevi

துபாயில் நடந்த தனது கணவரின் உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி கடந்த 24.02.2018 அன்று தனது 54 வயதில் மரணமடைந்துவிட்டார்.

தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியலறைத் தொட்டியில் மூழ்கி இறந்திருக்கிறார்.

ந்தித் திரையுலகில்... ஸ்ரீதேவிக்கும், ஜெயப்பிரதாவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவி வந்தது. அப்போது, "இருவருக்கும் சண்டை' என தொடர்ந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்ட நிலையில்... ஜெயப்பிரதாவுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்ட ஸ்ரீதேவி ""இனிமே எங்க சண்டையில நீங்க (பத்திரிகையாளர்கள்) குளிர்காய முடியாது'' என சொல்லி... பிரச்சினையை சாதுர்யமாகக் கையாண்டார்.

நடிப்பில் மட்டுமல்லாமல்... அதற்கு வெளியேயும் பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக கையாண்ட அந்த அறிவுப் பெண் இறந்துவிட்டார்.

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு "ஹார்ட் அட்டாக்' காரணமில்லை. "கார்டியாக் அரெஸ்ட்' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஹார்ட் அட்டாக் ஏற்படும். அது மிகுந்த வலியைக் கொடுக்கும். அதனால் கூச்சலிட்டு... பிறரின் உதவியை நாடி... மருத்துவ சிகிச்சை பெற்று பிழைக்க வாய்ப்புள்ளது. "கார்டியாக் அரெஸ்ட்' என்பது... கரண்ட் ஷாக் போல் இதயத் துடிப்பை நிறுத்தி, நினைவிழக்கச் செய்து உயிரைப் பறிக்கும் வாய்ப்புள்ளது.

உடல்நலத்தில் அலட்சியம் காட்டுவது, நீரில் மூழ்கும் சமயம் மற்றும் "ஹெவிடோஸ்' மருந்து மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வது போன்ற காரணிகள் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுத்தக் கூடியவை.

உடல்நலத்தில் அக்கறை கொண்டவர்தான் ஸ்ரீதேவி என்றாலும்... மற்ற இரண்டு காரணங்களும் அவருக்கு பொருந்தியிருக்கிறது.

ஏற்கனவே தனது மூக்கை சர்ஜரி மூலம் திருத்திக் கொண்டிருந்தாலும் கூட... அதனால் அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால்... முகச்சுருக்கம் மற்றும் உடல்தோல் சுருக்கம் ஏற்படாதபடிக்கு... அதற்காக அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மேற்கொண்ட காஸ்மெடிக் சிகிச்சைக்காக தொடர்ந்து மருந்துகளை உட்கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. அதேபோல் இன்னும் சில சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்காக மருந்துகளை உட்கொண்டு வந்தார்.

உறவினர் திருமணம் முடிந்து உடனடியாக தான் மட்டும் துபாயிலிருந்து மும்பை திரும்பிய போனிகபூர்... ஒரு சர்ப்ரைஸுக்காக... கடந்த சனிக்கிழமை மீண்டும் துபாய் சென்று... ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார்.

மாலையில்... ஹோட்டலில் சாப்பிடுவதற்காக... ஸ்ரீதேவியை அழைக்க... குளித்துவிட்டு வருவதற்காக பாத்ரூம் சென்ற ஸ்ரீதேவி... நேரங்கடந்தும் வராததால் கதவைத் தட்டிப் பார்த்து, பிறகு கதவை உடைத்துப் பார்த்தபோது குளியல் தொட்டியில் அசைவற்றுக் கிடந்திருக்கிறார் ஸ்ரீதேவி.

sridevi

வீரியம் மிக்க மருந்துகள் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி... சுய நினைவையும் இழக்கச் செய்யும். அதிகப்படியாக எடுத்துக்கொண்ட மருந்துகளும், விருந்து நேர மயக்கமும், ஸ்ட்ரோக் கார்டியாக் அரெஸ்ட் என குளியலறை நீர்த்தொட்டியிலேயே மரணத்தை உண்டாக்கியிருக்கலாம் என்கிறார்கள் டாக்டர்கள். ஸ்ரீதேவியின் உடலில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் இருந்ததும் உடற்கூராய்வில் உறுதியாகியுள்ளது. மேலும் மிகச்சிறிய குளியல் தொட்டியில் விழுந்தால் மரணம் ஏற்படுமா என்ற சந்தேகமும் போனிகபூரின் "சர்ப்ரைஸ்' விசிட்டும் பல கேள்விகளை எழுப்பி உள்ளன.

பாக்யராஜ் ஒரு படத்திற்கு பூஜை போட்டதுமே... தயாரிப்பாளர் போனிகபூர் சென்னை வந்து... அந்தப் படத்தின் இந்தி ரீ-மேக் உரிமையை வாங்கிவிடுவார். அந்தக் கதைப் படங்களில் போனிகபூரின் தம்பியும் பிரபல ஹீரோவான அனில்கபூரும், ஸ்ரீதேவியும் நடிப்பது வழக்கம்.

ஸ்ரீதேவியை முதன்முதலாக தனது தயாரிப்பில் நடிக்கக் கேட்டுப் போன போனிகபூரிடம் பத்து லட்சம் சம்பளம் கேட்டார் ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரி. போனிகபூரோ... அதைவிட கூடுதலாக ஒரு தொகையைக் கொடுத்து ராஜேஸ்வரியின் நம்பிக்கைக்குரியவரானார்.

தன் தாய் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த ஸ்ரீதேவி தன் அம்மாவுக்கு அடிக்கடி வரும் தலைவலியால் கவலைப்பட்டபோது... அமெரிக்காவில் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தார் போனிகபூர்.

ஆபரேஷன் செய்ய வேண்டிய பகுதியை விட்டுவிட்டு... மாற்றி ஆபரேஷன் செய்யப்பட்டதால் கூடுதல் அவஸ்தைப்பட்டு... சில காலத்தில் மரணமடைந்தார் ஸ்ரீதேவியின் அம்மா. இதற்காக மருத்துவமனை நிர்வாகம் ஸ்ரீதேவிக்கு பெரும் நஷ்டஈடும் தந்தது. தனக்கு உதவிகரமாக இருந்த போனிகபூரையே திருமணம் செய்து கொண்டு ஜான்வி, குஷி என்கிற இரு குழந்தைகளுக்குத் தாயானார் ஸ்ரீதேவி.

மூத்த மகள் ஜான்வி இப்போது "தடக்' எனும் இந்திப் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ஜான்வி படப்பிடிப்பில் இருந்ததால் கணவர் மற்றும் இளையமகள் குஷியுடன் திருமண விழாவுக்கு துபாய் சென்றிருந்தார் ஸ்ரீதேவி.

மகிழ்ச்சி- விருந்து- என சந்தோஷ தருணங்களுக்குப் பிறகே... மயிலுக்கு மரணம் நேர்ந்திருக்கிறது.

ஸ்ரீதேவியின் சொந்த ஊர் சிவகாசியை அடுத்த மீனம்பட்டி. ஸ்ரீதேவியின் பெற்றோர் ஐயப்பனும், ராஜேஸ்வரியும் வெவ்வேறு இனம்-மொழியைச் சார்ந்தவர்கள்.

துணை நடிகையாக இருந்த ராஜேஸ்வரிக்காக... சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக இருந்த ஐயப்பன் ஒரு வழக்கில் வாதாடிக் கொடுத்ததாகவும்... இதனால் இருவரிடையே காதல் ஏற்பட்டு மணந்து கொண்டதாகவும் சினிமா சீனியர்கள் தெரிவிக்கிறார்கள்.

1963-ல் பிறந்த ஸ்ரீதேவியின் சொந்தப் பெயர் ஸ்ரீஅம்மாயங்கர் ஐயப்பன். 1969-ல் சாண்டோ சின்னப்பா தேவர் தயாரிப்பில் ஏ.வி.எம்.ராஜன்-சௌகார்ஜானகி நடித்த "துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி அறிமுகமானார். ஓரிரு காட்சிகளில் முருகனின் சாதாரண தோற்ற சிறுவனாக நடித்தார். 1976-ல் "மூன்று முடிச்சு'வில் கதாநாயகியாக்கினார் கே.பாலச்சந்தர். அடுத்த ஆண்டிலேயே "16 வயதினிலே' படம் மூலம் "மயிலு'வாக ஸ்ரீதேவியை மக்கள் மனங்களில் பதியச் செய்தார் பாரதிராஜா.

சினிமாவின் மூத்த கதாசிரியரும், தயாரிப்பாளருமான கலைஞானம் ஒரு சம்பவத்தை நம்மிடம் நினைவுகூர்ந்தார்.

""நானும் ஆரம்பத்தில் காங்கிரஸ் அனுதாபி என்ற வகையில் காங்கிரஸ்காரரான வக்கீல் ஐயப்பனுடன் எனக்கு நல்ல நட்பு. நான் தேவர் ஃபிலிம்ஸில் பணிபுரிந்து வந்தேன். தேவரைப் பார்க்க ஐயப்பன் அடிக்கடி வருவார். நான் "பைரவி' படத்தை தயாரிக்கவும் ரஜினியை ஹீரோவாக்கவும் முடிவு செய்தேன். இந்தக் கதை தங்கையைச் சுற்றி நிகழும் கதை என்பதால் மூக்கும் முழியுமாக இருந்த ஸ்ரீதேவியை நடிக்க வைக்க விரும்பினேன். ஸ்ரீதேவியின் அப்பா ஐயப்பனும், தேவரும் ரெகமண்ட் செய்ததால்... ஸ்ரீதேவியையும் அவரின் அம்மாவையும் சந்தித்து எளிதில் கதையைச் சொல்லி... சம்மதம் வாங்கினேன். அடுத்தவங்களுக்கு அட்வைஸ் சொல்ற புத்தி என் கூடப் பிறந்ததாச்சே... "எம்மா... இந்தப் பொண்ணு கிராமிய கேரக்டருக்கு ஏத்த முகமா இருக்கு. "16 வயதினிலே' படத்துல... பொண்ணு மூக்கு பெரிசா தெரியுது. ஆபரேஷன் மூலம் மூக்கை சரிபண்ணிக்கிட்டா... பெரிய அளவுல புகழ் பெறுவார்' எனச் சொன்னேன்.

"நீங்க புரொடியூஸரா? டாக்டரா... உங்க படத்துல நடிக்க விருப்பமில்ல' எனச் சொல்லிட்டு அந்தம்மா எழுந்து போய்... அறைக்கதவை டமால்னு சாத்திட்டு உள்ள போய்ட்டாங்க. ஸ்ரீதேவியும் எழுந்து போய் தன்னோட அறைக்கதவை பூட்டிக்கிச்சு.

ஹால்ல நான் மட்டும் சில நிமிஷம் உட்கார்ந்திருந்து விட்டு... எழுந்து வந்திட்டேன். "தேவையா இந்த அட்வைஸ்?'னு என்னய நானே திட்டிக்கிட்டேன். ஆறேழு வருஷங்களுக்குப் பின்னாடி... ஸ்ரீதேவி நடிச்ச இந்திப்படம் பார்த்தேன். மூக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டு... தேவதை மாதிரி ஜொலிச்சார். என்னோட கணிப்பு சரியா இருந்ததுக்காக நான் என்னய மெச்சிக்கிட்டேன்'' என்று சொன்ன கலைஞானம்... ""ஸ்ரீதேவியோட மரணத்த சட்டுனு ஏத்துக்க முடியல'' என்றார்.

ஸ்ரீதேவி மூக்கு ஆபரேஷனுக்கு முன்பு... கவர்ச்சியாக நடித்தபோதும்... அவர் முகத்தில் குழந்தைத்தன்மை தூக்கலாகவே இருந்தது. ஆபரேஷன் செய்தபிறகுதான்... அவரிடம் ஒரு மெச்சூரிட்டி தெரிந்தது.

தோற்றத்தில் மெச்சூரிடியை ஏற்படுத்திக் கொண்டாலும் அவரின் குழந்தையுள்ளம் மாறவே இல்லை... என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

இந்தியாவின் கனவுக்கன்னியாக உயர்ந்த போதும்... படப்பிடிப்புத் தளத்தில் ஒரு ஷாட்டில் நடித்து ஓ.கே.வானதும்... அடுத்த ஷாட்டுக்கு யூனிட் தயாராகும் அந்த கேப்பில்... தன் அம்மாவின் மடியில் போய் படுத்துக்கொண்டு குறும்பு செய்வார் ஸ்ரீதேவி.

வாஸ்தவம்தான்.

ஆபரேஷன் மூலம் உருவங்களை மாற்றலாம். உள்ளத்தை மாற்ற முடியாதே.

-இரா.த.சக்திவேல்

sridevi death sridevi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe