Advertisment

18 எம்.எல்.ஏ. தீர்ப்பு! மீண்டும் கூவத்தூர்!

koovathur camp

தாறுமாறாக சுருட்டுகிறார்கள் அமைச்சர் வகையறாக்கள். அதிலிருந்து பலன் பெறும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களோ எந்தப் பக்கம் தாவுவது என ஆலோசித்து வருகிறார்கள்.

Advertisment

ஜெ. இருந்த காலத்தில் கோட்டைக்கு திங்கள் முதல் வெள்ளி வரை அமைச்சர்கள் வருவார்கள். சனி, ஞாயிறுகளில் சொந்த மாவட்டத்திற்குச் செல்வார்கள். தற்பொழுது கோட்டைக்கு அமைச்சர்கள் வருவதே இல்லை. அமைச்சர்கள் சொல்வதை எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கேட்பதேயில்லை. "எனக்கு இந்த செயலாளர் சரியில்லை', "அவர் என்னை மதிப்பதேயில்லை' என எடப்பாடியிடம் தினம் ஒரு அமைச்சர் புலம்புகிறார். அவரும் "நான் சொன்னாலும் யாரும் கேட்பதில்லை' என புலம்புகிறார்.

Advertisment

18mlas

ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும், ""என்ன அண்ணே நடக்குது. கூவத்தூர்ல தங்க வச்சாங்க. நாங்க கொஞ்சம் காசு பார்த்தோம். அதுலயும் நிறைய பாக்கி இருக்கு. மறுபடியும் சசிகலா பவருக்கு வருவாங்க. மறுபடியும் கூவத்தூர் வரும் என எதிர்பார்த்தோம். ஒட்டுமொத்தமாக பிழைப்புக்கு பாதகம் வரும் போலிருக்குதே'' என புலம்புவதை கேட்க

தாறுமாறாக சுருட்டுகிறார்கள் அமைச்சர் வகையறாக்கள். அதிலிருந்து பலன் பெறும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களோ எந்தப் பக்கம் தாவுவது என ஆலோசித்து வருகிறார்கள்.

Advertisment

ஜெ. இருந்த காலத்தில் கோட்டைக்கு திங்கள் முதல் வெள்ளி வரை அமைச்சர்கள் வருவார்கள். சனி, ஞாயிறுகளில் சொந்த மாவட்டத்திற்குச் செல்வார்கள். தற்பொழுது கோட்டைக்கு அமைச்சர்கள் வருவதே இல்லை. அமைச்சர்கள் சொல்வதை எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கேட்பதேயில்லை. "எனக்கு இந்த செயலாளர் சரியில்லை', "அவர் என்னை மதிப்பதேயில்லை' என எடப்பாடியிடம் தினம் ஒரு அமைச்சர் புலம்புகிறார். அவரும் "நான் சொன்னாலும் யாரும் கேட்பதில்லை' என புலம்புகிறார்.

Advertisment

18mlas

ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும், ""என்ன அண்ணே நடக்குது. கூவத்தூர்ல தங்க வச்சாங்க. நாங்க கொஞ்சம் காசு பார்த்தோம். அதுலயும் நிறைய பாக்கி இருக்கு. மறுபடியும் சசிகலா பவருக்கு வருவாங்க. மறுபடியும் கூவத்தூர் வரும் என எதிர்பார்த்தோம். ஒட்டுமொத்தமாக பிழைப்புக்கு பாதகம் வரும் போலிருக்குதே'' என புலம்புவதை கேட்க முடிகிறது.

""தமிழகத்தின் கடைசி மாவட்டமான கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் ஒத்திப் போடப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் இறுதிக்கூட்டம், எம்.ஜி.ஆர். பிறந்த மாதமான ஜனவரி மாதம், இறந்த மாதமான டிசம்பர் மாதம் ஆகியவற்றில் கொண்டாடப்படவே இல்லை.

பிரதமரின் ஒப்புதலுக்காக காத்திருந்த எடப்பாடி திடுதிப்பென சனிக்கிழமை அறிவித்து திங்கட்கிழமை ஜெ.வின் படத்தை தமிழக சட்டமன்றத்தில் திறக்க ஏற்பாடு செய்தார். ஜெ.வின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி ஜெ.வுக்கு ஒரு வெண்கல சிலையையும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், எம்.ஜி.ஆரை நேரில் பார்த்திராத அ.தி.மு.க.வினரான ரபிபெர்னார்ட், மருது அழகுராஜ், நாஞ்சில் பி.சி.அன்பழகன் ஆகியோர் 6 மாதங்களாக அந்த மலரை தயாரித்து வருகிறார்கள். அதுவும்கூட இறுதி வடிவத்துக்கு வரவில்லை.

koovathur camp

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் இறுதி விழாவை குறைந்தபட்சம் கலைவாணர் அரங்கிலாவது நடத்தி விடலாம் என ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 11 மந்திரிகள் கலைவாணர் அரங்கத்திலேயே மூன்று நாட்கள் கூட்டம் போட்டு பேசினார்கள். அந்த அரங்க அளவில் கூட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இறுதிக் கூட்டம் அவர் பிறந்த ஜனவரி, இறந்த டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்கள் கழித்தும் நடைபெறவில்லை'' என அ.தி.மு.க.வில் நடைபெறும் சம்பவங்களை விவரிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

mythiran""அனைத்து மந்திரிகளும் சுருட்டல் வேலைகளில் விரைவாக ஈடுபடுகிறார்கள். சத்துணவுப் பணியாளர் நியமனத்தில் அமைச்சர் சரோஜா கல்லா கட்டி வருகிறார். குரூப் 4 பணியிடங்கள் நிரப்ப ஒட்டுமொத்தமாக தமிழக அரசே தயாராகிக் கொண்டிருக்கிறது. போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கரின் துறையில் ஏற்கெனவே செந்தில்பாலாஜி 32,500 பேரை அதிகமாக வேலைக்கு அமர்த்திவிட்டதால், விஜயபாஸ்கரோ புதிய பேருந்துகள் வாங்குவதில் முனைப்பு காட்டுகிறார். டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய 7,000 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறை டெண்டர்களை ஜனவரி மாதம் இறுதி செய்துள்ளார் எடப்பாடி. ஓ.பி.எஸ்.ஸின் கீழ்வரும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லைகள் ஆந்திரா மற்றும் வேலூர்வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் கடைசிக் கட்ட சுருட்டலுக்கான அடையாளம் என்பதால் தலைமைச் செயலாளரான கிரிஜா வைத்தியநாதன், "நான் ராஜினாமா செய்கிறேன்' என எடப்பாடியிடமே சொல்லிவிட்டார்'' என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.

""இதுவரை பா.ஜ.க.வுக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் பாலமாக இருந்தவர்கள் மைத்ரேயனின் ஆதரவாளர்கள். ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணி இணைந்தபிறகு "அடுத்த ஒரு வாரத்தில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும்' என வாக்குறுதி தந்தார் இ.பி.எஸ். அவர் அதை இதுவரை அமைக்கவில்லை. ஓ.பி.எஸ்.ஸும் அதை கண்டுகொள்ளவில்லை. அதனால் மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் போன்றவர்களுக்கு பதவி கிடைக்கவேயில்லை. அதிருப்தி அடைந்த அவர்கள் ஓ.பி.எஸ். பற்றியும் இ.பி.எஸ். பற்றியும் போட்டுக் கொடுத்தார்கள். ஜெ.வுக்குத் தெரியாமல் ஓ.பி.எஸ். சேர்த்த சொத்து ஃபைல்கள் சசிகலாவின் வீட்டில் கிடைத்ததால் எடப்பாடியையும் ஓ.பி.எஸ்.ஸையும் பா.ஜ.க. கழற்றி விட்டது'' என்கிறார்கள்.

மன்னார்குடி வட்டாரமோ, ""எடப்பாடியையும் அவருக்கு நெருக்கமான ஜெயக்குமார் மற்றும் மூன்று மணி மந்திரிகளையும் நீக்கி விட்டு, செங்கோட்டையன் தலைமையில் புதிய அணி அமைக்க சசிகலா காம்ப்ரமைஸ் பேசினார். அதை எடப்பாடி மட்டுமல்ல டி.டி.வி. தினகரனும் ஏற்க மறுத்துவிட்டார். இரண்டு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே, சசி தரப்புக்கும் எடப்பாடிக்கும் இடையிலான சமாதான முயற்சிகளில் எடப்பாடியின் மகன் மிதுனுடன், சேலம் கூட்டுறவு சங்கத்தில் கோலோச்சிய இளங்கோவனும் தீவிரம் காட்டி வருகிறார். பிப்ரவரி 13-ம் தேதிக்குள் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வர உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்பும் பின்பும் நிறைய எம்.எல்.ஏ.க்கள் அணி மாற வாய்ப்புள்ளது. ஆனால் ""என்ன நடந்தாலும், ஆட்சியே போனாலும் அ.தி.மு.க. என்கிற கட்சியும் இரட்டை இலையும் எங்கள் கையில்தான் என தெம்பு காட்டுகிறார்கள் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும்'' என்கிறது தலைமைக் கழக வட்டாரம்.

-தாமோதரன் பிரகாஷ்

படங்கள் : ஸ்டாலின்

18 MLA's case koovathur camp
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe