திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்தின்கீழ் வரும் பாரதிதாசன் இன்ஸ்டி டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் (பிம்) மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதோடு, அக்கல்லூரியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர் ராம்நாத் பாபு நீதிமன்றத்தை நாடியும், அவர் பணியில் சேரு வதற்காக சட்டப் போராட்டங் களையும் நடத்தியும், பிம் நிர்வாகத்தில் உள்ளவர்கள் அந்த நீதிமன்ற உத்தரவை ஏற்கமறுப்ப தாகக் கூறப்படுகிறது.
கல்லூரியின் நிலை, கல்லூரியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதான் தன்னுடைய பணிநீக்கத்திற்கான காரணம் என்றும், இப்பிரச்சனைக்கு முக்கிய காரணம் பிம் கல்லூரி தன்னிச்சையாக பைலாவைத் திருத்தி தன்னை தனியார் கல்லூரி யாக அறிவித்துக்கொண்டது, கல்லூரி தொடங்கி இத்தனை ஆண்டுகளில் ஒரேயொரு தலித், பழங்குடி பேராசிரியரைக்கூட நியமிக்காதது என பல்வேறு குற்றச்சாட்டுகளை தான் முன் வைத்ததை ஏற்கமுடியாமல் தன்னைப் பணியிலிருந்து விலக்கி யுள்ளனர் எனக் கூறுகிறார்.
கடந்த இரண்டு ஆண்டு களாக நடைபெற்று வந்த இந்த சட்ட போராட்டத்தில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 2021 முதல் 2023 வரை உதவிப் பேராசிரியராக சோதனை காலப் பணியில் இருந்த சி.என்.எஸ். ராம்நாத் பாபுவை பணிவிலகச் செய்த BIM நிர்வாகத்தின் முடிவை ரத்துசெய்த ஒரிஜினல் நீதிபதி உத்தரவை எதிர்த்து BIM தாக்கல் செய்த அப்பீலை தள்ளுபடி செய்தது.
2021 ஏப்ரல் 16-ஆம் தேதி BIM-ல் 2 ஆண்டு சோதனை கால உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட ராம்நாத் பாபு, 2023 ஏப்ரல் 15-ஆம் தேதியுடன் அவரது சோதனைக்காலம் முடிந்தாலும், செயல்திறன் திருப்திகரமில்லை என்ற காரணத்தைக் கூறி இஒங நிர்வாகம் நிரந்தரப்படுத்தவில்லை. பின்னர் 2023 ஜூலை 11-ஆம் தேதி அவரை பணியிலிருந்து விடுவித்து, ஒரு மாதம் முன்னரே அறிவித்தல் தரவேண்டியதற்குப் பதிலாக மூன்று மாத ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியது.
“சோதனைக்காலத்தில் இருப்பவரின் செயல்திறன் திருப்திகரமாக இல்லையெனில் விசாரணை நடத்தாமல் நிர்வாகம் பணிநீக்கம் செய்யலாம். ஆனால் அந்த உத்தரவு தண்டனை அல்லது பழிதீர்ப்பதாக இருக்கக்கூடாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பணிநீக்க உத்தரவில் பயன்படுத்தப்பட்ட சொற்கள், பழித்துப் பேசுபவை எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “மனுதாரரை பழித்துப் பேசுவதன் மூலம் அவரது நற்பெயருக்கும் வாழ்வாதார உரிமைக்கும் மேலாகக் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்றனர். எனவே அவரை அனைத்து நலன்களுடனும் மீண்டும் பணியை ஏற்கும்படியாக உத்தரவிட்டனர்.
இதுகுறித்து இஒங இயக்குனர் அசித் கர்மா, "நீதிமன்ற உத்தரவை நிர்வாகம் கவனத்தில் எடுத்துள்ளது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடை பெறவுள்ள வாரியக் கூட்டத்தில் மீண்டும் கடைபிடிப்பு நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும். நீதிமன்ற உத்தரவை மதித்து அதன்படி செயல்படுவதற்கு காலம் தேவை''’என்று தெரிவித்துள்ளார்.
"எனக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை அடிப்படையாகக் கொண்டு தான் பணியில் சேருவதற்கு முறைப்படியாக அனுப்பப்பட்ட கடிதத்தை பிம் நிர்வாகம் ஏற்காமல் அதை திருப்பியனுப்பியுள்ளது. மீண்டும் மீண்டும் சாதிய ரீதியில் உயர் வர்க்கத்தினர் மட்டுமே இருக்கவேண்டிய இடத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை பிம் நிர்வாகம் கையில் எடுத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சமுதாயத்தில் அனைவரும் சமம் என்ற அறிவை போதிக்கும், கல்வியாளர்கள் மத்தியில் இப்படி ஒரு வேற்றுமை தொடர்ந்து நீடித்துவரு வது, நம்முடைய சமுதாயம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற ஐயப்பாடு எழுந்துள் ளது''’என்கிறார் ராம்நாத் பாபு.