"தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி... தான் ஒரேயொரு போலீஸ் அதிகாரியுடன் நட்பு மாறாமல் பேசிக்கொண்டிருக்கிறேன் என்றால் அது நல்லம நாயுடுதான்'' என்கிறார், ஜெ.வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் வரை சென்று வாதாடி ஜெ.வுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த கர்நாடகாவின் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா.

nn

சென்னையில் 83 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்த நல்லம நாயுடுதான் ஜெ.வுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் விசாரணை அதிகாரி. அவரைப் பற்றிய நினைவலைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஆச்சார்யா.

ஒருமுறை தமிழகத்தில் தேர்தல் நடக்கும் சூழலில்... தி.மு.க. தரப்பு ஆச்சார்யாவிடம் சில விளக்கங்கள் பெற அவரை தொடர்புகொள்கிறது. "நான் வழக்கின் சிறப்பு வழக்கறிஞர், ஆனால் தி.மு.க. வழக்கறிஞர் அல்ல' என தி.மு.க. தரப் பிடம் பேச மறுக்கிறார் ஆச்சார்யா. அவர்கள் நல்லம நாயுடுவை தொடர்புகொள்கிறார்கள். நல்லம நாயுடுவும், "தி.மு.க. தரப்புடன் ஆச்சார்யா பேச மறுத்தது சரியே' என்றார். "ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நல்லமநாயுடுவிடம் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை ஆச்சார்யா பேசுவார். இந்த சம்பவம் நான் நேரில் பார்த்த சம்பவம்'' என்கிறார், குன்ஹாவின் நீதிமன்றத்தில் அவருக்கு உதவி யாளராக செயல்பட்டு ஓய்வுபெற்ற தமிழரான பிச்சைமுத்து.

Advertisment

nn

விசாரணை அதிகாரியாக நல்லம நாயுடுவை தி.மு.க. அரசு நியமிக்கவில்லை. ஹைகோர்ட்தான் நியமித்தது. இந்த வழக்கிற்காக லண்டனுக்கு சென்று விசாரணை செய்தவர் தமிழக அரசின் தற்போதைய தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம். எனினும், நல்லம நாயுடுவின் உதவி யாளரேகூட, இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் அளிக்கக்கூடிய கடிதம் வழங்கப்படவில்லை என கோர்ட்டில் சாட்சியமளித்தார். அந்தளவுக்கு ஆட்சி மாற்றம் பயமுறுத்தியது. ஆனால் நல்லம நாயுடு உறுதியாக நின்றார். அவர் நேரடியாக சாட்சியமளிக்கும்போது, அவரைத் தாக்க முற்பட்டார்கள். எட்டு நாட்கள் அசராமல் நின்று சாட்சியமளித்தார் நல்லம நாயுடு. தன்னை விசாரணை அதிகாரியாக நியமித்த தற்கான ஆணை, அரசு ஆவணங் களில் ஒளித்து வைக்கப்பட்டிருப் பதைக் கண்டறிந்து வெளியே கொண்டுவந்தார் என்கிறார்கள் அந்த வழக்கை நேரடியாக பார்த்த வழக்கறிஞர்கள்.

நல்லம நாயுடு அசராத சிங்கம் போல நின்று சாட்சியம் அளித்ததை கலைஞர், "முரசொலி'யில் "நல்லம நாயுடு, ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை செய்து சொத்துப் பட்டியல் தந்தவர். பத்திர ஆதாரங்களை பதிய வைத்தவர். அவர் நீதிமன்றத்தில் வளைந்து நெளியாமல் உண்மையை உறுதியுடன் உரைத்தவர்'' என எழுதியிருந்தார் என்று நினைவுகூர்கிறார்கள் தி.மு.க. வழக்கறிஞர்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் மேற்கொண்ட விசாரணை முறை, "ஒரு விசாரணை என்றால் எப்படி இருக்கவேண்டும் என புத்தகம் எழுதும் அளவுக்கு இருந்தது'' என்கிறார் அரசு தலைமை வழக்கறிஞரான சண்முகசுந்தரம்.

Advertisment

1987-ஆம் ஆண்டு. ஜெ.வி.ன் சொத்து, அவர் நடிகையாக இருந்து சம்பாதித்தது, அவர் தாயார் கொடுத்தது என, எல்லாம் சேர்ந்து 7.5 லட்சம்தான். அதற்கு முறையான வருமான வரி கட்டும் பழக்கமும் ஜெ.வுக்கு இல்லை. 1991-96 ஜெ. ஆட்சியில் போயஸ் கார்டன் முகவரியில் பல வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, பினாமிகள் மூலம் பணப் பரிவர்த்தனை நடந்து, விளைநிலங்கள், அச்சு எந்திரங்கள், வாகனங்கள், வைப்புத்தொகைகள் என வாங்கப்பட்டன.

nn

லண்டனில் டி.டி.வி. தினகரன் பெயரில் இரண்டு பெரிய ஹோட்டல்கள் வாங்கப்பட்டன. ஏராளமான நகைகள், ஒரு சொகுசு பஸ் வாங்கப்பட்டது என மிக துல்லியமாக அவரது வருமானமான 6 கோடியே 50 ஆயிரத்து 86,000 க்கு மேல், 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாய்க்கு சொத்து சேர்த்தார் என நயாபைசாவைக் கூட துல்லியமாக கணக்கிட்டுச் சொன்னார் நல்லம நாயுடு. இந்த துல்லியம்தான் ஜெ.வுக்கு தண்டனை பெற்றுத் தந்தது. தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமிதவராய், பினாரி சந்திரகோஷ் ஆகியோர் ஜெ.வை குற்றவாளி என தீர்ப்பளிக்க உதவியது.

எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் ஊழலை விசாரிக்க நல்லம நாயுடு தலைமையில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என தி.க.. தலைவர் வீரமணி அறிக்கை விட்ட மறுநாள், அவர் மரணமடைந்தார். "ஊழல் எதிர்ப்பில் உறுதியாக நின்றவர் நல்லம நாயுடு' என நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டா-ன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட் டிருக்கிறார்.

கண்ணாடிப் பெட்டியில் அவரது உடலுக்கு அருகே அவர் எழுதி, நக்கீரன் வெளியிட்ட "என் கடமை' புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஜெ.வின் ஊழல் சொத்துக்களை அரசுடமையாக்க தி.மு.க. அரசு முன்வர வேண்டும் என எழுதியிருக்கிறார். அதனை நிறைவேற்றுவது தான் நல்லம நாயுடுவின் நேர்மைக்கு தமிழக அரசு அளிக்கும் உண்மையான மரியாதை என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.