Advertisment

நாட்டு மருந்து-நகை பாலீஷ்- போலி போலீஸ்! கில்லாடி கிரிமினல்களின் மோசடிகள்!

rr

ஜெகஜாலக் கில்லாடிகளான கிரிமினல்கள், பொது மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்...!

சம்பவம் 1:

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா சத்தியவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் ஜெயந்தி தம்பதியருக்கு அனுஷ், தனுஷ் என நான்கு வயதுள்ள இரட்டைக் குழந் தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4-ஆம் தேதி சத்திய வாடி கிராமத்திற்கு வந்த 2 மர்ம நபர்கள், ஜெயந்தி சரத் குமார் தம்பதியரின் இரண்டு குழந்தைகளுக்கும் நாட்டு மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை இன்றி குணப் படுத்துவதாக கூறி நம்ப வைத்து, ஸ்பெஷல் மருந்துக்கு 45 ஆயிரம் ரூபாயை ஏற்பாடு செய்து எடுத்துக்கொண்டு, திண்டிவனம் வந்துவிடும்படி கூறினர். ஜெயந்தி பணத்தோடு சென்றிருக்கிறார். அவரிடம் ஒரு பாட்டிலைக் கொடுத்து, இது மிகவும் காஸ்ட்லியான மருந்து என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். பின்னர் தான் தெரிந்திருக்கிறது, அந்த பாட்டிலில் வெறும் தண்ணீர்தான் இருக்கிறது என்ற உண்மை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயந்தி இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கைப் பதிவு செய்து, அந்த போலி மருத்துவர்களைத் தேடி வருகின்றனர்.

rr

சம்பவம் 2:

விழுப்புரம் அருகே உள்ள கண்டமங்கலம் பெரிய பாபு சமுத் திரத்தைச் சேர்ந்தவர் ஐயனாரப்பன். இவரும் இவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ள னர். அய்யனாரப்பன் பக்கவாதத் தால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்க, அவருக்கு உதவியாக அவரது 77 வயதுள்ள அத்தை சுந்தராம்பாள் உடனிருந்து கவனித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம், காலை ஏழு மணி அளவில் அவர் களது வீட்டிற்கு 2 மர்ம நபர்கள் பைக்கில் வந்துள்ளனர். தாங்கள் நாட்டுமருந்து கொடுத்து உடல் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதாகச் சொன்னவர்கள், இருவருக்கும் மூலிகை எண்ணை என்று ஒரு திரவத்தைக் கொடுத்துத் தடவச் சொல்லியுள்ளனர். சுந்தராம்பாளோ அவர்கள் சொன்னபடி, எண்ணெய்

ஜெகஜாலக் கில்லாடிகளான கிரிமினல்கள், பொது மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்...!

சம்பவம் 1:

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா சத்தியவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் ஜெயந்தி தம்பதியருக்கு அனுஷ், தனுஷ் என நான்கு வயதுள்ள இரட்டைக் குழந் தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4-ஆம் தேதி சத்திய வாடி கிராமத்திற்கு வந்த 2 மர்ம நபர்கள், ஜெயந்தி சரத் குமார் தம்பதியரின் இரண்டு குழந்தைகளுக்கும் நாட்டு மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை இன்றி குணப் படுத்துவதாக கூறி நம்ப வைத்து, ஸ்பெஷல் மருந்துக்கு 45 ஆயிரம் ரூபாயை ஏற்பாடு செய்து எடுத்துக்கொண்டு, திண்டிவனம் வந்துவிடும்படி கூறினர். ஜெயந்தி பணத்தோடு சென்றிருக்கிறார். அவரிடம் ஒரு பாட்டிலைக் கொடுத்து, இது மிகவும் காஸ்ட்லியான மருந்து என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். பின்னர் தான் தெரிந்திருக்கிறது, அந்த பாட்டிலில் வெறும் தண்ணீர்தான் இருக்கிறது என்ற உண்மை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயந்தி இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கைப் பதிவு செய்து, அந்த போலி மருத்துவர்களைத் தேடி வருகின்றனர்.

rr

சம்பவம் 2:

விழுப்புரம் அருகே உள்ள கண்டமங்கலம் பெரிய பாபு சமுத் திரத்தைச் சேர்ந்தவர் ஐயனாரப்பன். இவரும் இவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ள னர். அய்யனாரப்பன் பக்கவாதத் தால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்க, அவருக்கு உதவியாக அவரது 77 வயதுள்ள அத்தை சுந்தராம்பாள் உடனிருந்து கவனித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம், காலை ஏழு மணி அளவில் அவர் களது வீட்டிற்கு 2 மர்ம நபர்கள் பைக்கில் வந்துள்ளனர். தாங்கள் நாட்டுமருந்து கொடுத்து உடல் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதாகச் சொன்னவர்கள், இருவருக்கும் மூலிகை எண்ணை என்று ஒரு திரவத்தைக் கொடுத்துத் தடவச் சொல்லியுள்ளனர். சுந்தராம்பாளோ அவர்கள் சொன்னபடி, எண்ணெய் தேய்ப்பதற்காக தனது கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் பவுன் செயினை கழற்றி வைத்துவிட்டு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தபோது, அந்த இருவரும் செயினுடன் எஸ்கேப் ஆகிவிட்ட னர். தற்போது மோசடி நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

சம்பவம் 3:

Advertisment

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ளது செண்டூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன். இவரது மனைவி ஜெயந்தி. இவர்கள் வீட்டிற்கு ஒரு மந்திரவாதி போன்ற மனிதர் வந்துள்ளார். அவர்களிடம் உங்கள் குடும்பத்தில் யாருக்காவது கை கால் இடுப்பு கழுத்து போன்ற இடங்களில் தீராத வலி உள்ளதா? இருந்தால், அதை என்னால் சரி செய்ய முடியும் என்று கூறியுள்ளார். உடனே ஜெயந்தி தனக்கு அது போன்று வலி இருப்பதாக கூறியுள்ளார். உடனே அவர்கள் வீட்டில் அமர்ந்த அந்த மந்திரவாதி, ஜெயந்தி யின் கையைப் பிடித்துப் பார்த்து, ”உங்கள் வீட்டில் உங்களுக்கு எதிரி ஆனவர்கள், செய்வினை பில்லி சூனியம் போன்றவற்றை ஏவி விட்டுள்ளனர். அதனால் தான், கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது’ என்றெல்லாம் அளந்துவிட்டிருகிறார்.

rrar

பிறகு, வீட்டில் உள்ள தங்க நகையை என்னிடம் எடுத்துவந்து கொடுங்கள். அந்த நகையை உங்கள் ஊர் எல்லையில் உள்ள கோவில்களில் வைத்து பூஜை செய்து, மீண்டும் எடுத்து வந்து தருகிறேன் என்று, இரண்டு பவுன் நகையை வாங்கிச் சென்றவர், திரும்பி வரவேயில்லை. இது குறித்த புகார் மயிலம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சம்பவம் 4:

கள்ளக்குறிச்சி நகரை ஒட்டி உள்ளது காந்தி ரோடு மேட்டு தெரு. இப்பகுதியில் வசிப்பவர் பெரியவர் சீதாபதி . இவரது மனைவி 65 வயது ராஜலட்சுமி. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அடையா ளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கடந்த 20-ஆம் தேதி பட்டப்பகல் நேரத்தில், ராஜலட்சுமியின் வீட்டுக்குச் சென்றார். அவரது கணவர் சீதாபதி அனுப்பி வைத்ததாகக் கூறியதோடு, உங்கள் உடலில் கை, கால் வலி இருப்பதாகவும் அதை குணப்படுத்துவதற்கு பூஜை செய்யவேண்டும் என்று உங்கள் கணவர் என்னை இங்கு அனுப்பி வைத்திருக் கிறார் என்றும் புளுகியுள்ளார். வந்த ஆசாமி, ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த நகையை பூஜையில் வைக்க வேண்டும் என்று கூறி, 11 பவுன் நகையை அபகரித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாக மறைந்துவிட்டார். தான் ஏமாற்றப்பட்டது குறித்து அதிர்ச்சியடைந்த ராஜலட்சுமி, பின்னர் இதுகுறித்து கள்ளக் குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சம்பவம் 5:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூந்தலூர். இந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் ஜெயக்கொடி, வீட்டில் தனியாக இருந்த போது டிப்டாப் இளைஞர் ஒருவர் ஜெயக்கொடியிடம், வெள்ளி பித்தளை பாத்திரங்கள் மற்றும் தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டுத் தருவதாக பவ்யமாகச் சொல்ல, இதனை நம்பிய ஜெயக்கொடி வீட்டி லிருந்த பித்தளை பொருட்களையும் வெள்ளிப் பொருட் களையும் கொடுக்க, அவற்றை பளபளப்பாக மாற்றி விட்டார் அந்த நபர். இதே ஆசையில், ஜெயக்கொடி தன் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக் கொடியைக் கழற்றிக் கொடுத்துள்ளார். டிப்டாப் ஆசாமியோ, பாலீஷ் போடுவது போல் பாவ்லா காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். இதனால் பதறிப்போன ஜெயக்கொடி போலீசுக்குப் போக, அவர்கள் அந்தப் பித்தலாட்டக்காரனை தேடிவருகிறார்கள்.

இவற்றில் கண்டமங்கலம் மூதாட்டி சுந்தராம் பாளிடம் நகை பறித்து சென்றது சம்பந்தமாக கர்நா டக மாநிலம் பெங்களூர் பகுதியில் உள்ள பட்லாகாலி என்ற பகுதியை சேர்ந்த மணி, கோபி என்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் 6:

வியாபாரியிடம் பணம் பறித்த போலி போலீஸ், சென்னை திரு வொற்றியூர் பகுதியைச் சேர்ந்த பூபாலன் வயது 54. இவர் சென்னை யில் என்டர்பிரைசஸ் என்ற கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். அதன்மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொருட்களைக் கொடுத்து கடைக்காரர்களிடம் பணம் வசூல் செய்து வருகிறார். அப்படி பணம் வசூல் செய்வதற்காக திண்டிவனத்திற்கு வந்த பூபாலன், ஒரு கடையில் தமக்கு வரவேண்டிய பணம் 40 ஆயிரம் ரூபாயையும் மற் றொரு கடையில் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை வசூல் செய்து, தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மாரியம்மன்கோயில் தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந் தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென அவரை வழிமறித்த னர். அவரிடம் தாங்கள் போலீஸ்காரர்கள் எனக் கூறி அவரிடம் உங்கள் மீது சந் தேகமாக உள்ளது. உங்களைப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி அவருடைய பையில் சோதனை என்ற பெயரில் துழாவி உள்ளனர். மேலும் கஞ்சா கடத்தல் பேர்வழியா என்று கூறி மிரட்டியுள்ளனர். அவரது பேண்ட் சட்டை பாக்கெட்டில் கையைவிட்டு ஆராய்ந்து, 55 ஆயிரம் பணத் தையும் எடுத்துக்கொண்டு, இதுபோல் பணத்தை சாதா ரணமாக பேண்ட் பாக்கெட்டில் வைத்து எடுத்து செல்லக் கூடாது. பேக் உள்ளே வைத்து கவனமாக எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியவர்கள். அவரது பேக்கில் அந்த பணத்தை வைப்பது போல பாவ்லா காட்டி விட்டு, 55 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். சந்தேக மடைந்த பூபாலன் தனது பேக் உள்ளே பார்த்தபோது பணம் இல்லை. போலீஸ் என கூறியவர்கள் 55 ஆயிரம் பணம் கொள்ளையடித்ததை அறிந்து, திண்டிவனம் போலீ சில் புகார் கொடுத்திருக்கிறார்.

rr

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். தினசரி விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கொள்ளையர்கள், போலி போலீஸ், மந்திரவாதி கள், நாட்டு மருத்துவர்கள், நகை பாலீஷ் போடுபவர்கள், இப்படிபட்ட கிரிமினல் பேர்வழிகள் தங்கள் கை வரிசையை நான்கு திசைகளி லும் காட்டி வருகிறார்கள்.

"நாட்டு மருந்து, நகை பாலீஷ், போலீஸ் என போலி ஆசாமிகள் சுற்றி வருவது பற்றி எச்சரிக்கை விடுத்தும் பொதுமக்களிடம் போதுமான சுதாரிப்பு இல்லை. அதுதான் இத்தனைக்கும் காரணம்' என்கிறார்கள் காவல்துறை யினர்.

________________________________________________________________

தொழிலாளியின் உயிரை காவு வாங்கிய சுவர்!

ra

தொழிற்சாலைகளில் கட்டப்படும் தரமற்ற சுற்றுச்சுவர்களால் தொழிலாளர்கள் பலியாவது தமிழகத்தில் தொடர் நிகழ்வாகின்றன. சமீபத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் இருங்காட்டுக் கோட்டை சிப்காட் பகுதியில் இயங்கும் தனியார் தொழிற்சாலைகளில் வட மாநில தொழிலாளர்கள் பலர் கூலிவேலை பார்த்து வருகின்றனர். அப்படி வேலை பார்த்த பீஹாரை சேர்ந்த விஜய்மண்டல் என்ற தொழிலாளி, வேலையை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் வீடு திரும்ப சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார்.

அப்போது, குறிப்பிட்ட ஒரு தொழிற்சாலையின் 10 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் நண்பர்கள் இருவரும் பலத்த காயமடைய விஜய்மண்டல் சம்பவ இடத்தி லேயே பலியானார். சம்பவத்தை யறிந்து தொழிலாளர்கள் அதிர்ச்சி யடைந்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தொழிலாளர்கள்,”"சமீபத்தில் கட்டப்பட்டிருந்த அந்த சுற்றுச்சுவர் மிகவும் தரமற்றதாக இருந் திருக்கிறது. அதனால்தான் சாதாரண மழைக்கே அந்த சுற்றுச்சுவர் தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்துவிழுந்து தற்போது ஒரு தொழி லாளியின் உயிரைக் குடித்திருக்கிறது. சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, மாவட்ட எஸ்.பி.சுதாகரும், ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரும் சீரியசாக விசாரித் தனர். தரமற்ற சுற்றுச்சுவரால்தான் உயிர்ப்பலி நடந்துள்ளதை அறிந்து நிறுவனத்தின் உரிமையாளரை யும், தரமற்ற சுற்றுச்சுவரை கட்டிய காண்ட்ராக்ட ரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர், ஜெயலலிதா ஆட்சியின்போது அ.தி.மு.க. சட்டமன்ற தலைமைக் கொறடாவாக இருந்தவரின் உறவினர். மேலும் அந்த உரிமையாளரின் மாமனார் ஓய்வுபெற்ற ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி! இந்த பின்னணியில், தமிழக காவல்துறையின் உயரதிகாரி ஒருவரின் உதவியை உரிமையாளர் தரப்பு அணுக, அந்த உயரதிகாரியின் உத்தரவின் பேரில், தொழிலாளியின் மரண சம்பவம் நீர்த்துப்போக வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சென்னையிலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக, நிறுவனத்தின் பெயரை மட்டும் எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்து விட்டு, கைது நடவடிக்கையிலிருந்து விலகிவிட்டது போலீஸ் என்கிறார்கள்.

-இளையர்

nkn180921
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe