Advertisment

கள்ள நோட்டா? டம்மி நோட்டா? -மணப்பாறை பரபரப்பு!

aa

மிழகத்தில் கள்ள நோட்டு புழக்கம் தலை காட்ட ஆரம்பித்துள்ளது. சமீபத் தில் திருச்சி மாவட் டத்தில் ஒரு கும்பலை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் கள்ள நோட்டுகள் பரிமாற்றம் செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் தங்கசாமி தலைமையிலான போலீஸார் பணப்பரிமாற்றம் செய்வதைப் பிடிப்பதற்காக மறைந்திருந்தனர்.

Advertisment

அப்போது லெட்சம்ப

மிழகத்தில் கள்ள நோட்டு புழக்கம் தலை காட்ட ஆரம்பித்துள்ளது. சமீபத் தில் திருச்சி மாவட் டத்தில் ஒரு கும்பலை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் கள்ள நோட்டுகள் பரிமாற்றம் செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் தங்கசாமி தலைமையிலான போலீஸார் பணப்பரிமாற்றம் செய்வதைப் பிடிப்பதற்காக மறைந்திருந்தனர்.

Advertisment

அப்போது லெட்சம்பட்டியை சேர்ந்த தங்கவேல், பழைய காவல் நிலையம் பகுதியில் வைத்திருக்கும் செல்போன் கடைக்கு, இனோவா காரில் வந்த இருவர் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கட்டுகளை பணப்பரிமாற்றம் செய்யும் போது, பாய்ந்துவந்த போலீஸார், இனோவா கார் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர். பின்னர் அனைத்தும் வையம் பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பால்வண்ண நாதன், துணைக் கண்காணிப்பாளர் ராமநாதன், காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

dd

அதில், காரில் வந்தவர்கள் கோவை மாவட் டம் கே.கே.புதூரை சேர்ந்த பார்த்தசாரதி மற்றும் கணுவாய் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பதும், இவர்கள் பிரபல திரைப்பட இயக்குனரிடமிருந்து திரைப்படங்களுக்கு பயன்படுத்தப்படும் போலி ரூபாய் நோட்டுக் கட்டுகளை வாங்கி வந்ததும், அதை பரிமாற்றம் செய் யும்போது பிடி பட்டதும் தெரிய வந்தது.

Advertisment

இவ்விவகாரம் குறித்து விசாரித்ததில்… "கள்ள நோட்டு கொண்டுவந்த 3 பேரும் பல வருடங்களாக தங்கவேல் என்பவரிடம் நோட்டுக்களை மாற்றிவந்த தாகத் தெரிகிறது. திரைப்படங்களில் பயன்படுத்தும், டம்மி நோட்டுகள் அனைத்தும் மிக பாதுகாப்பாக அதன் பயன்பாடு முடிந்த பிறகு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படும்'' என்றனர். ஆனால் இந்த டம்மி நோட்டில் ஒரு இலக்க எண்கள் அடங்கிய கள்ள நோட்டுகளும் கலந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சிறிய அளவிலான டிரங்க் பெட்டிகளில் தெர்மாகோல் வைக்கப்பட்டு அந்த தெர்மாகோலில் நோட்டுகள் ஒட்டவைக்கப்பட்டு, கட்டுக்கட்டாக பணம் இருப்பதாகக் காட்டி பலரை ஏமாற்று வதற்கான முயற்சிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் பறிமுதல் செய்த டம்மி நோட்டுகளுடன், தெர்மாகோல், பசை, டிரங்க் பெட்டிகள் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே தொடர் விசாரணை நடத்தினால் தான், அவர்கள் இந்த டம்மி நோட்டுகளை வைத்து பொதுமக்களை ஏமாற்றினார்களா? உண்மையாகவே டம்மி நோட்டுகள் திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக மட்டுமே கொண்டுசெல்லப்பட்டதா என்பது தெரியவரும்!

nkn030423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe