முதல்வர் எடப்பாடியின் சேலம் மாவட்டம் வீரகனூர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர், ராம.ஆண்டவர். வீரகனூரைச் சேர்ந்த மணல் மாஃபியா பன்னீர்செல்வமும், ஆய்வாளர் ராம.ஆண்டவரும் மாமூல் பேரம் குறித்து பேசும் ஓர் உரையாடல், சமூக ஊடகங்களில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் பன்னீர்செல்வம், "ஏற்கனவே மாதந்தோறும் மாமூல் கொடுத்து வருகிறேன். அப்படி இருந்தும் ஏன் வண்டியை மடக்கினீர்கள்?' என்று கேட்கிறார். அதற்கு ராம.ஆண்டவர், "இப்போது கடும் நெருக்கடி இருக்கிறது. கொஞ்ச காலம் அமைதியாக இருங்கள்' என்று பதில் கூறி இருந்தார்.
சர்ச்சையை ஏற்படுத்திய இந்த உரையாடல் குறித்து விசாரித்து அறிக்கை அனுப்புமாறு வாழப்பாடி டி.எஸ்.பி.க்கு, எஸ்.பி. தீபா கனிகர் உத்தரவிட்டார். கொரோனா ஊரடங்கில் இதுவும் கடந்து போகும் என்று அசால்டாக இருந்த ஆய்வாளர் ராம.ஆண்டவரை, மே 8ஆம் தேதி திடீர
முதல்வர் எடப்பாடியின் சேலம் மாவட்டம் வீரகனூர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர், ராம.ஆண்டவர். வீரகனூரைச் சேர்ந்த மணல் மாஃபியா பன்னீர்செல்வமும், ஆய்வாளர் ராம.ஆண்டவரும் மாமூல் பேரம் குறித்து பேசும் ஓர் உரையாடல், சமூக ஊடகங்களில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் பன்னீர்செல்வம், "ஏற்கனவே மாதந்தோறும் மாமூல் கொடுத்து வருகிறேன். அப்படி இருந்தும் ஏன் வண்டியை மடக்கினீர்கள்?' என்று கேட்கிறார். அதற்கு ராம.ஆண்டவர், "இப்போது கடும் நெருக்கடி இருக்கிறது. கொஞ்ச காலம் அமைதியாக இருங்கள்' என்று பதில் கூறி இருந்தார்.
சர்ச்சையை ஏற்படுத்திய இந்த உரையாடல் குறித்து விசாரித்து அறிக்கை அனுப்புமாறு வாழப்பாடி டி.எஸ்.பி.க்கு, எஸ்.பி. தீபா கனிகர் உத்தரவிட்டார். கொரோனா ஊரடங்கில் இதுவும் கடந்து போகும் என்று அசால்டாக இருந்த ஆய்வாளர் ராம.ஆண்டவரை, மே 8ஆம் தேதி திடீரென்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார்.
ஓய்வு பெறும் வயதை நெருங்கிய நிலையில், திடீரென்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராம.ஆண்டவர், மாவட்ட எஸ்.பி.க்கு அனுப்பிய விளக்கத்தில், சேலம் மாவட்ட காவல்துறையில் மலிந்து கிடக்கும் ஊழல் களை புட்டு புட்டு வைத்திருந்தார். முதல்வர் எடப்பாடி மாவட்டத்தில் லாட்டரி, கள்ளச் சாராயம், போதை பவுடர் என சகல விதமான இத்யாதிகளும் தாராளமாக புழங்குவதும், குற்றவாளிகளும் காவல்துறையும் கைகோர்த்து செயல் படுவதும் அவருடைய குற்றச் சாட்டின் சாராம்சம்.
இக்கடிதத்தால் பரபரப்பாகி கிடக்கும் காவல்துறை வட்டாரத்தில், பணிக்காலத்தில் ராம. ஆண்டவருடைய செயல்பாடுகள் குறித்து நாம் விசாரித்தோம். தேனி மாவட்டம்தான் சொந்த ஊர். ஆனால், தென் தமிழகத்தைவிட கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் என வட மாவட்டங்களில்தான் நீண்ட காலம் பணியாற்றி வந்திருக்கிறார்.
கடந்த 2017ல், தர்மபுரி மாவட்டம் மத்தூரில் பணியாற்றி வந்தபோது உதவி ஆய்வாளர் ஒருவருடன் ஏற்பட்ட கைகலப்பில் காவல்நிலையத்திலேயே அவரை சரமாரியாக தாக்கியிருக்கிறார் ராம.ஆண்டவர். அச் சம்பவத்திற்குப் பிறகு அவர் மாவட்ட ஆயுதப் படைக்கு இரண்டாம் முறையாக இடமாற் றம் செய்யப்பட்டார். 2016ல் பொம்மிடியில் ஆய்வாளராக இருந்தபோது சொந்த உபயோகத்திற்காக காவல்துறை ஜீப்பை நாமக்கல் மாவட்டத்திற்கு அவரே ஓட்டிச்சென்றிருக்கிறார். திரும்பி வரும் வழியில் சேலத்தை அடுத்த மல்லூரில் ஒரு மோட்டார் சைக்கிள்மீது மோதியதில் பெண் ஒருவர் பலியாகியிருக்கிறார். நெருக்கடிகள் அதிகரிக்கவே, அவர் கைது செய்யப்பட்டதுடன், பணி யிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு, மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியான சம்பவத்தின்போது பந்தோபஸ்து பணிக்காக செல்லுமாறு ராம.ஆண்டவரிடம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் இருந்து தகவல் சொல்லப்பட்டபோது, "ஏன் என்னை விட்டால் இங்கே வேறு யாரும் இன்ஸ்பெக்டர்களே கிடையாதா? அதெல்லாம் போக முடியாது' என்று திறந்த மைக்கிலேயே அலட்சியமாக கூறியிருக்கிறார்.
காவல்துறைமீது விமர்சனம் செய்து எழுதப்பட்ட கடிதம் சமூக ஊடகங்களில் வெளியான தன் பின்னணியில் ஐ.ஜே.கே. கட்சி பிரமுகர் ஒருவர் இருப்பதாகவும், அவர்தான் இப்போ தைக்கு ராம.ஆண்டவருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் ஒருதரப்பு சொல்கிறது.
இதுபற்றி ராம.ஆண்டவ ரிடம் கேட்டபோது, ""சஸ்பெண்ட் செய்தபிறகு எஸ்.பி.யையும், டி.ஐ.ஜி.யையும் பார்த்து பேசியிருக்கணும். ரெண்டையும் கைவிட்டுட்டேன். அப்படி செய்திருந்தால் ஒரு வேளை என்னை மன்னிச்சிக்கூட விட்டி ருப்பாங்க. மாமூல் புகார் தொடர்பாக பேசிய பன்னீர் செல்வமும் நானும் அதற்கு முன்பு பேசியதில்லை. ஐ.ஜே.கே. கட்சி பிரமுகர் பற்றி கேட்கிறீர்கள். அவர் என் மீதுள்ள மரியாதைக்காக உதவி செய்கிறார்'' என்று மேலோட்டமாக பதில் சொன்னார்.
சேலம் மாவட்ட எஸ்.பி. தீபா கனிகரின் கருத்தறிய பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போதும் 'கன்மேன்' ஒருவரே அழைப்பை எடுத்துப் பேசினார். எதுவாக இருந்தாலும் தனிப்பிரிவு ஆய்வாளரை தொடர்பு கொள்ளுமாறு நமக்குச் சொல்லப்பட்டது.
அதையடுத்து தனிப்பிரிவு ஆய்வாளர் முத்தமிழ் செல்வராஜிடம் கேட்டபோது, ""ராம.ஆண்டவர் மீது எத்தனையோ முறை புகார்கள் வந்துள்ளன. அவர் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி இருக்கிறோம். இப்போதுகூட மாமூல் ஆடியோ குறித்து புகார் வந்து மூன்று மாதங்கள் கழித்துதான் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒருமுறைகூட அவர் நேரில் வந்து பார்க்கவில்லை. அவர் இஷ்டத்திற்கு இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்?'' என்றார்.
- இளையராஜா