மிழகத்தில் கடந்த ஆண்டு சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இவர் துணைவேந்தராக இருந்தபோது ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கி அதனை பல்ககைலைக்கழக அதிகாரிகளைக் கொண்டு செயல்படவைத்து, அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

பல்கலைக்கழகத்திலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதில் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் இருந்தது, ஆராய்ச்சிப் படிப்பு மாணவிகளிடம் பாலியல் அத்து மீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

Advertisment

bb

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் மற்றும் மேலாண்மைத் துறையின் முன்னாள் தலைவரும், பேரா சிரியருமான செல்வம், கடந்த 2020ஆம் ஆண்டு திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

தற்போது அந்த துணைவேந்தர் செல்வம் பல்வேறு ஊழல்கள் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட் டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் சார்பில் மேல்மட்ட நிர் வாகிகள் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு, அந்த தீர்மானங்கள் அனைத்தும் முதலில் பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை செயலாளர் என பலதரப்பட்ட அதிகாரிகளுக்கும் இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதில் பல்கலைக்கழகத்தில் ரூசா என்று சொல்லப்படும் ராஷ்ட்ரிய உச்சட்டர் சிக்சா அபியான் என்ற திட்டத்தில் பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும். பல்கலைக்கழகத்தின் ரூசா இயக்குநர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பல்கலைக் கழகத்தில் 2017-க்கு முன்பாக கட்டப்பட்டு பயன்பாட்டிலுள்ள பல கட்டடங்களை இந்த ரூசா திட்டத்தில் கட்டியதாகக் கணக்கு காட்டியுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. 2016-க்கு முன்பு, உடற்கல்வி துறையில் டென்னிஸ் கோர்ட், வாலிபால் கோர்ட், கிரிக்கெட் பிச், இன்டோர் ஸ்டேடியம் போன்றவை இந்த ரூசா நிதியிலிருந்து கட்டப் பட்டதாக காட்டி ஊழல்செய்துள்ளனர். இதனை மறைப்பதற்காக அந்தத் துறையின் தலைவருக்கு பதிவாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் பழைய உபகரணங்கள் மற்றும் கணினிகளை, புதிய கணினிகள், மற்ற உப கரணங்கள் புதிதாக வாங்கியதாக, கணக்கு காட் டப்பட்டுள்ளது. இப்படி பல ஊழல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் தங்களுடைய கருத்தை முன்வைத்தும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. ஊழல்களை மறைப்பதற்காக அதில் சம்பந்தபட்ட நபர்களுக்கு ஆட்சிக் குழு உறுப்பினர் பதவி உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வழங்கி துறைகளில் சுழற்சி முறையில் நிரப்பப்படவேண்டிய இடங்க ளெல்லாம் இதுபோன்ற ஊழலை மறைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.

dd

தற்போது இந்த திட்டத்தின்கீழ் ஊழல் செய்துள்ள நபர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்கவேண்டும். முதலில் அவர்களை அந்தப் பதவியிலிருந்து நீக்கி தனிப்பட்ட விசாரணைக்குழு அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது உருவாக்கப்படவுள்ள துணைவேந்தர் ஆபிசியேட்டிங் கமிட்டியில் ஊழல் செய்த நபர்கள் உறுப்பினராக வந்தால் ரூசா திட்டத்தில் ஊழல் செய்த அனைத்து ஆவணங்களும் அழிக்கப்படும். எனவே அந்த கமிட்டியில் இவர்கள் யாரும் இடம் பெறாமல் இருக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு இது தெரிவிக் கப்பட்டு 1 மாதம் கடந்த நிலையில் இதுவரை எந்தவித விசாரணையும் நடைபெற்றதாகத் தெரிய வில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்குப் பதிலாக கடந்த ஜனவரி மாதத்துடன் 3 ஆண்டு பதவிக்காலம் முடிந்த நிலையில், அவருடைய பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு காலநீட்டிப்பு செய்து ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். இந்த பதவி நீட்டிப்புக்கு ஆசிரியர்கள் சங்கம் கடுமையான எதிர்ப்பை முன்வைத்துள்ளது.

துணைவேந்தர் பதவிக்கு வருபவர்கள் அதற்கு சுமார் 1 கோடி வரை செலவு செய்ததாகவும், பதவியிலமர்ந்து தாங்கள் செலவு செய்த தொகைகளை இதுபோன்ற ஊழல்களில் ஈடுசெய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2018-ல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் திலும் பதிவாளர், தொலைதூரக் கல்வி இயக்குநர், தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர் ஆகிய பதவிகளுக் கான நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூற, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதுபோல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பணி நியமனங்களுக்காக லஞ்சம் பெற்ற புகாரில் சமீபத்தில் துணைவேந்தர் கணபதி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனவே மத்திய, மாநில அரசுகள் துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வத்தை செல்போனில் தொடர்புகொண்டு பேசியபோது, “"நான் ஏற்கனவே ஒரு பத்திரிகைக்கு இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்து விட்டேன். இப்படி எல்லா பத்திரிகைகளுக்கும் பதிலளிக்க முடியாது''’என்று சொல்லி இணைப் பைத் துண்டித்தார்.