"ஆனைமலை புலிகள் காப் பகத்தில் சீமைக்கருவேலம், புளியமரம், யூகலிப்டஸ் மரங்களை அப்புறப்படுத்த ஒப்பந்தம் பெற்றுவிட்டு, வனச்சரகர்கள் துணையுடன் விலையுயர்ந்த சந்தனம், தேக்கு மரங்களை வெட்டிக் கடத்துகின்றனர். ஒப்பந்தக்காரர்களுடன் காப்பக அதிகாரிகள் கூட்டணி வைத்த களவாணித்தனம் தெரிகின்றது. ஆனால் நடவடிக்கைதான் இல்லை'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
வால்பாறை, பொள்ளாச்சி, உடுமலை, அமராவதி, மானாம்பள்ளி மற்றும் உலாந்தி என ஆறு வனச்சரகங்களாக பிரிக்கப்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, செந்நாய் மற்றும் ராஜநாகம் போன்றவற்றுடன் தேக்கு உள்ளிட்ட மரங்களுடன் அரியவகை மரங்களும், பல்வேறு மூலிகை மரங்கள், மூலிகைச் செடிகள், மூலிகைக் கிழங்குகள் மற்றும் அதிக அளவு இடம்பெயர முடியாத அரிய வகையான ஊர்வன போன்ற பல்லுயிரிகளும் வாழுகின்றன.
இக்காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டு திருடப்பட்டது குறித்தும், டாப் சிலிப்பில் 1500 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு திருடப்பட்டது குறித்தும் அதிகாரிகள் மீது வழக்குகள் உள்ளன. அதுபோல் அவ்வப்போது மர்மமான முறையில் வன விலங்குகள், பறவைகளின் சாவு தொடர்கதையாகி வருகின்றது. இந்த நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தம்மம்பதி மற்றும் நவ மலை போன்ற வனப் பகுதிகளில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப் படுவதாக கடந்த மூன்று மாதங்களாக புகார்கள் எழுந்துள்ளது.
"காப்பகத்திற்குட்பட்ட நவமலை வனப்பகுதி யில் கொன்றை, யூகலிப்டஸ், புளியமரங்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கருவேலமரங்களை அகற்றி அவர்களே எடுத்துக்கொள்வது என்கின்ற அடிப்படையில் ஏலம் விடப்பட்டது. 50 ஹெக்டேர் பரப்பளவிலுள்ள நிலங்கள் வகைப்படுத்தப்பட்டு அதிலிருந்து மேற்குறிப்பிட்ட மரங்களை மட்டுமே அகற்ற வேண்டுமென நிபந்தனை விதித்து ரூ.65 லட்சத்திற்கு முருகன் என்கின்ற ஒப்பந்த தாரருக்கு ஏலத்தை விட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/14/tree1-2026-01-14-16-59-57.jpg)
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏலத்தை எடுத்தவர், அதிகாரிகள் துணையுடன் அங்கிருந்த தேக்கு, சந்தனம், கருங்காலி, ஈட்டி போன்ற விலையுயர்ந்த மரங்களை பகல் நேரங்களிலேயே வெட்டிக் கடத்திச் சென்றுவிட்டார். அதனுடைய மதிப்பு பல கோடி ரூபாய் அளவில் இருக்கும். இதனை ட்ரோன் மூலம் வீடியோவாக பதிவு செய்தோம். அதிகாரிகள் குட்டு வெளிப்பட்டதால் "யாருடைய அனுமதியின் பெயரில் ட்ரோன் வீடியோ எடுத்தாய்?' என போலீஸின் துணை கொண்டு அந்த வீடியோக்களை கைப்பற்ற அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
அடுத்ததாக, தற்பொழுது 10 ஹெக்டேருக்கு ரூ.95 லட்சம் கொடுத்து ஏலம் பெற்றுள்ளது அதே குரூப். 50 ஹெக்டேருக்கு ரூ.65 லட்சம் கொடுத்தவர்கள், 10 ஹெக்டேருக்கு ரூ.95 லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தை ஏன் எடுக்க வேண்டும்? அப்படியெனில் அவர்களுக்கு கிடைக்கும் தொகை என்ன? மரக் கடத்தலை முறையாக ஆய்வுசெய்து பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியை மீட்க வேண்டுமென்பதே எங்களின் கோரிக்கை. இது தொடர்பாக மனுக்கள் அளித்தோம். நடவடிக்கை இல்லை. நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளோம்'' என்கின்றார் அவர்.
மரங்களை வெட்டு வதற்கு கனரக வாகனங் களை உபயோகப்படுத்து வதாலும், தொடர்ந்து கால இடைவெளியின்றி மரங்களை வெட்டுவதாலும், யானை... புலி போன்ற விலங்குகள் இடம் பெயர் கின்றன. அவற்றின் வாழ்விடங்களை விட்டு வேறு இடத்திற்கு செல்வதால் சிக்கலுக்கு ஆளாவது மனிதர்களே என்பதை மறந்துவிடக்கூடாது. அதுபோல் மரங்களிலுள்ள பறவைகளின் முட்டைகளும், கனரக வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் ஊர்வன போன்ற உயிரினங்களும் காட்டு வளமைக்கு இன்றியமையாத ஒன்று என்கின்றது சுற்றுச்சூழல் தியரி.
வன அதிகாரிகளோ, "முறையாக அனுமதி கொடுக்கப்பட்டுதான் மரங்கள் வெட்டப்படுகின் றன' என்றனர். ஏலத்தொகை மாறுபாடு குறித்து கேட்டதற்கு, "சென்னையிலுள்ள அதிகாரிகளைத் தான் கேட்க வேண்டும்' என கைவிரித்தனர். இதே வேளையில், தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலை மைச் செயலாளர் சுப்ரியா சாகு, 28, 29, 30 தேதி களில் ஆனைமலை வனப்பகுதிக்கு ஆய்வு செய்ய வருவதாக தகவல் பரவ... வெலவெலத்துப் போயுள்ள னர் ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள்.
இதுகுறித்து பேசிய தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் முத்துகுமார சுவாமியோ, "ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட சேத்துமடை வனப்பகுதிகளில் சீமை கருவேல மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி வழங்கியது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, தமிழ்நாடு வனத்துறை மாவட்ட வன அலுவலகத்தில் பராமரிக்கப் பட்டுவரும் பதிவேடு, ஏல பதிவேடு, துணை இயக்குனர் நாட்குறிப்பு பதிவேடு, வாகனத்தின் லாக்புக் போன்றவற்றை ஆய்வுசெய்ய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரியிருந்தேன். ஆனால் காலங்கள் கடந்தும் எவ்வித தகவலையும் வழங்கவில்லை வனத்துறை. இதிலிருந்து ஏதோ ஒன்றை மறைப்பதற்காக, தகவலை மூடி மறைப்பது என்பது ஏற்புடைய செயலாகாது'' என்கின்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/14/trees-2026-01-14-16-59-42.jpg)