Advertisment

மதுரை மீன்வளத்துறை அதிகாரி மீது குவியும் ஊழல், பாலியல் புகார்கள்!   -மதுரை திகுதிகு!

madurai

துரை மண்டலத்தில் மீன்வளத்துறை இணை இயக்குநர் காசிவிஸ்வநாத பாண்டியன் மீது பாலியல் புகார்கூறி பெண் ஒருவர் நக்கீரனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் இயக்குநர் காசிவிஸ்வநாத பாண்டியன் கட்டுப்பாட்டில் தேனி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை மண்டலங்கள் வருகின்றன. 35 வயதுக்குட்பட்ட பெண்கள் என்றால் தொடர் டார்ச்சர் செய்வது, நெருக்கடி தாங்காமல் வேறுவழியின்றி அவரது அரவணைப்பில் விழவைப் பது என்று தன் லீலைகளைத் தொடர்கிறார். 

Advertisment

இவரிடம் மாட்டிக்கொண்டு இந்த நான்கு மாவட்டத்தில் வேலைசெய்யும் பெண்கள் வெளியே சொல்லமுடியாத நரக வேதனையை அனுபவிக்கிறோம். பல்வேறு குற்றச்சாட்டிற்கு ஆளான காசிவிஸ்வநாத பாண்டியன் மீண்டும் மதுரைக்கு மாறுதல்கேட்டு சென்னைக்குப் படையெடுப்பதாக தகவல்வருகிறது. அப்படி மீண்டும் வந்தால் இங்கு வேலைசெய்யும் பெண்கள் பாடு பெரும்பாடு. தயவுசெய்து மதுரை மண்டலத்தில் நடக்கும் முறைகேடுகளைப் புலனாய்வுசெய்து அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றிருந்தது. 

Advertisment

மீன்வளத்துறை மதுரை மண்டல அலுவலகத்

துரை மண்டலத்தில் மீன்வளத்துறை இணை இயக்குநர் காசிவிஸ்வநாத பாண்டியன் மீது பாலியல் புகார்கூறி பெண் ஒருவர் நக்கீரனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் இயக்குநர் காசிவிஸ்வநாத பாண்டியன் கட்டுப்பாட்டில் தேனி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை மண்டலங்கள் வருகின்றன. 35 வயதுக்குட்பட்ட பெண்கள் என்றால் தொடர் டார்ச்சர் செய்வது, நெருக்கடி தாங்காமல் வேறுவழியின்றி அவரது அரவணைப்பில் விழவைப் பது என்று தன் லீலைகளைத் தொடர்கிறார். 

Advertisment

இவரிடம் மாட்டிக்கொண்டு இந்த நான்கு மாவட்டத்தில் வேலைசெய்யும் பெண்கள் வெளியே சொல்லமுடியாத நரக வேதனையை அனுபவிக்கிறோம். பல்வேறு குற்றச்சாட்டிற்கு ஆளான காசிவிஸ்வநாத பாண்டியன் மீண்டும் மதுரைக்கு மாறுதல்கேட்டு சென்னைக்குப் படையெடுப்பதாக தகவல்வருகிறது. அப்படி மீண்டும் வந்தால் இங்கு வேலைசெய்யும் பெண்கள் பாடு பெரும்பாடு. தயவுசெய்து மதுரை மண்டலத்தில் நடக்கும் முறைகேடுகளைப் புலனாய்வுசெய்து அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றிருந்தது. 

Advertisment

மீன்வளத்துறை மதுரை மண்டல அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு புதிதாக மாற்றலாகிவந்த இணை இயக்குனர் குப்பனிடம் நமக்கு வந்த புகார் கடித விவரங்களைச் சொன்னோம்.  அதற்கு அவர், "தமிழ்நாட்டில் மதுரை  மண்டலம் என்றாலே எல்லோருக்கும் கொஞ்சம் டெரர்தான். தொடர்ச்சியாக பெட்டிசன் போடுவதால் சென்னை தலைமை இயக்குனர் அலுவலகத்திலேயே நல்ல பெயரில்லை. குறிப்பாக நீங்க சொல்லும் நபரே எனக்கு எதிராக இங்கிருக்கும் பெண்களை வைத்து தலைமையகத்துக்கு பல ஊழல் புகார்களை அனுப்பியுள்ளார். 

சில பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். சில பெண்கள் சொல்வதுதான் இங்கு நடக்கிறது என்று தொடர்ச்சியாக பல புகார்கள் வந்திருக்கிறது. மற்றபடி ஊழல் செய்ததாக புகாரில்லை. மீனவர்கள், விவசாயிகள் மீன்குட்டை அமைப்பதற்கு அரசு 15 லட்சம் மானியம் தருகிறது. இங்கு பொறுப்பேற்றதும் அதற்கான ஆய்வுகளைச் செய்யத் தொடங்கினேன். உடனே அவர் அங்கிருந்து என்னைத் தொடர்பு               கொண்டு நீங்கள் நேரடி விசிட் செய்யத் தேவையில்லை. உடனே கையெழுத்து போட்டு பைலை அனுப்பிவைக்கச் சொன்னார். நான் நேரடி விசிட் சென்று சரியான ஆட்களுக்குத்தான் அரசு மானிய பணம் சென்றுள்ளதா?… மீன்குட்டை அமைத்திருக்கிறார்களா என்று பார்த்துவிட்டுத்தான் கையெழுத்து போடுவேன் என்றேன். அன்றிலிருந்து காசி சார் எனக்கு எதிராக செயல்படத் தொடங்கிவிட்டார். இங்கிருக்கும் சில நபர்களை வைத்து என் மேலேயே விஜிலன்ஸில் புகாரனுப்பியிருக்கிறார். அவர்கள் விசாரித்து          விட்டு புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று போய்விட்டார்கள்''’என்றார். 

துணை இயக்குனர் சிவராமச்சந்திரனைப் பார்த்தோம். “"காசிவிஸ்வநாதன் மேட்டரா...… இந்த அலுவலகத்தில் பெட்டிசன் போடுவது என்பது வாடிக்கை. வேலையை அதிகம் கொடுத்தால் அந்த அதிகாரியை எப்படிடா மாற்றுவது என்று பார்ப்பார்கள். பழி வாங்கு கிறார், சாதி பார்க்கிறார் என்று புகார் போகும். புகார் கடிதத்திலிருக்கும் சித்ராதேவியிடமே விசா ரித்து விட்டோம். அவர் பெயரில் வேறொருவர் புகார் போட்டிருக்கிறார்'' ’என்றார் 

madurai1

நாம் அவரிட மிருந்து விடைபெற்று வெளியேவந்து புகார் கடிதத்தில் குறிப்பிட்டி ருந்த பெயரில் உள்ளவரின் செல் நம்பரை வாங்கி அவரைத் தொடர்பு கொண்டோம். அவர் நம்மிடம், “"சார் எனக்கும் இந்த புகார் கடிதத்திற்கும் சம்பந்தமில்லை. யாரோ சி.எம். செல்லுக்கும் பத்தி ரிகைகளுக்கும் புகாரனுப்பு கிறார். தைரியமிருந்தால் அவர்கள் பெயரைப் போட்டு எழுத வேண்டியதுதானே. மதுரை அலுவலகத்தில் வேலை பார்த்தேன், தற்போது விருதுநகருக்கு மாற்றலாகி வந்துவிட்டேன். என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்''’என்று போனை கட்செய்தார். 

நாம் மதுரை மீன்வளத்துறை அலுவலகத்திற்கு வெளியே வந்தபோது அலுவலக மீட்டிங்கிற்கு வந்த பீல்டு அதிகாரி ஒருவரைப் பார்த்தோம். அவர் பெயர் வேண்டாமே என்று நம்மிடம் பேச ஆரம்பித்தார். “"சார், காசி சாரை பொறுத்தவரை, மீனவர்களிடமோ சாதாரண மக்களிடமோ லஞ்சம்கேட்டு தொந்தரவு பண்ணமாட்டார். அவருக்கு கீழிருக்கும் துணை இயக்குனர்கள் சூப்பர்வைசர்கள், சில அதிகாரிகள் கொள்ளையடிப்பது நிஜம். மீன்வளத்துறையை பொறுத்தவரை பல்வேறு நலத் திட்டங்கள், மானிய திட்டங்கள் உள்ளன. இவையெல்லாம் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். பெய ருக்கு பத்திரிகையில் டெண்டர் அனுப்பிவிட்டு இவர்களே இவர்களுக்கு உறவினர், குடும்பத்தார் பெயர்களில் விண்ணப்பித்து சுருட்டிக்கொள்வார்கள். மீன்வளத்துறையில் ஏராளமான திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடிகள் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒதுக்கப்படும். இவை முழுமையாக மீனவர் களைச் சென்றடைவதில்லை. 

மதுரை மண்டலத்தைப் பொறுத்தவரை இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி மண்டலங்களுக்கு இயக்குநராக இருந்தவர் காசிவிஸ்வநாத பாண்டியன். இவர் எப்போ துமே நேரடியாக வசூலில் இறங்குவதில்லை. பினாமிகள் உண்டு. அலுவலகத்தில் சில பெண்களுக்கு முக்கியத்துவம் தருவார் என்ற குற்றச்சாட்டு வெகுகாலமாகவே இருக்கிறது. இயக்குனர் அறைக்கு குறிப்பிட்ட பெண்கள் சென்றால் வெளியே வர ஒருமணி நேரம், இரண்டுமணி நேரமாகும். அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு லீவு வேண்டுமென் றாலும் நேரடியாக இணை இயக்குனரிடம் கேட்க முடியாது. குறிப்பிட்ட பெண்ணிடம் கேட்டு அவர் அனுமதி கொடுத்தாதான் லீவே கிடைக்கும். மாற்றலாகிப்போன இணை இயக்குனர் காசி சாரை மீண்டும் மதுரைக்குக் கொண்டு வந்துவிடவேண்டும் என்று பெரு மளவில் முனைப்பு காட்டுகிறார்கள்''” என்றார்.

இணை இயக்குனர் காசிவிஸ்வநாத பாண்டியனை பலமுறை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவே இல்லை.                                                

nkn121125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe