Advertisment

மாட்டுக் கொட்டகையிலும் ஊழலோ ஊழல்! -கொதிக்கும் விவசாயிகள்!

dd

டு, மாடு, கோழி போன்றவற்றின் வளர்ப்பை ஊக்குவிக்க பிரதமரின் கால்நடை கொட்டகை அமைக்கும் திட்டத்தில் பெரியளவில் மோசடி நடக்கின்றன என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து விசாரணை நடத்த வேண்டுமென மனு தந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் விவசாய சங்க பிரமுகர்கள்.

Advertisment

தமிழ்நாட்டில் 2017-2018 நிதியாண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கான நிதி மகாத்மாகாந்தி வேலை உறுதியளிப்பு திட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்படுகிறது. ஆண்டுக்கு 10 ஆயிரம் கொட்டகைகள் தமிழ் நாட்டில் அமைக்கப்படுகின்றன.

Advertisment

cc

நூறு நாள் வேலைத்திட்ட உழவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் வாக்கடை புருஷோத்தமன் நம்மிடம், ""மாடுக்கான கொட்டகையை 14ஷ்14 அளவில் ரூபாய் 1.5 லட்சத்திலும், ஆடு, கோழி கொட்டகை 14ஷ்20 என்கிற அளவில் 2.25 லட்சத்தில் அமைத் துத் தரப்ப

டு, மாடு, கோழி போன்றவற்றின் வளர்ப்பை ஊக்குவிக்க பிரதமரின் கால்நடை கொட்டகை அமைக்கும் திட்டத்தில் பெரியளவில் மோசடி நடக்கின்றன என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து விசாரணை நடத்த வேண்டுமென மனு தந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் விவசாய சங்க பிரமுகர்கள்.

Advertisment

தமிழ்நாட்டில் 2017-2018 நிதியாண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கான நிதி மகாத்மாகாந்தி வேலை உறுதியளிப்பு திட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்படுகிறது. ஆண்டுக்கு 10 ஆயிரம் கொட்டகைகள் தமிழ் நாட்டில் அமைக்கப்படுகின்றன.

Advertisment

cc

நூறு நாள் வேலைத்திட்ட உழவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் வாக்கடை புருஷோத்தமன் நம்மிடம், ""மாடுக்கான கொட்டகையை 14ஷ்14 அளவில் ரூபாய் 1.5 லட்சத்திலும், ஆடு, கோழி கொட்டகை 14ஷ்20 என்கிற அளவில் 2.25 லட்சத்தில் அமைத் துத் தரப்படும். இரும்பு தகரத் தாலான கொட்டகையமைத்து, அந்தக் கொட்டகையைச் சுற்றி ஒரு அடி உயரத்துக்கு தண்ணீர் வராததுபோல் சுற்றிலும் சுவர் கட்டவேண்டும், ஜல்லி போட்டு கீழே தரை அமைக்கவேண்டும். ஆனால் இதற்கு நேர்மாறாக சிம்பிளாக கொட்டகை அமைத் துத் தந்துள்ளார்கள் காண்ட் ராக்ட்காரர்கள். சுற்றிலும் சுவர்கூட கட்டவில்லை, தரை போடவில்லை, 4ஷ்4 அளவில் தண்ணீர்த் தொட்டி கட்டித் தரவேண்டும். அதுவும் கட்ட வில்லை. கலசப்பாக்கம், தண்டராம்பட்டு, செய்யார், கீழ்பென்னாத்தூர் உட்பட சில ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமங்களில் தரமற்ற வகையில் கொட்டகை அமைத்துத் தரப்பட்டுள்ளது.

இப்படியொரு கொட்டகை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சேலத்தைச் சேர்ந்த, முதலமைச்சருக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு வழங்கியுள்ளதாகக் கேள்விப்படுகிறோம். அந்த நபர் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இந்த கொட்டகை அமைக்கும் பணியைச் செய்கிறார். அந்த கொட் டகை அமைக்க மொத்தமே 19 ஆயிரம் முதல் 25 ஆயிரம் மட்டுமே செலவாகியிருக்கும். மாடு அமைக்கும் கொட்டகையில் 1.15 லட்சமும், ஆடு கொட்டகை அமைப்பதில் 2 லட்ச ரூபாய் வரை ஊழல் செய்துள்ளார்கள். இந்த ஊழலுக்கு அதிகாரிகள் துணை போயுள்ளார்கள்'' என்கிறார் கொந்தளிப்பான குரலில். இந்த திட்டத்தில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து விவசாய சங்கத்தினருடன் சென்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதாவிடம் நாம் கேட்டபோது, ""ஒரே நபருக்கு ஒப்பந்தம் வழங்கினோம் என்பது தவறானது. 4 ஒப்பந்ததாரர்களுக்கு ஒன்றியங்களைப் பிரித்துத் தந்து அவர்கள்தான் அந்த வேலையைச் செய்கிறார்கள்.. கொட்டகை அமைக்கப்பட்டது குறித்து நாங்கள் சென்று ஆய்வு செய்யும்போது, பல இடங்களில் பயனாளிகள் சுற்றுச்சுவர் அமைக்கவேயில்லை. தவறு எங்காவது நடந்திருந்து முறையாக எங்களுக்கு புகார் தந்தால் அதன்மீது நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்''’என்றார்.

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் வட்டத்தில் விசாரித்தபோது, ""சில புகைப்படங்களை காட்டி இப்படித்தான் கொட்டகை அமைக்கவேண்டும். கொட்டகை அமைக்கும் பணியிலுள்ள ஒப்பந்ததாரர்கள் பெரும்பாலான இடங்களில் இப்படி அமைக்காமல் சிம்பிளாக அமைத்துள்ளார்கள். இதை பல பி.டி.ஓ.க்களும் பங்கு வாங்கிக்கொண்டு கண்டும் காணாமல் விட்டுள்ளார்கள். அதோடு ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்கள் குறிப்பிடும் நபர்களுக்கு கொட்டகை தந்துவிட்டார்கள். விவசாய சங்க பிரமுகர்கள், விவசாயிகள் மனுக்கள் தந்தபோது அதனை வாங்கி வைத்துக்கொண்டார்களே தவிர முறையாக அதனை ஆன்லைனில் பதிவு செய்யவில்லை, உண்மையான பயனாளிகளுக்கு ஒதுக்கவில்லை. இதில் கோபமான விவசாய சங்க பிரமுகர்கள் இப்போது பிரச்சனையைக் கிளப்பி யுள்ளனர்''’என்றார்கள்.

"இந்த திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே ஊழல் நடந்துள்ளது. ஆயிரக்கணக்கான கொட்டகை அமைப்பதில் கோடிகளில் ஊழல் செய்துள்ளார்கள். மத்திய அரசு திட்டம் என்பதால் மத்திய அரசு கமிட்டி அமைத்து களத்துக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என டெல்லிக்கும் புகார் அனுப்பியுள்ளார்கள் விவசாய சங்கத்தினர். ஜெயலலிதா ஆட்சியில் சுடுகாட்டு கொட்டகையில் ஊழல் நடந்தது. ஜெயலலிதா பெயரைச் சொல்லி நடக்கும் ஆட்சியில் மாட்டுக் கொட்டகையில் ஊழலோ ஊழல்!

-து. ராஜா

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்

nkn281020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe