கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி மதுரை த.வெ.க. பெண் நிர்வாகி சத்யா, வடக்கு மாவட்டச் செயலாளர் விஜயன்பன் கல்லானை மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறி தன் ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தியது த.வெ.க.வை அதிர வைத்திருக்கிறது.
உண்மையை அறிய அவரைத் தொடர்புகொண்டோம். “"என் பேரு சத்யா. 19 வயசிலிருந்து விஜய் அண்ணனின் தீவிர ரசிகை. கட்சிக்காக பல்வேறு நலத்திட்டங்கள், பல்வேறு பொதுச்சேவைகள் செய்துள்ளேன். விஜய் மக்கள் இயக்கம் முதற்கொண்டே இருக்கிறேன். கல்லானை விஜயன், போராட் டத்திற்கு 200 பெண்கள் வேணும் என்பார். உடனே ஏற்பாடு செய்துகொடுப்பேன். த.வெ.க. மதுரை மாநாட்டிற்கு மட்டும் 5 லட்சம் வரை செலவு செய்திருக்கிறேன். நலத்திட்டங்கள் செய்யணும், அதுக்கு பணம் வசூலித்துக் கொடு என்பார். நான் கைக்காசு போட்டுக் கொடுப்பேன். உன்னை கவுன்சிலர் ஆக்கிவிடு கிறேன், மகளிரணியில் முக்கிய பொறுப்பு கொடுக்கிறேன் என்றார். இதுவரை என் கையிலிருந்து 25 லட்சம் வரை செலவு பண்ணிட்டேன். இப்ப வேற ஒருத்தருக்கு அந்த பதவியைக் கொடுத்துட்டார். இதைப் போய் கேட்கப்போனா என்னை ஒருமையில் மரி யாதையில்லாம பேசு கிறார்''’என்று ஒரு வீடி யோவை காண்பிக்கிறார்.
"மதுரையில் த.வெ.க. சார்பில் நலத்திட்டங் கள் செய்வதாக சொல்லி கட்சி நிர்வாகிகளிடம் 50 லட்சம் வரை வசூல்செய்தார் விஜயன்பன் கல்லானை. ஆனால் இன்றுவரை அந்த நலத்திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. கீழ்மட்டத்தி-ருந்து மேல்மட்டம் வரை, அதாவது வட்டச் செயலாளர் பதவிக்கு 5 லட்சம், பகுதிச் செயலாளர் பதவிக்கு 15 லட்சம், இளைஞரணி, மகளிரணி என்று ஒவ்வொரு பதவிக்கும் லட்சங்கள் கைமாறுகின்றன. மதுரையில 100 வார்டுக்கு 100 வட்டச் செயலாளர் கள் இருக்காங்க. எல்லா மாவட்டத்திலயும் இப்படிதான். அதுல உச்சத்தில் இருக்கிறது கல்லானை விஜயன்பன். இவர் புஸ்ஸி ஆனந்திற்கு நெருக்கமானவராக இருக்கிறார். பொதுச்செய லாளருக்கு குடுக்கணும் என்றுதான் பணத்தை வாங்குகிறார். விஜய் அண்ணாக்கு இதெல்லாம் தெரியுமானு தெரியலை''’என்றார் வருத்தமாக.
அடுத்தநாள் கல்லானை விஜயன்பன் ஆதரவாளர்களான மகளிரணியினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காவல்துறை ஆணையரிடம், த.வெ.க. மாவட்டச் செயலாளர் விஜயன்பன் கல்லானை மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பிவரும் சத்யாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி புகாரளிக்க குவிந்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/29/madurai1-2025-12-29-17-14-19.jpg)
இதுதொடர்பாக த.வெ.க. மாவட்டச் செயலாளர் கல்லானை விஜயன்பனை தொடர்பு கொண்டோம். அவர் நம்மிடம், “"முதலில் இந்த பொண்ணு மேல பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. நலத்திட்டங்கள் செய்வதாகச் சொல்லி வசூல் செய்துள்ளார் என்று தொடர்ச்சியாக புகார்கள் வந்ததால் இவருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை. மோசடி வழக்குகளும் உள்ளன. என்மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பியதால் அவர்மீது வழக்கு தொடரப்போகிறோம். இந்தப் பெண்ணின் பின்னால் பழைய மாவட்ட நிர்வாகி முத்தலிப் மற்றும் சிலர் இருந்துகொண்டு எனக்கு எதிராகத் தூண்டிவிடுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமைக்கு முழு விளக்கம் கொடுத்துவிட்டேன். பத்திரிகைகள்தான் இந்த சின்ன விசயத்தை ஊதிப் பெரிதாக்குகின்றனர்'' என்று முடித்துக்கொண்டார்
முத்தலீப்பைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். “"நான் கடந்த 30 வருடங்களாக விஜய் ரசிகராக இருக்கிறேன். விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அதில் ரசிகர்களாக இருந்தவர்களை மக்கள் பணியில் ஆர்வத்துடன் இறங்கவைத்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்களை போட்டு கவனிக்கவைத்தார். 2010-ல் உள்ளாட்சித் தேர்தலில் சந்திரசேகரின் வழிகாட்டுதலில் பல்வேறு நிர்வாகிகள் வெற்றிபெற்றனர். புஸ்ஸி ஆனந்த் வந்தபிறகுதான் பிரச்சனையே ஆரம்பித்தது. மாசத்திற்கு ஒருமுறை சென்னையில் விஜய் வீட்டிற்கு சென்றுவருவோம். விஜய் வீட்டிலுள்ள அனைவரின் போன் நம்பரிலும் தொடர்புகொள் வோம். என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான பொறுப்பாளர்களை புஸ்ஸி தலையெடுத்தவுடன் வெளியேற்றினார். இப்ப உண்மையான விசுவாசமுள்ள யாருமே போஸ்டிங்கில் இல்லை. எங்க கட்சி இன்னும் தேர்தலையே சந்திக்கலை. அதுக்குள்ள தமிழ்நாட்டுல இருக்க 32 மாவட்டச் செயலாளர்கள் கொள்ளையடிக்க ஆரம்பிச்சிட் டாங்க விஜய் பேரைச்சொல்லி. கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை போஸ்டிங் போடுகிறோம் என்ற பெயரில் புஸ்ஸி ஆனந்தில் ஆரம்பிச்சு ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் டார்கெட் வைத்து வசூல்வேட்டை நடக்கிறது. பதவி போடுவதிலேயே பல கோடி கொள்ளை நடந்துள்ளது. ஊழலை, லஞ்சத்தை எதிர்ப்போம் அப்படின்னு எங்க தலைவர் இந்த கட்சியை ஆரம்பிச்சாரு. ஆனா எல்லா ஊழலும் இந்த கட்சியில்தான் இருக்கு.
மதுரையில் முதன்முதலில் விஜய்க்கு போஸ்டர் ஒட்டி தியேட்டரை அலங்கரித்து மக்கள் இயக்கத்தை வளர்த்த இன்பராஜ் முத்தலிப், திருச்சி ராஜாங்கம், கோவை ராஜா என்று ஆயிரக் கணக்கானவர்கள் கட்சிக்கு வெளியே நிற்கிறோம். காசு பணம் உள்ளவன் விஜய்க்கு அருகில் இருக்கிறான். விஜய்யை அவரின் அப்பா சந்திர சேகரே நினைத்தாலும் உடனே பார்க்கமுடியாது. தலைவர் யார் பிடியிலோ சிக்கியிருக்கிறார்'' என்றார் வருத்தமாக.
ஊழலோ ஊழலென்று த.வெ.க.வில் வசூல் வேட்டை நடப்பது அம்பலப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/madurai-2025-12-29-17-14-01.jpg)