"ஹலோ தலைவரே, விரைவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் அதிரடி மாற்றம் கோட்டைவரை நடக்கப்போகுது.''”
"சட்டமன்றக் கூட்டம் நடந்துக்கிட்டு இருக்குதேப்பா? பொதுவாக இந்த மாதிரி நேரத்தில் உயர் அதிகாரிகளின் டிரான்ஸ்பர்கள் இருக்காதே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் 21 ஆம் தேதியோடு முடிவடைகிறது. அதன் பிறகுதான் இந்த அதிரடி மாற்றங்கள் இருக்கப்போகுது. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரும் இன்னும் தலைமைச் செயலகத்தில் மாற்றப்படாமல் இருக்கிறார்கள். இவர்களில் பலரும் அ.தி.மு.க.வின் ஊழல் ஆட்சிக்குத் துணை போனவர்கள்தான். அதனால் இவர்களை வெளியே அனுப்பிவிட்டு, கோட்டைக்கு வெளியே இருக்கும் திறமைவாய்ந்த நேர்மையான அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் அங்கே நியமிக்க விறுவிறுப்பாக வியூகம் வகுத்து வருகிறாராம். கோட்டையில் நீண்ட வருடங்களாக ஒரே துறையில் நங்கூரம் அடித்து அமர்ந்திருக்கும் அப்படிப்பட்ட ஊழல் அதிகாரிகள்தான், தன் கவனத்துக்கு உண்மையான தகவல்கள் வராமல் தடுப்பதாகவும் அவர் நினைக்கிறாராம். முதல்வரின் இந்த முடிவு செயல்வடிவம் ஆகும்போது, கோட்டையே ஒட்டடை அடித்த மாதிரி ஆகிவிடும் என்கிறார்கள் அங்குள்ள நேர்மையான அதிகாரிகள்.''”
"மாஜி முதல்வர் எடப்பாடி மீது ஊழல் புகார் பதிவாகி இருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் போது, அவரே பொதுப்பணித் துறையை தன்வசம் வைத்திருந்தார். அப்போது அந்தத் துறையின் மூலம் புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. மத்திய மாநில அரசுகளின் நிதிப்பங்கீட்டில் கட்டப்பட்ட இவற்றின் மொத்த மதிப்பீடு 4,080 கோடி ரூபாய். ஆனால் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக இந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டதாகவும், அதில் அதிக அளவுக்கு ஊழல்கள் நடந்திருப்பதாகவும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் போனது. அதனை ஆராய்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை, புகாரில் கூறப்பட்டது உண்மை என்றும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி, அதன் அடிப்படையில் எடப்பாடி மீது வழக்கு பதிவு செய்ய அரசிடம் அனுமதி கேட்டது. இந்த விசயத்தில் நீண்ட நாட்களாக எந்த முடிவையும் எடுக்காத தி.மு.க. அரசு, கடந்தவாரம் ஒருவழியாக இதற்கு அனுமதி அளிக்க, அதன் அடிப்படையில், மருத்துவக் கட்டிட ஊழல் தொடர்பாக வழக்கை எடப்பாடி மீது பதிவு செய்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை.''”
"இது எடப்பாடிக்கு நெருக் கடியை ஏற்படுத்துமே?''”
"ஆமாங்க தலைவரே, இந்த மருத்துவக் கட்டிட ஊழல் தொடர்பாக விசாரிக்க, எடப் பாடிக்கு சம்மன் அனுப்புவது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசித்து வருகிறது. இதன் படி சம்மன் அனுப்பி எடப்பாடியை விசாரித்த பிறகு, அவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த ஊழல் விவகாரம் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும், கொடநாடு போல நீண்ட நாட்களுக்கு இந்த வழக்கில் அவர் தப்பிக்க முடியாது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரம் சொல்லுது. இது ஒருபுறம் இருக்க, இந்த ஊழல் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் என்ன மாதிரி யான ஆதாரங்களையும், புள்ளி விபரங்களையும் திரட்டியிருக்கிறார் கள் என்கிற விபரங்கள், முன் கூட்டியே லஞ்ச ஒழிப்புத்துறையின் கருப்பு ஆடுகள் மூலம் எடப்பாடிக் குப் போயிருக்கிறதாம். அதைப் பார்த்து ஷாக் ஆன அவர், இந்த வழக்கை எப்படி எதிர்கொள்வது என்று இப்போதே சட்ட ஆலோ சனையில் இறங்கிவிட்டாராம்.''”
"இந்த நேரத்தில் பா.ஜ.க. விடம் இருந்து கூட்டணி தொடர் பான நெருக்கடியும் எடப்பாடிக்கு வந்திருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று கேட்டு, எடப்பாடி தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 10 நாட்களுக்குள் முடிவெடுக்கும் படி, நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது. இதைக் கவனித்த பா.ஜ.க. தலைமை, எங்களுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்த லின் போது, அதிக சீட்டை ஒதுக்குவதாக நீங்கள் உத்தரவாதம் கொடுத்தால்தான், உங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் இரட்டை இலை சின்னம் கிடைக்க நாங்கள் உதவுவோம் என்று இன்னொரு பக்கம் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறதாம். இதில் என்ன முடிவு எடுப்பது என எடப்பாடி தவித்து வருகிறாராம்.''
"“அ.தி.மு.க. எக்ஸ். எம்.எல்.ஏ.வின் பண்ணைத் தோட்டத்தில் ரெய்டு நடந்திருக்கிருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வின் எக்ஸ் எம்.எல்.ஏ.வான தி.நகர் சத்யாவுக்கு, ஆந்திர மாநில எல்லை யில் ஒரு பண்ணைத் தோட்டம் இருக்கிறது. சகல வசதிகளும் இருக்கும் அந்த பண்ணைத் தோட்டம், அண்மையில் திடீர் ரெய்டுக்கு ஆளானது. இரவு, பகலாக அந்த பண்ணைத் தோட்டத்தில் இருந்த ஆவணங்களை எல்லாம் சல்லடை போட்டு சலித்திருக்கிறார்களாம். இதை எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டுபோன சத்யா, "இது தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கண்டன அறிக்கை வெளி யிடுங்கள்' என்று கேட்டுக்கொண்டாராம். அதேபோல் சென் னையில் இருக்கும் அ.தி.மு.,க. மா.செ.க்கள் ஐந்துபேரும் எடப் பாடிக்கு நிர்பந்தம் கொடுத்தனராம். ஆனால் எடப் பாடியோ, அதுபற்றி மூச்சுகூட விடவில்லை. கார ணம், சத்யாவும் அந்த மா.செ.க்களும் அண்மைக் காலமாக ஆளுங்கட்சியான தி.மு.க.வுடன் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார்களாம்.''”
’"திருச்சி காவல்துறையில் ஒரு செய்தி பரபரப்பா ஓடிக்கிட்டு இருக்குதே?''”
”"ஆமாங்க தலைவரே, ஒரு இளம்பெண் கொடுத்த பாலியல் வன் கொடுமைப் புகாரின் அடிப்படை யில், திருச்சி போலீஸ் டீம், பிரதீப் கிறிஸ்டல்ராஜ் என்பவ ரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது. செக்ஸ் வன்கொடுமைப் புகார் என்பதால் அவரது செல்போனை ஆராய்ந்த காக்கிகள் அதிர்ந்துபோய் விட்டார்கள். காரணம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவஆசிர் வாதம், கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் அந்த நபர் இருக்கும் படங்கள் அதில் நிறைய இருந்திருக் கிறது. அந்த நபரை விசாரித்தபோது, "நான் கோவை கமிஷனருக்கு உற வினர். மற்றவர்கள் என் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள். எனக்கு ஒன்னுன்னா அந்த மினிஸ் டர் ஆடிப்போயிடுவார். பார்க்கறீங் களா? போன் போடுறேன்...'’ என்றபடி அந்த நபர் செல்போனை எடுக்க, பதறிப்போன போலீஸார் அதைத் தடுத்ததோடு, அந்த போக்சோ குற்றவாளி கிறிஸ்டல் ராஜை வெளியே அனுப்பி வைத்துவிட்டார்களாம்.''”
"ரெய்டு, போலீஸ் விவகாரமெல்லாம் இருக்கட்டும்பா. ஓ.பி.எஸ். தரப்பு ஆளும் கட்சியின் தயவை எதிர்பார்க்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்த மாதம் 24ஆம் தேதி திருச்சி யில் முப்பெரும் விழா மாநாட்டை பிரமாண்டமாக நடத்தத் திட்ட மிட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். அ.தி.மு.க. தொண்டர்கள் தன்னு டன்தான் இருக் கிறார்கள் என்பதை எடப்பாடிக்கும் மோடிக்கும் காட்டுவதற்காகவே இந்த மாநாட்டை அவர் பெரிய அளவில் நடத்த நினைக்கிறாராம். இதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன. எடப் பாடிக்கு எதிராக அரசியல் செய்ய நினைக்கும் தனக்கு, தி.மு.க. உதவிகளைச் செய்ய வேண்டும் என்று ஆளும்கட்சி யிடம் ரூட் போட்டிருக்கிறாராம் ஓ.பி.எஸ். எடப்பாடியை பலவீனமாக்கும் ஒரு அரசியல் சக்தி தேவை என்று கணக்குப் போட்ட அறிவாலயத் தரப்பும், ஓ.பி.எஸ்.ஸுக்கு உதவ க்ரீன் சிக்னல் காட்டியிருக்கிறதாம். இதையொட்டி மாநாட்டுக்கான செலவுகளுக்கு உதவும் பொறுப் பையும், அதற்கு கூட்டம் கூட்ட உதவும் வியூகத்தையும் அமைச் சர் நேருவிடம் ஒப்படைத் திருக்கிறதாம் அறிவாலயம். இதற்கிடையே தி.மு.க.வுக்குத் தெரியாமல் சசிகலா, தினகர னிடமும் இதே டிமாண்டை வைத்திருக்கிறாராம் கில்லாடியான ஓ.பி.எஸ்.''”
"மக்கள் நலப் பணி யாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண் டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறதே?''”
"தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மக்கள் நலப் பணியாளர்களாக நிய மிக்கப்பட்டவர்களை, அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சியில், அப்போதைய முதல்வரான ஜெ.’ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இது தொடர்பாக தொடரப் பட்ட வழக்கில், மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கும் மீண்டும் பணி வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அ.தி.மு.க. ஆட்சியின்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த 11ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் தொடரும் வரை, மக்கள் நலப் பணி யாளர்கள் ஒருங்கிணைப் பாளர்களாகத் தொடரு வார்கள் என்று தீர்ப்பளித் திருக்கிறது. இந்த, மக்கள் நலப் பணியாளர்களை ஜெ.விடம் சொல்லி, நீக்கவைத்தவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சோ.அய்யர்தான். இவர், ஓய்வு பெற்று பல ஆண்டுகள் கடந்த நிலையில், சீர்மரபினர் நல வாரியத்தின் தலைவராக கடந்த 2020-ல் நியமித்தார் அன்றைய முதல்வரான எடப்பாடி. அதற்குக் காரணம், ஆட்சி நிர்வாகத்தில் மறை முகமாக ஆதிக்கம் செலுத்திய முக்குலத்தோர் லாபிதான் என்கிறார்கள் மக்கள் நலப் பணியாளர்கள்.''
"கடந்த நக்கீரன் இதழில் குறிப்பிட்டிருந்த செய்திக்கு, ஸ்டான்லி மருத்துவத்துறை தலைவர் பாலசுப்பிரமணியன் விளக்கம் தந்திருக்காராமே?''
"ஆமா தலைவரே... "பிரேத பரிசோதனையில் ஃபோர்ஜரி! லஞ்சத்தில் புரளும் ஸ்டான்லி மருத்துவமனை' என்ற கட்டுரையில், தன்மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவர் அளித்த விளக்கத்தில், கோபியின் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவும், கேட்கும் ஆவணங்களைத் தரவும் தயாராக இருப்பதாகவும், ஆவணங்களைத்தர மறுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.''
"நானும் ஒரு தகவலை பகிர்ந்துக்கிறேன். பிரதமர் மோடியின் தமிழக விசிட்டின் போது, அண்ணாமலையையும் அவருடைய வலதுகரமான அமர்பிரசாத் ரெட்டியையும், மோடியின் கண்ணி லேயே படக்கூடாது என்று கட்சியின் மேலிடம் தடை விதித்திருந்தது. இதன் அடிப்படையில் அண்ணாமலை டெல்லியிலேயே நிறுத்திவைக்கப் பட்டார். அமர்பிரசாத் ரெட்டியோ, லோக்கல் பா.ஜ.க.வினருக்குத் தண்ணி காட்டிவிட்டு, மோடியின் விவேகானந்தர் இல்ல நிகழ்ச்சியில் தலையைக் காட்டினார். இதற்காக அந்த இல்லத்தின் நிர்வாகியை அவர் கவனித்து, வாலண்டரி பாஸ் ஒன்றை வாங்கிக்கொண்டு, மோடியின் பார்வையில் படும்படி அவருக்கு எதிரே போய் உட்கார்ந்துவிட்டாராம். அமர்பிரசாத்தின் இந்த மோடி வித்தை கமலாலயத் தரப்பை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.''
__________
இறுதிச் சுற்று!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையின்போது விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய துறையின் அமைச்சர் உதயநிதி, "கிரிக்கெட் மேட்ச் பார்க்க டிக்கெட் வாங்கித் தரவேண்டும்' என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டதாகச் சுட்டிக்காட்டிய போது, தனது பேச்சில் மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா மற்றும் அவரது மகன் ஜெய்ஷா ஆகியோரின் பெயரை பயன்படுத்தினார். உதயநிதியின் அந்த பேச்சு முதல்வர் ஸ்டாலின் உடபட அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சிரிக்க வைத்தது. இந்த நிலையில், 13-ந்தேதி கூடிய சட்டப்பேரவையில், "உதயநிதி பயன்படுத்திய அமீத்ஷா, ஜெய்ஷா பெயரை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்' என்று தமிழக பா.ஜ.க. நயினார், வானதி வலியுறுத்திய நிலையில் அது ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்தனர் தமிழக பா.ஜ.க.வினர்.
-இளையர்