போலீஸ் அதிகாரிகள் மூலம் தப்பிக்கப் பார்க்கும் ஊழல் மாஜிகள்!

velumani

ழல் கறை படிந்த அ.தி.மு.க. அமைச்சர்கள், புதிதாக அமைந்த தி.மு.க. அமைச்சரவை தாக்குதல் தொடுத்தால் எப்படி தப்பிக்கலாம் என ஒரு புதிய திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்கள் என தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவை பகுதியில் தேர்தல் முறைகேடுகள் படுமோசமாக நடக்கிறது என தி.மு.க., மத்திய தேர்தல் கமிஷன் வரை புகார் செய்தது. அதன்படி டேவிட்சன் தேவஆசிர்வாதம் என்கிற அதிகாரி, கோவையில் பொறுப்பேற்றார். அறிவரசு என்கிற ஐ.பி.எஸ். அதிகாரி மாற்றப்பட்டார். ஆனாலும் வெற்றிகரமாக அ.தி.மு.க.வின் பண விநியோகம் கோவை மாவட்டத்தில் நடைபெற்றது.

velumani

பண விநியோகம் செய்த அ.தி.மு.க.வினரை டேவிட்சனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதற்குக் காரணம் போலீஸ் படையின் ஒரு பிரிவை இந்தப் பண விநியோகத்திற்கு டெக்னிகலாக அ.தி.மு.க.வின் அமைச்சர் வேலுமணி பயன்படுத்தியதுதான்.

சாதாரண போலீஸ் வண்டியில் சென்றால்கூட போலீசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என வேலுமணி, தீயணைப்புத் துறையின் அவசர கால மீட்பு வாகனத்தை உபயோகித்தார். அந்த வாகனம் சைரன

ழல் கறை படிந்த அ.தி.மு.க. அமைச்சர்கள், புதிதாக அமைந்த தி.மு.க. அமைச்சரவை தாக்குதல் தொடுத்தால் எப்படி தப்பிக்கலாம் என ஒரு புதிய திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்கள் என தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவை பகுதியில் தேர்தல் முறைகேடுகள் படுமோசமாக நடக்கிறது என தி.மு.க., மத்திய தேர்தல் கமிஷன் வரை புகார் செய்தது. அதன்படி டேவிட்சன் தேவஆசிர்வாதம் என்கிற அதிகாரி, கோவையில் பொறுப்பேற்றார். அறிவரசு என்கிற ஐ.பி.எஸ். அதிகாரி மாற்றப்பட்டார். ஆனாலும் வெற்றிகரமாக அ.தி.மு.க.வின் பண விநியோகம் கோவை மாவட்டத்தில் நடைபெற்றது.

velumani

பண விநியோகம் செய்த அ.தி.மு.க.வினரை டேவிட்சனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதற்குக் காரணம் போலீஸ் படையின் ஒரு பிரிவை இந்தப் பண விநியோகத்திற்கு டெக்னிகலாக அ.தி.மு.க.வின் அமைச்சர் வேலுமணி பயன்படுத்தியதுதான்.

சாதாரண போலீஸ் வண்டியில் சென்றால்கூட போலீசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என வேலுமணி, தீயணைப்புத் துறையின் அவசர கால மீட்பு வாகனத்தை உபயோகித்தார். அந்த வாகனம் சைரன் ஒலி எழுப்பியபடி தேர்தல் கமிஷன் அமைத்திருந்த போலீஸ் சாவடிகளைக் கடந்து சென்று கோவையில் முதலில் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட தீயணைப்பு வாகன பண விநியோகம் அடுத்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் பயன்படுத்தப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் தீயணைப்புத்துறையின் இணை இயக்குநரான பிரியா ரவிச்சந்திரன்தான். அமைச்சர் வேலுமணிக்கு வேண்டியவரான பிரியா சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்பட்டவர், தீயணைப்புத்துறையில் டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு.

ஜூன் 30-ம் தேதியன்று ஓய்வுபெறும் டி.ஜி.பி. திரிபாதிக்குப் பதில் சைலேந்திரபாபுவை டி.ஜி.பி.யாக்க ஒரு பெரும் முயற்சி நடக்கிறது. "இவர் டி.ஜி.பி.யாக வந்துவிட்டால் அ.தி.மு.க. அமைச்சர்கள் அதிலும் குறிப்பாக வேலுமணிக்கு எதிராக வரும் ஊழல் வழக்குகளை கபளீகரம் செய்துவிடலாம் என அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களான முதல்வர் எடப்பாடி, ஓ.பி.எஸ். உட்பட அனைவரும் காத்திருக்கிறார்கள்' என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

ஜெ.வுக்கு நெருக்கமான வால்டர் தேவாரத்தின் சிஷ்யரான சைலேந்திரபாபு, "தேவாரம் என் குரு' என பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அவரது சமூகத்தைச் சேர்ந்தவரான பாபுவுக்கு அதே சமூகத்தைச் சேர்ந்த உளவுத்துறை ஏ.டி .ஜி.பி.யாக பதவி வகிக்கும் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் உதவி செய்துவருகிறார். அவருடன் சசிகலாவுக்கு நெருக்கமான சட்டம்-ஒழுங்கு பிரிவு டி.ஜி.பி.யாக உள்ள தாமரைக் கண்ணனும் கைகோர்க்கிறார் எனச் சொல்கிறார்கள் காவல் துறையினர்.

கடந்த 2016 சட்ட மன்றத் தேர்தலில் சென்னை மாநகரத்திலும் சுற்றுப்புறங்களிலும் தி.மு.க. பெரிய அளவுக்கு வெற்றிபெற்றது. அதற்குக் காரணம் ஒரு போலீஸ் அதிகாரி. தனது மனைவியைக் கூட போலீஸ் ஜீப்பில் ஏற்றாத நேர்மையானவர் என பெயர்பெற்ற அந்த அதிகாரி, சென்னை நகர கமிஷனராக இருந்தார். ஜெயலலிதாவின் தலைமையில் அ.தி.மு.க.வினர் செய்த அனைத்து தில்லுமுல்லு களையும் முறியடித்தார். அதனால் கோப மடைந்த ஜெ. அவரை முக்கியத்துவம் இல்லாத துறைக்கு தூக்கியடித்தார். ராஜேஷ்தாஸ் மீது பாலியல் புகார் எழுந்தபோது, நேர்மையாளரான இவரைத்தான் மதுவிலக்குத் துறைக்கு எடப்பாடி நியமித்தார். அவர் பெயர் கரண்சின்ஹா.

சீனியாரிட்டி அடிப்படையில் அவர்தான் திரிபாதி ஓய்வுபெற்றவின் டி.ஜி.பி.யாக வரவேண்டும். அவருக்கு திடீரென ஒரு பதவி மாற்றத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அவரை சைலேந்திரபாபு கூடுதலாக கவனித்து வகித்து வந்த தீயணைப்புத்துறைக்கு மாற்றியுள்ளார்கள்.

சைலேந்திரபாபுவின் துறையில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சமீபத்தில் எழுந்தது. நக்கீரனிலும் கடந்த இதழில் அவரது கருத்தோடு அது குறித்த செய்திகள் இடம்பெற்றது. அதனால் அவரை மாற்றுகிறோம் என்ற போர்வையில் கரண்சின்ஹாவிற்கு தீயணைப்புத் துறை பதவியை தந்திருக்கிறார்கள். இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

"டி.ஜி.பி. பதவியில் சைலேந்திரபாபுவுக்கு போட்டியாளராக இருந்த கரன்சின்ஹாவிற்கு தீயணைப்புத் துறை பதவி கொடுத்ததனால் உடடினயாக அவரை அங்கிருந்து மாற்ற முடியாது. அதனால்தான் இந்த மாற்றம்'' என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

அதேநேரத்தில் டேவிட் சன் தேவஆசிர்வாதத்திற்கு போட்டியாக உளவுத்துறை தலைவர் பதவிக்கு முயற்சி செய்த ஏ.கே.விஸ்வநாதனை யூனிஃபார்ம் இல்லாத காவலர் வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக அனுப்பி வைத்தனர்.

ve

அத்துடன், மாற்றல் உத்தரவு பிறப்பித்த பிறகும் நான் போகமாட்டேன் என லஞ்ச ஒழிப்புத்துறையில் அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் ஃபைல்களை மாற்றம் செய்யும் வேலையில் வேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் ராதிகா என்கிற டி.ஐ.ஜி. அவரது செயல்பாடு களால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் களுக்கு எதிராக எந்த ஊழல் விசாரணை யும் நடைபெறவில்லை என வருத்தப் படுகிறார்கள், காவல்துறையைச் சேர்ந்த வர்கள். ஒருபக்கம், அ.தி.மு.க. ஆட்சி யிலிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ராதிகா, அவருடன் இப்போதிருக்கும் அதிகாரிகள் எதிர்காலத்தில் சைலேந்திரபாபு என கனகச்சிதமாக தேர்வுகளை போலீஸ் அதிகாரிகள் மூலம் நடத்தி, ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்கலாம் என திட்டம் போட்டு செயல்படுகிறார்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள்.

கொரோனா பேரிடரைப் போலவே இதுவும் பேரிடர் என்பதை முதல்வரின் கவனத்துக்கு யார் எடுத்துச்செல்லப் போகிறார்கள்?

nkn010621
இதையும் படியுங்கள்
Subscribe