Advertisment

கார்ப்பரேட்டுகள் வசமாகும் ஏரி, குளங்கள்! போராட்டத்தில் விவசாயிகள்!

cc

சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக விவசாயிகளிடமிருந்து நிலம் எடுப்பதை எளிதாக்கும் வகை யில் "தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங் கிணைப்புச் சட்டம்' என்ற சட்டம் கடந்த 2023, ஏப்ரல் 21ஆம் தேதி சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டது. கடந்த ஆகஸ்டில் தமிழக கவர்னரும் ஒப்புதலளித்தார். விவசாயிகள் நலனுக்கு எதிரான இந்த சட்டத்தை கம்யூனிஸ்ட், பா.ம.க. உறுப்பினர்கள் எதிர்த்த நிலையில், திடீரென கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

"இந்த சட்டத்தின்படி, உள்கட்டமைப்பு, வணிகம், தொழில் சார்ந்த துறைகள், வேளாண்மை சார்ந்த ஏதேனும் திட்டங்களைச் செயல்படுத்த விரும்பும் தனியார் நிறுவனங் களுக்கு மாநில அரசு ஒப்புதல் தந்துவிட்டால், அந்தத் திட்டத்தை செயல்படுத்த அவர்கள் கையகப்படுத்த நினைக்கும் நிலத்திற்கு அருகி லுள்ள நீரோடைகள், நீர்வரத்துக் கால்வாய்கள், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை அவர்கள் வசம் எடு

சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக விவசாயிகளிடமிருந்து நிலம் எடுப்பதை எளிதாக்கும் வகை யில் "தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங் கிணைப்புச் சட்டம்' என்ற சட்டம் கடந்த 2023, ஏப்ரல் 21ஆம் தேதி சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டது. கடந்த ஆகஸ்டில் தமிழக கவர்னரும் ஒப்புதலளித்தார். விவசாயிகள் நலனுக்கு எதிரான இந்த சட்டத்தை கம்யூனிஸ்ட், பா.ம.க. உறுப்பினர்கள் எதிர்த்த நிலையில், திடீரென கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

"இந்த சட்டத்தின்படி, உள்கட்டமைப்பு, வணிகம், தொழில் சார்ந்த துறைகள், வேளாண்மை சார்ந்த ஏதேனும் திட்டங்களைச் செயல்படுத்த விரும்பும் தனியார் நிறுவனங் களுக்கு மாநில அரசு ஒப்புதல் தந்துவிட்டால், அந்தத் திட்டத்தை செயல்படுத்த அவர்கள் கையகப்படுத்த நினைக்கும் நிலத்திற்கு அருகி லுள்ள நீரோடைகள், நீர்வரத்துக் கால்வாய்கள், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை அவர்கள் வசம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு ஈடாக வேறு இடங்களில் நிலங்களை அரசிடம் ஒப்ப டைத்து விட்டால் போதும் என்கிறது இந்த சட்டம். இயற்கையாக அமைந்துள்ள ஓடைகள், குளங்கள், ஏரிகளுக்கு பதிலாக மாற்று நிலம் வழங்கினால், அதில் புதிதாக கால்வாய்கள், ஏரி, குளம், போன்ற நீர்நிலைகளை அரசால் உரு வாக்க முடியுமா? இது முட்டாள்தனமான திட் டம்'' என்கிறார்கள் ஓய்வுபெற்ற பொறியாளர்கள்.

Advertisment

cc

"தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு பெரிய அளவில் பாசனப்பரப்பை அதிகரிக்கவில்லை. ஏற்கெனவே பாசனப் பரப்பிலுள்ள ஏரிகள் தூர்வாரப்படாமல் கிடக்கின்றன. கடந்த மூன்றரை ஆண்டுகளாகக் கண்டுகொள்ளவே இல்லை. உதாரணமாக, 24 ஆயிரம் ஏக்கர் பாசன வசதியுள்ள வெலிங்டன் ஏரி நீர்த்தேக்கம் தூர்வாரப்படாமல் சிதிலமடைந்து கிடக்கிறது. இப்படியான சூழலில், ஏரி குளங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது ஏன்'' என்று கேள்வி எழுப்புகிறார், வையங்குடியைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன்.

Advertisment

ss

இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளின் பிரிவான தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைநகரில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இதுகுறித்து விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி நம்மிடம், "தனியார் நலனை மட்டுமே கருத்தில்கொண்டு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டுமே தவிர இருக்கும் நீர்நிலைகளைத் தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது. எனவே இச்சட்டத்தின் செயல் பாட்டை தமிழ்நாடு அரசு நிறுத்திவைக்க வேண்டும். இச்சட்டத்தைத் திரும்பப்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏழுமலை, "தமிழகத்தில் 41,127 ஏரிகள் இருந்தன. அவற்றின் மொத்த கொள்ளளவு, தமிழ்நாட்டி லுள்ள மேட்டூர் அணை, வைகை அணை, பவானி அணை, சாத்தனூர் அணை, அமராவதி அணை உள்ளிட்ட அனைத்து அணைகளின் கொள்ளளவை விடவும் அதிகம். இப்போது 27 ஆயிரம் ஏரிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாகப் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இந்த ஏரிகளையும் தனியாருக்கு தாரைவார்க்க நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. புதிய தொழில்கள் தொடங்குவதற்காக சிப்காட் மூலம் 45 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களை அரசு கையகப்படுத்தியுள்ள நிலையில், புதிய சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த நில ஒருங்கிணைப் புச் சட்டத்தை கொண்டுவரவேண்டிய அவசியம் என்ன?'' எனக் கேள்வியெழுப்புகிறார்.

"போதிய தடுப்பணைகள் இல்லாமல் மழைக்காலங்களில் 400 டி.எம்.சி. வரையிலான காவிரி உபரி நீர் கடலுக்கு சென்று வீணாகிறது. இதைச் சேமிக்க வழிசெய்ய வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மேட்டூரிலிருந்து வெளி யேறும் உபரி நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் சரபங்கா நீரேற்றும் திட்டத்தை அறிவித்து, அதற்கு 450 கோடி நிதி ஒதுக்கியும் ஆட்சி மாற்றத்தால் கிடப்பில் போடப்பட்ட அந்த திட்டத்தை நிறைவேற்றும்படி சில நாட் களுக்கு முன்பு சேலத்தில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்துப் பேசியுள்ளார். இப்படிப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த எந்த முயற்சியும் எடுக்க வில்லை'' எனக் குற்றம் சாட்டுகிறார்கள் விவசாய சங்க பிரமுகர்கள்.

கடந்த மார்ச் மாதம் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு வழக்கில், மதுரையில் 2 கிலோ மீட் டர் தொலைவிற்கு மேம் பாலம் அமைக்கும் பணி யால் வண்டியூர் கண்மாய், தென்கண்மாய் பாதிக்கப் படும் நிலையிருப்பதால், மேம்பாலப் பணிகளுக்கு தடைவிதிக்குமாறு மணி பாரதி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், நீதியரசர் கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு பிறப் பித்த உத்தரவில், தமிழகம் முழுவதுமுள்ள நீர் நிலை களின் உண்மையான பரப் பளவு, தற்போதைய பரப்பளவு குறித்த விவரங் களை அடுத்த ஆறு மாதங்களில் தனி இணைய தளம் உருவாக்கி வெளியிட வேண்டுமென்று அரசுக்கு உத்தரவிட்டார்கள். நீர்நிலைப் பகுதி களில் 1.1.2000ஆம் ஆண்டுக்குப் பிறகு பட்டாக் கள் வழங்கியிருந்தால், அந்த பட்டாக்களை ரத்துசெய்து நீர்நிலைகளைப் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டுமென்று உத்தரவிட்டிருந் தார்கள். இப்படியான சூழலில், நீர் நிலைகளைத் தனியாருக்கு தாரைவார்ப்பது கண்டிக்கத்தக்கது என்கிறார்கள் விவசாயிகளும், பொதுமக்களும்!

-எஸ்.பி.எஸ்.

nkn111224
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe