ரிலீஸ் நேரத்தில் கொரோனோ! கொல்லச் சதி! -ஸ்கேன் ரிப்போர்ட்!

sasi

னவரி 27ல் விடு தலையாவார் என முடிவான நிலையில், 20-ஆம் தேதி மாலை மூச்சுத்திணறல் என பெங்களூருவில் உள்ள போரிக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சசிகலாவுக்கு காய்ச்சலும், மூச்சுத்திணறலும் அதிமாக இருந்தது. 10 லிட்டர் ஆக்சிஜன் வைத்து சசிகலாவின் மூச்சுத்திணறலை மருத்துவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். அப்பொழுது சசிகலாவின் மூச்சு விடும் திறன் 78 சதவிகிதமாக இருந்தது. அதன்பிறகு விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சசிகலாவின் நுரையீரலில் 65 சதவிகிதம் கொரோனா நோய் பாதிக்கப் பட்டிருந்ததாக மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள். சாதாரண மாக 65 சதவிகிதம் நோய்த் தொற்று நுரையீரலில் பரவுவது என்பது ஒரே நாளில் நடந்துவிடாது. சசிகலாவுக்கு மட்டும் எப்படி இந்த மெடிகல் மிராகிள்?

sasi

கொஞ்சம் தாமதித்திருந்தாலும் ஜெயலலிதாவை போல எஸ்.பி பாலசுப்ரமணியம், மந்திரி துரைக்கண்ணு போல எக்மோ சிகிச்சைக்கு சசிகலாவை உட்படுத்தி இருக்க வேண்டிய மிக ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும். எனவே சசிகலாவுக்கு கொரோனா நோய் தொற்று உண்மையில் எப்போது ஏற்பட்டது என அவரது உறவினர்கள் சிறைத்துறை அதிகாரிகளை துளைத்தெடுத்தனர். சிறை நிலவரம் மெல்ல அவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது.

ilayavarasi

சசிகலாவுக்கு அதிகப்படியான காய்ச்சலும், மூச்சுத்திணறலும் 13 ஆம் தேதி முதல் இருந்து வருகிறது. சசிகலாவின் சிறையில் இருக்கும் அறை யை கண்காணிக்கும் பெண் காவலர் ஒருவர் 13 ஆம் தேதிக்கு முன்பே, பெங்களூரு மருத்துவக்கல்லூரி யுடன் இணைக்கப்பட்ட விக்டோரியா மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார். சசிகலாவுக்கு சிறையில் சிகிச்சையளித்த டாக்டர்கள் காய்ச்சலுக்கு மட்டும் மருந்து கொடுத்து சிகிச்சை அளித்து வந்த

னவரி 27ல் விடு தலையாவார் என முடிவான நிலையில், 20-ஆம் தேதி மாலை மூச்சுத்திணறல் என பெங்களூருவில் உள்ள போரிக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சசிகலாவுக்கு காய்ச்சலும், மூச்சுத்திணறலும் அதிமாக இருந்தது. 10 லிட்டர் ஆக்சிஜன் வைத்து சசிகலாவின் மூச்சுத்திணறலை மருத்துவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். அப்பொழுது சசிகலாவின் மூச்சு விடும் திறன் 78 சதவிகிதமாக இருந்தது. அதன்பிறகு விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சசிகலாவின் நுரையீரலில் 65 சதவிகிதம் கொரோனா நோய் பாதிக்கப் பட்டிருந்ததாக மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள். சாதாரண மாக 65 சதவிகிதம் நோய்த் தொற்று நுரையீரலில் பரவுவது என்பது ஒரே நாளில் நடந்துவிடாது. சசிகலாவுக்கு மட்டும் எப்படி இந்த மெடிகல் மிராகிள்?

sasi

கொஞ்சம் தாமதித்திருந்தாலும் ஜெயலலிதாவை போல எஸ்.பி பாலசுப்ரமணியம், மந்திரி துரைக்கண்ணு போல எக்மோ சிகிச்சைக்கு சசிகலாவை உட்படுத்தி இருக்க வேண்டிய மிக ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும். எனவே சசிகலாவுக்கு கொரோனா நோய் தொற்று உண்மையில் எப்போது ஏற்பட்டது என அவரது உறவினர்கள் சிறைத்துறை அதிகாரிகளை துளைத்தெடுத்தனர். சிறை நிலவரம் மெல்ல அவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது.

ilayavarasi

சசிகலாவுக்கு அதிகப்படியான காய்ச்சலும், மூச்சுத்திணறலும் 13 ஆம் தேதி முதல் இருந்து வருகிறது. சசிகலாவின் சிறையில் இருக்கும் அறை யை கண்காணிக்கும் பெண் காவலர் ஒருவர் 13 ஆம் தேதிக்கு முன்பே, பெங்களூரு மருத்துவக்கல்லூரி யுடன் இணைக்கப்பட்ட விக்டோரியா மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார். சசிகலாவுக்கு சிறையில் சிகிச்சையளித்த டாக்டர்கள் காய்ச்சலுக்கு மட்டும் மருந்து கொடுத்து சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள். 100 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த சிறையான பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு விட்டுவிட்டு ஏற்படும் காய்ச்சலுக்கு கொரோனாதான் காரணமாக இருக்கும் என ஏன் சந்தேகிக்கவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள் சசிகலாவின் உறவினர்கள்.

நம்மிடம் பேசிய சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டி, ""நான் தினமும் சசிகலாவை பற்றி விசாரிக்க சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டெண்டுக்கு போன் செய்வேன். நான் 20ஆம் தேதி கேட்கும்பொழுது அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் senthurpandyதிணறல் இருப்பதாக சொன்னார்கள். அதன்பிறகு நான் விசாரித்த பொழுது அவருக்கு 13ஆம் தேதியிலிருந்து காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இருக்கிறது என்று ஒத்துக்கொண்டார்கள். அதைத் தொடர்ந்து நான் சசிகலாவின் உறவினர்களுக்கு தொலைபேசி யில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்தேன். அவர்கள் புறப்பட்டு பெங்களூருக்கு விரைந்தார்கள். அதன்பிறகு சசிகலா போரிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சசிகலாவிற்கு கடந்த ஒரு வார காலம் கொரோனா அறிகுறிகள் இருந்திருக்கிறது. அதை சிறை நிர்வாகம் மறைத்துவிட்டது. அதைப்பற்றி வழக்கறிஞர் ஆகிய எனக்கு எந்த தகவலும் சிறை நிர்வாகம் அளிக்கவில்லை'' என அதிர்ச்சி மாறாமல் சொன்னார்.

ராஜாசெந்தூர் பாண்டி மூலமே தகவலறிந்த சசிகலாவின் உறவினர்கள், சிறை நிர்வாகத்திடம் சண்டை போட ஆரம்பித்தார்கள். அதன்பிறகு தான் சசிகலா போரிங் ஹாஸ் பிடலுக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அப்பொழுதும் சிறை வளாகத்திலேயே அவரை நடக்க வைத்தே கூட்டி வந்தனர். ஹாஸ்பிடல் சென்ற பிறகு அவர் வீல் சேரில் அமர வைக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. அவரது மூச்சுத்திணறலை நிறுத்த 10 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி செயற்கை சுவாச கருவியில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.

போரிங் மருத்துவமனை என்பது அரசாங்க மருத்துவமனை. பெங்களூர் அரசு மருத்துவமனைகளில் சி.டி ஸ்கேன் எடுக்கும் வசதி என்பது இல்லை. சசிகலாவின் உறவினர்கள் சசிகலாவிற்கு மூச்சுத் திணறல் இருப்பதால் சி.டி ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கூறியதால், 21ஆம் தேதி இரண்டு மணிக்கு அவரை விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

sasi

விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட மெடிக்கல் ரிப்போர்ட் மிகவும் அபாயகரமானதாக இருந்தது. சசிகலா கடந்த பத்து வருடமாக தைராய்டு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். ஜனவரி 21ஆம் தேதி இரவு ஒன்பதரை மணிக்குதான் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா நோயோடு நுரையீரலில் நிமோனியா காய்ச்சல் அதனுடன் ஹைப்பர் தைராய்டு என சங்கிலித் தொடர் பாதிப்புகள் கொண்ட சசிகலாவுக்கு கொரோனா நோய்க்கு அளிக்கப்படும் ஊசி செலுத்தப்படுகிறது. முதலில் 10 லிட்டர் ஆக்சிஜனுடன் தொடங்கிய சிகிச்சை அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது 4 லிட்டர், 3 லிட்டர் ஆக்சிஜனுடன் சிகிச்சை செயற்கை சுவாசம் தொடர்கிறது என விக்டோரியா மருத்துவமனையின் மெடிக்கல் சூப்பிரண்டு ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

சசிகலா உறவினர்களிடம் சிகிச்சை விவரங்களை தெளிவாக மருத்துவர்கள் எடுத்துக் கூறினார்கள். எனக்கு இங்கே அளிக்கப்படும் சிகிச்சை நன்றாக இருக்கிறது என சசிகலாவும் கூறியதால் சிகிச்சை அங்கே தொடர்ந்தது.

இதற்கிடையே சசிகலாவிற்கு செயற்கையாக கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தப்பட்டது என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதை சிறை நிர்வாகத்திடமிருந்து உளவுத்துறை மூலம் அறிந்த பிறகுதான் சசிகலாவை அதிமுகவில் நாங்கள் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி டெல்லியில் அறிவித்தார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

எடப்பாடியின் நெருங்கிய உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம். இவர் கர்நாடக அரசில் மிகச் செல்வாக்கு மிகுந்தவராக இருக்கிறார். கர்நாடக பொதுப்பணித்துறை, உள்துறை மற்றும் சசிகலா இருக்கும் பரப்பன அக்ரகாரா சிறை உட்பட பல்வேறு ஒப்பந்த வேலைகளில் ஈடுபடுகிறார். எடப்பாடியின் மகன் மிதுன் திருமணம் செய்திருக்கும் திவ்யாவின் சகோதரி சௌமியாவின் கணவர். தமிழகத்தில் இவரும், இவரது தந்தையும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களுக்கு நெடுஞ்சாலை துறையிலும், பொதுப்பணித் துறையிலும் வேலை எடுத்து செய்கிறார்கள் என கவர்னரிடம் அளித்த ஊழல் புகாரில் தி.மு.க அளித்துள்ளது.

sasi

இந்த சந்திரகாந்த் ராமலிங்கம் கடந்த 10 நாட்களாக பெங்களூருவில் தங்கியிருக்கிறார். இந்த காலகட்டத்தில் பரப்பன அக்ரகாரா சிறையில் நடந்த பணிகள், அனுப்பப்பட்ட பொருட்கள், சென்று வந்த நபர்கள் எனப் பலவும் எந்தளவில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை என்கிறார்கள் சிறைத்துறையினர். அந்த நாட்களில்தான், சசிகலாவிற்கு கொரோனா பரவியுள்ளது. உரிய சிகிச்சை அளிக்காமல் ஒரு வாரம் தாமதம் நடந் திருக்கிறது. சரியான நேரத்தில் சசிகலாவின் வழக்கறிஞருக்கு விவரம் தெரியவர அவர் மூலமாகத் தான் சசிகலாவிற்கு சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

அதேவேளையில், இளவரசிக்கு கொரோனா தொற்று இல்லை என்று சிறை நிர்வாகம் தெரிவித்தது.

சசிகலாவின் இன்னொரு வழக்கறிஞரான அசோகன், ""சிறை நிர்வாகிகளிடம் சண்டை போட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். மருத்துவமனையில் பரிசோதனையில் அவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே சசிகலாவின் சொத்துக்களை சீல் வைப்பதற்காக எடப்பாடி சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளை எடப்பாடி பயன்படுத்தியிருக்கிறார். இப்பொழுது சசிகலாவின் உடல்நிலையை நன்கு தெரிந்து கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்துகொண்டு 66 வயதான அவர் ஏழு நாட்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படக் கூடும். இந்த நிலையில்தான், சசிகலாவை நாங்கள் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி அறிவித்துள்ளார்'' என்று பரபரப்பாக குற்றம்சாட்டுகிறார்கள் சசிகலாவின் உறவினர்கள்.

sasi

கர்நாடகாவில் நடப்பது பா.ஜ.க ஆட்சி. மத்தியிலும் அதே கட்சியின் ஆட்சி. அதிகாரத்தில் இருப்பவர்கள் பழி வாங்க நினைத்தால் சிறையில் தள்ளுவார்கள், அங்கே ட்ரீட்மெண்ட் வேறு மாதிரியாக இருக்கும் என்பதை அறிந்தவர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, சிறைக்கு அனுப்பப்பட்டவரும் தற்போதைய ஆந்திரா முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி. அவர் சமூகவலைத்தளத்தில், கடந்த 10 மாதங்களாக பார்வையாளர்கள் யாரையும் சந்திக்க கர்நாடக சிறைத்துறை அனுமதி அளிக்காத நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றால் இது திட்டமிட்ட அரசியல் சதியாகத்தான் இருக்கும்.*சட்டப்படி நியாயமாக தரப்பட வேண்டிய தண்டனை கால குறைப்பு கூட தரப்படவில்லை எனும் போது எந்த அளவுக்கு கர்நாடக ஆட்சியாளர்கள் செயல்பட்டுள்ளனர் என்று நாம் யூகிக்கலாம்.*

சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவும் மோசமான சிறையில் வேண்டுமென்றே இதுபோன்ற தொற்று நோய்களை பரப்பி அவரை சிகிச்சை மூலமாக கொல்வதற்கு சதி செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் வலுக்கிறது’எனத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியலைகளை அதிகமாக்கியுள்ளது.

nkn270121
இதையும் படியுங்கள்
Subscribe