"கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வருகின்றது.
இதனால் நாள் ஒன்றுக்கு நான்கு லட்சம் பேருக்கு கொரோனா தொற்றும், நான் காயிரத்துக்கு அதிகமானோர் பலியாகியும் வருகின்றனர். உண்மையான பலி எண்ணிக்கை மேலும் அதிகம்'' என்கின்றனர் சிலர்.
கொரோனா துயரமே மறையாத நிலையில், கருப்பு பூஞ்சை என்ற புதிய தொற்று இந்தியாவில் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு முகத்தில் ஒருபக்கம் செயலிழப்பும் கண்பார்வை பறிபோகும் நிலையும் ஏற்படு கின்றது. கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்தவர் களையே இந்தநோய் தாக்குவது கண்டறியப் பட்டுள்ளது.
வட மாநிலங்களில் இந்த நோய்த்தொற்று தீவிரமடைந்துள் ளது. மராட்டிய மாநிலத்திற்கு அடுத்தபடியாக, கர்நாடக மாநிலத் தில் இந்த நோய்த் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ள தாகவும், 54 பேர் கண் பார்வை பாதிப்பு ஏற்பட் டுள்ளதாகவும், 14 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனால் எப்போது வேண்டு மென்றாலும் இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் கொரோனா நோயாளிகள் உள்ளனர்.
தமிழகத்திலும் இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு சிலர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கருப்பு பூஞ்சை நோய் பற்றி சென்னை குரோம்பேட்டை ரெலா மருத்துவ மனையின் தொற்றுநோய் ஆலோசகர் டாக்டர் வித்யா தேவராஜனிடம் கேட்டோம்.
"கருப்பு பூஞ்சை என்ற மியூகோமி கோசிஸ் என்ற நோய்த்தொற்று ஒருவகையான பூஞ்சைத் தொற்றுதானே தவிர செயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல. நம் சுற்றுச்சூழலில் ஏற்கனவே உள்ள நோய்தான். நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்), எச்.ஐ.வி., கேன்சர் போன்ற நோய் உள்ளவர்கள், மேலும் நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த தொற்று பாதிக்கும்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால் அதற்காக சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் ரத்த சர்க்கரை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால் கொரோனா நோயாளிகளை இந்த கருப்பு பூஞ்சைத் தொற்று எளிதில் பாதிக்கும்.
தேவைக்கேற்ப கொரோனா நோயாளி களுக்கு ஸ்டீராய்டு பயன்படுத்த வேண்டும். தேவையின்றியோ, மிகையாகவோ பயன் படுத்துவதால் இவர்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படலாம்.
ஸ்டீராய்டு பயன்படுத்திய கொரோனா நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கவனித்து வரவேண்டும். தவறும் பட்சத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கட்டுமானப் பணிகள் நடக்குமிடம், மரக் குடோன்கள், தோட்டம் போன்ற இடத்தில் இந்த கருப்பு பூஞ்சையின் தாக்கம் அதிகம் இருக்கும்.
அதனால் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் இந்த இடங்களைத் தவிர்க்க வேண்டும், மூக்கு, கண், வாய்ப் பகுதிகள் மூலம் இந்த பூஞ்சைத்தொற்று நம் உடலுக்குள் ஊடுருவும்.
இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் ஒற்றைக் கண்வலி, முகத்தில் ஒருபக்கமாக வலி, மேல்தாடை வலி, பற்கள் பகுதியில் வலு வின்றிக் காணப்படுதல், பார்வை இரண்டி ரண்டாகத் தெரிதல், கண் சிவந்து காணப்படுதல், இருமல், சளியில் ரத்தம், வாயின் உள்தாடை மேல் பகுதியில் கருப்பு நிறமாக காணப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
கொரோனா போன்று ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது. ஆரம்பத்தில் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக் கொண் டால் எளிதில் குணப் படுத்தலாம்.
இல்லை என்றால் கண், சைனஸ் (மேல் தாடை), நுரையீரல், மூளை நரம்புகள் மற்றும் மூளையை நேரடியாக பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தும். சிலரது விஷயத்தில் மேல்தாடையைப் பாதித்து (தாடை எலும்பு), கண்களை அகற்றும் நிலைக்குச் செல்லும்.
தற்போதுள்ள சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஸ்டீராய்டு சிகிச்சை பெறுகிறவர்களின், ரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்,
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் கருப்பு பூஞ்சைநோய் என்னும் மியூகோமி கோசிஸ் நோயைத் தடுக்க முடியும்''’ என்கிறார்.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் பல லட்சம் பேர் என்பதால் இந்த கருப்புபூஞ்சை நோயைக் குணப்படுத்தும் மருந்தான அம்ஃபோ டெரிசின்-பி என்ற மருந்தை தேவையான கையிருப்பை வைக்க உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய உரத்துறை இணை அமைச்சர் மன்சுக் மண்வியா தெரிவித்துள்ளார்.