லோ தலைவரே, கொரோனாவின் கூடாரமாக மாறியிருந்த சென்னையில் 9 நாட்களா தொடர்ந்து 2000 பேருக்கு கீழ் பாசிட்டிவ் கேஸ் எண்ணிக்கை இருந்ததால், கொரோனாத் தொற்று வேகமா குறையுதுன்னும் இது எடப்பாடி அரசின் சாதனைன்னும் மீம்ஸ் போட்டுத் தாக்குவதைக் கவனித்தீங்களா?''

""நாளுக்கு நாள் கொரோனா குத்தாட்டம் போட்டுக் கிட்டிருக்குது. ஆட்சியாளர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருக்காங்க...''

""ஆமாங்க தலைவரே.. போனமுறை நாம பேசிக்கிட்டிருந்த நேரத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு, கொரோனாங்கிற செய்தி வந்துச்சு. அதுக்கு முன்பே உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தார். இப்ப, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவும் கொரோனா அட்டாக்கிற்கு ஆளாயிருக்கார். அதனால் கொரோனா வேகம் குறையுதுன்னு எடப்பாடி சொல்வதை அ.தி.மு.க.வினராலேயே நம்பமுடியலை.''

ff

Advertisment

""உண்மை நிலவரம் என்னவாம்?''

""இந்த அரசு மக்களையும் ஏமாத்துது. தன்னைத் தானேயும் ஏமாத்திக்கிதுன்னு சுகாதாரத்துறை நிபுணர்கள் சொல்றாங்க. முதல்வர் எடப்பாடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருதித்தான் ஊரடங்கில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டி ருக்குன்னு சொன்ன தோட, சென்னையில் கொரோனா குறையுதுன்னு அறிவிச்சார். இப்ப அவர் வார்த்தையை நிஜமாக்கனும்ங்கிறதுக்காக, சென்னையில் கொரோனா எண்ணிக்கை 2000த்தை தொடாதபடி, பரிசோதனையின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்படுதாம். அதனால, உண்மையான எண்ணிக்கை வெளியே தெரியலை. எந்தவித அறிகுறியும் வெளியே தெரியாமல் கோவிட் பாசிட்டிவ் நபர்கள் அதிகமாயிட்டாங்க. ஆனாலும், எண்ணிக்கையை குறைச்சுக் காட்ட ணும்ங்கிறது அரசுத் தரப்பின் ரகசிய உத்தரவு.''

""பாசிட்டிவ் எண்ணிக்கையை குறைத்தாலும், பலியாகிறவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியலையே... அது நாளுக்கு நாள் அதிகமாகுதே... இது ரொம்ப ஆபத்தாச்சே!''

Advertisment

dc""ஆமாங்க தலைவரே, கொரோனா ஆபத்து எந்தளவு சென்னையை சூழ்ந்திருக் குங்கிறதை உணர்ந்திருப்பதால்தான் தமிழக அமைச்சர்கள் பலரும் சென்னைக்குள் வரவே பயப்படறாங்க. அதனால் 14-ந் தேதி எடப்பாடி கூட்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்க அவங்க தயக்கத்தைக் காட்டியிருக்காங்க. சில சீனியர் மந்திரிகள் எடப்பாடியிடமே, உங்க நிகழ்ச்சிகள்ல பங்கேற்ற அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்குமே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கு. அதனால் மற்றவங்களைப் போல் ஜூம் செயலி மூலம் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துங்களேன்னு கேட்டிருக்காங்க.''

""மாணவர்களுக்கே ஆன்லைனில் வகுப்பு நடத்தும்போது, மந்திரிகளுக்கு ஜூம் செயலியில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தலாமே?''

""எடப்பாடி இந்த விஷயத்தில் நேரடி கூட்டம்தான்னு பிடிவாதம் காட்டுறாராம். என்னையே தனிமைப் படுத்திக்கனும்ன்னு மருத்துவர்கள் சொல்றாங்க. இதுக்கெல்லாம் நாம பயந்தா சரிப்படுமா? மந்திரிசபைக் கூட்டத்தை நாம் ஜூம் காணொலியில் நடத்தினால், நடமாட முடியாத அளவுக்கு சென்னை மோசமான நிலையில் இருக்குன்னு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யமாட்டாங்களா? அதனால் பயப்படாமல் வாங்க. உரிய பாதுகாப்போடுதான் அமைச்சரவைக் கூட்டம் நடக்குதுன்னு தைரியமூட்டியிருக்கார். இருந்தாலும் அமைச்சர்கள் பலரும் முடி opsவெடுக்காத முடியாத மனநிலையில் இருக்காங்களாம். அரசாங்க அறிக்கையை நம்பி சென்னைக்குப்போவதில் அவங்களுக்குத் தயக்கம் இருக்குது. அதேநேரம் சென்னையில் கொரோனா குறையுதுங்கிற அரசாங்க செய்தியை நம்பி பொதுமக்கள் பலரும் தெருக்களில் அஜாக்கிரதை யாக அங்கங்கே கூடிக் கும்மியடிக்கிறதையும் பார்க்க முடியுது.''

""கொரோனா கும்மியடிச்சிடும்ங்கிறதை தொடர்ந்து எடுத்து சொல்லிக்கிட்டே இருப்பதுதான் நம்முடைய கடமைப்பா. அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா பற்றிய விவாதம்தான் நடக்கப்போகுதா?''

""அதுக்கும் முக்கியமான இடம் உண்டு. அதே சமயம் அமைச்சர்களில் ஓரு சாரார் மட்டும் பயனடையும் நிலை தொடராமல், அனைவருக்கும் லாபம் கிடைக்கனும் என்பதற்கான ஆலோசனைகளும் இருக்குமாம். அதாவது இந்தக் கொரோனாக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய இந்த மூன்று துறைகள் தொடர்பான டெண்டர் வேலைகள் மட்டும்தான் துரிதமாக் கவனிக்கப்படுது. திரைமறைவில் இதுக்கான கமிஷன்களும் கைமாறுது. அதனால் மற்ற துறைகளிலும் என்னென்ன வழிகளில் லாபம் பார்க்க முடியும்னு ஆலோசிக்க இருக்காங்களாம். குறிப்பா தொழில்துறையில் வளமான டீலிங்குகளுக்கான சில முடிவெடுப்புகளும் இருக்குமாம்.''

""கொரோனா சாக்கில் திருவிழா கொண்டாடறாங்கன்னு சொல்லு.''

""ஊழல் திருவிழாவுக்கு மட்டும் இந்த ஆட்சியில் ஊரடங்கே கிடையாதுங்க தலைவரே, எந்தெந்த வகையில் எல்லாம் கல்லாக் கட்ட முடியுமோ, அதிலெல்லாம் ஜரூரா இருக்காங்க. தூய்மைப் பணியாளர்கள் நியமனம், சுகாதாரத் தன்னார் வலப் பணியாளர்கள் நியமனம்னு எல்லாத் துக்கும் அவங்கவங்க மட்டத்திலும் ரேட் பிக்ஸ் பண்ணிக்கிட்டு வசூலிக்கறாங்க. கிராமங்கள் தோறும் கிருமி நாசினி தெளிக்கிறோம்ன்னு, 15 ஆயிரம் ரூபாய் கூட ஆகாத வேலைக்கெல்லாம் நான்கரை லட்சம் வரை கணக்கெழுதி ஏப்பம் விடறாங்களாம்.''

""தேன் எடுக்க றவங்க தேனடையையே விழுங்கறாங்கன்னு சொல்லு. கொரோனா விவகாரத்தில் நிதித் துறைக்கும் சுகாதாரத் துறைக்குமே உரசல்னு சொல்லப்படுதே?''

""ஆமாங்க தலைவரே, பாதுகாப்போடு மக்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபடும் அளவுக்கு ஊரடங்கை நீக்கனும். அப்பதான் அரசுக்கும் வருமானம் வரும் என்பது நிதித்துறையின் கருத்து. ஆனால் சுகாதாரத்துறைத் தரப்போ, 80 சதவீத அளவுக்காவது கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தி விட்டுத்தான் பொதுப் போக்குவரத்தையும் தளர்வுகளையும் ஏற்படுத்தனும். இல்லைன்னா, மறுபடியும் முழு லாக்டவுனை தமிழகம் முழுக்க அறிவிக்கும் நிலைக்கு நாம் போக நேரும்ன்னு சொல்லு தாம். இதுவும் அமைச்சரவையில் விவாதிக் கப்பட இருக்குதாம்.''

""அதிகாரப்பூர்வ கேபினட் கூட்டம் முடிந்ததும், கட்சி விவகாரங்கள் குறித்தும் அமைச்சர்களிடம் எடப்பாடி ஆலோசிக்கப் போகிறாராமே?''

sonia

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, சசிகலா விரைவில் ரிலீசாகப் போறாருங்கிற தகவல் அ.தி.மு.கவுக்குள் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்திக்கிட்டு இருக்குது. அ.தி.மு.க.வில் இருக்கும் பெரும்பாலான மா.செ.க்கள், ஜெ, காலத்தில் சசிகலாவால் நியமிக்கப்பட்டவங்க என்பதால், எடப்பாடித் தரப்பு குழப்பத்தில் இருக்குது. அதனால் இப்பவே கட்சிரீதியா மாவட்டங்களைப் பிரிச்சி, அந்த சாக்கில் தன் ஆதரவாளர்களை அந்தப் பதவிகளில் உட்கார வச்சிடனும் என்பது தான் எடப்பாடியின் எண்ணம். இது போல் ஓ.பி.எஸ். உட்பட ஆளும்கட்சியில் அவரவரும் ஒரு கணக்கில் இருக்காங்க.''

""இது தொடர்பா அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் ஆலோசனை நடத்திய ஐவரணியிலும் இரண்டுக்கு மூன்றுங்கிற விகிதத்தில் ஒரு கணக்கு இருக்குதாமே?''

""உங்க காதுக்கும் தகவல் வந்திடிச்சுங்களா தலைவரே... ஐவர் அணியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் டாமினேட் செய்வதா மற்ற மூன்று பேரும் நினைக்கிறாங்களாம். ஆலோசனையின்போது, சீனியரான கே.பி.முனுசாமியோ தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே கொங்கு மண்டலத்து செல்வாக்கை நாங்களும் அறிவோம். அதேநேரத்தில் பரவலா எல்லா மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கணும். எல்லாத்திலும் நீங்களே டாமினேட் செய்வது சரியா இருக்காதுன்னு சொல்ல, அதற்கு மத்திய மண்டலத்தைச் சேர்ந்த வைத்திலிங்கமும், தென்மண்டலத்தைச் சேர்ந்த நத்தம் விசுவநாதனும் ஆதரவா இருந்திருக்காங்க. இதனால் ஐவரணியில் இரண்டு அணி உருவாகியிருக்காம்.''’’

""அரசியல்வாதிகள் எல்லாருக்கும் பதவி ஆசை இருக்கும்ல.''

""வைத்திலிங்கம் எம்.பி.யைப் பொறுத்தவரை மாவட்டங்கள் பிரிப்பதை ஆதரிக்கிறார். ஆனால், மாவட்டச் செயலாளர்களான அமைச்சர்கள் இதை அவ்வளவா விரும்பலையாம். அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலரும் மாவட்டப் பிரிவுங்கிறதையே எதிர்க்கறாங்க. சி.வி.சண் முகத்தைப் பொறுத்தவரை, மாவட்டத்தைப் பிரிச்சா, புது மாவட்டத்தின் மா.செ.வா என் சகோதரர் ராதாகிருஷ்ணனைத்தான் உட்கார வைக்கனும்னு கெடுபிடி காட்டறார். இதே போல் மா.செ.க்கள் பலரும் மாவட்டப் பிரிப்பால், தங்கள் அதிகார எல்லை குறைவதை விரும்பலை. இது பத்தியெல்லாம் விவாதித்து, கட்சியில் தன் பலத்தைப் பெருக்கனும்ன்னு வியூகங்களை வகுத்துக்கிட்டு இருக்கார் எடப்பாடி.''

""அவரவருக்கு அவரவர் கவலை.''

""அதனாலதான் தன் ராஜ்ஜியம் யார் கைக்குக்கும் போயிடக்கூடாதுன்னு கோவையை தலைநகரம் போல வச்சிக்கிட்டு, தர்பாரை நடத்திக்கிட்டு இருக்கார் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி. கொரோனா சூழலால் சென்னைக்கு வருவதை அளவாக வைத்துக் கொள்ளும் வேலுமணி, தன் துறை அமைச்சர்களையும், டெண்டரை எதிர்பார்க்கும் ஒப்பந்ததாரர்களையும், கட்சியினரையும் கோவைக்கு வந்து தன்னைச் சந்திக்கச் சொல்றாராம். அதனால் வெளியில் இருந்து அவரைப் பார்க்கச் செல்பவர்களுக்கு தினசரி டுபாக்கூர் காரணம் சொல்லி ஏராளமான இ-பாஸ்களைத் தரவேண்டி இருக்குதாம். இதுக்கு உடன்படாத அதிகாரிகள் மிரட்டப்படறாங்களாம். இது சம்மந்தமா எடப்பாடி வரை புகார் போயும் அமைச்சர் அசரலை.''

""கோவை ஏரியாவில் இப்படி அசராம அடிக்கிற ஆட்கள் உண்டு. அண்மையில் ஜக்கி வாசுதேவ், ஒரு ஓவியத்தை வரைஞ்சி, அதை ஏலம்விடுவதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொரோனா நிதிக்காகக் கொடுக்கப்போறதா அறிவிச்சார். அந்த ஓவியம் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்குதாம்.''

dd

""சோனியா காந்தி 11ந் தேதி காணொலியில் நடத்துன காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் எப்படி போனதுன்னு சொல்றேங்க தலைவரே... இந்தியா இப்ப கொரோனா நெருக்கடியிலும், பொருளாதார நெருக்கடியிலும், பாதுகாப்பு நெருக்கடியிலும் இருக்குன்னு சொன்ன சோனியா, இதையெல்லாம் சரியாகக் கையாள முடியாமல் பா.ஜ.க. அரசு திணறுது. இதை மக்களிடம் கொண்டுபோக வேண்டிய நீங்கள்லாம் குறட்டை விடலாமான்னு ஆவேசமா சாட்டையை வீசியிருக்கார். இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக எம்.பி.க்கள், எங்க தொகுதி மேம்பாட்டு நிதியை எல்லாம் கொரோனா நெருக்கடியால் 2 வருடங்களுக்குத் தரப் போவதில்லைன்னு பா.ஜ.க. அரசு சொல்லுது. இதை நம்ம கட்சி பலமா எதிர்க்கணும்னு வேண்டுகோள் வச்சிருக்காங்க.''

""தமிழக பா.ஜ.க.வினர் என்ன சொல்றாங்க?''

""தமிழக பா.ஜக தலைவர் முருகனின் பரிந்துரையின்படி, கட்சியின் நிர்வாகிகளின் பட்டியல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில், கிரிமினல் வழக்குகளைக் கொண்ட நபர்களுக்கெல்லாம் முருகன், வெயிட்டாக’ சிபாரிசு செய்து, கட்சியில் பதவியை வாங்கிக் கொடுத்திருக்காருன்னு டெல்லிக்குப் புகார்கள் போயிருக்கு.''

""எடப்பாடி மீதே, மத்திய உள்துறை அமைச்சகத்துக்குப் புகார்கள் போகுதாமே?''

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, அண்மையில் காவல்துறை உயரதிகாரிகள் 89 பேரின் டிரான்ஸ்பர்கள் இரண்டு கட்டமா நடந்தது. இதில் பலரின் இடமாற்றம் பற்றிய தகவல் டி.ஜி.பி. திரிபாதியின் கவனத்துக்கே கொண்டுபோகப் படலையாம். முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுன், அவருடைய அரசியல் ஆலோசகர் சுனில், அண்மையில் ஓய்வுபெற்ற முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி இந்த மூன்றுபேரின் பரிந்துரையின் பேரில்தான் இந்த டிரான்ஸ்பர்கள் நடந்ததாம். அதனால், காவல்துறைத் தலைவருக்கே தெரியாமல், அங்கே வெளிநபர்களின் கை ஓங்கியிருக்குன்னும் டீலிங்குகள் நடக்குதுன்னும் காவல் துறையிலிருந்தே புகார்கள் போயிருக்கு. இதை உள்துறை அமைச்சகம் சீரியஸாகப் பார்க்குதாம்.''

""நம்ம நக்கீரனில் இது சம்பந்தமா ஒரு தனி ஸ்டோரி வந்திருக்குது. அதையும் மறக்காம படிச்சிடுங்க.''