கொரோனா இரண்டாம் கட்டமா? மூன்றாம் உலக யுத்தமா? -உயிர்ப் போராட்டத்தில் மனிதர்கள்!

dd

லகத்தின் எத்தனை பெரிய வி.ஐ.பி.யும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் தலைப்புச் செய்தியானதில்லை. அந்த வகையில் வி.ஐ.பி.க்கெல்லாம் வி.ஐ.பி.யாகத் திகழ்ந்து வருகிறது கொரோனா. ஒன்றரை ஆண்டாக கொரோனா செய்தி இடம்பெறாத நாளேயில்லை. லட்சக்கணக்கானவர்களை இறுதி யாத்திரைக்கு அனுப்பும் இந்த கொரோனாவின் அட்டகாசம் தடுப்பு ஊசிகளின் வருகைக்குப் பின்னும் வேகம் குறைந்ததாகத் தெரியவில்லை.

கொரோனாவின் முதல் அலையின்போது, இந்தியா கொஞ்சம் தாமதமாக விழித்துக் கொண்டதோடு, திடீர் ஊரடங்கு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியது. மாநிலங்கள்தோறும் ஊர் திரும்ப வழியின்றி அகப்பட்டுக்கொண்ட, பிற மாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி வந்தவர்கள், கையறு நிலையில் கால்நடையாகவே சொந்த ஊர் திரும்பிய அவலம், ஒவ்வொரு இந்தியனையும் இதயம் கசிய வைத்தது.

e

கிட்டத்தட்ட ஆறேழு மாத கெடு பிடிகளுக்குப் பின்பு, ஓரளவு கட்டுக்குள் வந்தது கொரோனா. இந்நில

லகத்தின் எத்தனை பெரிய வி.ஐ.பி.யும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் தலைப்புச் செய்தியானதில்லை. அந்த வகையில் வி.ஐ.பி.க்கெல்லாம் வி.ஐ.பி.யாகத் திகழ்ந்து வருகிறது கொரோனா. ஒன்றரை ஆண்டாக கொரோனா செய்தி இடம்பெறாத நாளேயில்லை. லட்சக்கணக்கானவர்களை இறுதி யாத்திரைக்கு அனுப்பும் இந்த கொரோனாவின் அட்டகாசம் தடுப்பு ஊசிகளின் வருகைக்குப் பின்னும் வேகம் குறைந்ததாகத் தெரியவில்லை.

கொரோனாவின் முதல் அலையின்போது, இந்தியா கொஞ்சம் தாமதமாக விழித்துக் கொண்டதோடு, திடீர் ஊரடங்கு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியது. மாநிலங்கள்தோறும் ஊர் திரும்ப வழியின்றி அகப்பட்டுக்கொண்ட, பிற மாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி வந்தவர்கள், கையறு நிலையில் கால்நடையாகவே சொந்த ஊர் திரும்பிய அவலம், ஒவ்வொரு இந்தியனையும் இதயம் கசிய வைத்தது.

e

கிட்டத்தட்ட ஆறேழு மாத கெடு பிடிகளுக்குப் பின்பு, ஓரளவு கட்டுக்குள் வந்தது கொரோனா. இந்நிலையில் மாநிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தன. தடுப்பூசி அறிமுகம் குறித்த செய்திகளும் வர... மக்களும், அரசு அதிகாரிகளும் மெதுமெதுவாக அலட்சியம் கொள்ள ஆரம்பித்தனர். முகக் கவசங்களின்றி கல்யாணம், திருவிழா போன்ற மக்கள் கூடும் நடவடிக்கைகள் பெரிய கெடுபிடிகளின்றி நடப்பதையும் காண முடிந்தது.

இந்நிலையில், ஐந்து மாநில தேர்தலும் சேர்ந்துகொள்ள, எல்லா இடங்களிலும் கூட்டம் கூட்டமாகப் பிரச்சாரமும் நடந்ததோடு, தலைவர்கள் வரும் பகுதிகளில் அக்கட்சியினரால் பெருந்திரள் மக்கள் கூட்டங்களும் திரட்டப் பட்டன. தேர்தலுக்கு முன்பே உறக்கம் கலைந்து எழுந்து, "உள்ளேன் ஐயா' என்று ஆஜர் சொன்ன கொரோனாவின் சேதிகள் அலட்சியமாகப் பார்க்கப்பட, வெகுண்டெழுந்த கொரோனா, இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட வேட்டையை ஆரம்பித்துள்ளது.

இந்த இரண்டாம் கட்ட அலையில் சாதாரண மக்களைப்போல வி.ஐ.பி.க்களும், பெருவாரியாக பாதிப்புக்குள்ளானதைப் பார்க்க முடிகிறது. தமிழக அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், கொரோனாவுக்குப் பலியானார். பிரச்சாரத்துக்குச் சென்ற தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, சட்டமன்ற வேட்பாளர்களான துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் சி.வி. சண்முகம், ஆத்தூர் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசங்கரன், கும்பகோணம் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார், நடிகர் செந்தில் என மக்கள் நன்கறிந்த பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு வெளியே உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், கேரள முதல்வர் பினரயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, உ.பி. எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கேரள வேளாண் அமைச்சர் சுனில்குமார், கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், தொழிலாளர் நலத்துறை இணை யமைச்சர் சந்தோஷ் கங்குவார், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பஞ்சாப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் என கொரோனாவின் தாக்குதலுக்குள்ளான வி.ஐ.பி.களின் பட்டியல் நீள்கிறது.

கொரோனா முதல் அலையின்போது டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாத்தை, பா.ஜ.க.வினர் மட்டுமின்றி... ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களுமே விமர்சித்தனர். தற்சமயம் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடக்கும் கும்பமேளாவுக்கு மத்திய- மாநில அரசுகள் அனுமதியளித்து எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றியிருக்கிறது. ஹரித்துவார் கும்பமேளாவில் 48.5 லட்சம் பக்தர்கள் நீராடியுள்ள நிலையில், 1700 பேருக்கு கொரோனா எனச் சொல்லப்பட்டாலும் உண்மையில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் எனக் கணிப்பது சிக்கலானது.

மற்றொரு புள்ளிவிவரம், உச்சநீதிமன்ற பணியாளர்களில் 45 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதிசெய்திருக்கிறது. இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆன் லைனில் வழக்கை நடத்த ஆர்வம் காட்டுவதாகத் தெரியவந்துள்ளது.

இதுவரை உலக அளவிலான கொரோனா இறப்பு 30 லட்சத்தை நெருங்கியுள்ளது. முதல் உலகப் போரில் இறந்தவர்களின் எண் ணிக்கை 4.5 கோடி. இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை தோராயமாக 7.5 கோடி. பீரங்கியோ, அணுகுண்டோ ஏன்… ஒரேயொரு துப்பாக்கிக் குண்டோ, பயன்படுத்தப்படாமல், 30 லட்சம் பேரை வீழ்த்தியிருக்கும் கொரோனா, மக்கள்மீது மூன்றாம் உலகப் போர் போன்ற தாக்குதலைக் கட்டவிழ்த்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

இரு உலகப் போர்களிலும் மக்களைக் கொடுங்கோலர்களிடமிருந்து காக்கும் பொறுப்பு ராணுவ வீரர்களிடமும், நேச நாடுகளின் தலைவர்களிடமும் இருந்தது. இந்த மூன்றாம் உலகப் போரில் மக்களைக் காக்கும் பொறுப்பு விஞ்ஞானிகளிடமும், மருத்துவப் பணியாளர்களிடமும் இருக்கிறது. அரசாங்கத்தின் முழுவீச்சான செயல்பாடும், மக்களின் விழிப்புணர்வுமிக்க ஒத்துழைப்பும் ஒருங் கிணைந்தால், இந்தப் போரை வென்று காட்டலாம்.

nkn210421
இதையும் படியுங்கள்
Subscribe