"நாங்கள் கோவை மத்திய சிறைச்சாலையில் பணியிலிருக்கும் போலீஸ் காரர்கள். உண்மைகளை உரக்கச் சொல்லும் நக்கீரனிடம் இதைச் சொல்கிறோம். விசாரித்த பிறகு வெளியிடுங்கள்'' என்றனர். என்ன வென்று விசாரித்தோம்.

c

"சார்... கடந்த ஏப்ரல் 16-ந் தேதி நம்ம காந்திபுரத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் தடபுடலாய் ஒரு கெடாவெட்டு விழா நடந்தது. விஜிலென்ஸில் 20 வருடங்களாக முதல் தலைமைக் காவலராகப் பணியாற்றும் பார்த்தசாரதியை பெருமைப்படுத்துவதற்காக, விஜிலென்ஸில் முதல் தலமைக்காவலராகப் பணியாற்றும் பாபுவின் ஏற்பாட்டில் அது நடந்தது.

இதில்... 2002 பேட்ஜ் காவலர்கள் 30 பேரை வற்புறுத்தலின்பேரில் கூட்டிக் கொண்டு போனார் பாபு. சிறப்பு விருந்தினராக தன்னை அழைத்ததால் பார்த்தசாரதி, பாபு ஆகியோரை முதுகில் தடவி கொடுத்துக்கொண்டு, ஆட்டு பிரியாணியை உட்கொண்டுவிட்டு, விழாவைச் சிறப்பித்து விட்டுப் போனார் மத்திய சிறைச்சாலையின் ஜெயிலராக இருக்கும் சிவராஜன். மற்றபடி எந்த மேலதிகாரிகளும் கலந்துகொள்ளாத நிலையில்... கெடாவெட்டில் கலந்துகொண்டு திரும்பிய 30 காவலர்களை பரிசோதனை செய்ததில், இரண்டு பேருக்கு கொரொனா தொற்று இருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக அவர்கள் லீவ் வேண்டும் என்றனர். ஆனால் பாபு, உடனே அனுமதிக்கவில்லை. "கெடாவெட்டுக்கு போய்த்தான் கொரோனோ வந்தது என இருவரும் சொல்லிவிட்டால், யாரை கேட்டு...இவர்களை வெளியே அழைத்துச் சென்றீர்கள்? என மேலதிகாரிகள் கேட்டால்... மாட்டிக்கொள்வோமே' என்பதால் யாருக்கும் இதுவரை லீவ் தரவில்லை.

Advertisment

அதற்குப் பிறகு, பாபு கொரோனோ பரிசோதனை செய்ய... ரிசல்ட் பாசிடிவ் என உறுதி ஆகி விட்டது. அவருக்கு மட்டுமல்ல... விழாவில் கலந்துகொண்ட அவரது குடும்பத்தாருக்கும், அப்துல் சலீம், குமரேசன் என்கிற தலைமைக் காவ லர்களுக்கும், கணேசன் என்கிற ஏட்டுக்கும், அவ ரது மனைவிக்கும், சிவகுமார் என்கிற ஏட்டுக்கும், ராகுல் என்கிற காவல ருக்கும் கொரோ னோ உறுதி ஆகியிருக்கிறது.

c

சிறையில் 400-க்கும் மேற்பட்ட சி.பி.எப். போலீஸார் உள்ளனர். கொரோனோ தொற்று நமக்கும் வந்து விடுமோ..? என அவர்கள் அனைவரும் அச்சமடைந் திருக்கின்றனர். சி.சி.எல். லீவ் வழங்க வேண்டும் என்பதற்காக, பணியி லிருக்கும் காவலர்களுக்கு, தலைமைக் காவலர்களுக்கு, எஸ்.ஐ. உள்ளிட்டோருக்கு கொரோனோ பரிசோதனை செய்யவில்லை. cமேலும் சி.பி.எப். போலீஸார் பணிக்கு வந்தால், சிறையில் உள்ள 1800 கைதிகளுக்கும் கொரோனோ தொற்று ஏற்பட 100 சதவீதம் வாய்ப்பிருக்கிறது. உயிர் பயத்தில் கைதிகள் கண்ணீர்விடுகிறார்கள். கொரோனா பரிசோதனை முறையாக செய்யவேண்டும் என காவலர்களும், கைதிகளும் மன்றாடுகிறார்கள். அமைதி காக்கிறது மத்திய சிறைச்சாலை. இதை நக்கீரன் வெளியுலகிற்கும், சிறைச்சாலை மேலதிகாரிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும்'' என்கிறார்கள்.

Advertisment

இந்தநிலையில் கோவை மத்திய சிறைச்சாலையில் எஸ்.பி.யாக இருக்கும் செந்தாமரைக் கண்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம்.

"நீங்கள் சொல்லும் இரண்டு பேருக்கு கொரோனா வந்திருப்பது உண்மைதான். மற்ற சிலருக்கும் வந்திருக்கிறது. யாரும் பயந்துவிடக்கூடாது என்பதற்காக ஜெயிலுக்குள்ளேயே குவாரண்டைன் செல்களைத் திறந்து சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறோம். உள்ளே 300 குடும்பங்களுக்கு மேல் இருக்கின்றன. பரிசோதனை நடக்கிறது. எனக்குத் தெரியாத விசயங்களை கொண்டுவந்தது நல்லது. இனிமேல் எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்'' என உறுதி அளிக்கிறார்.