ஹிந்துராஷ்ட்ர ஜைத்ர ரதம்
அருணவர்ண த்வஜஸஹிதம்
தேஜஸ்ஸô ஸமுஜ்வலிதம்
ஆகதம் ஸ்ஸீவாகதம்’’
-என்கின்ற இந்த ஸ்லோகம் சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார இண்டு இடுக்கிலுள்ள மக்களுக் கெல்லாம் மனப்பாடம். அர்த்தம் தெரியாவிட்டாலும் அச்சரம்பிசகாமல் கூறினால் கொரோனா போய்விடும் என்றும், கொரோனாவை பரப்பியது இஸ்லாமியர்கள் என்றும் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு ஆர்.எஸ்.எஸ் திருப்பணி அரங்கேறியுள்ளது.
ஒரு வாகனத்திற்கு இருவராக மூன்று இருசக்கர வாகனங்கள். அன்றைய தினத்திற்கு இந்த இடம் என முன்னரே தெரிவுசெய்யப் பட்ட பகுதிக்கு வந்த வுடனே தங்களோடு கொண்டுவரப்பட்ட கபசுபர குடிநீர் கேனை நடுவே வைக்கின்றார்கள். சுற்றி மக்கள் சேர, ""நம்ம சாதிக்காரங்க நல்லா இருக்கட்டும்னுதான் மெனக்கெட்டு இங்க கொண்டு வந்திருக்கோம்'' என பெருமை பேசிக்கொண்டே கேனிலிருந்து கபசுரக் குடிநீரை அங்குள்ள மக்களிடம் வழங்குகின்றார்கள்.
பெண் மக்கள் குடிநீரை பருகிய வேளையில் வீட்டின் தலைமகனையும், கு
ஹிந்துராஷ்ட்ர ஜைத்ர ரதம்
அருணவர்ண த்வஜஸஹிதம்
தேஜஸ்ஸô ஸமுஜ்வலிதம்
ஆகதம் ஸ்ஸீவாகதம்’’
-என்கின்ற இந்த ஸ்லோகம் சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார இண்டு இடுக்கிலுள்ள மக்களுக் கெல்லாம் மனப்பாடம். அர்த்தம் தெரியாவிட்டாலும் அச்சரம்பிசகாமல் கூறினால் கொரோனா போய்விடும் என்றும், கொரோனாவை பரப்பியது இஸ்லாமியர்கள் என்றும் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு ஆர்.எஸ்.எஸ் திருப்பணி அரங்கேறியுள்ளது.
ஒரு வாகனத்திற்கு இருவராக மூன்று இருசக்கர வாகனங்கள். அன்றைய தினத்திற்கு இந்த இடம் என முன்னரே தெரிவுசெய்யப் பட்ட பகுதிக்கு வந்த வுடனே தங்களோடு கொண்டுவரப்பட்ட கபசுபர குடிநீர் கேனை நடுவே வைக்கின்றார்கள். சுற்றி மக்கள் சேர, ""நம்ம சாதிக்காரங்க நல்லா இருக்கட்டும்னுதான் மெனக்கெட்டு இங்க கொண்டு வந்திருக்கோம்'' என பெருமை பேசிக்கொண்டே கேனிலிருந்து கபசுரக் குடிநீரை அங்குள்ள மக்களிடம் வழங்குகின்றார்கள்.
பெண் மக்கள் குடிநீரை பருகிய வேளையில் வீட்டின் தலைமகனையும், குடும்பத்தலைவனையும் தனியே அழைக்கின்ற அந்த டீம், ""நீங்கதான் வீட்டிற்கு ஆணிவேர்.! வெறுமனே இதனை குடித்தால் நன்றாக இருக்காது. ஏறக்குறைய 10-க்கும் அதிகமான மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு மூலிகையையும் எடுக்கும்போது சாபநிவர்த்தி மந்திரம் ஓதிதான் எடுக்கிறாங்க. அதனால நாமளும் "இந்த மந்திரத்தை' சொல்லிக்கிட்டே குடித்தோம் என்றால் கரோனா நமக்கு வரவே வராது'' எனக் கூறி சங்பரிவார்களால் கூறப்படும் "ஹிந்துராஷ்ட்ர ஜைத்ர ரதம்' எனத் தொடங்கும் ஸ்லோகனை எடுத்துவிடுகின்றார்கள்.
சாதிப்பாசம் மற்றும் அறியாமை யில் சிக்கிக்கொண்ட அந்த மக்களும் அந்த ஸ்லோகனைக் கூறிய பிறகு கபசுரக் குடிநீரைப் பருகிய நிலையில், ""எல்லாம் அவனுகளாலே வந்தது. அவனுக மட்டும் டெல்லிக்குப் போகாமல் இருந்தால் இந்த நிலைமை நமக்கு வந்திருக்குமா? நம்ம பிள்ளை களை வைச்சுக்கிட்டு பயந்து சாக னுமா.?'' என ஒருவன் எடுத்துவிட, மற்றொருவனோ "அவன்களால்தான்' என புள்ளிவிவர கணக்கையும் பதிலுக்குக் கூற... புரிந்தும் புரியாமலும் மகுடி திரும்பும் பக்கமெல் லாம் திரும்பும் பாம்பாய் மாறுகின்றார்கள் அங்குள்ள மக்கள். வந்த வேலை முடிந்து விட அடுத்த இடத்திற்கு நகர்கின்றனர் அந்த இருசக்கர வாகனத்தினர்.
இதனின் எதிர் விளைவோ பல குடும்பத்தின ரைப் பட்டினியாக்கியுள்ளது. ""ஊருல ஏறக்குறைய 500 பேர் காய்கறி வியாபாரம் பண்றோம். சிங்கம்புணரி சந்தையில், வீதிகளில் இருக்கும் பெரும் பான்மையான கடைகள் எங்க சமூகத்தினரை சார்ந்தது. அதுபோக முறையூர், மருதிப்பட்டி, உறங்கான்பட்டி, வெள்ளலூர், திருப்பத்தூர், எஸ்.எஸ்.கோட்டை, கீழையூர், செம்மணிப் பட்டி, கொட்டாம்பட்டி, அரளிக்கோட்டை, ஏரியூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு வாகனங்களில் சென்று காய்கறி விற்போம். இதுதான் எங்களுடைய பூர்வீகத் தொழிலே.
இப்பொழுது ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கவேண்டிய நிலைமை வந்துட்டது. ஆங்காங்கே கபசுரக்குடி நீர், காய்கறிக் கொடுப்பதாகக் கூறி இஸ்லாமியர்களால்தான் கொரோனா நோய்த் தொற்று பரவியதென மக்கள் மத்தியில் விஷ விதையை விதைச் சுருக்காங்க சில பேர். முந்தின நாள்கூட அரளிகோட்டை பக்கம் நான் காய்கறி விற்கப் போகும்போது, என்னை நிறுத்தி, "உங்க ளால்தான் உசுருக்குப் பயந்து இருக்கோம். இப்ப காய்கறியில் என்னத்தைக் கொண்டு வந்திருக்கியோ..?' என என்னை விரட்டி விட்டனர். நான் தராசை பிடிச்சால்தான் என் குடும்பத்துக்கு சோறே கிடைக்கும்'' என வேதனையுடன் பகிர்கின்றார் சிங்கம்புணரி அருகிலுள்ள சொக்கலிங்கபுதூர் அஜ்மல்.
உள்ளூரைச் சேர்ந்த பெயர்கூற விரும்பாத அரசு மருத்துவர் ஒருவரோ, ""மக்களை தனி யாக சந்தித்து கபசுரக்குடிநீரை தந்து பிரசங்கம் செய்துவந்த மதவெறியர்கள் இப்பொழுது எங்களோடு வந்து மக்கள் கூடுமிடத்தில் எங்கள் அருகிலேயே நின்றுகொண்டு, "சிங்கிள் சோர்ஸ்' எனும் ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்துவதுமட்டுமின்றி, ""ஆமா.!! டாக்டர். இது அவங்க பரப்பிவிட்டதுதானே?'' என பதில்கூறவியலாத கேள்வியை எழுப்பி அவங்களுடைய பிரசங்கத்தில் எங்களையும் கோர்த்துவிடுகின்றனர். மருத்துவத்துறை அதிகாரியிடம் புகாரளித்தும் பயனில்லை'' என்கிறார்.
""திண்ணைப் பிரச்சாரம்தான் அவர்க ளுடைய யுக்தியே! இன்ன சாதியினரைக் கொண்டுதான் அவர்கள் நஞ்சை விதைக்க வில்லை. அனைத்து சாதியினரையும் கொண்டே இச்செயலில் இறங்குகிறார்கள் என்றாலும் அவர்களை தனித்தனியே பிரித்துத்தான் பிரசங்கத்திற்கு அனுப்பி மக்கள் மனதில் நஞ்சை விதைக்கின்றார்கள். ஏனெனில் ஒரே இடத்தில் அனைத்து சாதியினரையும் வைத்தால் பிரச்சனை வருமே? அந்தந்தப் பகுதியில் எந்த சாதியினர் மெஜாரிட்டியாக இருக்கிறார்களோ அவர்களில் செல்வாக்கு மிகுந்த ஒருவரை அனுப்பி இஸ்லாமியர்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள். இதனால் மெல்ல விசம் பரவத்தொடங்கியுள்ளது. இப்பொழுது அமைதி காத்தாலும் ஊரடங்கிற்குப் பின் இஸ்லாமியர்களிடமிருந்து எதனையும் கொள்முதல் செய்யக்கூடாது. கரோனாவைவிட கொடியது இந்த மதவெறியர்களின் செயல்"" என்கிறார்கள் சிங்கம்புணரி பகுதியினைச் சேர்ந்த கர்ணனும், பாரூக் முகமது அலியும்.
- நாகேந்திரன்
படங்கள்: விவேக்